லேபிள்கள்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

கோடை காலத்தில்கருப்பு நிற ஆடைகளை ஏன் அணியக் கூடாது?

கோடை காலத்தில் நாம் அணிய வேண்டிய ஆடைகள்...!!

கோடை வெயிலை சமாளிக்க முதலில் ஆடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சரியான ஆடையை தேர்ந்தெடுத்து அணிவதால் குளிர்ச்சியாக உணர்வதுடன் பார்க்கவும் நன்றாக இருக்கும்.

ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்கும் ஏற்றது... சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். கோடையில் காட்டன் ஆடைகள் அணிவது உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

அந்த வகையில் கோடை காலத்தில் நாம் அணிய வேண்டிய ஆடைகள் என்னென்ன? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க...!!

கருப்பு நிற ஆடைகளை ஏன் அணியக்கூடாது?

கோடைக்கு ஆடையைத் தேர்ந்தெடுப்பதில், வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகளை அணியலாம்.

பருத்தி ஆடையை அணியுங்கள்:

கோடை காலத்தில் பெண்கள் அதிகமாக பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது மிக சிறந்தது. கோடை காலத்திற்கு ஏற்ற ஆடை பருத்தி ஆடைகளே ஆகும். பெண்கள் அணியும் உடைகள் அவர்களுக்கு இதமானதாக இருக்க வேண்டுமானால் அதற்கு பருத்தி ஆடைகளே சிறந்தது. பருத்தி ஆடைகள் தான் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.

கோடையில் சிந்தடிக், பாலிஸ்டர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும். ஆனால் காட்டன் அப்படி அல்ல. பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அனைத்து விதமான உடல் வாகுகளுக்கும் ஏற்ற உடை. அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் எல்லாம் பருத்தியிலேயே இருக்கிறது.

காதி ஆடைகள்:

வெயில் காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மிக சிறந்த உடை காதி உடைகள் தான். இந்த காதி ஆடையை சேலையாகவும், சுடிதாராகவும் மற்றும் பாவாடையாகவும் அணியலாம். மேலும், இந்த கோடை வெயிலின் தட்ப வெப்பநிலைக்கு தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும்.

இதையெல்லாம் அணியாதீர்கள்:

உடலை ஒட்டிய ஜீன்ஸ், லெக்கீன்ஸ் மற்றும் இறுக்கமான பேண்ட்களை கோடை காலத்தில் அணியக்கூடாது. இவை பெண்களுக்கு உகந்த ஆடைகள் கிடையாது.

கோடை காலத்தில் இதமான ஆடை என்றால் அது பருத்தி சேலை தான். இதை தான் நமது முன்னோர்களும் பயன்படுத்தி உள்ளனர். முடிந்த வரை பருத்தி பாவாடைகளை அணிவதே சிறந்தது.



--

சனி, 23 ஆகஸ்ட், 2025

உங்கள் வீட்டில்எறும்புத் தொல்லையா? எப்படி விரட்டலாம் என்று பார்ப்போம்.

பொதுவாக நம்முடைய சமையலறையை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் சிறிது சாதம் கொட்டினாலோ அல்லது இனிப்பு பண்டங்கள் சிதறினாலோ எறும்புகள் எங்கிருந்து தான் வருமோ தெரியாது கொஞ்ச நேரத்தில் படையெடுக்க ஆரம்பித்து விடும்.

இந்த எறும்பு தொல்லை பிரச்சினையானது எல்லோருடைய வீட்டிலும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதனை சரி செய்ய கடைகளில் பல வகையான மருந்துகள் கிடைக்கிறது. இருப்பினும் நம்முடைய வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எறும்பை எப்படி விரட்டலாம் என்று குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சில நேரங்களில் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கும் பொழுது எறும்பு கொடியை பயன்படுத்த முடியாது. எனவே அந்த மாதிரியான சமயங்களில் இயற்கை முறையில் எறும்பை விரட்டலாம். இனிப்பு பொருட்கள் சிதறி தரையில் சிதறிக் கிடந்தாலும் அல்லது குழந்தைகள் பிஸ்கட் சிந்தினாலும் எறும்பு தொல்லைகள் அதிகமாக இருக்கும். எனவே கூடுமானவரை அதை உடனே சுத்தம் செய்து கொள்வது நல்லது. மேலும் சமையலறையில் வைத்திருக்கும் குப்பையையும் உடனே அப்புறப்படுத்தி விடுவது நல்லது. செல்லப்பிராணிகள் வைத்திருந்தால் அதன் உணவு பாத்திரங்களையும் கழுவி சுத்தமாக வையுங்கள்.

எறும்பு எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் கொதிக்க கொதிக்க வெந்நீரை வைத்து அதில் ஊற்றலாம். இந்த சூட்டில் எறும்புகள் அழிந்துவிடும். இருப்பினும் எறும்பு குழிகள் மிகவும் ஆழமானவை என்பதால் எல்லா எறும்புகளும் ஒட்டுமொத்தமாக அழியாது. ஆனால் எறும்புகள் மறுபடியும் அந்த பொந்தில் இருந்து வருவது தடுக்கப்படும். கண்ணாடி கிளின்சர் மற்றும் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தப்படும் லிக்யூட் சோப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக்கொண்டு எறும்பு வரும் இடத்தில் தெளிக்கலாம். சோப்பின் மனத்திற்கு எறும்புகள் தாங்காது ஓடிவிடும்.

எறும்புகள் போன பின் அந்த இடத்தை சுத்தமாக துடைத்து விடலாம். 50% ஒயிட் வினிகர் எடுத்து அதை ஸ்பிரே பாட்டிலில் எடுத்து அதனுடன் 50% தண்ணீரும் சேர்த்து எறும்பு வரும் இடத்தில் தெளித்தால் எறும்புகள் ஓடிவிடும். ஏனெனில் வினிகரில் உள்ள அமிலத்தன்மை எறும்புகளுக்கு பிடிக்காது. அதேபோன்று எறும்புகளுக்கு மிளகுத்தூள் வாசனையானது எரிச்சல் ஊட்டக் கூடியது, எனவே எறும்பு வரும் இடங்களில் மிளகுத்தூளை தூவி வைக்கலாம் . மிளகின் காரம் எறும்பு தொல்லையை விரட்டி விடும். பின்னர் எறும்பு அந்த பக்கம் தலை வைத்து கூட படுக்காது.



--

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

வாழைப்பழம் அதிகமாகசாப்பிட்டால் என்னவாகும்?

வீட்டில் உள்ள பழக்கூடையில் வாழைப்பழம் வைத்திருப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பழங்கள் என்று கூறினால் முதலில் வாழைப் பழத்தின் பெயர் தான் நினைவுக்கு வரும்.

வாழைப்பழம் அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையானது மற்றும் பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சிலர் வாழைப்பழத்தை ஷேக் செய்து குடிக்கவும் விரும்புகிறார்கள். அதேபோல் ஜிம்மிற்கு செல்பவர்களும் வாழைப்பழ ஷேக்கை அடிக்கடி குடிப்பார்கள். வாழைப்பழத்தை அதிகமாக உட்கொள்வது உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை கேட்கும் போது உங்களுக்கு விசித்திரமாக இருந்தால் இந்த செய்தியை கண்டிப்பாக படியுங்கள்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களைப் பார்த்தால், வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி மற்றும் மெக்னீசியம் தவிர, வைட்டமின்-சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-பி6, தயாமின், ரிபோஃப்ளேவின் போன்றவை உள்ளன. வாழைப்பழத்தில் 64.3 சதவீதம் தண்ணீர், 1.3 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நாம் உடலுக்கு மிகவும் அவசியம்.

வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் 4 முக்கிய தீமைகள்

1. நீங்கள் ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வாழைப்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும். உண்மையில், வாழைப்பழத்தில் டைரமைன் என்ற பொருள் உள்ளது, இது ஒற்றைத் தலைவலியின் வலியை மேலும் அதிகரிக்கும். சிலருக்கு வாழைப்பழம் என்றால் அலர்ஜியாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதை அதிகமாக உட்கொள்வதால், இரத்தத்தில் அதிகப்படியான பொட்டாசியம் ஏற்படலாம், இதன் காரணமாக ஹைபர்கேமியா பிரச்சனை ஏற்படலாம், சில சமயங்களில் இது மாரடைப்புக்கும் வழிவகுக்கும். வாழைப்பழத்தில் மாவுச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதால், வாழைப்பழத்தை உட்கொள்வதால் பல் பிரச்சனைகளும் ஏற்படும்.

3. வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அதை உட்கொள்ளக்கூடாது. வாழைப்பழத்தில் அதிக அளவு கலோரிகள் உள்ளன, இது உங்கள் எடையை அதிகரிக்கும். நீங்கள் வாழைப்பழம் சாப்பிடுகிறீர்கள் என்றால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

4. வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரையின் அளவும் அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாழைப்பழங்களை அதிக அளவில் உட்கொள்வது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும், இது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.



--

சனி, 16 ஆகஸ்ட், 2025

அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்.

நாம் அனைவரும் சாப்பிடும் விருப்பமான உணவுகளில் முட்டையும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.

முட்டையை நாம் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது நும்முடைய உடலுக்கு சில தீமைகளும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். அப்படி நாம் முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வாத்து இறைச்சி மற்றும் முட்டை முட்டையுடன் சேர்த்தோ அல்லது முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாத்து இறைச்சியில் இனிப்பு தன்மையும் குளிர்ச்சியை உண்டாக்கும். முட்டையிலும் அதிக அளவு புரதமும் குளிர்ச்சியை உண்டாக்கும். ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் முட்டை உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து செய்யப்படும் உணவுப்பண்டங்களை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் உருளைக்கிழங்கில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்தை நம்முடைய உடலானது உறிஞ்சுவதை தடுக்கிறது. எனவே இந்த இரண்டு பொருட்களை கொண்டு உணவுப்பண்டகளை தயாரித்து உண்பது செரிமானத்தை மிகவும் தாமதமாக்கி அஜீரணத்தை ஏற்படுத்தும்.

ஒரு முட்டையில் புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.

இருப்பினும் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அந்தவகையில் அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

அதிக முட்டைகளை உட்கொள்வது உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

முட்டைகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலில் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

முட்டையில் கொழுப்பு உள்ளது. நீங்கள் அதிக முட்டைகளை உட்கொள்ளும்போது,     உங்கள் உடலால் உட்கொள்ளும் கலோரிகளை சமநிலைப்படுத்த முடியாது. இதன் காரணமாக உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.

அதிக முட்டைகளை உட்கொள்வதன் மூலம், வயிறு தொடர்பான பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, வாந்தி, வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.



--

புதன், 13 ஆகஸ்ட், 2025

உணவுக்கு முன்பு அல்லது பின்பு எப்போது ஸ்வீட் சாப்பிட வேண்டும்?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமானது இனிப்புகள். அதை நினைக்கும் போதே நமக்கு நாவில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விடும்.

உணவின் இறுதியில் தங்களுக்குப் பிடித்தமான ஸ்வீட் ஒன்றை சாப்பிடுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக, குழந்தைகள் உணவை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் சமயங்களில், அவர்களிடம் ஸ்வீட் ஒன்றை காட்டி, எல்லா உணவையும் சமத்தாக சாப்பிட்டு முடித்தால் இந்த ஸ்வீட் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறும் வழக்கம் கூட உண்டு. ஆனால், இது தவறானது.

பெரும்பாலான ரெஸ்ட்ராண்ட்களில் கூட உணவின் இறுதியில் ஸ்வீட் பரிமாறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் உணவை சாப்பிட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பதை நாம் வாடிக்கையாக வைத்திருக்கிறோம். ஆனால், இது தரும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம்.

அதே சமயம், உணவுக்கு முன்பாக ஸ்வீட் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. இது நம் உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தவும், ஊட்டச்சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். ஆயுர்வேத நிபுணர், மருத்துவர் நிதிகா கோலி, இதுகுறித்த ஆலோசனைகளை இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவுக்கு, "பின்வரும் ஆலோசனைகள் என்பது பண்டைய கால ஆயுர்வேத பலன்களை உள்வாங்கிக் கொள்ள உதவிகரமாக இருக்கும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி ஸ்வீட்கள் மூலமாக உடல் நலன், ஆற்றல் போன்றவற்றை அதிகரிக்க முடியும்'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

உணவுக்கு முன்பாக ஸ்வீட்கள் சாப்பிடுவது ஏன்?

பொதுவாக இனிப்புகள் செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆகவே, இனிப்புகளை முதலில் எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்திற்கு தேவையான என்ஜைம்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவே உணவுக்குப் பிறகு இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்தை அது மட்டுப்படுத்துகிறது.

