லேபிள்கள்

செவ்வாய், 27 மார்ச், 2012

அதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்!



ஆராய்ச்சி: தாரிக் ஹுஸைன் ;  மொழியாக்ம்: காஜா முயீனுத்தீன்
ஹஜ் காலம் வரும்போதெல்லாம் அதிசிய நீராகிய ஜம்ஜமின் அந்த நினைவுகள் எனது மனதிலே தோன்றும். ஆம் 1971 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் ஒரு டாக்டர் ஐரோப்பிய பிரசுரத்திற்கு ஜம்ஜம் நீர் குடிப்பதற்கு உகந்ததல்லஎன்ற அடிப்படையில் ஒரு செய்தியைக் கொடுத்தார். உடனே நான் முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளில் இது ஒன்று என்று நினைத்தேன்.
கஃபத்துல்தாஹ் தாழ்வு பகுதியான மக்காவின் நடு மையத்தில் உள்ளதால் மக்காவின் கழிவு நீர் ஒன்று சேர்ந்து கிணற்றில் விழுவதாக அவரது யூகம் இருந்தது.
அதிஸ்டவசமாக இந்தச் செய்தி உடனே மன்னர் பைசல் அவர்களின் காதிற்கு எட்டியது. கோபம் அடைந்த மன்னர் அந்த எகிப்திய டாக்டரின் கூற்றை பொய் என நிருபிக்க முடிவெடுத்தார். உடனே நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம்” – இதை விசாரிக்கவும் மற்றும் ஜம்ஜம் நீரை ஐரோப்பிய சோதனைச்சாலைக்கு (Lab) அனுப்பி இந்த நீர் குடிப்பதற்று உகந்ததா என்பதை ஆராயச் சொன்னார். அமைச்சரவை ஜித்தாவில் உள்ள மின் மற்றும் கடல் நீர் சுத்தரிப்பு நிலையத்திடம்” – இந்தப் பணியை ஒப்படைத்தது. இங்கே தான் நான் கடல் நீர் சுத்தரிப்பு பணிப் பொறியாளராக
  பணி புரிந்து வந்தேன். நான் இந்த ஆய்வுக்காகத் தேரந்தெடுக்கப்பட்டேன். இப்பவும் எனக்கு ஞாபகம் உள்ளது .. அப்போது அந்த கிணற்றில் உள்ள நீர் எவ்வாறு இருக்கும் என்பதை தெரியாமலிருந்தேன்.
நான் மக்காவிற்றுச் சென்று கஃபத்துல்லாவின் அதிகாரிகளிடம் எனது ஆய்வு பற்றிக் குறிப்பிட்டேன். அவர்கள் உடனே ஒரு நபரை நியமித்து எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்தார்கள். நான் கிணற்றை அடைந்த போது என்னால் நம்ம முடியவில்லை..இத்தனை சிறிய நீர் குட்டை ஏறக்குறைய 18க்கு 14 அடி அளவுள்ள ஒரு கிணறுகோடிக்கணக்கான கேலன் நீரை ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்குஇபுறாகிம் (அலை) காலத்திலிருந்து எத்தனை நூற்றாண்டுகளாக கொடுத்துள்ளது!
நான் எனது ஆய்வைத் தொடங்கினேன். முதலில் கிணற்றின் அளவுகளை எடுத்தேன்.அந்த உதவி ஆளை ஆழத்தை காண்பிக்கச் சொன்னேன். அவர் சுத்தமாக குளித்துவிட்டு கிணற்றுக்குள் சென்றார். பின் தன் உடலை நேராக நிமிர்த்தினார். என்ன ஆச்சரியம்! நீர் மட்டம் அவருடை தோள்களுக்கு சற்று மேலாக இருந்ததது. அவரது உயரம் ஏறக்குறைய 5 அடி 8 அங்குளம். பின் அவர் கிணற்றின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு (நிண்றபடியே சென்றார் காரணம் அவர் தலையை நீரில் நனைக்க அனுமதக்கப் படவில்லை) எதாவது துவாரம் வழியாகவோ அல்லது குழாய் மூலமோ நீர் வருகின்றதா என்று தேடினார். ஆனால் அவரால் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. உடனே எனக்கு ஒரு யோசனை!
மிக விரைவாக கிணற்று நீரை வெளியேற்றுவதன் மூலம் கிணற்றின் நீரைக் குறைத்து  நீர் வரும் வழியைக் காணலாமே என்று! ஜம்ஜம் நீர் சேமிக்கும் தொட்டிக்கானபெரிய பம்ப் ஓட்டப்பட்டது. என்ன ஆச்சரியம் பம்ப் ஓடும் நேரத்திலும் ஒரு வித்தியாசமும் ஏற்படவில்லை. நீர் வரும் வழியைக் கண்டு பிடிக்க இது தான் ஒரே வழி என்று திரும்ப திரும்ப பம்பை ஓடச் செய்தேன். ஆனால் இந்த முறை யுக்தியை மாற்றினேன். அவரை ஒரே இடத்தில் நிற்கச் சொல்லி கிணற்றில் ஏதாவது வித்தியாசம் தோன்றுகிறதா என்று கேட்டேன். சில நேரம் கழித்து திடீரென அவர் தன் கைகளை உயர்த்தி கத்தினார் அல்ஹம்துலில்லாஹ்! நான் கண்டு பிடித்து விட்டேன். கிணற்றின் படுகையிலிருந்து நீர் கசிவதால் என் கால்களுக்கடியில் உள்ள மண் ஆடுகின்றது.பம்ப் ஓடும் சமயத்தில் அவர் கிணற்றில் மற்ற பகுதிக்கு நகர்ந்தார். இதே நிலையை கிணற்றின் எல்லா பகுதியிலும் கண்டார். உண்மையில் கிணற்று படுகையின் எல்லா பகுதியிலிலும்; நீரின் வரத்து சமமாக இருப்பதால் நீரின் மட்டம் சீராக இருந்தது.
