லேபிள்கள்

செவ்வாய், 20 மார்ச், 2012

கையைக் கடிக்குதா கரண்ட் பில்?கரன்ட் ஷாக் அடிச்சு யார் உணர்ந்திருக்காங்களோ இல்லையோ, கரன்ட் பில்லைப் பார்த்து ஷாக்கடிச்சு விழுந்தவங்க ஏராளம்! ஓலை விசிறியும் குண்டு பல்ப்புமா இருந்த வாழ்க்கையா இன்னைக்கு இருக்குது! டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்னு ஐயிட்டங்கள் பெருகிக்கிட்டே போக, கரன்ட் பில்லும் எகிறிக்கிட்டே போகுது. பழையபடி ஓலை விசிறிக்கு இனிமே போக முடியாது. ஆனா, குறைந்தபட்சம் மின்சாரத்தை அளவா செலவழிக்கிறது எப்படிங்கிற விஷயமாவது தெரிஞ்சா, கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதுக்கு என்னென்ன செய்யணும்?
கணக்குமுக்கியம்!
ஒருயூனிட்டுக்கு இவ்வளவு இவ்வளவு ரூபாய்னு நமக்கு பில் போடுது மின்சாரவாரியம். ஒரு யூனிட் அப்படிங்கிறது எப்படி கணக்கிடப்படுதுன்னுதெரிஞ்சாதான் மின்சாரத்தை எப்படிச் சேமிக்கலாம்ங்கிறதும் புரியும். 1,000வாட்ஸ் பல்ப் ஒரு மணி நேரம் இயங்கினா அது ஒரு யூனிட்.  அதுவே 500 வாட்ஸ்பல்ப்னா ரெண்டு மணி நேரம். 40 வாட்ஸ் பல்ப் 25 மணி நேரம் இயங்கினா அது ஒருயூனிட். ஆக, நாம வாங்குற அல்லது பயன்படுத்துற ஒவ்வொரு மின்சாதனத்தையும் ஒரு நாளைக்கு எத்தனை மணி பயன்படுத்துவோம், அதுக்கு எத்தனை வாட் மின்சாரம் செலவு ஆகும்ங்கிற விஷயத்தை மனசுல உள்வாங்கினாலே போதும், கரன்ட் பில்சரசரனு தானாவே குறைய ஆரம்பிச்சிடும்.
ஸ்டார்ரேட்டிங்!
மின்சாரத்தைசிக்கனமா பயன்படுத்துற வழிமுறைகளைப் பின்பற்றுவதைவிட குறைவான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் பொருட்களை வாங்குறதே புத்திசாலித்தனம். ரெஃபிரிஜிரேட்டர், ஏ.சி. மாதிரியான பொருட்களை வாங்குறப்போ கண்டிப்பா ஸ்டார்ரேட்டிங் பார்த்துதான் வாங்கணும்.
  இந்த ஸ்டார் ரேட்டிங்கைத் தேடி எங்கேயும் அலைய வேண்டியதில்லை. எல்லா மின்சார சாதனங்களிலும் அதிலேயே போட்டிருக்கும்.  அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருட்களுக்கு குறைவானமின்சாரமே தேவைப்படும். (அதிகபட்சம் 5 ஸ்டார் ரேட்டிங்) ஆனா அதோட விலைகொஞ்சம் அதிகமா இருக்கும்! அய்யோ விலை அதிகமா இருக்கேனு அதை வாங்காமவிட்டுடாதீங்க.  ரேட்டிங் குறைஞ்ச பொருளை வாங்கி, அதிகமா கரன்ட் பில்கட்டுறதோட ஒப்பிட்டுப் பார்த்தா இந்த விலை ஒண்ணும் அவ்வளவு பெருசாஇருக்காது. இனி ஒவ்வொரு மின் சாதனத்திலும் எப்படி மின்சாரத்தைச்சேமிக்கலாம்னு பார்ப்போம்
ரெஃபிரிஜிரேட்டர்!
24 மணி நேரமும் ஓடும் ரெஃபிரிஜிரேட்டரில் என்ன சேமிக்க முடியும்னு நினைக்கிறீங்களா, நிறைய சேமிக்க முடியும்!
ஃப்ரிட்ஜைஅடிக்கடி திறந்து மூட வேண்டாம்.  உள்ளே வைக்கும் ஒவ்வொரு பொருளையும் அப்படியே வைக்காமல், ஒரு பையில போட்டு மூடி வையுங்கள்.  மூடாம அப்படியேவச்சா ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.  அதனால் அதிக மின்சாரம் தேவைப்படும்.
சூடான பொருளை அப்படியே உள்ளே வைக்க வேணாம். அது சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகு உள்ளே வைக்கவும்.