உணவுக்கு முன்னால் இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது நம் நாவில் உள்ள சுவை மண்டலத்தை அது தூண்டிவிடும். உணவுக்குப் பிறகு இனிப்புகளை எடுத்துக் கொண்டால் உணவு செரிமானம் ஆகாமல், ஆசிட் சுரப்பு அதிகமாவதற்கு வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல் உணவுக்குப் பின்னர் இனிப்புகளை எடுத்துக் கொண்டால் வாயு உருவாகும் என்று ஆயுர்வேத நிபுணர் நிதிகா கோலி தெரிவித்துள்ளார்.

காலை உணவில் இனிப்பு முக்கியம்:

மற்ற வேளை உணவுகளைக் காட்டிலும் காலை வேளை உணவுக்கு முன்பாக ஸ்வீட் எடுத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பாக, நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதனால், தமிழர் பண்பாட்டில் பெரும்பாலும் காலை டிபன் உணவுக்கு முன்பாக கேசரி, அல்வா, போன்றவற்றை பரிமாறுகின்றனர். நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்க வேண்டும் என விரும்புபவர்கள் லோ-கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.



--

சனி, 9 ஆகஸ்ட், 2025

ஸ்வீட் மீதுசில்வர் கலர்! ஏன் தெரியுமா? இதிலும் போலி. எப்படி கண்டுபிடிக்கலாம்?

இனிப்பு என்று சொன்னாலே, அதன் சுவை நாவில் ஒட்டிக் கொள்ளும். நம் கற்பனையில், எல்லா இனிப்புகளும் நொடியில் வந்து போகும், இல்லையா?

வயதுவித்தியாசமின்றி இனிப்பு வகைகள் என்றால் எல்லோருக்கும் பிரியம்தான். இனிப்புக் கடைகளில் ட்ரேகளில் வகைகள் பிரித்து அடுக்கப்பட்டிருக்கும் இனிப்புகளைப் பார்த்தேலே நா ஊறும் இல்லை. அப்படியே, நாம் இனிப்புகளின் மீது இருக்கும் சிலவர் நிற ஜரிகை பேப்பர்களை கவனித்திருப்போம். அது என்ன என்ற கேள்வியும் நம்மிடம் இருந்திருக்கும். இனிப்புகள் மீது ஒட்டப்படும் சிலவர் நிற பொருள் என்ன? அதன் பயன் என்ன? இதற்கான விடையை இக்கட்டுரையில் காணலாம்.

இனிப்புகள் மீது ஒட்டப்படும் சிலவர் நிற பேப்பர்கள் vark silver leaf என்றழைக்கப்படுகிறது. இது சுத்தமான வெள்ளியால் ஆனது. 2.8 மைக்ரோ கிராம் அளவு கொண்டது. ஆசிய மற்றும் சீனா பாரம்பரிய முறையில் வெள்ளி பாத்திரங்கள் உணவு உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படிதான், நம் ஊரில் வெள்ளி பாத்திரங்களில்தான் குழந்தைக்கு உணவு ஊட்டப்படும். ஏனெனில், குழந்தைகளுக்கு பெரிதாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. அவர்களை வைரஸ் மற்றும் பாக்டிரீயாவிகளிடம் இருந்து பாதுகாக்கவும், உடல்நலனிற்கு கேடு ஏதும் நடக்காமல் இருக்க வெள்ளி பாத்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. அப்படிதான், இனிப்புகளில் வெள்ளி பேப்பர்கள் பயன்படுத்தப்படுவதும்.

வார்க் சில்வர் லீஃப் (vark silver leaf)-இன் வேலை என்ன?

வார்க் சில்வர் லீஃப் இனிப்புகளுக்கு மீது ஒட்டப்படுவதால், இனிப்புகள் சீக்கிரம் வீணாகிவிடாமல் இருக்க உதவுகிறது. இந்த வார்க் சில்வர் லீஃப்கள் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனுடக் சேர்ந்து வினைபுரிகிறது. வைரஸ்,பாக்டீரியா உள்ளிடவைகளை அழிக்க உதவுகிறது. இனிப்புகளில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் தாக்குதல்களை சமாளிக்கவும், நம் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கிறது.

இந்த வார்க் சில்வர் லீஃப் பாக்டீரியாவின் வெளிப்புறச் சுவரை தகர்ப்பதுடன், பாக்டீரியாவின் டி,என்.ஏ. மற்றும் மெம்பரன்ஸ் உள் நுழைந்து அவைகளை அழிக்கிறது. இது 99 சதவீதம் வெள்ளியால் ஆனது. இதை நாம் சாப்பிடுவதால் உடல்நலனுக்கு எவ்வித பாதிப்புகளும் வராது. ஆனால், இன்றைய சந்தையில் இனிப்புகளில் அலுமினியன் ஃபாயில் ஷீட்களும் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த அலுமினியம் ஃபாயில் ஷீட்களை உட்கொண்டால் மூளையை பாதிக்கும் என்கிறது மருத்துவ உலகம். அப்படியிருக்க, இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டறிவது எப்படி?

வார்க் சில்வர் லீஃப் - அலுமினியம் ஃபாயில் ஷீட்கள் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது எப்படி?

அலுமினியம் ஃபாயில் ஷீட் உணவு பொருளை சூடாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், இதை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு.

நீங்கள் கடைகளில் இருந்து இனிப்பு வாங்கும்போது, இனிப்பின் மேல் உள்ள சில்வர் நிற பேப்பரை சிறிது கையில் எடுத்து அதை உள்ளங்கையில் தேய்த்துப் பாருங்கள். உண்மையான வெள்ளி, அதாவது வார்க் சில்வர் லீஃப் என்றால் உங்கள் உள்ளங்கையில் அது முற்றிலுமாக துகளாகிவிடும். இதுவே, அலுமினியம் ஃபாயில் ஷீட் என்றால், குட்டி உருண்டையா வரும்.

இனிப்புகளின் மீது இருக்கும் சில்வர் நிற பொருள் குட்டி பந்து போன்று இருந்தால் அது நிச்சயம் அலுமினியன் ஃபாயில் ஷீட்தான் என்பதை தெரிந்துகொள்ளங்கள்.

இனி, இனிப்பு வாங்கும்போது விழிப்போடு இருங்கள். ஏன்னா, நமக்கு இனிப்பு வகைகள்னா அவ்வளவு பிடிக்குமே. அதை தவிர்க்க முடியாதே, ஆனால், தரமானதா என்று பார்த்து வாங்கி சாப்பிடலாம்.



--

புதன், 6 ஆகஸ்ட், 2025

நிறைய செலவு வைக்கும் சிறுநீர் பிரச்சனைகளுக்கு செலவில்லாத சிகிச்சை முறைகள்.

ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ, அதே போல் உள்ளுறுப்புகளின் அளவும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

பொதுவாக ஒருவரது சிறுநீர்ப்பையில் 2 கப் சிறுநீர் சேரும். எப்போது சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்புகிறதோ, அப்போது தான் சிறுநீர் அவசரமாக வருவது போன்ற உணர்வு எழும். சிலருக்கு சிறுநீர்ப்பையில் 1 ½ கப் சிறுநீர் தான் சேரும். இத்தகையவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். எனவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சிறுநீர்ப்பையின் அளவும் ஓர் காரணமாகும்.

நீங்கள் தினமும் போதுமான அளவில் நீரைக் குடித்து, சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்

அதிலும் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிப்பதோடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிமுதுகு பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் நிறைய பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு சீராக சிறுநீர் வராது.

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும், மற்றும் நீர் கடுப்பு என பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

இவை அனைத்திற்கும் எளிய வீட்டு வைத்திய முறையில் தீர்வு காண வழிகள் இருக்கின்றன.

நீர் கடுப்பு குணமாக

வெங்காயத்தை பொடி 6பொடியாக நறுக்கி. பிறகு நறுக்கிய வெங்காயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால், நீர்க்கடுப்பு விரைவில் குணமாகும். அல்லது வெங்காயத்தை அப்படியே பச்சையாகவும் கூட சாப்பிடலாம்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப் பழத்தின் தோலைநீக்கிய பிறகு அதை பொடி பொடியாக நறுக்கி, அரைத்து சாறு பிழிந்து, அந்த அன்னாசிப்பழச் சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

சிறுநீர் கோளாறுகள் குணமாக

நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து தண்ணீரில் இட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல செய்து பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட அணைத்து கோளாறுகளும் குறையும்.urine_problem_004

தாமரை, ரோஜா இதழ்கள்

தாமரை பூவின் இதழ்கள் மற்றும் சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.urine_problem_005

பெர்ரி

சுத்தமான பெர்ரி பழங்களை எடுத்து சாறு பிழிந்து தேவையான அளவு நீர் விட்டு தினமும் காலை, மாலை குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட‌ எல்லா கோளாறுகள் குறையும்.urine_problem_006

எலுமிச்சையும், கற்கண்டும்

வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.



--

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் ஏன் பச்சைநிற ஆடை அணிகிறார்கள் என்று தெரியுமா?


ஆரம்ப காலகட்டத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போது வெள்ளை நிற ஆடைகளை தான் அணிந்து இருக்கிறார்கள்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில்தான் அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள் ரத்தத்தை பார்த்து விட்டு வெள்ளை நிற ஆடையை பார்த்தார்கள் என்றால் சில நொடிகளுக்கு அவர்களால் எதையுமே தெளிவாக பார்க்க முடியாது என்பதை புரிந்துகொண்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவர்களுக்கு ஏற்படும் தலைவலிக்கு இது முக்கிய காரணமாக அமைந்து விடும். அதனால் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும் என்பதற்காக பச்சை மற்றும் நீல நிறம் போன்ற வண்ணம் கொண்ட ஆடைகளை மருத்துவர்கள் அணிகிறார்கள்.



--

செவ்வாய், 29 ஜூலை, 2025

ஏ.டி.எம் கார்டில் பாதுகாப்பு அவசியம். இல்லையேல் Block..Block.. கவனமாக இருங்கள்.

ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதா?

இன்றைய காலக்கட்டத்தில் விவரம் தெரிந்த குழந்தை முதல் வயதான தாத்தா வரையில், ஏ.டி.எம் கார்டுகளை பயன் படுத்துகின்றனர்.

என்னதான் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வந்தாலும் ஏ.டி.எம் கொள்ளைகளும், பண மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நமது ஏ.டி.எம் கார்டு விவரங்களைத் திருடி பணத்தை எடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இப்படி இருக்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டால், அச்சச்சோ ஏ.டி.எம் கார்டு தொலைந்து விட்டதே... அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து கொண்டே இருப்போம்.

அவ்வாறு தொலைந்துவிட்டால் உடனடியாக அதனை எப்படி பிளாக் செய்வது? எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்வது? என்ற விவரங்கள் தெரியுமா? தெரியாது எனில் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கானதே...!!

முதலில் பிளாக் செய்யுங்கள்:

நீங்கள் உங்களது ஏ.டி.எம் கார்டினை தொலைத்து விட்டால், பதற்றப்படாமல் உடனே பிளாக் செய்யுங்கள். இன்றைய காலக்கட்டத்தில் உங்களது கார்டினை எளிதில் பிளாக் செய்து கொள்ளலாம். அதற்காக பல வழிமுறைகளும் உள்ளன.

பலரும் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு எப்போது தொலைத்தோம் என்பது கூட தெரியாமல் இருந்து விடுகின்றனர். அதை நாம் பார்த்து அதற்காக வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும்.

மேலும் பின் நம்பரை அறிந்து கொள்ள இன்று பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எனவே அலட்சியமாக இருக்காமல், ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனே தங்களது வங்கிக் கிளையை அணுகி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம்.

எவ்வாறு பத்திரமாக பார்த்துக்கொள்வது?

உங்கள் பின் நம்பரை யாராலும் கண்டுபிடிக்க முடியாதவாறு வைத்திருப்பது நல்லது.

பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக தொலைபேசி எண் போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண்களைத் தவிர்க்க வேண்டும்.

அதே போல் பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனமான வேலையை தவிர்ப்பது சிறந்தது.

சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்கள் நமது பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

அதனால் ஏ.டி.எம் சென்டரை விட்டு வெளியேறும் போது கார்டு நம்மிடம் தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.



--

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க அசத்தலான வழிகள்.

ஒருவரது வயிற்றில்     புழுக்கள் இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை தான். தற்போதைய மோசமான வாழ்க்கை முறை , கெட்டுப் போன உணவை உண்பது , சாப...

Popular Posts