லேபிள்கள்

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஃப்ரிட்ஜ் - இயங்குவது எப்படி?


ரெஃப்ரிஜிரேடர் என்றால் என்ன? அதனால் என்ன பயன்?ஆதிகாலத்தில் மனிதன் எதையும் சமைக்காமலே சாப்பிட்டான். பிறகு சமைத்துச் சாப்பிட்டான். அந்த உணவு ஆரோக்கியமாகவும் சத்துள்ளதாகவும் இருந்தது. அவனுக்குத் தேவையான பலத்தைக் கொடுத்தது. ஆனால் ஒரே பிரச்னை, அவனுக்குப் பசிக்கும்போதெல்லாம் உணவு கிடைக்க வேண்டுமே? அப்படியே கிடைத்தாலும் அதைச்சமைத்து முடிக்கிற வரை பசி தாங்க வேண்டுமே?

மனிதனுக்கு ஒரு யோசனை வந்தது, ‘சமையலுக்குத் தேவையான காய்கறிகள், மாமிசம், பால், மற்ற உணவுப் பொருள்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் ரொம்ப நாளைக்குக் கெடாமல் பாதுகாத்து வைக்க முடியுமா?’இது கொஞ்சம் கஷ்டம்தான். மனிதர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உணவுப் பொருள்களைப் பாதுகாத்தாலும் எங்களை மாதிரி எறும்புகள், எங்களைவிடச் சின்ன நுண்ணுயிரிகள் எல்லாம் எப்படியாவது அதைக் கண்டுபிடித்துவிடுவோம். அதனால் அந்தப் பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுப் போவிடும்.ரொம்ப நாள் கழித்து, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்தது, அது ஐஸ் பெட்டி!நீங்கள் ஜூஸ் குடிக்கும் போது அதை ஜில் என்று மாற்றுவதற்காகச் சில ஐஸ் கட்டிகளைப் போடுகிறீர்கள். அதே பனிக்கட்டிகளுக்கு உணவைக் கெடாமல் பாதுகாக்கிற தன்மையும் உண்டு என்று கண்டுபிடித்தார்கள். அதனால் உணவுப் பொருள்களை ஓரளவு பத்திரமாகக் காப்பாற்ற முடிந்தது.இதிலும் ஒரு பிரச்னை, அந்தக் காலத்தில் பனிக்கட்டிகளின் விலை ரொம்ப ரொம்ப அதிகம். பெரிய பணக்காரர்கள் மட்டும் தான் அதைப் பணம் கொடுத்து வாங்க முடியும்.அப்படியே வாங்கினாலும், அந்த ஐஸ் கட்டி ரொம்ப நாளைக்கு உருகாமல் இருக்காது. அதுவும் அசுத்தமாகும், கெட்டுப் போகும், உணவுப் பொருள்கள் வீணாகும்.

இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கிறதுக்காகத்தான், ரெஃப்ரிஜிரேட்டர், சுருக்கமாய் ஃப்ரிட்ஜ்என்று சொல்லப்படுகிற குளிர்பதனப் பெட்டியைக் கண்டுபிடித்தனர். இதுவும் கிட்டத்தட்ட ஐஸ் பெட்டி மாதிரிதான், ஆனால் நவீன தொழில்நுட்பத்தில் இயங்குகிற, பிரச்னையில்லாத ஐஸ் பெட்டி! இதில் உணவுப் பொருள்களை வைத்து மூடிவிட்டால் நீண்ட நாளைக்குக் கெடாமல் காப்பாற்றலாம்.

சரி. ஃப்ரிட்ஜுக்குள்ளே நுழைவோம். அதில் இருக்கிற முக்கியமான பாகங்களைப் பார்ப்போம்.
1. குளிர்விக்கும் வாயுக்கள்
2. அழுத்தும் கருவி / கம்ப்ரஸர்
3. சுருக்கும் கருவி / கன்டென்ஸர்
4. அதிக வெப்பத்தை வெளியேற்றும் திறப்புகள்
5. விரிவாக்கும் பகுதி

