லேபிள்கள்

வியாழன், 1 டிசம்பர், 2011

ஒன்றிணையும் சூரியனும் சந்திரனும்


எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி

சந்திரன் மற்றும் பூமியின் ஆயுள் காலம் பற்றி ஆராய்ச்சி நடத்திய விண்வெளி ஆராய்ச்சியாளாகள், ஒரு கால கட்டத்தில் சந்திரன், சூரியனுடன் ஒன்றினைந்து விடும் என்று கூறுகிறார்கள். இது பற்றிக் குர்ஆன் ஏதாவது கூறுகிறதா?
இக்கேள்விக்கான விடைகாணும் முன் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்றைய விண்வெளி ஆய்வாளர்கள் கூறுவதைச் சற்று பார்ப்போம்.
சூரியனின் தன்மைகள்:-
ஹைட்ரஜன் பெருமளவும் ஹீலியம் ஓரளவும் அடங்கிய ஒரு மிகப்பொய நெருப்புப் பந்து தான் சூரியன். சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்கள், மற்றும் விண்கற்கள் ஆகியவற்றின் மொத்த எடையில் 98 சதவிகிதம் சூரியனின் எடையாகும். பூமியின் எடையை விட, சூரியனின் எடை 3, 30,000 மடங்கு அதிகமாகும். பூமியின் அளவை (Size) விட 109 மடங்கு பெரிதாகும்.
சூரியனின் வெளிப்புறத்தில் எரிந்துக் கொண்டிருக்கும் தீயின் சுவாலைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரையிலும் பரவிச் செல்கின்றது. இவ்வாறு எரிந்துக் கொண்டிருப்பதற்கு காரணம், சூரியனின் உட்புறத்தில் (Core) நிகழ்ந்துக் கொண்டிருக்கும் நியூக்ளியர் ரியாக்ஸன் (Neuclear Reaction) என்ற செயலின் முலம் ஹைட்ரஜன் அணுக்கள், ஹீலியம் அணுக்களாக மாறுகிறது. இதன் காரணமாக ஏராளமான வெப்பம் உருவாகிறது.
சூரியனின் உட்புறம் ஓர் அணு உலையைப் போல் இருக்கிறது. இதனின் வெப்பம் 15 மில்லியன் (1-1/2 கோடி) டிகிரி சென்டிகிரேட் ஆகும். ஒரு வினாடிக்கு 5,000,000 (5 மில்லியன்) டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் நியூக்ளியர் ரியாக்ஸன் என்ற செயலின் முலம் எரிந்து ஹீலியம் அணுக்களாக மாறுவதாகவும், கணக்கிட்டுள்ளனர். ஹைட்ரஜன் என்ற சூரியனின் எரிபொருள் இன்னும் 5 பில்லியன் (5 Billion) ஆண்டுகளுக்கு தேவையான அளவு அதில் இருப்பதாகக் கணித்துக் கூறுகின்றனர்.
இவ்வாறு ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக மாறும் போது எராளமான மின் காந்த வெப்பக் கதிர்களை (Electromagnetic Radiation) உருவாக்குகிறது. இந்த வெப்பக் கதிர்கள் சூரியனின் வெளிப்புறத்தை நோக்கிச் செல்கிறது. அதனால் சூரியனின் வெளிப்புறம் பல ஆயிரகக்கணக்காண கிலோ மீட்டர் நீளமுடையய தீச்சுவாலைகளுடன் எரிந்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு சூரியனின் மத்தியில் உற்பத்தியான இந்த வெப்பக் கதிர்களே, சூரியன் மிக மிக பிரகாசமாக இருப்பதற்கு காரணமாக இருக்கின்றன. மேலும் சூரியக் குடும்பத்தில், சூரியனின் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அதனதன் பாதைகளில் சுற்றிவரும் கோள்களையும், சந்திரன்களையும், ஆஸ்ராயிட்ஸ் (Astroids) எனப்படும் விண்கற்களையும் வெப்பமைடயச் செய்வதற்கு இந்த வெப்பக் கதிர்களே காரணமாக இருக்கின்றன. இந்தக் கதிகளின் முலமே சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பிரகாசமாக இருக்கின்றன.
சந்திரனின் தன்மைகள்:-
சூரியனிலிருந்து ஒளியைப் பெற்று பிரகாசிக்கும் சந்திரன் பூமியைச் சுற்றிவரும் பூமியின் துணைக்கோளாகும். பூமியின் எடையில் 1.2 சதவிகிதம் எடையே இருக்கும் சந்திரன் பூமியை விட மிகச்சிறியதாகும். இதன் பகல் நேர வெப்பநிலை 107 டிகிரி சென்டிகிரேட் ஆகும். அதாவது பூமியின் பாலைவனப் பகுதியின் சராசரி பகல் நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு அதிகமாகும். சந்திரனின் இரவு நேர வெப்பநிலை -153 டிகிரி சென்டிகிரேட் ஆகும். அதாவது பூமியின் துருவப் பகுதியின் இரவு நேர வெப்பநிலையை விட 2-1/2 மடங்கு குறைவாகும்.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி இவைகளின் முடிவு:-
இந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும் முடிவு உண்டா என்று இவற்றின் தோற்றம் குறித்து ஆராய்ந்து அறிந்த நவீன விண்வெளி ஆய்வாளர்களைக் கேட்போமேயானால் அவாகள் ஆம் அவற்றுக்கும் அழிவு உண்டு என்றே கூறுகிறாகள். நமது சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளி நட்சத்திரமண்டலத்தை (Milkyway galaxy) ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் அவற்றில் ஆயிரக்கணக்கான இறந்த நட்சத்திரங்கள் (dead stars) இருப்பதகை கண்டனர். இது போல மற்ற விண்ணடுக்குகளிலும் (Galaxies) ஆயிரக்கணக்கில் இறந்த நட்சத்திரங்கள் (dead stars) இருப்பதைக் கண்டனர். இந்த டெட் ஸ்டார்களை அவைகள் எப்படி இறந்திருக்கக் கூடும் என்பதை ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சியாளாகள், ஒவ்வொரு நட்சத்திரமும் எப்படி இறக்கின்றன என்ற கோட்பாட்டை (Theory) வரையறுத்தனர். ராயல் கிரின்விச் அப்ஸர்வேட்டர் என்ற விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசியர் சர். மார்டின் ரீஸ் என்பவர் கூறுகிறார்:- பொதுவாக நட்சத்திரங்கள் இறக்கும் போது அவைகளில் பெரும்பாலானவைகள் வெடித்துச் சிதறி அதன் மூலம் மிகப்பொய வாயுக்களடங்கிய நெபுலாக்களைத் தோற்றுவிக்கின்றது. இந்த நெபுலாக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இப்பேரண்டத்தில் நிலைத்திருக்கும். இந்த நெபுலாக்களிலிலிருந்தே புதிய புதிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றது. அளவில் மிகப்பெரிய நட்சத்திரங்களே (Big Stars) இவ்வாறு வெடித்துச் சதறி சுப்பர் நோவா என்பதைத் தோற்றுவிக்கிறது. ஆனால் சூரியன் அளவில் மிகச் சிறியது. இதன் இறப்பு என்பது ஈப்பாற்றலினால் ஏற்படக்கூடியது என்று கூறினார்.
அவர்களுடைய இக்கோட்பாட்டின்படி, 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய இந்த சூரியன் தற்போது தான் நடுத்தர வயதை அடைந்துள்ளது. தற்போது சூரியன், 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட மிகத் தீவிரமாக (more violent than before) இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள், எதிகாலத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும் என்கின்றனர். இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் அதி தீவிர வெப்பக்கதிர்களினால் இந்த பூமியில் உள்ள கடல் நீர் அனைத்தும் ஆவியாகி விடும் என்கின்றனர். சூரியனின் மத்தியிலுள்ள அதன் எபொருளான ஹைட்ரஜன் வாயுக்கள் தீர்ந்ததும், சூரியனின் முடிவு ஆரம்பமாகின்றது. அப்போது சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துக் கொண்டே செல்லும். இதன் காரணமாக சூரியனின் ஈர்ப்பு விசையில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு, சூரியனைச் சுற்றி வருகின்ற கோள்களும், சந்திரன்களும், எண்ணற்ற விண்கற்களும் சூரியனுடன் இணைந்து விடும். அதன் பின் ஒரு கட்டத்தில் சூரியன் வெடித்துச் சிதறி பற்பல துண்டுகளாகிவிடும். எஞ்சிய அடாத்தியான பகுதி ஒளியிழந்து வெண்மை நிறமாகக் காட்சியளிக்கும். இதனை ஒயிட் ட்வார்ப் (white dwarf) என்கின்றனர்.
இந்த விஞ்ஞானிகள் கூறக்கூடிய காலக்கணக்குகள் எல்லாம் அவர்களின் கணிப்புகளே. இவைகளின் மீது நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. ஏனென்றால் இன்று ஒரு கோட்பாட்டைக் கூறும் அறிவியலாளர்கள் நாளை இன்று கூறியதற்கு நேர்மாற்றமான மற்றொரு கருத்தைக் கூறுவர். இதனால் நாம் அவர்களைக் குறை கூறுவதற்கில்லை. ஏனென்றால் அவர்கள் அறிந்ததைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான். சூரியனின் முடிவு எப்போது ஏற்படும் என்பதில் நமது சிந்தனையைச் செலுத்தாமல் (ஏனென்றால் உலக முடிவு நாள் எப்போது ஏற்படும் என்பது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது என்று இறைவன் திருமறையில் கூறுகின்றான் {அல் குர்ஆன் 31:34}) அவாகள் கூறும் மற்ற கருத்துக்களை நாம் சிந்திப்போமேயானால் நமக்கு ஆச்சரியமளிக்கக் கூடிய வகையில் இறைவனின் வசனங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இதை கூறியிருக்கிறது என்பதை அறிகிறோம். இனி இறைவனின் திருவசனம் இவைபற்றி என்ன கூறுகின்றது என்பதைப் பாப்போம்.
‘கியாம நாள் எப்போழுது வரும்?’ என்று (ஏளனமாகக்) கேட்கிறான். ஆகவே, பார்வையும் மழுங்கி- சந்திரனும் ஒளியும் மங்கி- சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். அந்நாளில் ‘(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?’ என்று மனிதன் கேட்பான். ‘இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!’ (என்று கூறப்படும்)’ (அல் குர்ஆன் 75:6-11)
1400 ஆண்டுகளுக்கு முன்னால் குர்ஆன் கூறிய கருத்தான சூரியனும், சந்திரனும் ஒன்றிணைந்துவிடும் என்ற உண்மையை நோக்கி இன்றைய விஞ்ஞானம் செல்வதை நாம் உணர்கிறோம்..
முழுமையான ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது

கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?


எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி 

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் அல்-குர்ஆனின் வசனங்களால் கவரப்பட்டும் அதை அடிபிறழாது பின்பற்றியொழுகிய சத்திய சீலர்களின் நற்பண்புகளைக் கண்டும் எண்ணற்றோர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்களின் வாழ்க்கை முறையோ குர்ஆனிலிருந்து வெகு தூரமாகவே இருக்கிறது. ஆயினும் மேலை நாடுகளிலும் தூர கிழக்கு நாடுகளிலும் இஸ்லாமே வேகமாக வளரும் மார்க்கமாக இருக்கிறது. இதற்கு காரணம் தற்போதுள்ள முஸ்லிம்கின் வாழ்கை முறையைப் பார்த்தா என்றால் நிச்சயமாக இல்லை!
அருள்மறையாம் அல்-குர்ஆனின் அற்புத வசனங்களைக் கண்டு அதில் ஈர்க்கப்பட்டே ஏராளமானவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். இதை அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு, தாம் இஸ்லாத்தை ஏற்றதற்கான காரணமாக அவர்கள் குறிப்பிடும் காரணங்களில் தலையானதும் முக்கியமானதுமாக திருக் குர்ஆன் விளங்குகிறது. நாம் பேட்டி கண்ட பலரும் அல்-குர்ஆனே தாம் இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்தது என்று கூறுகின்றனர். ஆனால் இஸ்லாமிய பெற்றோர்களுக்கு பிறந்த நம்முடைய சகோதர, சகோதரிகளின் நிலையோ குர்ஆனைக் கூட ஓதத் தெரியாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஓதவேண்டிய மிக பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.
குர்ஆன் என்பது பட்டுத் துணியில் சுற்றி பரணியில் பத்திரமாக வைப்பதற்கோ அல்லது வீட்டில் இழவு (மரணம்) விழுந்தால் கூலிக்கு மத புரோகிதர்களை வரவழைத்து ஓதுவதற்காகவோ அருளப்பட்டதன்று!
அல்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கத்தை அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 ல் கூறுகிறான்: -
“மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.”
அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் அவனுடைய படைப்பினமான மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக அருளிய சத்திய திருமறையில், அனைத்து மனிதர்களையும் நேக்கி இந்தக் குர்ஆனைக் குறித்து சிந்தனை செய்து ஆராய்சி செய்யுமாறு பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.
இறைவன் கூறுகிறான்: -
“அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா?” (4:82)
“(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்” (38:29)
சாதாரண பாமர மக்களால் கூட புரிந்துக்கொள்ளும் எளிமையான முறையில் அல்-குர்ஆனை அருளியிருப்பதக அல்லாஹ் கூறுகிறான்.
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; (அல்-குர்ஆன் 2:185)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)
இஸ்லாமிய பெயர் தாங்கிய மத புரோகிதர்களை கூலிக்கு அமர்த்தி அல்-குர்ஆனை ஓதுவதால் இறந்தவருக்கோ அல்லது அவ்வாறு கூலி கொடுத்து ஓத வைப்பவருக்கோ இறைவன் மேற்கண்ட வசனங்களில் கூறிய நல்லுணர்வும் அல்-குர்ஆனைப் புரிந்துக் கொள்ளும் பாக்கியமும் எவ்வாறு கிடைக்கும்? கூலிக்கு ஆட்கள் வந்து ஓதி விட்டுப் போனால் நாம் எவ்வாறு அல்குர்ஆனின் வசனங்களை கவனித்து சிந்தித்து ஆராய முடியும்? மேலும் கூலிக்காக வந்து ஓதுபவர்களிடம் இன்று இந்த வீட்டில் என்ன சாப்பாடு கிடைக்கும்? எவ்வளவு பணம் தருவார்கள் என்ற எண்ணமே மேலோங்கியே இருக்கும் என்பதல்லாது அந்தப் புரோகிதர்கள் உண்மையில் இவ்வாறு ஓத செய்பவர்களின் இறந்த உறவினர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றா நினைப்பார்?
அப்படியே அவர்கள் நன்மையையே நினைத்தாலும் கூட அது இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறையில்லையே! மாறாக இஸ்லாத்தில் இல்லாத புதுமையான செயல்களைச் செய்த பாவம் அல்லவா கிடைக்கும்? ஏனென்றால் கூலிக்கு ஆள் அமர்த்தி குர்ஆன் ஓதும் பழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்களை அப்படியே பின்பற்றி வாழ்ந்த சகாபாக்கள் காலத்திலோ இல்லாத, ஒரு பிற்காலத்தில் வந்தவர்களால் மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட ஒரு நூதன செயலாகும்.
“மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் பித்அத்துகள். பித்அத்துக்ள அனைத்தும் நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்” என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். குர்ஆனை ஓதி அதன் நன்மைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்றும் அதற்கான கூலியை பிறரிடம் எதிர்பார்க்க கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இம்ரான் இப்னு ஹூஸைன் (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தங்களின் சுனனில் அறிவிக்கிறார்கள் : (இம்ரான் இப்னு ஹூஸைன் (ரலி)) அவர்கள் குர்ஆன் ஓதும் ஒருவரை கடந்து சென்றார்கள். அப்போது அவர் அவர்களிடம் (ஏதோ சிலதை தருமாறு) கேட்டார். அதற்கு அவர் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’. நான் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்:
“யாராவது குர்ஆன் ஓதினால் அதனைக் கொண்டு அல்லாஹ்விடமே கேட்கட்டும். பிற்காலத்தில் ஒரு சமூகத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதிவிட்டு அதன் மூலம் மக்களிடம் (பலனை) எதிர்பார்ப்பார்கள்” ஆதாரம் : திர்மிதி.
மேற்கண்ட ஹதீஸின் படியும், கூலிக்கு ஓதவது கூடாது என்பதும் அறியமுடிகிறது.
என தருமை சகோதர, சகோதரிகளே! அல்-குர்ஆன் அருளப்பெற்றதன் காரணம் அறிந்து அதை பொருளுடன் படித்து வருவோமேயானால் அது கூறும் நற்பலன்களை இன்ஷா அல்லாஹ் நாம் பெற முடியும். திருமறையை நாம் பொருளுடன் ஓதி வருவதால் ஏற்படும் நன்மைகளை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்: -
- குர்ஆன் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான் – (42:52)
- குர்ஆன் மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொண்டதாகவுள்ளது – (45:20)
- குர்ஆன் நம்பிக்கையாளாகளுக்கு நேர்வழிவழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது – (45:20 , 27:77)
- குர்ஆன் நேர்வழி காட்டுகிறது – (17:9 , 46:30 , 45:11)
- குர்ஆன் முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது – (27:2)
- குர்ஆன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது – (41:4 , 44:3)
- குர்ஆன் அகப்பார்வை அளிக்கிறது – (50:8)
- குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நல்லுபதேசம் செய்கிறது – (50:8 , 81:27-28)
- குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்பவருக்கு படிப்பினை இருக்கிறது – (50:37)
- குர்ஆன் அறிந்துணரும் மக்களுக்கு தெளிவாக்கப்பட்டுள்ளது – (41:3)
- குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமாகும் – (68:52, 69:48, 73:19, 76:29-30, 80:11-12)
- குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது – (86:13-14)
- குர்ஆன் ஈமான் கொண்டவர்களுக்கு வழிகாட்டியும், மருந்துமாகும் – (41:44)
- குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது: வீனான வார்த்தைகளைக் கொண்டது இல்லை – (86:13-14)
- குர்ஆனில் எத்தகைய சந்தேகமும் இல்லை – (2:2)
- பயபக்தியுடையோருக்கு குர்ஆன் நேர்வழிகாட்டியாகும் – (2:2)
எனவே திருமறை கூறும் மேற்கூறிய நற்பலன்களை நாம் பெற வேண்டுமெனில் அதை பொருளுணர்ந்து நாம் படித்தால் தான் முடியுமே தவிர கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஓதுவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை.
இறந்தவர்களுக்கு அவர்களுடைய வாரிசுகளாகிய நாம் நன்மைகள் செய்து அவர்களுக்கு சேர்த்திட விரும்பினால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகள் ஏராளம் உள்ளன. அவற்றையறிந்து அதன்படி நடந்தால் நமக்கும் நபிவழியைப் பின்பற்றிய நன்மைகள் கிடைப்பதோடு அல்லாஹ்விடம் சேர்ந்து விட்ட நமது உறவினர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நன்மைகள் கிடைக்கும்.
அதற்கு மாறாக மாறாக மாற்று மதத்தவர்கள் தங்களின் இறந்தவர்களுக்காக செய்கின்ற சடங்குகளைப் போல் கூலிக்கு மத புரோகிதர்களை வரவழைத்து குர்ஆன் ஓத வைத்தால் நாம் மேலே கூறப்பட்டுள்ள நற்பலன்களை இழந்து விடுவதோடு நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றி ஒழுகிய சஹாபாப் பெருமக்களின் வழிமுறைகளில்லாத பித்அத்துகளைச் செய்த பாவம் நமக்கு வந்து சேரும். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாகவும்.
அல்லாஹ் கூறுகிறான்.
- குர்ஆனை பின்பற்றாதவனுக்கு ஷைத்தான் நன்பனாக்கப்படுவான் – (43:36-39)
- அறிவுடையோர் தாம் குர்ஆனைப் பின்பற்றுகின்றனர் – (39:9)
- கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்கள் குர்ஆன் நேர்வழிவழியில் சேர்க்கிறது என்று காண்கிறார்கள் – (34:6)
எனவே சகோதர, சகோதாகளே, மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள் வலியுறுத்துவது போல நம் வாழ்க்கை நெறிமுறைகளை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள்புவானாகவும். ஆமீன்.

சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி

கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்!
யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)
சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்!
“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவனத்தில் அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!
‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். (புகாரி)
நோய் விசாரிக்கச் சென்றால் சுவனத்தில் ஒரு தோட்டம்!
ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே மாலையில் நோய்விசாரிக்கச் சென்றால் மறுநாள் காலை வரை ஏழாயிரம் வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு சுவனத்தில் ஒரு தோட்டம் இருக்கும். (திர்மிதீ)
நரகம் ஹராமாக்கப்பட வேண்டுமா?
‘எவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
மக்களை அதிகமாக சுவனத்தில் சேர்ப்பவைகள்!
மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது ‘இறையச்சமும் நற்குணமும் தான்’ எனக் கூறினார்கள்’ (திர்மிதீ)
உண்மை பேசுவது சுவனத்திற்கு வழிகோலும்!
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)
கோபத்தை அடக்கினால் சுவனத்து கண்ணழகிகளில் விரும்பியவரை மணக்கலாம்!
யார் கோபத்தை வெளிப்படுத்தும் சக்தியுள்ள நிலையில் அதை அடக்குகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் மத்தியில் அழைத்து ஹூருல் ஈன்களில் – சுவர்க்கத்து கண்ணழகிகளில் தாம் விரும்பியவரை அனுபவித்துக்கொள்ளக்கூடிய உரிமையை வழங்குவான் (திர்மிதீ)
பெற்றோரைப் பேணுவதால் சுவனம் கிடைக்கும்!
‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து (அவர்களுக்காக பணிவிடை செய்யாமல்  அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
இரண்டைப் பேணுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சுவர்க்கத்திற்கு பொறுப்பேற்பார்கள்!
“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில்!
“நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்” (புகாரி)
நான்கு விசயங்கள் ஒரே நாளில் ஒருவர் செய்தால் அவர் சுவனம் சென்று விட்டார்!
எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.
விரும்பிய வாயிலின் வழியாக சுவனம் செல்ல!
எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை!
ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)
சுன்னத்தான தொழுகைகளைப் பேணினால் சுவனத்தில் மாளிகை!
“ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.

திருட்டை ஒழிக்க சிறந்த வழி!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி 

அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
’27 மூறை திருடியவன்’ மீண்டும் திருட்டுக் குற்றத்தில் கைது!
வங்கிக் கொள்ளையில் ‘பிரபல திருடன்’ கைது!
‘ஒரு சவரன் நகையை திருடுவதற்காக’ மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை!
இத்தகையை செய்திகளை நாம் சர்வசாதரணமாக இன்றைய காலக்கட்டத்தில் தினசரிகளின் வாயிலாக படிக்கின்றோம். படித்து விட்டு யாரோ யாருடைய பொருளையோ திருடிவிட்டான்! அதனால் நமக்கென்ன என்று நமது அன்றாட வேலையில் மும்முரமாக இருந்து விடுகிறோம். ஆனால் அந்த திருட்டினால் பாதிக்கப்பட்டவர்களோ மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகின்றனர். சில வேளைகளில் அவர்களது வாழ்வே நசிந்து நிர்கதிக்குள்ளாகின்றார்கள். அதன் மூலம் சிலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.
‘மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டுப் போனதால் பெற்றோர் தற்கொலை’
இத்தகைய செய்திகள் கூட தினசரி நாளிதழ்களில் நாம் அன்றாடம் படிக்கும் செய்தியாக இருக்கிறது.
எனவே நாம் இத்தகைய செய்திகளை பத்தோடு பதினொன்றாக படித்துவிட்டுப் போகாமல் பறிகொடுத்தவர்களின் மன நிலையில் இருந்து யோசிக்கவேண்டும். ஏனென்றால் இத்தகைய திருடுகளினால் சாதி, சமயம் வேறுபாடில்லாமல் அனைத்து சமுதாய மக்களுமே பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே ஒரு சவரன் நகையை திருவதற்காக கொலை கூட செய்யத் துணிந்து விட்ட அளவிற்கு திருட்டுக் குற்றங்கள் மலிந்து விட்டன. ஒரு முறை திருடியவனே மீண்டும் மீண்டும் திருடுகின்றான் என்றால் நாம் அதைப்பற்றி சற்று கூட யோசிப்பதில்லை. முதல் முறை அவன் திருடியபோதே கடுமையான தண்டணையைக் கொடுத்திருந்தால் அவன் அவ்வாறு மீண்டும் திருடுவதற்கு கூட யோசிப்பானா? அதனால் ‘ஒரு சவரன் நகைக்கான கொலையோ அல்லது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தவைகள் திருடு போனதற்காக நிகழ்ந்த தற்கொலைகளோ நடைபெறுமா? நடுநிலையில் உள்ள சீர்திருத்த வாதிகள் ஆராய்து சிந்தித்து திருட்டைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். திருட்டுக் குற்றத்திற்கான தண்டணையை கடுமையாக்காதவரை திருட்டுக் குற்றங்கள் ஓயப்போவதில்லை! திருட்டுக் குற்றங்களுக்காண தண்டணையை மிகக் கடுமையாக ஆக்கியிருக்கும் இஸ்லாமிய நாடுகளைப் பார்தோமேயானால் இது புரியும்.
இஸ்லாம் இத்தகைய திருட்டுக் குற்றங்களை குறைப்பதற்காக கடுமையான தண்டனையை விதிக்கிறது. பிறர் பொருளை திருடுபவன் அவர் தம் வாழ்நாள் முழுக்க மிகவும் சிரமப்பட்டு சம்பாதித்த பொருள்களாயிற்றே என்ற ஈவிரக்கமின்றி திருடி அவருடைய வாழ்வையே சிதைப்பதைப் போலவே அந்த திருடன் மீதும் ஈவிரக்கம் காட்டாமல் அவனுக்கு கடுமையான தண்டனையை விதித்து அவன் மீண்டும் அத்தகைய தொழிலில் ஈடுபட அவனைத் தடுக்கிறது. மேலும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து எவரும் இத்தகைய இழிசெயலில் ஈடுபட தடைசெய்கிறது.
மனிதர்களைப் படைத்ததோடு அவர்கள் மனம்போன போக்கில் வாழ்ந்து தாமும் நெறிகெட்டு மற்றவர்களையும் சீரழிந்து போகவிடாமல் தடுப்பதற்காக, அவர்கள் சீரிய, நேரிய வாழ்வை வாழ்வதற்காக ஏக இறைவனாகிய அல்லாஹ் அருளிய இறுதி வேதமாகிய அல்-குர்ஆனில் கூறுகின்றான்:
‘திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 5:38)
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்” (ஆதாரம் : புகாரி)
மேலும் திருடியவன் அந்தஸ்துள்ளவனா அல்லது பணபலம் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவனா என்றெல்லாம் இஸ்லாம் பார்ப்பதில்லை. திருடியவர் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஆணையிடுகிறது.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்:
‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?’ என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:
‘மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்’ (ஆதாரம் : புகாரி)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
“கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்” அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி
மற்றுமொரு ஹதீஸில்,
“கால் தீனார் மதிப்புள்ள பொருளை திருடியவனின் கையை வெட்டுங்கள். அதற்கு குறைந்த மதிப்புள்ளதைத் திருடினால் வெட்டாதீர்கள்!” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : அஹ்மத்)

திருமண உறவு முறை!


எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)

அளவற்ற அருளாளனின் திரநாமம் போற்றி…
மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் தடம் புரழ்வதை நாட்டு நடப்புக்கள் நம் கவணத்திற்கு தந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே இந்த உணர்வுகளைப்படைத்த இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்குத் தந்து இல்வாழ்க்கையென இனிக்கவைத்துள்ளமை ஒரு கொடையே!
பன்டுதொட்டு திருமண பந்த உறுவுமுறைகள் ஒவ்வொரு சமுதாயத்திலும் நடைமுறையில் இருந்து வருகின்றன. பன்பட்ட உள்ளங்களால் உருவாக்கப்பட்ட இந்த திருமண உறவு முறையை அநாகரீகமான ஒரு நடைமுறையாக சித்தரித்து வரம்புகளற்ற, காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தை மேற்கத்தேய சில தீய சக்திகள் விதைத்து வருகின்றமை ஒரு கவளைக்குறிய விடயமாகும். தாம் சீரழிந்தது போதாமைக்கு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம் கிராமங்களிலும் தம் அசிங்கங்களை, பயிற்சிப் பட்டறைகள், சமூக அபிவிருத்தி முகாம்கள், மகளிர் மேம்பாட்டு வைபவங்கள், இளைஞர் நல முகாமைத்துவம் போன்ற பெயர்களில் நச்சக்கலாச்சாரங்களுக்கு வித்திட்டு வரும் செய்திகள் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களாகும்.
எனவே, சமூக ஆர்வலர்கள், உலமாக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டிய தருணம் கைகூடியுள்ளன. குறிப்பாக மேற்கத்தேய அமைப்புக்களால் நடாத்தப்படும் கூட்டங்களில் ஜாக்கிரதையக இருப்பதுடன் மட்டுமல்லாது முடிந்தால் அவர்ளால் கூட்டங்கள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் நடாத்தவென அனுமதி கோரும் பட்சத்தில் குறைந்த பட்சம், நிபந்தனைகளுடன் அனுமதிப்பதுதான் நம் பாதுகாப்புக்கு நல்லது.
இத்தருனத்தில் இஸ்லாமியத் திருமணம் தொடர்பாக இடம்பெற்றுள்ள சில குர்ஆன் வசனங்களையும் சில பொன் மொழிகளையும் இங்கு தருகின்றோம்:
சம்பந்தி உறவுகளை ஏற்படுத்தியவன்:
‘அவனே நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அவனுக்கு (பிறப்பினால் வந்த) இரத்த சம்பந்தமான உறவுகளையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவுகளையும் ஏற்படுத்தினான்’. (திருக்குர்ஆன் 25:54 )
இஸ்லாம் கூறும் பெண் உரிமை:
‘பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன’. (அல்குர்ஆன் 2:228)
மஹர் (திருமணக் கொடை) பெண்ணின் உரிமை:
‘மஹர் எவ்வளவு என தீர்மானிப்பதும், விட்டுக் கொடுப்பதும், கடனாகப் பெற்றுக் கொள்வதும் பெண்ணின் உரிமையாகும்’. (அல்குர்ஆன் 2:229, 2:237, 4:4)
மஹர் கொடுத்தல் ஓர் கட்டாயக் கடமை:
‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்’. (அல்குர்ஆன் 4:4)
பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குவது கட்டாயக் கடமையாகும்:
ஆதாரம்: (அல்குர்ஆன் 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 28:27, 33:50, 60:10. )
மஹர் தொகைக்கு அளவு கிடையாது:
ஒரு பொற்குவியலையே மஹராகக் கொடுக்கலாம். (ஆதாரம் அல்குர்ஆன் 4:20 )
பண்டைக்காலத்தில் மஹர் (மஹராக எட்டு ஆண்டுகள் கூலி வேலை செய்த நபி மூஸா (அலை).
எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சார்ந்தது. நான் உமக்கு சிரமம் தர விரும்பவில்லை. (என்று மூஸாவின் மாமனார் கூறினார்) இதுவே எனக்கும் உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக்கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 28:27,28)
திருமணம் பற்றி திருமறையில் இறைவனின் கட்டளை:
‘உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள்.’ ( திரு குர்ஆன் 04:03)
பலதார மணம்:
‘மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில், இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆன முஹம்மத்(ஸல்) அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவராவர் என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) நூல் புகாரி 5069.
ஒருவரிலிருந்து ஒருவர்:
‘உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான்’. (அல்குர்ஆன் 39:6, 4:1, 7:189. )
மன அமைதி:
‘அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.’ அல்குர்ஆன் 7:189.
சிந்தனையைத் தூண்டும் இஸ்லாமிய மணம்:
‘நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.’ (அல்குர்ஆன் 30:21.)
நல்ல முறையில் குடும்பம்:
‘அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்.’ (அல்குர்ஆன் 4:19.)
ஆடை:
‘அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை’. (அல்குர்ஆன் 2:187.)
விளைநிலங்கள்:
“உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்.” (அல்குர்ஆன் 2:223)
துறவறம் கூடாது:
‘அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) அல்குர்ஆன் 57:27.
இல்லறம் நபிமார்களின் வழிமுறை:
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. அல்குர்ஆன் 13:38.
திருமணத்தால் வறுமை அகலும். ‘உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். அல்குர்ஆன் 24:32.
திருமண வீட்டில் தஃப் அடித்தல், பாட்டுப் பாடல்:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் – ரஹ் – அவர்களிடம்) ‘எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள். அங்கு சில சிறுமிகள் கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) நூல் புகாரி 4001. 5147.
இல்லறத் தம்பதிகள் கேட்கும் துஆ:
“எங்கள் இறைவா! எங்கள் வாழ்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்கு கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக என்று (நல்லறம் செய்யும்) அவர்கள் கூறுகின்றனர்” (அல்குர்ஆன் 25:74)

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – Part 2


எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் அபூ ரிஸ்வான்

இத்தொடர் ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியில் பொதுவாக மக்கள், குறிப்பாக பொருள்களை வாங்கிக் குவிக்கும் அடங்கா ஆசை கொண்டவர்கள் (compulsive shopping nature), பொருள்களின் மீது மிகுந்த ஆசையுடையவர்களாகவும், அதற்கான பொருளாதார வசதியில்லாதவர்கள் கூட கடன் வாங்கியோ அல்லது தவனை முறையிலோ பொருள்களை வாங்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.
மேலும் பணிகளுக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் ரொக்கமாக கொடுத்து பொருள்களை வாங்க முடியாவிட்டால் தங்களது கிரெடிட் கார்டு (credit card) மூலம் பொருள்களை வாங்க முற்படுகிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருள்களுக்கு உண்டான தொகையை அடுத்த மாதத்திற்குள் கிரெடிட் கார்டு பெற்றுக் கொண்ட வங்கியில் செலுத்தத் தவறினால் அதற்கு மிக அதிக சதவீதம் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். அமெரிக்காவில் கிரெடிட் கார்டுகள் மூலம் பொருள்களை கணக்குவழக்கில்லாமல் வாங்கிக் குவித்து முழுமையாக திவாலானவர்கள் (Bankrupcy) பல லட்சம் பேர்கள்! இருப்பினும் உடனே ரொக்கத்தை கொடுக்காமல் நினைத்த பொருள்களை வாங்க முடிகிறதே என்ற எண்ணத்தில் பொருள்களை தேவைப்படாவிட்டாலும் வாங்கிவைத்துக் கொள்பவர்கள் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றார்கள்.
மிகப்பெரும் செல்வந்தர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் தங்களுக்குப் பிடித்தமான பொருள்களை வாங்கி அனுபவிக்க எத்தகைய செலவையும் செய்யத்தயாராக இருக்கிறார்கள். உலகப்புகழ் (?) ஷாப்பஹாலிக்குகளில் சிலருடைய பெயர்கள் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவர்களின் பெயர்கள் – மேரி ஆன்டாய்னெட் (Marie Antoinette), மேரி டோட் லிங்கன் (Mary Todd Lincon), வில்லியம் ரண்டால்ப் ஹீஸ்ட் (William Randolph Hearst), ஜாக்குலின் கென்னடி ஒனாயிஸ் (Jacqualine Kennedy Onasis), இமால்டா மார்கோஸ் (Imelda Marcos) மற்றும் இளவரசி டயானா (Princess Diana) என்பவர்களாகும்.
இவர்களின் விபரீத ஆசைகள் (addiction), விதவிதமான உடைகள் (ஜாக்குலின், டயானா), கலைப்பொருள்களும், பழங்காலப் பொருட்களும் (art & antiques) – (ஹீஸ்ட்), காலனிகளும் (shoes) – இமால்டா – பிலிப்பைன்ஸ் (Philiphines) நாட்டு சர்வாதிகாரி மார்கோஸின் மனைவி இமால்டா மார்கோஸ் வசித்த மாளிகையில் சோதனையிட்ட காவலர்கள், (மார்கோஸை புரட்சியின் மூலம் நாட்டைவிட்டு துரத்திவிட்டு) இமால்டாவின் காலனிகளின் மொத்த எண்ணிக்கையாக 8000 ஜோடிகள் இருந்ததாகக் கண்டார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதையெல்லாம் பார்க்கும் போதும் இப்படிப்பட்ட வாங்கும் பைத்தியங்கள் கூட உலகில் இருந்திருக்கிறார்களா என்று நாம் வியப்புறத் தோன்றும்.
 
இன்றும் சில கொழுத்த பணக்காரர்கள் உலகில் பலநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு விஷேசமான பொருட்களை (rare items) சேகரித்து வைத்துக் கொண்டு அழகுபார்ப்பது ஒரு பொழுது போக்கு அல்லது ஓய்வு நேரப்பணி (hobby) ஆகும். இப்படி சேகரிப்பவர்களிடம் உள்ள பொருள்களின் வகைகளுக்கு அளவே இல்லை. சிலர் பழையகாலத்து மோட்டார் வாகனங்களை (antique cars) சேகரிக்கிறார்கள்! சிலர் பழைமை கால கைக்கடிகாரங்களையும், சுவர் கடிகாரங்களையும் மேலும் சிலர் வகைவகையான மோட்டார் சைக்கிள்களையும், இன்னும் சிலர் தங்கம், வைரங்கள் பதிக்கப்பட்ட முட்டையையும் (நிஜ முட்டையல்ல – அலங்காரப் பொருள்) (Eggs), மேலும் சிலர் பழங்காலம் முதல் நிகழ்காலம் வரை வெளியிடப்பட்ட கரண்ஸி நோட்டுகள் மற்றும் நாணயங்களையும், சேகரித்து வருகிறார்கள். இன்னும் சிலருக்கு புத்தகங்கள் , சிலைகள், இசைக் கருவிகள், ரிக்காட்டுகள் என்று எண்ணிலடங்காத சேகரிக்கும் பொருள்கள் (collector’s items) உள்ளன. சிகெரெட் லைட்டர்ஸ் (cigarette lighters) முதல், தீப்பெட்டிவரை (match boxes) சேகரிக்கும் பொருள்களாக உள்ளது. இப்பொருட்கள் சிலசமயம் மிகப்பெரும் தொகைக்கு இன்னொரு சேகரிப்போரால் (collector) வாங்கிக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் இப்படிப்பட்ட சேகரிப்போருக்கு மனஉள்திருப்தியைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதுதான் கைமேல் கண்டபலன்.
இப்படிப்பட்ட ஷாப்பஹாலிக்குகளாய் இருந்தாலும், மற்றும் ஒரே வகையானவைகளை சேகரிப்பவராக இருந்தாலும் இஸ்லாம் இவர்களுக்கு என்ன அறிவுரை வழங்குகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
திருக்குர்ஆனில் வல்ல இறைவன் தன் உண்மையான அடியார்களைப் பற்றி கூறும் பொழுது பின்வருமாறு கூறுகிறான்:
“மேலும் அவர்கள் (உண்மையான அடியார்கள்) செலவு செய்யும் போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்”  (அல்-குர்ஆன், அல்-ஃபுர்கான் 25:67)
இத்திருவசனத்திலிருந்து இறைவன் ‘வீண்விரயம் செய்வோரையும்’ ‘கஞ்சத்தனம் செய்வோரையும்’ தன் உண்மையான இறை நம்பிக்கையாளராய் ஏற்றுக்கொள்வதில்லை என்று கண்டோம்.
இன்னொரு திருவசனத்தில் அல்லாஹ் (சுப்ஹா…) கூறுகிறான்:
“உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும், இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்” (அல்-குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)
‘ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை’ குறிப்பிடும் பொழுது அல்லாஹ் (சுப்ஹா…), ‘கையை முற்றிலும் விரித்துவிட்டவர்’ என்று உவமானத்தோடு குறிப்பிடுகின்றான். இவர்கள் முதலில் பழிப்பிற்குரியவர்களாகவும், பின்னர் எதுவும் கொடுக்க அல்லது வாங்க இயலாதவராகவும் ஆகிவிடுவார் என்பது கண்கூடாக காண்பதாகும்.
பிறிதொரு இறைவசனத்தில் ‘வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’ என்று குறிப்பிட்டு ஷைத்தானாகவே அடையாளம் காட்டுகின்றான். அத்திருவசனம் பின்வருமாறு உள்ளது:
“உறவினர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடும். ஆனால் வீண் செலவு செய்யாதீர்! நிச்சயமாக வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான்” (அல்-குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)
வீண் விரயம் செய்யாதீர்கள், அப்படி செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர் என்று கூறுவதற்கு முன்னர், இறைவன் தன் அடியானுக்கு கொடுத்திருக்கும் பொருளாதாரத்திலிருந்து உறவினர்களுக்கும், வரியவர்களுக்கும், மேலும் வழிப்போக்கர்களுக்கும் உரிய பங்கினை வழங்கிவிடுமாறு அறிவுரை பகர்கின்றான். இதில் கடமையாக்கப்பட்ட ஜக்காத்தும், உபரியாக செய்யும் தான தர்மங்களும் (ஸதகாவும்) அடங்கும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது செல்வ நிலைக்கேற்ப கணக்குப் பார்த்து ஜகாத்தும், அதற்கு மேலாக சதகாவும் வருடாவருடம் கொடுத்து வருவாரேயானால் அவரை இறைவன் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரனாக ஆவதைவிட்டும் பாதுகாப்பான்.
ஆனால் நிலைமை இன்று எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால், அதிகமாக வீண் செலவு செய்பவர்கள் ஜக்காத் கொடுக்காதவர்களாகவும், மற்ற தானதர்மங்களைச் செய்யாதவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் செல்வங்களையெல்லாம் தனது ஆடம்பர வாழ்க்கைக்கும், அலங்கார பொருட்களுக்கும் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் சாதனங்களுக்கும் செலவிடப்படுவதால் சேமிப்பு என்பது பூஜ்ஜியமாக இருக்கிறது. ஒரு முஸ்லிமுக்கு தனது செலவுக்குப் போக மீதம் சேமித்த தொகை அவனிடம் ஒரு வருடம் பணமாகவோ அல்லது விற்பனைக்கு இருக்கும் நிலம் போன்றவைகளாகவோ இருந்தால் தான் ஜக்காத் கடமையாகிறது. ஆனால் தன் ஆடம்பரச் செலவுகளாலும் வீண் செலவுகளாலும் பணத்தை அழிக்கும் ஒருவர் ஜக்காத் கொடுக்க எப்படி முடியும்? அப்படி கொடுத்தாலும் மிகக்குறைவாகவே கொடுப்பார்; கணக்குப் பார்த்துக் கொடுக்கமாட்டார். ஆகையால் தான் அவரை ‘ஷைத்தானின் சகோதரராய்’ இறைவன் வர்ணிக்கின்றான்.
இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறியாக இருப்பதால் இறைவன் தனது அடியானுக்கு – தன்மேல் நம்பிக்கை கொண்ட இறைநம்பிக்கையாளனுக்கு – வீண் செலவு செய்தல் மற்றும் பொருள்களை வீண் விரயம் செய்வதை முற்றாக தடுத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை பகர்கின்றான். ஒரு முஸ்லிம் வீண்செலவை கட்டுப்படுத்திக் கொள்ள இந்த ஒரு அறிவுரையே போதும். ஒரு முஸ்லிம் ஊதாரித்தனமாய் வீண் செலவு செய்யாமலும், கஞ்சத்தனமாய் செலவு எதுவும் செய்யாமலும் இருக்கக்கூடாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் – மிதமாக செலவு செய்வதுதான் ஒரு முஸ்லிம் தனக்கும், தன் குடும்பத்திற்கும், ஏன் தன் நாட்டிற்கும் நன்மைகளை பெறமுடியும்.
வீண் செலவு செய்து தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஒருவனின் பொருளாதாரம் மட்டும் அழிவதில்லை. மாறாக இப்படிப்பட்ட மக்கள் பல ஆயிரம் பேர்கள் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்

பிறந்தகுழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பது சரியானதா?

  டயாப்பர் அணிவிக்காமல் இன்றைய சூழ்நிலையில் சமாளிக்க முடிவதில்லை. டயாப்பர் அணிவிக்கக் கூட...

Popular Posts