லேபிள்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2011

உடல் நலத்துக்கான குறிப்புகள்:



வெயில் காலம் தொடங்கி விட்டது. திருவாளர் சூரியபகவான், ஓவர் டைம் செய்ய ஆரம்பித்து விடுவார். உஸ்... அப்பாடா! வியர்க்குரு, சரும எரிச்சல், வேனல்கட்டி, உலர் சருமம், என நமது சருமம்தான் பாடாய்ப்படும். அடிப்படையாக சில சரும பராமரிப்பு டிப்ஸ்களைத் தந்துள்ளேன். அவற்றைக் கடைபிடித்து, வெயிலைச் சமாளியுங்க!

சருமம்! நமது முழு அழகும் ஆரோக்கியமும் அதில் பிரதிபலிப்பதால்தான் அதற்கு அத்தனைப் பெரிய முக்கியத்துவம். ஒரு மனிதனின் சருமத்தைப் பார்த்தே அவனது ஆரோக்கியத்தை மருத்துவர்கள் யூகித்து விடுவார்கள். சருமத்தைப் பாதுகாத்தல் ஆரோக்கியத்தின் முதல்படி!
மனித உடலில் உள்ள உறுப்புகளிலேயே (இருதயம், நுரையீரல், மூளை போன்ற) மிகப் பெரிய உறுப்பு சருமம் தான்! சருமத்தின் சராசரியான பரப்பளவு இரண்டு சதுர மீட்டர். ஒரு மனிதனின் மொத்த எடையில் 16 முதல் 18 சதவிகிதம் சருமத்தின் எடையே.

சருமத்தின் மிருதுத் தன்மை மற்றும் எண்ணெய்ப்பசையை வைத்து, எண்ணெய் பசையுள்ள சருமம் (Oily skin), உலர்ந்த சருமம் (Dry skin), சாதாரண சருமம் (Normal skin) என்று வகைப்படுத்தலாம். மனித உடலில், எண்ணெய் சுரப்பிகள் அதிகமாகச் சுரக்குமிடம் குறைவாகச் சுரக்குமிடம் என்று உள்ளன.
‘மனிதர்களில் இத் தனை நிறங்களா?’ என்று தத்துவமாகக் கேட்டாலும், விஞ்ஞானப்பூர்வமாக உலகில் உள்ள மனிதர்களின் நிறங்கள் மொத்தம் மூன்றே தான்.

1. கறுப்பு - நீக்ரோ இனம் 2. சிவப்பு வெள்ளை - ஐரோப்பியர் 3. மஞ்சள் - மங்கோலியர், ஜப்பானியர் மனிதனின் பிறவியில் உள்ள நிறத்தை செயற்கை முறையில் முழுமையாக மாற்ற இயலாது.
சருமத்தின் அமில காரத்தன்மை PH அளவு

5 - 6 - புறத்தோல்

6 - 7 - அகத்தோல்

ஆகவேதான் PH7 என்ற அளவு காரத்தன்மை உள்ள சோப்புகளே சருமத்துக்கு உகந்தது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

நம்முடைய நகம் நாள் ஒன்றுக்கு 0.1 எம்.எம். வளர்கிறது. கை விரலின் நகம், கால் விரல் நகத்தைவிட அதிகமாக வளர்கிறது. கை நகம் முழுமையாக வளர சுமார் 100 நாட்கள். கால் நகம் வளர சுமார் 120 முதல் 150 நாட்கள் ஆகின்றன. குளிர் / மழை காலங்களைவிட வெயில் காலங்களில் நகம் வேகமாக வளர்கிறது.
உடலின் உணர்வுகளை (வலி தொடுகை, உஷ்ணம்) உணர்த்துவது சருமமே. சிறுநீர கத்தைப் போல சருமமும் ஒரு கழிவு நீக்கும் கருவியாக இயங்குகிறது. உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வியர்வை மூலம் வெளியேற்றி, பெரும் பணியை ஆற்றுகிறது. உடல் உஷ்ணத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ள உதவும் உறுப்பும் சருமம்தான்.
சருமத்தின் வேலைகள் பல; அவற்றுள் சில:

சருமம் ஒரு மனிதனுக்கு நிறத் தைக் கொடுக்கிறது; உருவத்தைக் கொடுக்கிறது. குழந்தைகளின் கொழு கொழு கன்னம், இளம் பெண்களின் மினுமினு கன்னம், உடல் தோற்றம், அங்க வளைவுகள் எல்லாம் சரு மத்தில் உள்ள கொழுப்பின் அள வைப் பொருத்தே அமைகிறது.
சூரிய ஒளி உதவியுடன் வைட்டமின் ‘டி’ சருமத்தில் இயற் கையாகத் தயாரிக்கப்படுகிறது. வைட்டமின் ‘டி’ சத்து குறையும்போது ‘ரிக்கெட்ஸ்’ போன்ற சரும நோய்கள் உருவாகின்றன. அச்சமயம் வைட்டமின் ‘டி’ சத்து அதிகமுள்ள மீன் எண்ணெய் மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறோம்
வெயில், மழை, காற்று, பனி போன்ற வெளிப்புற சங்கதிகள், உள் உறுப்பு களைத் தாக்காமல் பாதுகாக்கும் ஒரு போர்வையாகவே நமது சருமம் விளங்குகிறது.

சருமத்தின் தன்மைக்கு ஏற்ப சோப்புகளை உபயோகிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றுவதைத் தவிர்க்கவும்.

சருமத்தில் உள்ள கொழுப்புப் பகுதி உடலில் ஒரு சத்து சேகரிக்கும் (Storage organ)இடமாக உதவுகிறது.
பனிக் காலங் களில் ஒரு சிலருக்கு சருமம் வறட்சியாகக் காணப்படுவது உண்டு. அவர்கள் குளித்தவுடன் சுத்த மான தேங்காய் எண்ணெய் அல்லது தரமான மாய்சரைஸிங் லோஷனைத் தடவுவது மிகச் சிறந்த பலனைத் தரும்.

