லேபிள்கள்

புதன், 13 ஜூன், 2018

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
 * சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.


 * மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
 * சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
 * சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.
 * உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
 * திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
 * சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
 * அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
 * சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
 * சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 * சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
 * சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
 * ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
 * பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.
 * சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
 * சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
 * கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
 * மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 நாம் சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை.
சீரகம் நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய பொருள். வாழைப்பழம், எந்த பருவகாலத்திலும் கிடைக்கக் கூடிய எளிய பழம்.

இந்த இரண்டையும் கலந்து சாப்பிட்டால், என்னமாதிரியான நோய் குணமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் வாழைப்பழத்தின் மேல்தோலை உரித்து அப் பழத்துடன் கொஞ்சம் சீரகத்தை சேர்த்து நன்றாக பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.
மேலும் உடலில் இருக் கும் தேவையற்றகெட்டகொழுப்புக்கள் கரைந்து உடல் எடை குறைந்து ஆரோக்கியம் மேலோங்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 11 ஜூன், 2018

நளினமாக புடவை கட்டுவது எப்படி? கத்துக்கலாம் வாங்க!

நளினமாக புடவை கட்டுவது எப்படி? கத்துக்கலாம் வாங்க!
தினமும் புடவை கட்டிய அம்மாக்களைக் கண்ட கடைசித்  தலைமுறை நாம்தான். அந்தளவுக்கு இப்போது புடவை என்பது பண்டிகைக்கால ஆடையாக மாறிவருகிறது. தமிழர்களின் பாரம்பர்ய உடையான புடவை, இப்படி நம் பெண்களுக்கு அந்நியமாகும் சூழலில், 'எப்படி அழகாக புடவை கட்டுவது' என்பது பற்றி ஒரு வொர்க்‌ஷாப் நடத்தியிருக்கிறார், TBG(Tamil Bridal Guide)' ஆன்லைன் வெடிங் ஸ்டோரின் உரிமையாளர் காவியா.



''இந்தக் காலத்துப் பெண்கள், எப்படிப் புடவை கட்டிக்கிறது, கட்டிட்டு எப்படி மேனேஜ் பண்றது என்பதில் எல்லாம் ரொம்பக்
  கஷ்டப்பட்டாலும், புடவை மீதான அவங்களோட இஷ்டம் குறையலைங்கிறதுதான் உண்மை. 'வாங்க... ஆர்வம் இருக்கிறவங்களுக்கு அழகா, அம்சமா புடவை கட்டும் டெக்னிக்கை நாங்க சொல்லித் தர்றோம்'னுதான் இந்த ஒன் டே ஸாரி டிராப்பிங் வொர்க்‌ஷாப்பை நடத்தினோம்'' என்கிறார் காவியா.

கட்டண வொர்க்‌ஷாப்புக்கு ஆர்வத்தோடு வந்திருந்த பெண்களுக்கு, சிந்தடிக், காட்டன், டிசைனர், பட்டு என ஒவ்வொரு ரகப் புடவையையும் கட்டிக் காட்டி பயிற்சி அளித்தார், ஸாரி டிராப்பிங் ஸ்பெஷலிஸ்ட் நிகிலா ஷ்யாம் சுந்தர்.
நளினமாகப் புடவை கட்ட அங்கே தரப்பட்ட ஆலோசனைகள் இங்கே...

* புடவையின் முந்தி, உள்பக்கம் குழப்பம் வராமல் இருக்க, உள்பக்க நுனியில் முடிச்சிட்டுக்கொள்ளவும். இது அடிப்படை.

* இடுப்புக்கான ப்ளீட்ஸை இடது பக்கத்தில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும்; ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், புடவை 'ஸ்கர்ட்' போல் ஆகிவிடும்.

* ப்ளீட்ஸை வயிற்றுப் பகுதியில் செருகியவுடன், அங்கே உப்பலாக இல்லாமல் உள்பக்கமாக சீராக நீவிவிடவும்.

* மார்புப் பகுதிக்கான ப்ளீட்ஸை வெளிப்பக்கத்தில்(இடப் பக்கத்தில்) இருந்து ஆரம்பிக்க வேண்டும். சரியாக வரவில்லையென்றால், உள்ளே இருக்கும் ப்ளீட்ஸின் அளவை சரிசெய்து கொள்ளலாம்.

* முந்தியை இரண்டு விதமாகப் பின் செய்யலாம். ஒன்று, ஃபார்மல் முறை. இதில் ப்ளீட்ஸை ஒன்றன் பின் ஒன்றாக மடித்து, தோள்பட்டைக்குச் சற்று கீழே பின்செய்ய வேண்டும். இரண்டாவது, கேஷுவல் முறை. இதில் ப்ளீட்ஸை ஒன்றன் பின் ஒன்றாக மடித்து, அதில் இரண்டாவது ப்ளீட்டை
  வெளியே எடுத்துவிட்டு, மீதியை அப்படியே பின் செய்ய வேண்டும். ரேவதி, சுஹாசினி, ரோஹிணி சேலை கட்டும் ஸ்டைல் இதுவே. மரியாதையான தோற்றம் தரும்.

* ப்ளீட்ஸை பிளவுஸுடன் பின் செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், ப்ளீட்ஸை அடுக்கிய பின், முதல் ப்ளீட்டை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி பின் செய்யலாம்.

* சிங்கிள் ப்ளீட் விட ஆசைப்படுபவர்கள், முதல் ப்ளீட்டை மட்டும் பின் செய்துவிட்டு, மிச்சம் இருக்கும் முந்தியை ஒன்றாகச் சேர்த்து, புடவை கையில் விழும் இடத்தில் உட்பக்கமாக பின் செய்யவும். இதனால் புடவை கையைத் தாண்டி தரையில் விழாமல் ஒரு கன்ட்ரோல் கிடைக்கும்.

