லேபிள்கள்

சனி, 16 டிசம்பர், 2023

காய்ச்சல் பற்றி அறிவோமா!

காய்ச்சலில் பல வகைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், தொடர் காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காய்ச்சல் அதிகமாகி குறைதல் ஆகியவை காய்ச்சலின் வகைகளுள் சிலவாகும்.

காற்று மூலம் பரவக்கூடிய சாதாரண காய்ச்சலுக்கு இன்புளூயென்சா என்று பெயர். பாக்டீரியா தொற்றின் காரணமாக மார்பு சளி, உடலில் சீழுடன் கட்டி ஆகியவை காரணமாக தொடர் காய்ச்சல் ஏற்படலாம். கொசு காரணமாக மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவை கொசுக்களில் பரவுகின்றன.

நோய்க்கிருமி உடலில் நுழைந்து பெருகி ரத்தத்தில் கலக்கும்போதுதான் வெளிப்பொருள் உடலில் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது.

இன்புளூயன்சா:

இது சாதாரண காய்ச்சல், காய்ச்சல் உள்ள ஒருவர் தும்மும்போது அவருக்கு அருகில் ஆரோக்கியமாக உள்ளவருக்கு காற்றுமூலம் இக்காய்ச்சலுக்கான கிருமி உட்சென்று பரவுகிறது.

இக்காய்ச்சல் வரும்போது மூக்கிலும், கண்ணிலும் நீர் வடியும். உடல் வெப்பம் 104 டிகிரி வரை செல்லும். நோயாளியால் நோயின்போது இயல்பாக இருக்க முடியாது.

மலேரியா காய்ச்சல்:

சுத்தமற்ற தண்ணீரினால்தான் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கிராமப் புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. நகர்ப்புறங்களில் நீர்த்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன.

அறிகுறி:

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாகக் கடுமையாகும். சில மணிநேரம் இடைவெளிக்குள் இந்த மூன்று கட்டங்களும் உடலில் வெளிப்படும். முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும். காய்ச்சல் இருக்காது. இரண்டாவது கட்டத்தில் சட்டையை கழற்றி எறியும் அளவிற்குக் காய்ச்சல் இருக்கும். உடனடியாகக் காய்ச்சல் சிறிது இறங்கி வியர்வை வரும். மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும்.

போர்வையை உடல் முழுவதும் போர்த்திக் கொள் ளும் அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்படும். அத்துடன் விட்டு விட்டுக் காய்ச்சல், தலை வலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும்.

டைபாய்டு:

இது ஒரு பாக்டீரியா காய்ச்சல். சுத்தமற்ற உணவை சாப்பிடுவதால் வரு கிறது. இந்நோய்க்கிருமி குடலில் தங்கி பல்கிப்பெருகி நச்சுத் தன்மை மிக்க திரவம் உற்பத்தியாகிறது. இத்திரவம் ரத்த்தில் கலப்பதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். மூச்சுக்காற்று சூடாக இருக்கும். சில சமயம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, கண்டங்கத்திரி, கீழாநெல்லி, வில்வம் ஆகியவற்றை பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒன்றரை ஸ்பூன் எடுத்து காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளும் சாதாரண நீரில் கலந்து உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சுமார் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தொடர்ந்து உண்ண வேண்டும்.

சுமார் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். தீராத பட்சத்தில் மூலிகை மருத்துவரின் ஆலோசனையை நாடவும்.

புதன், 13 டிசம்பர், 2023

அல்சர் இருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

 

அல்சர் இருப்பவர்களுக்கு குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்கவேண்டியவை: கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு. தவிர்க்க வேண்டியவை: அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

சனி, 9 டிசம்பர், 2023

தயிர் மற்றும் யோகர்ட் என்ன வித்தியாசம்? எது ஆரோக்கியமானது?

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உண்மையான வேறுபாடு உள்ளதா அல்லது இரண்டும் ஒன்றா? நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் ஒத்த அதேநேரம்' வேறுபட்ட பால் சார்ந்த இரண்டு தயாரிப்புகளைப் பற்றிய ஒரு சிறிய விவரம் இங்கே.

தயிர் , யோகர்ட் என்ன வித்தியாசம்?

தயிர் மற்றும் யோகர்ட் இரண்டும்' தோற்றத்தில் ஒரே மாதிரியானவை, ஆனால் அவற்றின் சுவை, அமைப்பு மற்றும் தயாரிப்பில் ஒரு தனித்துவமான வேறுபாடு உள்ளது.

தயிர் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் உட்கொள்ளப்படுகிறது. இது சில பழைய தயிர் அல்லது எலுமிச்சை சாற்றை' சூடான பாலுடன் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இப்படி செய்வதால், புரோபயாடிக் பாக்டீரியாத் தூண்டப்பட்டு, தயிர் உருவாகும்.