முதலில் இந்தக் குளிர்விக்கும் வாயுக்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். நம் உடலில் ரத்தம் திரும்பத் திரும்பச் சுற்றி வருகிறதில்லையா? அதுமாதிரி இந்த வாயுக்கள் ஃப்ரிட்ஜுக்குள்ளே நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும். அதன் மூலம் உங்களுடைய உணவுப் பொருள்களைக் கெடாமல் வைத்திருக்கும்.சுருக்கமாகச் சொன்னால், ரெஃப்ரிஜிரேட்டருக்கே உயிர் நாடி, கண்ணுக்குத் தெரியாத இந்த வாயுக்கள்தான். அதனால் இதை ரெஃப்ரிஜிரன்ட்ஸ்என்று சொல்வார்கள்.ஆரம்பத்தில் இந்த வாயுக்கள் குறைந்த அழுத்தம், குறைந்த வெப்ப நிலையில் இருக்கும். இதை கம்ப்ரஸர் என்ற அழுத்தும் கருவிக்குள்ளே அனுப்புவார்கள். இந்த கம்ப்ரஸர் மின்சாரத்தைப் பயன்படுத்தி, வாயுக்களுடைய அழுத்தத்தைப் படிப்படியாக அதிகரிக்கும்.இங்கே உங்கள் இயற்பியல் மூளையைத் தட்டி எழுப்புங்கள். ஒரு பொருளுடைய அழுத்தம் அதிகரிக்கும்போது அதன் வெப்பநிலை என்ன ஆகும்?அழுத்தம் கூடக்கூட, வெப்பநிலையும் கூடும். அதுதான் ஃப்ரிட்ஜில் இருக்கிற கம்ப்ரஸருடைய வேலை.அடுத்து, கன்டென்ஸர் என்ற சுருக்கும் கருவி. இது உண்மையில் ஒருநீளமான குழாய். ஆனால் அதை மடக்கி மடக்கிச் சின்னதாக வைத்திருப்பார்கள். இதன் வழியாக அதிக வெப்பநிலை, அதிக அழுத்தத்தில் இருக்கிற வாயுக்கள் நுழைந்து வெளியே வரும்போது, அவை சுருக்கப்படும், அதாவது திரவ நிலைக்கு மாற்றப்படும்.இப்படி ஒரு வாயு சுருங்கித் திரவமாக மாறும்போது, அதில் இருந்த கூடுதல் வெப்பம் ஏதாவது ஒரு வழியாக வெளியேற வேண்டுமில்லையா? அதுக்காக உங்கள் ஃப்ரிட்ஜின் பின்பகுதியில் சில விசேஷத் திறப்புகள் இருக்கின்றன.அடுத்து, இந்தத் திரவம் முழுவதும் இன்னொரு விரிவாக்கும் பகுதிக்குள்ளே நுழைகிறது. இங்கே அதில் ஒரு பகுதி மட்டும் ஆவி வடிவத்துக்கு மாற்றப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த வெப்ப நிலை இன்னும் குறைகிறது.

கடைசியாக பாதி திரவம், பாதி ஆவி என்ற நிலையில் இருக்கிற இந்தக் கலவை சின்னச் சின்னக் குழாய்கள் மூலமாக உங்கள் ஃப்ரிட்ஜ் முழுவதும் சுற்றிவருகிறது. அங்கே இருக்கிற காற்றைக் குளிர்ச்சியாக்குகிறது, ஒட்டு மொத்த வெப்பநிலையைக் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது.இப்படிச் செய்வதால், அந்தக் கலவையின் அழுத்தம், வெப்பநிலை இரண்டும் பழையபடி குறைந்துவிடுகிறது. அது மறுபடி கம்ப்ரஸருக்குள்ளே நுழைந்து அழுத்தப்படுகிறது.அவ்வளவுதான் விஷயம். இப்படி நாள் முழுக்கக் குளிர்விக்கும் வாயுக்களை அழுத்தி, சுருக்கி, விரிவாக்கி, மறுபடி அழுத்தி, சுருக்கி, விரிவாக்கி... அதனால்தான் உங்கள் ஃப்ரிட்ஜ் எப்போதும் ஜில் என்று இருக்கிறது, உணவுப் பொருள்களைக் கெடாமல் பாதுகாக்கிறது!

1. மினி, எல்லா ஃப்ரிட்ஜ்லயும் ஃப்ரீஸர் என்று ஒரு ஸ்பெஷல் பெட்டி இருக்கிறதே, அது எதற்காக?

பொதுவாக ஃப்ரிட்ஜுக்குள்ளே இருக்கிற வெப்பநிலை, 0 டிகிரி செல்சியஸைவிடக் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அந்த வெப்பநிலையில்தான் உணவுப் பொருள்கள் பெருமளவு பாதுகாக்கப்படும். ஆனால் சில உணவுப் பொருள்களை இன்னும் ரொம்பக் குறைவான வெப்பநிலையில் பராமரிக்கவேண்டியிருக்கும், அந்த வேலையை ஃப்ரீஸர் செய்கிறது.

2. ஃப்ரிட்ஜ் பயன்படுத்துவதால் நம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று படித்தேன். உண்மையா மினி?

இது ஓரளவு உண்மைதான். முன்பெல்லாம் ஃப்ரிட்ஜில் இருக்கிற க்ளோரோஃப்ளோரோகார்பன்’ (CFC) என்ற ஒரு விசேஷ வாயுவைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இதனால் நம் பூமியைச் சுற்றி இருக்கிற ஓசோன் மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்று தெரியவந்தது. அதனால், இப்போது CFC பயன்பாட்டைப் பெருமளவு குறைத்துவிட்டனர், கிட்டத்தட்ட நிறுத்திவிட்டனர் என்றே சொல்லலாம். ஃப்ரிட்ஜ் எல்லாவற்றிலும் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வேறு வாயுக்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.. இனி கவலை இல்லை.  

www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஹேண்ட் பேக்கால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்... பெண்களே கவனம்!

தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பெண்கள் எங்கு சென்றாலும் கைப்பையை தங்களுடன் எடுத்து செல்கின்றனர். பல்வேறு வகைகளில் தயார் செய்யப்படும் கைப...

Popular Posts