* சிங்கிள் ப்ளீட் விட ஆசை, ஆனால் புடவை ட்ரான்ஸ்பரன்ட்டா
  இருக்கிறது என நினைப்பவர்கள்,  புடவையின் முந்தி முதல் இடுப்புப் பகுதிவரை, புடவையின் நிறத்திலேயே லைனிங் போல ஒரு மெல்லிய துணி அட்டாச் செய்துகொண்டு, சௌகர்யமாக சிங்கிள் ப்ளீட் விடலாம்.

* ட்ரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, ப்ளீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு பின் செய்ய வேண்டும்.
* ப்ளீட்ஸ் ஒன்றை ஒன்று
   ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது ப்ளீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி ப்ளீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

* புடவைக்கு ஃபால்ஸ் அட்டாச் செய்துகொள்ளும்போது, பார்டர் மடங்கும் பிரச்னை இருக்காது. மேலும், அது நீட் லுக் கொடுக்கும்.

* எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முக்கால் காலுடன் நிற்காமல், கணுக்கால் தொடும்படி உள்பாவாடை அணிய வேண்டியது அவசியம். இல்லையென்றால், பரிகசிக்கும் கமென்ட்ஸ் வாங்க நேரிடும்.

* ஃபிஷ் கட் சாட்டின் உள்பாவாடை கட்டும்போது, ஸ்லிம் லுக் கிடைக்கும். இதை, சின்தடிக் முதல் பட்டு வரை அனைத்துப் சேலைகளுக்கும்
  பயன்படுத்தலாம்.

* காட்டன், சாட்டின் என எந்த மெட்டீரியலில் உள்பாவாடை இருந்தாலும், உள்ளே இருக்கும் நாடா கயிறு காட்டனில் இருப்பது சிறந்தது. அப்போதுதான் இறுக்கமான முடிச்சுகள் விழும். முடிச்சு எளிதில் நழுவும் ரிஸ்க்கும் இருக்காது.

*
  அதிகபட்சமாக இரண்டு, மூன்று பின்கள் உபயோகிப்பதே போதுமானது. சகட்டுமேனிக்கு பின் செய்தால், கேஷுவலாக இருக்க முடியாது.

* புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்டவும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச்
  சரிசெய்துகொள்ளவும்.

* புடவை கட்டிப் பழக ஆரம்பிக்கும்போது, அதை அரைகுறையாகத் தெரிந்தவர்களிடம் இருந்து பழகாமல், நேர்த்தியாகப் புடவை கட்டும் பெண்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும்.

* வேண்டா வெறுப்பாக, கடமைக்காக இல்லாமல், ரசனையோடு, தன்னம்பிக்கையுடன் புடவை கட்டுங்கள். உலகின் மிக அழகான அந்த உடை, உங்களை இன்னும் அழகாகக் காட்டும்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 9 ஜூன், 2018

பல் கவனம்... உடல்நலத்துக்கு உதவும்! நலம் நல்லது!

பல் கவனம்... உடல்நலத்துக்கு உதவும்! நலம் நல்லது!
என்றைக்கோ ஒருநாள் `சுரீர்' என பல்லில் வலி. அப்போதுதான் நம் பகுதியில் பல் மருத்துவர் அருகில் எங்கே இருக்கிறார் என நினைவில் தேட ஆரம்பிப்போம். அவரைத் தேடி ஓடுவோம். பல் மருத்துவ உலகம் என்ன சொல்கிறது தெரியுமா?... 'பற்களின் பாதுகாப்பு பிறந்தவுடன் தொடங்கியிருக்க வேண்டும்' என்கிறது அழுத்தம் திருத்தமாக! சிசுவுக்கு, தாய் பால் புகட்டியதும் மிருதுவான, சுத்தமான துணியால் மிக மிக மென்மையாக ஈறுகளைத் துடைத்துவிடுவார் இல்லையா? அப்போது தொடங்குகிறது பல் பராமரிப்பு.
பற்களை பாதுகாப்பது தொடர்பான சில அத்தியாவசியமான விஷயங்கள் இங்கே...
 

* ஆலும் வேலும் மட்டும் அல்ல... மருதம், இலந்தை, இலுப்பை, இத்தி, கருங்காலி... எனப் பல துவர்ப்புத் தன்மையுள்ள மூலிகைக் குச்சிகளை, அதன் பட்டையோடு சேர்த்து பல் துலக்கப் பயன்படுத்தியது நம் பாரம்பர்யம். ஆலங்குச்சியில் குளிர்ச்சி, இலந்தையில் இனிய குரல்வளம், இத்தியில் விருத்தி, இலுப்பையில் திடமான செவித்திறன், நாயுருவியில் புத்திக்கூர்மை, தைரியம், மருதத்தில் தலைமயிர் நரையின்மை, ஆயுள் நீட்டிப்பு... என பல்குச்சி மூலம் சகல நிவாரணங்களைச் சொல்லிக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்.


பல் துலக்க, துவர்ப்புத்தன்மை பிரதானமாக இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தக் குச்சிகள் எல்லாம் அந்தச் சுவையைத்தான் தந்தன. துவர்ப்புச் சுவை தரும் தாவர நுண்கூறுகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும், எதிர் நுண்ணியிரித் தன்மையையும், ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மையையும் தருபவை என்பது தாவரவியலாளர்கள் கண்டறிந்தது.

* துவர்ப்புச் சுவையுடைய மெஸ்வாக் குச்சி மரத்தின் பெயர் `உகாமரம்.' வழக்குமொழியில் அதை `குன்னிமரம்' என்பார்கள். உகா குச்சியின் பயனை நாம் மறந்துவிட்டோம்; பேஸ்ட் தயாரிக்கும் கம்பெனிகள் மறக்கவில்லை. மூலிகைப் பற்பசையில் அதற்கு என தனிச் சந்தை உண்டு. ஆக, பல் பாதுகாப்புக்கு துவர்ப்புச் சுவை நல்லது.
* `திரிபலா சூரணம்' எனும் மூலிகைக் கூட்டணி, வாய் கொப்பளிக்கவும், பல் துலக்கவும் எளிதான, மிக உன்னதமான ஒரு மூலிகைக் கலவை.
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கூட்டணி பல் ஈறில் ரத்தம் வடிதல், வலி, ஈறு மெலிந்து இருத்தல், கிருமித்தொற்று... போன்ற வாய் மற்றும் பற்கள் பிரச்னைக்கு பலன் அளிக்கும் எளிய மருந்து.
* பற்கள் கிருமித் தொற்றால், அழற்சியால் பாதிப்பு அடையும்போது, அதை நீக்காமல் பாதிப்படைந்த சதைப்பகுதியை மட்டும் நீக்கி, இயல்பாக பல்லைப் பாதுகாக்கும் சிகிச்சைதான் `ரூட் கேனால்'. குடும்ப மருத்துவர் பரிந்துரைத்தால், அந்தச் சிகிச்சையை மேற்கொண்டு பற்களைப் பாதுகாக்கலாம்.
* `Periodontitis' எனும் அழற்சி பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பிரச்னை அதிகம். ஆனால், வாய் துர்நாற்றத்துக்கு பல் பிரச்னை மட்டும் காரணம் அல்ல. அஜீரணம், நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள்கூட காரணங்களாக இருக்கலாம். இதற்கும் என்ன பிரச்னை எனத் தெரிந்துகொள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

பொதுவான பராமரிப்பு...
* நள்ளிரவானாலும், குழந்தைக்குப் பால் கொடுத்த பிறகு, குழந்தையின் ஈறுகளைச் சுத்தம் செய்யாமல் விடக் கூடாது.
* குழந்தைகளுக்கு அனைத்துப் பற்களும் முட்டிக்கொண்டு வெளியே வந்தவுடன், அவர்களுக்கு தினமும் இரு முறை பல் துலக்கும் பயிற்சியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு என தனியாக ஃப்ளூரைடு கலக்காத பற்பசைகளைப் பயன்படுத்தலாம். `ஈ... காட்டு' என குழந்தைகளைப் பயமுறுத்தி, பல் துலக்கப் பயிற்றுவிக்கக் கூடாது. பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை ஒரு குதூகலமான விளையாட்டுப்போல அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* பற்பசையை, பிரஷ்ஷில் கணிசமான அளவில் பிதுக்கி, பற்களில் அப்பி, சுவரைப் பட்டி பார்க்க உப்புத்தாள் போட்டு தேய்ப்பதுபோல தேய்க்கக் கூடாது. பல் துலக்க, ஒரு நிலக்கடலை அளவுக்கான பற்பசையே போதுமானது.

* நம்மில் பலருக்கு, இன்னமும் பற்களின் இடையே சிக்கியிருக்கும் துணுக்குகளை நீக்கும் Dental Floss (பற்களுக்கு இடையே மெல்லிய இழையைவிட்டு சுத்தம் செய்யும் பயிற்சி) பழக்கம் தெரியாது. ஒருவருக்கு கல்யாணம் நிச்சயமாகிறதா? உடனே, பல் மருத்துவரிடம் போய், `கல்யாணம்... பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்' என்று நிற்பார். மருத்துவர், பற்களைச் சுத்தம் செய்து பல அழுக்குகளை வெளியே எடுக்கும்போதுதான், 'இத்தனை வருஷம் இவ்வளவு அழுக்கா நம்ம வாய்க்குள்ள இருந்துச்சு?' என வந்தவர் நொந்துபோவார். எனவே அடிக்கடி Dental Floss செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
* பராமரிப்பு என்பதையும் தாண்டி, பல்லைப் பாழடிக்கும் பழக்கங்களில் இருந்து விடுபடுவதுதான் பற்கள் பாதுகாப்புக்கான முதல் படி.
* சிலர் சாப்பிட்ட பிறகு, உதடுகளை மட்டும் தேய்த்து, துடைத்துக்கொள்வார்கள். நன்றாக வாயைக் கொப்பளிக்கவேண்டியது முக்கியம். ஆரோக்கியம் தரும் வைட்டமின் சி சத்துள்ள பழங்களைச் சாப்பிட்டால்கூட, வாயைக் கொப்பளிக்காமல்விட்டால், பழங்களின் அமிலத் துணுக்குகள் பற்களில் கறையை உண்டாக்கும்; பல் எனாமலைச் சுரண்டிவிடும்.
பற்கள் வெறும் பற்களல்ல... அவை நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆணிவேர் என்கிற அக்கறை இருந்தால், பற்களை யாரும் அலட்சியமாக விட மாட்டார்கள்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 7 ஜூன், 2018

இப்படி எல்லாம் இருக்க கூடாது ஒரு சுற்றுலா!

இப்படி எல்லாம் இருக்க கூடாது ஒரு சுற்றுலா!
கோவா பீச்சில்.. ஏன் அவ்வளவு தூரம்? பாண்டிச்சேரி,மாமல்லபுரம்  போன்ற கடற்கரையோர சுற்றுலா ஏரியாக்களில் ஜோடியாகச் சுற்றும் வெளிநாட்டினரை பார்த்திருப்பீர்கள். ஹாயாக ஒரு சேரில் சாய்ந்தபடி கையில் புத்தகம், காதில் ஹெட்செட்டோடு அமைதியாகக் கடலை பார்த்தபடி முழுநாளையும் போக்குவார்கள். அவ்வபோது உடனிருப்பவரிடம் சில வார்த்தைகள். பின் கடலில் ஒரு குளியல். குடும்பம் என்றால் குழந்தைகள் ஒரு பக்கம் மணலில் கோட்டை கட்டி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.


எந்தப் பரபரப்பும் இல்லாமல், அலையடிக்கும் கடலை போல அவர்கள் நேரம் செல்லும். எல்லாச் செலவுகளையும் கூட்டினாலும் தினம் 2000ரூபாயை தாண்டி செலவு செய்ய மாட்டார்கள். இதுதான் அவர்களது vacation. உடலையும், மனதையும் சார்ஜ் ஏற்றிக்கொண்டு மீண்டும் தங்களது அன்றாட வேலைக்குத் திரும்பப் போகிறவர்கள்தான் அவர்களும்.

நம் சுற்றுலா எப்படி இருக்கும்? தினம் 7 மணிக்கு அடிக்கும் அலாரம் 4 மணிக்கே அடிக்கும். வழக்கத்தை விடப் பரபரப்பாய் வேலைகள் செய்வாள் அம்மா. மதிய உணவு மட்டுமே சமைப்பவள், அன்று மூன்று வேலைக்கும் புளிசாதம் கிளற வேண்டும். (வெயில்காலம் என்றால் கொடைக்கானல்,

மழைக்காலமென்றால் குற்றாலம்.ரெண்டே சாய்ஸ்தான்) அடித்துப் பிடித்துக் கிளம்பி வந்தால் டிரெயின் 2 மணி நேரம் தாமதம் என்பார்கள். ரயில் நிலையத்திலே "காலை" என எழுதப்பட்டிருக்கும் புளிசாத  பாக்கெட் காலியாகும். ரயில் வந்து ஏறுவதற்குள் அதுவும் செரித்துவிடும். ஒரு வழியாகச் சீட் பார்த்து அமர்ந்தால் ஏதேனும் ஒரு bagல் எதாவது ஒன்று கொட்டியிருக்கும். எரிச்சலில் வீட்டுக்காரரை எல்லோர் முன்னாடியும் திட்டும்போதுதான் வீட்டை யார் பூட்டியது, gasஐ யார் மூடியது என்றெல்லாம் தோன்றும். இந்த நினைவுகளோடு ஊட்டிக்கு சென்றால் வெகேஷனா அது?
டெலஸ்கோப் வழியாக வானத்தைக் காண இன்றும் 15 நிமிடங்கள் க்யூவில் நிற்க வேண்டியிருக்கிறது. "மலர்கள் கண்காட்சி" என மனித கூட்டத்தின் மத்தியில் ஏதோ ஒன்றை வருடா வருடம் அரசு நடத்தி வருகிறது. சீசன் டைம் என்பதால் கொடைக்கானல் தெருக்கள் ரங்கநாதன் தெருவாக

மாறியிருக்கும்.மாலை 5 மணிக்கெல்லாம் கால் வலிக்க ஆரம்பித்திருக்கும். நண்பர் சொன்ன ஹோட்டலில் சென்று தங்கலாம் என் நுழையும்போது இரவு 9 ஆகியிருக்கும். குடும்பத்திற்குள் மனம் விட்டு பேச ஒரு வாய்ப்பாக அமையும் என்பதுதான் சுற்றுலாக்களின் அடிப்படை. அதை மறந்துவிட்டு நிற்க நேரமின்றி ஊர் சுற்றி பார்ப்பதென மாற்றி வைத்திருக்கிறோம்.  (இன்னமும் "குணா குகைகள்" ஹைலைட்டான விஷயம்.)அடுத்த நாளும் இவை எல்லாம் ரிப்பீட் ஆகி, வீடு வந்து சேரும்போது உடலில் அனைத்து செல்களும் "low battery" எனக் கத்த ஆரம்பித்திருக்கும். இதற்குப் பதில் வேலைக்குச் சென்றிருந்தால் இரண்டு நாள் சம்பளம் கிடைத்திருக்கும், உடல் அசதி ஆகியிருக்காது. பணம் மிச்சமாகியிருக்கும். இதுதான் ஒரு சராசரி இந்தியனின் மனநிலை.

குளிரை மட்டும் ரசிப்பதற்காக மலைஸ்தலங்களுக்கு நாம் செல்வதே இல்லை. "புக்கு படிக்கவா இவ்ளோ தூரம் வந்த". "பேசிட்டு இருக்கிற நேரத்துல lakeஐயாச்சும் பாத்திருக்கலாம்". இந்தக் கேள்விகளில் இருக்கும் அபத்தம் நமக்குப் புரிவதே இல்லை. பயணங்களின் போதுதான் நம் அம்மாக்கள் ஓவர்டைம் செய்ய வேண்டியிருக்கிறது. பின் எப்படி அவர்களுக்கு இது பிடித்தமான ஒன்றாக அமையும்? பிணைப்புகளை இறுக்க வைக்க வேண்டிய பயணங்கள் எரிச்சலை தான் கொடுக்கின்றன. அன்றாட அவசர ஓட்டங்களில் இருந்து ஓய்வை தர வேண்டிய விடுமுறை பயணங்களில் இன்னும்வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறோம். அடுத்த முறை வெகேஷனுக்குக் கிளம்பினால்
இதையெல்லாம் செய்யாதீர்கள்

அதிகப்படியான திட்டமிடல்: 
செலவை குறைக்க திட்டமிடலாம். ஆனால் அதை ஃபாலோ செய்வதிலே சுற்றுலாவை சந்தோஷமாக அனுபவிக்க முடியாமல் போய் விடும். பயணத்தின் அடிப்படையான விஷயம் மகிழ்ச்சிதான். அதை மீறி எதுவுமில்லை என்பதை மறக்க கூடாது

ஓவர் பேக்கிங்:
எந்த ஊர், எந்த சீசன்என்பதை கொஞ்சம் கவனித்தாலே நமது backbagன் சைஸை குறைத்துவிடலாம். அதிக சுமை அதிக பிரச்சினை என்பதுதான் ஃபார்முலா

டெக்னாலஜி: 
மனித வாழ்க்கை எளிமையாக்கியதும் டெக்னாலஜிதான். பிரச்சினை ஆக்கியதும் அதுதான். முடிந்தவரை மொபைல், லேப்டாப் வகையறாக்களுக்கு தடா போட்டுவிடுங்கள்.

பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட்:
சுற்றுலாவில் டெட்லைன் கிடையாது. டார்கெட் கிடையாது. அலையை ரசித்தபடி மணிக்கணக்கில் கிடக்க ஆசையென்றால் அதுதான் முக்கியம். இரவு நேர தூறலில் நனைய விருப்பமென்றால் அதுதான் முக்கியம். எத்தனை இடங்களை பார்த்தோம் என்பதல்ல விஷயம். எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாய் இருந்தோம் என்பதே.

ஃபோட்டோஸ்:
புகைப்படங்கள் நமக்கான வரலாறு. கொடைக்கானலின் லொகேஷன் கைட் அல்ல.. சூசைட் பாயிண்ட்டை கூகிள் செய்தாலே லட்சம் புகைப்டங்கள் கிடைக்கும். நாம் நம் அன்புக்குரியவர்களோடு மனம் விட்டு சிரிக்கும் பொழுதுகளை சுட்டு வையுங்கள்

ஓய்வில்லா டைம் டேபிள்
சுற்றுலாவின் இன்னொரு முக்கியமான விஷயம் ஓய்வு. 24 மனி நேரமும் பிசியாக இருக்க அங்கு ஏன் செல்ல வேண்டும்? நிம்மதியாக பொழுதுகளை போக விடுங்கள். நல்ல இசை, புத்தகங்கள் கையோடு எடுத்து செல்லுங்கள். முடிந்தால் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடலாம்.

ஜப்பானில் சில நிறுவனங்களில்.ஒரு பழக்குமுண்டாம். மதிய உணவு இடைவேளையின் பின் ஒரு மணி நேரம் குட்டித்தூக்கம் போட்டுவிட்டுப் பின் வேலையைத் தொடரலாம். இதனால் உற்பத்தி அதிகமாவதாக அவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஒரு நாளைக்கே இப்படியென்றால், நாம் தினம் தினம் செய்யும் வேலையில் இருந்து தற்காலிக விடுப்பு எடுத்தால் எவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்? 

ஐரோப்பிய கலாச்சாரத்தைப் பின்பற்றும் நாடுகளில் எல்லாம் பயண விடுமுறையைச் சலுகையாகப் பார்ப்பதில்லை. அது ஓர் அத்தியாவசியத் தேவை. உடலும் மனமும் ஓய்வு பெற்று recharge செய்து கொள்வது அவசியமானது என மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகள் பல இதை ஒரு குற்ற உணர்ச்சியோடே பார்க்கின்றன. 
நூறு புத்தகங்கள் படிப்பதற்கு ஈடானது ஒரு பயணம் என்கிறது சீன பழமொழி. பொங்கல் கொண்டாட்டங்களில் ஒரு நாளையே "காணும் பொங்கல்" எனக் கொண்டாடிய தமிழர்களின் வாழ்வில் இப்போது அது அழிந்து கொண்டே வருகிறது. அதை மாற்றுவதும், நம் வாழ்க்கையை இன்னும் சிறப்பாய் வாழ்வதும் நம் கைகளில்தான் உள்ளது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 5 ஜூன், 2018

இறந்தவர் வங்கி கணக்கு

இறந்தவர் வங்கி கணக்கு
 ''எனது தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். என் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ஏடிஎம் மூலமாக எடுத்து அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளைச் செய்தேன். இதனால் எனக்கு சட்டப்படி ஏதாவது பிரச்னை வருமா?'' என்று கேட்டு நாணயம் விகடனுக்கு வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அவரது கேள்வியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொதுமேலாளர் இந்திரா பத்மினியிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

"வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. எனவே, ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் பணத்தை எடுப்பது சட்டப்படி தவறு. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இந்த வாசகரின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து வேறு வாரிசு யாராவது இருந்து, அவர்கள் பிரச்னை செய்தால், வங்கியானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும்.


ஒருவேளை அவர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனிவரும் காலத்தில் யாரும் இப்படி செய்யமாட்டோம் என எல்லா வாரிசுகளும் நாமினிகளும் எழுதி வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமாட்டோம்.

பொதுவாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறந்தவுடன், அவரது நாமினி மற்றும் வாரிசுதாரர்கள் அதை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான இறப்புச் சான்றிதழ், ஏடிஎம் கார்டு, பாஸ்புக், காசோலை புத்தகம் ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு கடிதம் எழுதி தரவேண்டும். அதாவது, வங்கிக் கணக்கில் நாமினி குறிப்பிடப்பட்டிருந்தால், அவருடைய பெயருக்கு மாற்றித்தருவார்கள்.

நாமினி பெயர் குறிப்பிடப்படாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்போது அதில் யாரிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள் ஒப்புதல் தெரிவித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் உரியவரிடத்தில் பணம் ஒப்படைக்கப் படும். மேலும், இந்த வாரிசுதாரர்களில் யாராவது நடைமுறையை சரியாகப் பின்பற்றாமல் பணத்தை எடுப்பாரெனில், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.

இது முறைகேடாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிடாது. ஏனெனில், ஏடிஎம் கார்டு மற்றும் பின்நம்பர் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.

இதுவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவுன்ட் (கணவன் - மனைவி, அப்பா-மகன்) என்று வைத்திருந்தால், தனித்தனி ஏடிஎம் கார்டு இருக்கும். அந்தசமயத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடிஎம் கார்டு மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இருவருக்கும் அந்தப் பணம் உரிமையானது. என்றாலும்,    கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியம்'' என்றார்.

இதுபோன்ற சமயங்களில் ஏடிஎம், நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும்  சட்டப்படி யான செயல்களை மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 3 ஜூன், 2018

வரி.., யாருக்கு எப்படி எப்போது...?


வரி.., யாருக்கு எப்படி எப்போது...?
ஆடிட்டர் எஸ். பாலாஜி
ஒரு ஊரில் ஒரு போட்டி வைத்தார்கள். அதாவது ஒவ்வொருவரிடமும் ஒரே மாதிரி அளவுள்ள எலுமிச்சை பழங்களைக் கொடுத்து, யார் அதிக அளவில் அதிலிருந்து சாறு பிழிந்து எடுக்கிறார்களோ அவர்களுக்குக் கோப்பை என்பதுதான் அந்தப் போட்டி.

அந்த ஊரில் உள்ள அனைத்து பலசாலிகளும் ஒருவர் பின் ஒருவராக சாறு பிழிந்து தங்களது திறமையை நிரூபித்தனர். கடைசியில் மெலிதான தேகத்தைக் கொண்ட ஒரு நபர் வந்தார். ஆனால் அவரோ மிக அனாயசமாக சாறு பிழிந்தார். அதிக சாறு பிழிந்து கோப்பையைத் தட்டிச் சென்றார்.


விருது வழங்கும்போது, அந்த நபரிடம், எங்கே பணியாற்றுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவரோ தான் வருமான வரித்துறை அதிகாரி என்றார். ஒரு காலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இப்படித்தான் சித்தரிக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது நிலைமை வேறு. மலரி லிருந்து வண்டானது தேனை எப்படி பாதிப்பின்றி உறிஞ்சுகிறதோ அதைப்போல வரியை வசூலிக்க வேண்டும் என்கிற சாணக்கியரின் அர்த்தசாஸ்திர நூலின் அறிவுரையைப் பின்பற்றுகின்றனர் வருமான வரித்துறையினர்.

செலுத்த வேண்டிய வரியைக் குறைக்க இரண்டு வழிகள் உள்ளன.
சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளைப் பின்பற்றி வரியைக் குறைப்பதை வரி திட்டமிடல் (Tax Planning) என்பார்கள். சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் வரிகளைக் குறைத்து செலுத்தும் முறையை வரி ஏய்ப்பு (Tax Evasion) என்பார்கள். இதில் வரி ஏய்ப்பு முறையைப் பின்பற்றுவது பாதுகாப்பானது அல்ல
வருமான வரி செலுத்துபவர்களில் தனி நபர், இந்து கூட்டுக் குடும்பம், கூட்டு நிறுவனம், தனி நிறுவனம் என பல பிரிவினர் உள்ளனர்.
வருமான வரி கணக்கு விவரத்தை தாக்கல் செய்பவர்களை Assessee என்கிறார்கள். வருமானம் சம்பாதித்த ஆண்டை முந்தைய ஆண்டு (Previous year) என்றும், அதற்கு அடுத்த ஆண்டை Assesment year என்றும் சொல்வார்கள். முந்தைய ஆண்டு சம்பாதித்த கணக்குகளை ஒவ்வொரு வரி செலுத்துவோரும் அதற்கு அடுத்த ஆண்டான அசெஸ்மென்ட் ஆண்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது ஏப்ரல் 1, 2015 முதல் 31-3 2016 வரை முந்தைய ஆண்டு என்றால் 1-4-2016-17 அசெஸ்மென்ட் ஆண்டாக இருக்கும்.

வருமானத்தின் வகைகள்
சம்பளம், வீட்டு வாடகை, வியாபாரம், தொழில், சொத்து விற்பதில் லாபம் மற்றும் இதர வருமானம் அனைத்துக்கும் விவரம் தாக்கல் செய்ய வேண்டும்.

உச்ச வரம்பு
வருமானத்தின் அளவு ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும். இது தனி நபர்களுக்கு மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு பொருந்தும். நிறுவனங்கள் மற்றும் கூட்டாளி நிறுவனங்களுக்கு வரம்பு என்பது ஏதும் கிடையாது. அவர்கள் வருமானம் ரூ. 1 ஆக இருந்தாலும் அதில் 30% வரியாக செலுத்த வேண்டும்.

நிரந்தர கணக்கு எண் (பான்)
ஒவ்வொரு குடிமகனுக்கும் வருமான வரித் துறையிலிருந்து தரப்படும் 10 இலக்கங்கள் கொண்ட எண் (Alpha Numeric) நிரந்தர கணக்கு எண் (பான்) எனப்படும்.

`பான்' இருந்தால் கட்டாயம் வரி தாக்கல் செய்ய வேண்டுமா?
பான் என்பது வருமான வரித்துறையினர் தரும் ஒரு அடையாள எண்தான். வருமானம் இல்லை அல்லது வருமான உச்ச வரம்புக்குள் உள்ளது என்றால் ரிட்டன் தாக்கல் செய்வது கட்டாயம் இல்லை. ஆனாலும் ஒருவர் தொடர்ச்சியாக ரிட்டர்ன் தாக்கல் செய்வதால் அவரது சேமிப்புகளுக்கான கணக்கை வருமான வரித்துறையினர் என்றாவது ஒரு நாள் கேட்கும் பட்சத்தில் அதை அவர்கள் எதிர்கொள்ள முடியும்.

ஆனால் தனி நபர், இந்து கூட்டு குடும்பங்கள் தவிர, கூட்டு நிறுவனங்கள், கம்பெனி போன்ற இதர வகையினர் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒருவருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே வருமானம் உள்ளது. இருந்தாலும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா?

தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமில்லை. இருந்தாலும் மேலே குறிப்பிட்டதுபோல, வருமான வரித்துறையினர் ஒருவருடைய சொத்து விவரங்களுக்கு உரிய தகவல் கேட்கப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து ரிட்டர்ன் தாக்கல் செய்திருந்தால் நல்லது.
எனக்கு தொழிலில் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. லாபமே இல்லை. இருந்தாலும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா?

கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். நஷ்டக் கணக்குகளுக்கான ரிட்டன் அந்தந்த வருடத்தில் உரிய காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த நஷ்டத்தை அடுத்த 8 ஆண்டுகளில் வரக்கூடிய லாபங்களில் கழித்து செலுத்த வேண்டிய வரியைக் குறைத்துக் கொள்ளலாம். இதை Carry forward of loss என்பார்கள்.

வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் எது?
இதில் பட்டயக் கணக்காளர்களிடம் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டியவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள்ளும், அவ்வாறு தணிக்கை முறைக்கு உள்ளாகாத சிறு வணிகர்கள் மற்றும் சிறிய Assessee க்கள் ஜூலை 31-ம் தேதிக்குள்ளும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

ரிட்டர்ன் தாக்கல் செய்ய சிஏ படித்தவர்களிடம்தான் செல்ல வேண்டுமா?
இது கட்டாயம் இல்லை. கணக்கு தணிக்கைக்கு உள்ளாகுபவர்கள் மட்டுமே (அதாவது ஆண்டு விற்பனை ரூ. 2 கோடிக்கு மேல் இருந்தால்) சிஏ மூலம் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

இருந்தாலும் சிஏ மூலம் ரிட்டர்ன் தாக்கல் செய்தால் வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு சட்டப்படி வரியைக் குறைக்க ஆலோசனைகள் கேட்கலாம். மற்றபடி சம்பளம், வாடகை போன்ற வருமானங்கள் மட்டுமே இருப்பவர்கள் மேலும் சிறு வணிகர்கள், வருமான வரிச் சட்டத்தில் சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அவர்களாகவே ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.

ரிட்டர்ன் தாக்கல் செய்ய வருமான வரி அலுவலகத்துக்குப் போக வேண்டுமா?
தேவையில்லை, ரிட்டர்ன் தாக்கல் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று இ-ஃபைலிங் எனப்படும் ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் முறை.

இரண்டாவது வரிப்படிவத்தை நிரப்பி தாக்கல் செய்யும் முறை.
இதில் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுபவர்கள் மற்றும் கட்டாய தணிக்கைக்கு உட்படாத ஆனால் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருப்பவர்கள் இ-ஃபைலிங் முறையில்தான் தாக்கல் செய்ய வேண்டும்.

கட்டாயத் தணிக்கைக்கு உட்படாமல் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம். அல்லது ஆன்லைன் மூலமாகவும் தாக்கல் செய்யலாம்.

படிவத்தை நிரப்பி தாக்கல் செய்பவர்கள் அவசியம் வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்று தாக்கல் செய்ய வேண்டும். மனுவை அளித்து அதற்கான அத்தாட்சியைப் பெற வேண்டும்.

ஆன்லைனில் ஃபைல் செய்வது எப்படி?
நிரந்தரக் கணக்கு எண் இருக்கும் ஒவ்வொருவரும் www.incometaxindia.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று லாகின் செய்ய வேண்டும். பிறகு உரிய படிவங்களை பதிவிறக்கம் செய்து அவற்றைப் பூர்த்தி செய்து ஆன்லைனில் தாக்கல் செய்தால் ஐடிஆர்வி என்று ஒரு படிவம் கிடைத்தற்கான சான்று தயாராகும். அதில் ஒரு படிவத்தை எடுத்து அதில் உள்ள பெங்களூரு முகவரிக்கு கையொப்பம் இட்டு அனுப்ப வேண்டும். பதிவுத் தபால் மற்றும் கூரியரில் அனுப்பக் கூடாது. ஆன்லைனில் டிஜிட்டல் கையெழுத்தைப் பயன்படுத்தி தாக்கல் செய்பவர்கள் இவ்விதம் படிவத்தை அனுப்பத் தேவையில்லை.

ஏற்கெனவே தாக்கல் செய்த ரிட்டர்னை மறுபடியும் ரிவைஸ் செய்ய முடியுமா?
முடியும், ஆனால் தாக்கல் செய்வோர் முதலில் தாக்கல் செய்த ரிட்டனை உரிய காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்திருக்கவேண்டும். காலக் கெடுவுக்குள், வருமான வரித்துறை அதிகாரி படிவத்தை ஆய்வு செய்வதற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரிவைஸ் செய்யலாம்.

காலக் கெடுவுக்குள் தாக்கல் செய்யத்தவறினால் என்ன விளைவு ஏற்படும்?
பயப்படும் அளவுக்கு எதுவும் நிகழ்ந்துவிடாது. கணக்காண்டு முடிவதற்குள் தாக்கல் செய்து விடலாம். இதை காலதாமதமான (Belated Return) தாக்கல் என்பார்கள்.
இவ்விதம் காலதாமதமாக தாக்கல் செய்பவர்கள் அவர்கள் செலுத்த வேண்டிய வரிக்கு மாதத்துக்கு ஒரு சதவீத வட்டியுடன் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.

ஒருவர் எத்தனை நிரந்தரக் கணக்கு எண் அட்டை வைத்திருக்கலாம்?
ஒருவர் ஒரே ஒரு அட்டை மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேல் இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும்.
பான் கார்டு தொலைந்து போனால் என்ன செய்வது?
பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது கிழிந்து போனாலோ அதே எண்ணில் வேறு ஒரு அட்டையைப் பெற முடியும். வருமான வரித்துறை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து அதற்குரிய படிவத்தை நிரப்பி 10 அல்லது 15 நாள்களுக்குள் புதிய அட்டையைப் பெறலாம்.
நான் வாங்கும் சொத்து விவரங்கள், வங்கி வரவு செலவுகள் பற்றிய விவரம் வருமான வரித்துறைக்கு எப்படித் தெரியும்?
வருமான வரித்துறையில் இதற்கென புலனாய்வுப் பிரிவினர் இருக்கிறார்கள். மேலும் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுவிட்டது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வரவு, செலவு விவரத்தை வங்கிகள், தனியார் நிறுவனங்கள், துணைப் பதிவாளர் அலுவலகத்தினர் வருமான வரித்துறையினருக்கு தெரிவித்து விடுவர்.

இதை ஆண்டு தகவல் அறிக்கை (Annual Information Report) என்பர். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் அறிக்கை மூலம் வருமான வரித்துறையினர் விவரத்தை அறிவர். அவ்வாறு ஏஐஆர் விவரத்தை தெரிவிக்கவில்லையெனில் கடுமையான தண்டனை வழங்கப்படும். அவ் வாறு அவர்களால் தாக்கல் செய்யப்படும் விவரங் களை வருமான வரி அதிகாரி தனது கம்ப்யூட்டர் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும்.

பான் கார்டு பெறாமல் நான் இருந்தால்
தங்களைப் பற்றிய விவரம் அறிய பான் கார்டு என்பது வருமான வரித்துறையினருக்கு ஒரு வழிதான், அது இல்லாமலேயே வருமான வரித்துறையினர் தங்களைப் பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள முடியும்.
வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறேன். மேலும் ஆண்டுதோறும் முறையாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்கிறேன். நான் 15 ஜி, 15 ஹெச் கொடுத்து வரிப்பிடித்தம் செய்யாமல் விடலாமா?

இது தவறு, ஆண்டு வருமானம் அந்த வங்கியிலிருந்து பெறப்படும் வட்டியுடன் சேர்த்து உச்ச வரம்புக்குள் இருப்பவர்கள் மட்டுமே 15 ஜி, 15 ஹெச் சமர்ப்பிக்க வேண்டும்.
மற்றவர்கள் இந்த படிவத்தை தாக்கல் செய்து வரிவிலக்கு பெறுவது சட்டப்படி குற்றமாகும். அதுபோல தவறான விவரங்களை வங்கிக்கு அளிக்கக் கூடாது.
ஆனால் சில வங்கிகள் சேமிப்பை அதிகரிக்க ஆசைப்பட்டு டெபாசிட் பெறும்போது இந்த 15 ஜி, 15 ஹெச் படிவங்களை வாடிக்கையாளரிடம் பெற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு தவறாக வழிநடத்தப்படும் வாடிக்கையாளர்கள் பெறும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
http://pettagum.blogspot.com/2016/12/blog-post_93.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 1 ஜூன், 2018

சர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்? நலம் நல்லது–

சர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்? நலம் நல்லது
8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்புப் பொருள், தேன்! சர்க்கரையை ஒதுக்க விரும்புகிறவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கவேண்டியது தேன். இதுவும் இனிப்புத்தான். ஆனால், இனிப்பைத் தாண்டி ஏராளமான நலக்கூறுகள்கொண்ட அமிழ்தம் இது. 200-க்கும் மேற்பட்ட நொதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன் கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கரையில், தேனீ எந்தப் பூவின் மகரந்தத்தில் இருந்து தேனைச் சேகரித்ததோ, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குணத்தையும் தன்னுள்கொண்டிருப்பதுதான் தேனின் தனிச் சிறப்பு.


சாதாரணமான வெள்ளைச் சர்க்கரை, புண்ணை அதிகரிக்கச் செய்யும். தேன், ஆறாத புண்ணையும் ஆற்றும். குறிப்பாக, தீப்புண்ணுக்கு தேன் நல்ல முதலுதவி மருந்து. தேன் ஓர் எதிர் நுண்ணுயிரி. `புற்றுநோயைக்கூடத் தடுக்கக்கூடிய வல்லமை தேனுக்கு உண்டு' என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். ஒவ்வொரு சீஸனிலும் பெறப்படும் தேனுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. வெட்பாலை பூக்கும் சமயத்தில், பாலைத் தேன் கிடைக்கும். வேம்பு பூக்கும் நேரத்தில், கசப்பான வேம்புத் தேன் கிடைக்கும். ஒவ்வொரு மலையைப் பொறுத்தும் தேனின் மருத்துவக் குணங்கள் விசேஷப்படும். பொதிகை மலை, கொல்லி மலைத் தேனுக்கு மருத்துவக் குணம் அதிகம். நியூசிலாந்தில் கிடைக்கும் மனுக்கா தேன், உலகப் பிரசித்தி பெற்றது.
சரி, தேனை எப்படிச் சேர்த்துக்கொள்வது?
* ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன், அதாவது 10 கிராம் அளவு தேனை எடுத்துக்கொள்ளலாம்.

* தேனை அப்படியே தனியாக சாப்பிடலாம். தண்ணீரிலோ, டீயிலோ, பாலிலோ கலந்தும் சாப்பிடலாம். நெல்லிக்காய், இஞ்சியுடன் இணைத்தும் சாப்பிடலாம்.
* தண்ணீரில் தேனைக் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்; வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல. அதிக வெப்பநிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அது, தேனின் மகத்துவத்தைக் குறைத்துவிடும்.
* சர்க்கரைநோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா? வேண்டாம். பொதுவாகவே, சர்க்கரைநோய்க்காரர்கள், தேனோ, வெல்லமோ, கலோரி இல்லாத இனிப்பு ரசாயனங்களோ.... சேர்த்துக்கொள்ளக் கூடாது. கசப்பைக் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
* `இனிப்பு என்றாலே தேனும் பனைவெல்லமும்தான்' என சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.
* இஞ்சியின் மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்துவிட வேண்டும். இதை `இஞ்சித் தேனூறல்' என்பார்கள். இந்த இஞ்சித் தேனூறலை தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மைக்ரேன் தலைவலி மட்டுப்படும்.
* சாதாரணத் தலைவலியா? சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளவும். இதை தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போய்விடும்.
உடலுக்கு ஒவ்வாத வெண் சர்க்கரையைத் தவிர்ப்போம். அதற்குப்
 பதிலாக தேன் அல்லது பனைவெல்லம் சேர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படு...

Popular Posts