மறுபுறம், யோகர்ட்' பொதுவாக வணிக ரீதியாக தயாரிக்கப்படுகிறது. இது பாலை' செயற்கை அமிலங்களுடன் புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. மேலும் சரியான சுவை மற்றும் மென்மையான அமைப்பைப் பெறுவதற்கு உகந்த வெப்பநிலை தேவைப்படுகிறது.

தயிர் மற்றும் யோகர்ட் இரண்டிலும் புரோபயாடிக் பாக்டீரியாக்கள் இருந்தாலும், யோகர்ட்டில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு' தயிருடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. அதற்கு தயாரிக்கும் முறைதான் காரணம்.

மறுபுறம், தயிரில் ஒப்பீட்டளவில் குறைவான அளவு பாக்டீரியாக்கள் உள்ளன.

உதாரணமாக, ஒரு மீடியம் சைஸ் கிண்ணத்தில் இருக்கும் தயிரில்' தோராயமாக 3-4 கிராம் புரதம் உள்ளது. ஆனால் அதே அளவு யோகர்ட்டில்' தோராயமாக 8-10 கிராம் உள்ளது.

எது ஆரோக்கியமானது ?

உடலை குளிர்விப்பதில் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை, இந்திய உணவு வகைகளில் தயிர் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இதில் சரியான அளவு பால் கொழுப்புகள், புரதம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது, இது எலும்புகள், பற்கள் மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

மறுபுறம், யோகர்ட்' ஆரோக்கியமான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது. உண்மையில், யோகர்ட்டில் பல வகைகள் உள்ளன. அதில் சில வகைகளில் இருமடங்கு புரதம் உள்ளது, இது வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.

புதன், 6 டிசம்பர், 2023

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

 

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை தழுவும்.

இன்னும் சிலர் புரண்டு புரண்டு படுத்து தான் தூக்கத்தை வரவ ழைத்து கொள்வார்கள்.இன்னும் சிலர் உண்டு. அவர்கள் தலைகீழாக நின்று குட்டிகரணம் போட்டாலும் கூட தூக்கம் வருவது பெரிய பாடாகவே இருக்கும். இதெல்லாம் இன்றைய காலத்தின் கொடுமை என்று கூட சொல்லலாம்.

தூக்கத்தின் நிலையை மூன்றாக பிரித்துவைத்திருக்கிறார்கள் ஒன்று மந்தமான தூக்கம். சின்ன சத்தம் கேட்டால் கூட விழித்துவிடுவார்கள். இரண்டாவது கும்பகர்ணன் தூக்கம் என்று சொல்லகூடிய அளவு இடியே விழுந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் விழிப்பு வராது. இவர்களை தட்டிஉலுக்கி எழுப்பினாலும் அந்த கலக்கத்திலிருந்து வெளியே வர அதிக நேரம் பிடிக்கும். மூன்றாவது நிலை தூக்கமானது ஆழமான தூக்கத்தில் இருந்தாலும் சிறு அசைவு அல்லது எழுப்பினால் உடனடியாக எழுந்துவிடுவது. இதில் நீங்கள் எந்த ரகம் என்பது உங்களுக்கு தெரியும்.

தினமும் வாடிக்கையாக அதிக நேரம் பகல் தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய ஒரு விஷயமாகும். பகல் முழுவதும் உடல் உறுப்புகள் உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருக்கும். இப்படி இருக்கும் பொழுது திடீரென உடலுக்கு ஓய்வு அளிக்கும் பொழுது உடலானது குழம்பிப் போய்விடும். இந்த குழப்ப நிலை புற்று நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும். - இதைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்களுக்கு மற்றவர்களை விட வயது முதிர்ந்தவர்கள் பகல் நேர தூக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கருத்து கூறியுள்ளனர். பகல் நேர தூக்கத்தை விட தூக்கமின்மை பிரச்சனை 2.3% அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இரவில் சரியான தூக்கமும், பகலில் சரியான உடல் உழைப்பும் இருப்பவர்களுக்கு தேவையற்ற நோய்களும் அவ்வளவு சீக்கிரம் நெருங்குவதில்லை. மதிய உணவை சாப்பிட்ட உடன் பலருக்கு தூக்கம் வருவது உண்டு. இதனை உண்ட மயக்கமா? என்று கிண்டல் செய்வது உண்டு. இப்படி சாப்பிட்டவுடன் படுத்து உறங்குபவர்களுக்கு உடல் எடை கணிசமாக உயர்ந்து விடுகிறது. இதனால் நீரிழிவு, இதயநோய் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பகலில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு, இரவில் சரியான தூக்கம் வருவது இல்லை. இப்படி மாறுபட்ட முறையில் தூக்கம் என்கிற நிகழ்வு நிகழ்வதால் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது எனவே ஆரோக்கியமான உணவு முறை பழக்கத்தையும், தூங்கும் முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக 45 வயதை கடந்தவர்கள் பகலில் அதிக நேரம் உறங்குவதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

டென்ஷனைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்.

டென்ஷனைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள். மன அழுத்தமாக அல்லது டென்ஷனாக இருப்பதாக உண...

Popular Posts