அதேமாதிரி சும்மா சும்மா ஆஃப் பண்ணாதீங்க.  குறைந்தபட்சம் ஒரு நாள் ழுக்கபயன்படுத்தப் போறதில்லை அப்படின்னா மட்டும் ஆஃப் செய்யவும்.  அணைத்து விட்டுமூணு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பவும் ஆன் செஞ்சா அதிக மின்சாரம்தேவைப்படும்.
ஃபிரிட்ஜை சுவரோட ஒட்டி வைக்காம குறைந்தபட்சம் 20சென்டி மீட்டராவது தள்ளி வைக்கலாம். இப்படி வைக்கிறதால சூடான காற்றைசுலபமாக வெளியேற்ற முடியும்.  சுவரை ஒட்டி வைத்தால் சூடான காற்றை வெளியேதள்ள அதிக சக்தி தேவைப்படும்.  இந்த அதிக சக்திதான் அதிக மின்சாரம்.
ஏ.சி.!
எல்லா கதவுகளும் நல்லா மூடியிருக்கான்னு செக் பண்ணிட்டு அதுக்குப் பிறகு ஏ.சி.யை ஆன் செய்யவும்.
ரூமோட ஈரப்பதத்தை (humidity) குறைவாவே வச்சிருக்கணும்.
ரூம்கதவு ஜன்னல்களில் ஓட்டை இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். ஓட்டை இருந்தாவெளியிலிருந்து சூடான காற்று வரும் பட்சத்தில், அறையை குளுமையாக்க கூடுதல்மின்சாரம் தேவைப்படும்.
அறையின் அளவுக்கு ஏற்றமாதிரிதான் ஏ.சி.யை செலக்ட் பண்ணணும். பெரிய ரூமுக்கு குறைந்த டன் ஏ.சி. போட்டால் அதிக மின்சாரம் தேவைப்படும்.
அறையின் அளவு ஏ.சி. யின் அளவு
100 சதுர அடி வரை 1 டன்
100 முதல் 150 சதுர அடி வரை 1.5 டன்
150 சதுர அடிக்கு மேல் 2 டன்
வாட்டர்ஹீட்டர்!
தேவைப்படும்நேரத்துக்கு சற்று முன்பாக மட்டும் வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யவும். தெர்மோஸ்டட் இருக்கிறது, தண்ணீர் சூடானால் தானாகவே நின்றுவிடும்னு நினைக்கவேணாம்.
  தண்ணீரின் சூடு குறைஞ்ச பிறகு மீண்டும் ஹீட்டர் தானாவே செயல்படஆரம்பிக்கும்.  அதனால கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.  ஒரு ஆள்தான்குளிக்கப் போறாங்கன்னா தெர்மோஸ்டட் மூலமா ஆஃப் ஆகுற வரை காத்திருக்கவேணாம். கொஞ்ச நேரத்திலேயே அணைத்துவிடவும்.
பல்ப்!
குண்டுபல்ப்புகளை (incandescent lamp) கண்டிப்பா பயன்படுத்த வேணாம். அதுக்குஅதிக வாட் தேவைப்படும். அது மட்டுமல்லாமல் குண்டு பல்ப் மின்சக்தியை வெப்பசக்தியாக மாற்றிதான் வெளிச்சத்தைக் கொடுக்குது. ஆனால் சி.எஃப்.எல்.(compact fluorescent lamps) மின்சக்தியை நேரடியாவே ஒளிசக்தியாகமாற்றுகிறது.
படிக்கும் போது ரூம் முழுவதற்கும் வெளிச்சம் தர்றமாதிரி பெரிய விளக்குகளை பயன்படுத்துறதை விட டேபிள் விளக்குகளைப்பயன்படுத்த லாம். 40 வாட் டியூப் லைட்களைவிட 36 வாட் ஸ்லிம் டியூப்களைபயன் படுத்தலாம்.
அயர்ன்பாக்ஸ்!
தினமும் ஒவ்வொரு துணியா அயர்ன் பண்ண வேண்டாம். மொத்தமா ஒரு வாரத்துக்குத் தேவையான துணிகளை எடுத்து அயர்ன் செய்யவும்.
மின்விசிறிகள்!
எலெக்ட்ரானிக் ரெகுலேட்டர்களையே பயன்படுத்தவும். இதன் ஆயுட்காலம் குறைவுன்னாலும் நமக்குத் தேவைப்படும் வேகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.
  பழையரெகுலேட்டர்களோடு ஒப்பிடும் போது எலெக்ட்ரானிக் ரெகுலேட்டரே சிறந்தது. மின்விசிறியின் இறக்கைகளை சுத்தமாக வைத்திருக்கவும். இறக்கை மீது அதிகதூசி படர்ந்து அழுக்கேறும் போது அதன் எடை கூடும்.  சுழல அதிக மின்சாரமும் தேவைப்படும்.
நன்றி:ஈகரை தமிழ் களஞ்சியம்

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts