லேபிள்கள்

சனி, 23 ஏப்ரல், 2011

குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு நகம் வெட்ட சரியான நேரம் எது?


குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு நகம் வெட்ட சரியான நேரம் எது?

குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் பராமரிப்பிலும் தாய்மார்கள் மென்மையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். அந்த விஷயங்களில் உங்களுக்கு உதவும் எளிய டிப்ஸ் இதோ...
* குழந்தைகள் விளையாடும் வேளைகளில் அதிகமாக நகங்களைப் பயன்படுத்துவதால் அதில் ஏராளமாக அழுக்குப் படியும். இதனால் நோய் தொற்ற வாய்ப்பு உண்டு. எனவே அதிகமாக வளரும் நகங்களை அவ்வப்போது வெட்டிவிடுவது சிறந்தது.
* குழந்தைகளின் நகங்களை வெட்ட சரியான நேரம் அவர்கள் தூங்கும் வேளைதான். இல்லாவிட்டால் அவர்கள் வளைந்து, நெளிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். பிறகு அழுகையையும் நிறுத்த முடியாது.
* குளிப்பாட்டியவுடன் குழந்தைகளின் நகம் மேலும் மென்மையாக மாறிவிடும் என்பதால் அப்போதும் நகங்களை வெட்டலாம்.
* குழந்தைகளுக்கு வேகமாக நகம் வளர்ந்து விடும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. மெதுவாகவே வளரும். 2 வாரங்களுக்கு ஒரு முறை நகங்களை வெட்டிவிடலாம்.
* குழந்தைகளின் கால் நகங்கள், கை நகங்களைவிட மெதுவாகத்தான் வளரும். அதுவும் மிருதுவாகத்தான் இருக்கும். கால்நகங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்பதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டிய அவசியமில்லை. நன்றாக வளர்ந்தபிறகு வெட்டலாம்.
* நகங்களை வெட்டுவதற்கு குழந்தைகளுக்கான 'நெயில்கட்டர்' கருவியை பயன்படுத்தலாம். கத்தரிக்கோல், பிளேடு கொண்டு வெட்டுவது, சாணைக்கல்லில் நகங்களை உரசுவது போன்றவை கூடாது.
* காதுகளை சுத்தம் செய்ய சுத்தமான துணியை லேசாக தண்­ணீரில் நனைத்து காதை துடைத்தால் போதும். காதுக்குள் குடைந்து எடுக்க வேண்டாம்.
* காதுகளில் மயிர்க்கால்கள் வளர்வதை உணர்ந்தால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்க வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.
* காதுக்குள் சொட்டு மருந்துகள் எதையும் டாக்டர்களின் ஆலோசனையின்றி விடவேண்டாம்.
* கண்களை சுத்தப்படுத்தும்போது சுத்தமான துணியை வெது வெதுப்பான நீரில் முக்கி பிழிந்துவிட்டு கண்ணின் சுற்றுப்புறத்தை துடைத்தால் போதும். சோப்பு கொண்டு கண்களை கழுவக்கூடாது.

ஒரு ஸ்மார்ட் போன் வாங்க‌


ஸ்மார்ட் போன்கள் எனப்படும் கணிப்பேசிகள் பற்றி பார்க்கலாம். முன்பைப்போல கைப்பேசிகளின் ன்பாடு வெறும் பேசவும், டெக்ஸ்ட் செய்யவும் என்றில்லாது இன்றைக்கு அதை இணையத்தோடு இணையச்செய்து, அதற்கு ல்வேறு புத்திகளையும் கொடுத்து அதை நாம் அநேகம் செய்ய வைத்திருக்கின்றோம். சீக்கிரத்தில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்க உத்தேசத்திலிருப்போர்க்கு கீழ்கண்ட குறிப்புகள் உதவலாம்.
1.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் : ஸ்மார்ட் போன்கள்,ணிணிகளைப் போலவே ஏதாவது ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு ரும். எகா: கூகிளின் ஆன்ட்ராய்ட், ஆப்பிளின் iOS4, பிளாக்பெர்ரியின் BlackBerry OS ,மைக்ரோசாப்டின் Windows Mobile, நோக்கியாவின் Symbian அல்லது MeeGo. இந்த OS-ளில் எந்த OS உங்களுக்கு மிகவும் பிடித்தமானது வுகரியமானது என முடிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொன்றும் அதற்கென "பயன்பாடு ந்தை"ளை கொண்டுள்ள. ஐமீன் AppStore or Application Marketplace.எப்படியும் உங்கள் ஸ்மார்ட்போன் மேற்சொன்னவைகளில் எதாவது ஒரு OS- கொண்டிருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள். எனது ரிந்துரை Android. முடியுமெனில் iOS4.

2.
இணைய இணைப்பு வசதிகள் : உங்கள் ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக Wi-Fi இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடவே உங்கள் இடம், சூழலுக்கேற்ப 4G, UMTS/HSDPA அதாவது 3G,GPRS, EDGE போன்ற இணைய இணையும் வசதிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3.
தொடுதிரை : சிலருக்கு எல்லாமே டச் ஸ்கீரினால் செய்ய முடியும். சிலருக்கு டச் ஸ்கீரின் என்றாலே அலர்ஜி. உங்கள் ஸ்மார்ட் போன் எது கொண்டிருக்க வேண்டுமென நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். சில கணிப்பேசிகள் இரண்டுமே கொண்டு ருகின்ற. ச் ஸ்கிரீனெனில் Capacitive Touchscreen ல்ல தொடு உணர்வை தரும். எதற்கும் வாங்கும்முன் ஒரு முறை தொடுதிரையை தொட்டு பார்த்து அது உங்களுக்கு லாயக்காவென தெரிந்துகொள்ளுதல் ல்லது.பிற்பாடு விரல்களால் மொத்து மொத்தென திரையை மொத்துவதை விர்க்கலாம்.யூடியூப் வீடியோ பார்வைகளுக்கு ல்ல Display Resolution இருப்பது ல்லது.விரல்கள் விளையாட வசதியான அளவு Display Size வேண்டும்.

4.
நினைவகம் : ன்பாடுகளை நிறுவ அதிக Internal Memory தேவைப்படும்.GB க்கில் இருப்பது ல்லது.

5.
பேட்டரி :  கடைசியாக ஆனால் மிக முக்கியமாக battery life.


புதிதாக குழந்தைபெற்ற தாய்மார்களின் தூக்கமில்லா இரவுகளுக்கான சில தீர்வுகள்.

உங்கள் வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தை இருக்கும் போது சரியான நேரத்தில் தூங்குவது சாத்தியமில...

Popular Posts