நான் எனது ஆய்வை முடித்து கஃபாவை விட்டு கிளம்பும் முன் ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதனை செய்வதற்காக நீரின் மாதிரிகளை (samples) எடுத்துச் சென்றேன். நான் அதிகாரிகளிடம் மக்காவைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளின் நிலமையை விசாரித்தேன். அவைகள் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளதாகச் சொல்லப்பட்டது.
நான் ஜித்தாவில் உள்ள எனது அலுவலகத்தை அடைந்து ஆய்வுகளை மேலதிகாரியிடம் தெரிவித்தேன். அவர் மிகவும் அக்கறையுடன் கவனித்தார். ஆனால் திடீரென அர்த்தமற்ற ஒரு கருத்ததைக் கூறினார். ஜம்ஜம் கிணற்றுக்கு செங்கடலிலிருந்து உட்புறமாக தொடர்பு இருக்கலாம் என்று. இது எவ்வாறு சாத்தியம்! மக்கா 75 கி.மீ. தொலைவில் உள்ளது மற்றும் மக்காவைச் சுற்றி இதற்கு முன்பாக உள்ள கிணறுகளெல்லாம் பெரும்பகுதி காய்ந்த நிலையில் உள்ளன! ஐரோப்பிய மற்றும் எங்கள் சோதனைச் சாலையில் (Lab) செய்த சோதனைகள் இரண்டும் ஏறக்குறைய ஒத்து இருந்தன.
ஜம்ஜம் நீருக்கும் மற்ற நீருக்கும் (முனிசிபல் தண்ணீர்) உள்ள வித்தியாசம் கால்சியம் மற்றும் மேக்னீசிய உப்பு அளவுகளில் தான். இந்த உப்புகளின் அளவு ஜம்ஜமில் சற்று அதிகம். அதனால் தானோ இந்த நீர் களைத்த ஹாஜிகளுக்கு ஒர் புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றது. அது தவிர முக்கியமாக இந்த நீரில் ஃபுளொரைடு உள்ளதால் நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இதற்கு மேலாக ஐரோப்பிய சோதனைச் சாலைகள் (lab) இந்த நீர் குடிப்பதற்று உகந்தது தான் என்ற சான்று அளித்தன. எனவே அந்த எகிப்து மருத்துவர் குறிப்பிட்டது பொய் என்று நிருபிக்கப் பட்டது. மன்னர் பைசல் அவர்களிடம் இந்த செய்தி சென்ற போது அவர்கள் எகிப்து மருத்துவரின் கூற்றுக்கு மறுப்பாக இந்தச் செய்தியை ஐரோப்பிய பிரசுரத்திற்கு அனுப்பச் செய்தார்.
இது ஒரு வகையில் ஜம்ஜம்மின் தன்மைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் நீங்கள் ஜம்ஜமை ஆராய ஆராய மேலும் பல அதிசிய தன்மைகள் வெளிவந்து நீங்களே அதில் பொதிந்து கிடக்கும் அதிசியங்களில் நம்பிக்கை கொள்வீர்கள். புனிதப் பயணத்திற்காக தூரதொலைவுகளிலிருந்து பாலைவனத்தை நோக்கி வரும் நம்பிக்கை கொண்டோருக்கு இது அல்லாஹ்வினால் அருளப்பட்ட ஒரு அன்பளிப்பாகும்.
சுருக்கமாக ஜம்ஜமின் விசேசங்களைக் கூறுகிறேன்.
  • இந்த கிணறு என்றும் வறன்டதில்லை. மாறாக தேவையை என்றும் பூர்த்தி செய்துள்ளது.
  • என்றும் அதனுடைய உப்புகளின் அளவும் சுவையும் ஒரே மாதிரியாக அது உருவான காலத்திலிருந்து உள்ளது.
  • அதன் குடிக்கத்தக்க தன்மைஒவ்வொரு ஆண்டும் உம்ரா ஹஜ் யாத்திரகைக்காக வரும் அனைவராலும் என்றுமே உலக அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி குறைகள் எப்போதும் வந்ததில்லை; – மாறாக அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது என்று மகிழ்ந்துள்ளனர். நீரின் சுவை இடத்திற்கு ஏற்ப மாறும். ஆனால் ஜம்ஜம் நீரின் சுவை ஒரே மாதிரி (universal)..
  • பொதுவாக நகரசபை தண்ணீரை கெமிகல் மூலமோ க்ளோரின் மூலமோ சுத்தம் செய்வது போல் இந்த நீர் என்றும் செய்யப்பட்டது இல்லை. பாசி போன்ற நுண்ணுயிர்கள் பெரும்பகுதியான கிணறுகளில் இருப்பதால் சுவையும் மணமும் மாறி குடிக்கும் தன்மையை பாதிக்கும். ஆனால் ஜம்ஜம் கிணற்றில் இந்த வகையான நுண்ணுயிரகளின் வளர்ச்சிக்கு அடையாளமே இல்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க -  நீருக்காக சஃபா மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts