லேபிள்கள்

வெள்ளி, 1 ஜூன், 2018

சர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்? நலம் நல்லது–

சர்க்கரைக்குப் பதில் தேன்... என்னென்ன பலன்கள்? நலம் நல்லது
8,000 ஆண்டுகளாக நம்மிடம் இருக்கும் இனிப்புப் பொருள், தேன்! சர்க்கரையை ஒதுக்க விரும்புகிறவர்கள் முதலில் தேர்ந்தெடுக்கவேண்டியது தேன். இதுவும் இனிப்புத்தான். ஆனால், இனிப்பைத் தாண்டி ஏராளமான நலக்கூறுகள்கொண்ட அமிழ்தம் இது. 200-க்கும் மேற்பட்ட நொதிகள், இரும்பு முதலான கனிமங்களுடன் கூடிய இந்தக் கூட்டுச் சர்க்கரையில், தேனீ எந்தப் பூவின் மகரந்தத்தில் இருந்து தேனைச் சேகரித்ததோ, அந்த மலரின், தாவரத்தின் மருத்துவக் குணத்தையும் தன்னுள்கொண்டிருப்பதுதான் தேனின் தனிச் சிறப்பு.


சாதாரணமான வெள்ளைச் சர்க்கரை, புண்ணை அதிகரிக்கச் செய்யும். தேன், ஆறாத புண்ணையும் ஆற்றும். குறிப்பாக, தீப்புண்ணுக்கு தேன் நல்ல முதலுதவி மருந்து. தேன் ஓர் எதிர் நுண்ணுயிரி. `புற்றுநோயைக்கூடத் தடுக்கக்கூடிய வல்லமை தேனுக்கு உண்டு' என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். ஒவ்வொரு சீஸனிலும் பெறப்படும் தேனுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. வெட்பாலை பூக்கும் சமயத்தில், பாலைத் தேன் கிடைக்கும். வேம்பு பூக்கும் நேரத்தில், கசப்பான வேம்புத் தேன் கிடைக்கும். ஒவ்வொரு மலையைப் பொறுத்தும் தேனின் மருத்துவக் குணங்கள் விசேஷப்படும். பொதிகை மலை, கொல்லி மலைத் தேனுக்கு மருத்துவக் குணம் அதிகம். நியூசிலாந்தில் கிடைக்கும் மனுக்கா தேன், உலகப் பிரசித்தி பெற்றது.
சரி, தேனை எப்படிச் சேர்த்துக்கொள்வது?
* ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன், அதாவது 10 கிராம் அளவு தேனை எடுத்துக்கொள்ளலாம்.

* தேனை அப்படியே தனியாக சாப்பிடலாம். தண்ணீரிலோ, டீயிலோ, பாலிலோ கலந்தும் சாப்பிடலாம். நெல்லிக்காய், இஞ்சியுடன் இணைத்தும் சாப்பிடலாம்.
* தண்ணீரில் தேனைக் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்; வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல. அதிக வெப்பநிலையில் உள்ள பொருட்களுடன் தேனைச் சேர்க்கக் கூடாது. அது, தேனின் மகத்துவத்தைக் குறைத்துவிடும்.
* சர்க்கரைநோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா? வேண்டாம். பொதுவாகவே, சர்க்கரைநோய்க்காரர்கள், தேனோ, வெல்லமோ, கலோரி இல்லாத இனிப்பு ரசாயனங்களோ.... சேர்த்துக்கொள்ளக் கூடாது. கசப்பைக் காதலிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
* `இனிப்பு என்றாலே தேனும் பனைவெல்லமும்தான்' என சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.
* இஞ்சியின் மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்துவிட வேண்டும். இதை `இஞ்சித் தேனூறல்' என்பார்கள். இந்த இஞ்சித் தேனூறலை தினமும் காலையில் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மைக்ரேன் தலைவலி மட்டுப்படும்.
* சாதாரணத் தலைவலியா? சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளவும். இதை தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போய்விடும்.
உடலுக்கு ஒவ்வாத வெண் சர்க்கரையைத் தவிர்ப்போம். அதற்குப்
 பதிலாக தேன் அல்லது பனைவெல்லம் சேர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஆண்கள் குப்புற படுத்து உறங்கலாமா? உண்மை என்ன?

  உறக்கம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் தனிப்பட்டது , வாழ்க்கையை தொடர்ந்து நகர்த்த அத்தியாவசியமானது ஆகும். ஆனால் , உறக்கத்தின் போது மனிதர்கள்...

Popular Posts