ஒரு மனிதனுக்கு இருக்கும் கை ரேகையின் அமைப்பு மற்ற வேறு எந்த நபருக்கும் இருப்பதில்லை. அதேபோல சருமத்தில் உள்ள மச்சம், தழும்பு போன்றவையும் அங்க அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
வெயில் காலங்களில், நமது உடலில் அதிகம் வியர்ப்பதால், ஒரு வித துர் நாற்றமும், கிருமித் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது. கோடைக் காலங்களில், தினமும் இருமுறை குளிர்ந்த நீரில், குளித்து, சுத்த மான ஆடை அணிந்தாலே போதுமானது.

ஒரு சிலருக்கு தலை சாயம் பூசுவ தாலோ, சூரிய ஒளி அதிகம் படுவதாலோ முகத்தில் கரும் புள்ளி, சரும நிறம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அலர்ஜி உண்டாகாத வகையில், ‘டை’ போடுவதும், தரமான சன் ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவதும் நல்லது.
உங்களுடைய உணவு எப்படியோ, சருமமும் அப்படியே! சத்தான உணவு காய்கறிகள், பழங்கள், கீரை, பாதாம் பருப்பு, தானிய வகையை அதிகம் பயன்படுத்தினால் சருமம் என்றைக்கும் ஆரோக்கியமாக மிளிரும்.

குழந்தைகளுக்கு முகத்தில் ஏற்படும் தேமல்கள், பனிக் காலத்து வறட்சியினாலோ, சோப்பு, பவுடர், லோஷன்களினாலோ அல்லது வயிற்றில் பூச்சி (worm infestation) இருப்பதாலோ ஏற்படுகிறது. இவற்றை முழு மையாக குணப்படுத்த முடியும்.
பொதுவாக நமது வியர்வை சுரப்பது மிகவும் நல்லது. சிலருக்கு மிக அதிகம் வியர்வை சுரந்து உடலில் உப்பு படிந்தது போல் தோன்றும். சிலருக்கு வியர்வை மிகவும் துர்நாற்றம் வரும். அவர்கள் அடிக்கடி குளித்து உடலை சுத்தம் செய்ய வேண்டும். எக்ஸோ குளோரோபன் கலந்த சோப்பைப் பயன்படுத்தவும்.

சூரிய வெளிச் சத்தினால் பல சரும ஒவ்வாமை நோய் ஏற்படுகிறது. சூரிய வெளிச்சத்தைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது. புற ஊதாக்கதிர்களின் அதீதத் தாக்கத்தால், சிலருக்கு ‘சரும புற்றுநோய்களும் ஏற்படுகின்றன. எனவே, உஷ்ணமான பகுதிகளில் வசிப்பவர்கள் வெயில் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது நல் லது.
தொழு நோய் ஒரு பரம் பரை நோயோ அல்லது பாவத்தின் சின்னமோ அல்ல. அது ஒருவரிடம் இருந்து மற்ற வருக்குத் தொற்றக்கூடிய நோயே. தொழுநோயை முழுவதுமாக கட்டுப் படுத்த அல்லது குணப்படுத்த முடியும். உலகத்திலேயே இந்தியாவில்தான் தொழு நோய் அதிகம் உள்ளது.தொழு நோய் ஒரு பரம் பரை நோயோ அல்லது பாவத்தின் சின்னமோ அல்ல. அது ஒருவரிடம் இருந்து மற்ற வருக்குத் தொற்றக்கூடிய நோயே. தொழுநோயை முழுவதுமாக கட்டுப் படுத்த அல்லது குணப்படுத்த முடியும். உலகத்திலேயே இந்தியாவில்தான் தொழு நோய் அதிகம் உள்ளது.
வெண்புள்ளி நோய்க்கும் தொழுநோய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. லுகோடமாவை குணப்படுத்த மருந்து மாத்திரை மற்றும் நவீன அறுவை சிகிச்சை முறைகள் நிறையவே உள்ளன.

தலை முடி உதிர்வு, வழுக்கைக்கு பல காரணங்கள் உண்டு.ஹார்மோன் பிரச்னை, கிருமிகளின் தாக்கம், டைஃபாய்டு மற்றும் பிரசவத் திற்குப் பின்பு ஏற்படும் முடி effluvium நோய் எதிர்ப்பு சக்தி தலை முடிவுக்கு எதிராக அதிகமாதல் (Alopiea Areeta) ஊட்டச் சத்துக் குறைவு போன் றவை. இவற்றுள் ஒரு சில வகையான முடி உதிர்வுகள் மட்டுமே சரி செய்ய கூடியவை.
கிருமித் தொற்று மிகவும் அதிகமிருந்து, அக்குள் பகுதிகளில் துர்வாடை அடித் தால், குளித்தவுடன், சுத்தமாகத் துடைத்து டஸ்டிங் பவுடரைப் பயன்படுத்துங்கள். Body Spray, Deodorant போன்ற வாசனை திரவி யங்களை சருமத்தில் நேராகப் படும்படி பயன்படுத்த வேண்டாம்.

நரைத்த தலைமுடிக்கு சாயம் பூசும்போது (Hair Dye) ஏதேனும் ஒவ்வாமை இருக்கிறதா என்பதைப் பரி சோதித்த பிறகேபூசவேண்டும். பாராஃபினலின் டைஅமீன் (Paraphenyleene diamine) என்ற கெமிக்கல் சரும அழற்சியை ஏற்படுத்தும் தன்மையுடையது.

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts