லேபிள்கள்

திங்கள், 6 அக்டோபர், 2025

துணிகளில் படிந்தகறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது.

அதை நீக்காமல் விட்டால் துணியின் அழகையே கெடுத்துவிடும் இந்த கரையை நீக்குவது எப்படி என்று இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு அருமையான குறிப்புகள் இதோ.

கரை படிந்த உடனே இதை செய்யுங்கள்:

ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள். எண்ணெய் இருபுறமும் அழுந்தாமல் துடைத்து எடுக்கவும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவை பயன்படுத்தி கறைகளை எடுக்கலாம். இதை துணிகளை மிஷின் உள்ளே போடுவதற்கு முன்பு உபயோகிக்கவேண்டும். பேக்கிங் சோடாவை கரை படிந்த துணிகளில் தடவி 24 மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும். ஒரு நாள் முழுக்க கரை மீது வினிகரை தெளித்து தெளித்து விடவும். பின்பு மென்மையான சோப்பு கொண்டு துடைத்து எடுக்கவும். கறை நீங்கி துணி பளபளக்கும்.

சாக் பீஸ்:

துணிகளில் முதலில் எண்ணெய் கறையை துணியால் துடைத்து எடுத்துவிட்டு குழந்தைகள் பயன்படுத்தும் வெள்ளை சாக்பீஸ் எடுத்துக்கொண்டு கறையில் சில வினாடிகள் தேய்த்தால் கறைகள் மறையும். இதற்கு பதிலாக பதிலாக சுண்ணாம்பு இருந்தால் பயன்படுத்தலாம். பின்னர் சோப்பு போட்டு துணியை துவைக்கவும்.

பேபி பவுடர்:

கறை இருந்த இடத்தை துடைத்து விட்டு விட்டு அதில், பேபி பவுடர் எடுத்து கறையின் மீது சில நிமிடங்கள் போட்டால் அதன்மீது ஒட்டிக்கொள்ளும். பின்னர் சிறிது நேரம் கழித்து கைகளால் உருட்டி அழுக்குகளோடு பவுடர் வெளியே வரும். இதுவரை இல்லாத அளவுக்கு துணி பளிச்சிடும்.

டூத் பேஸ்ட்:

டூத் பேஸ்ட் ஆடையில் உள்ள கறைகளை நீக்க உதவும். முதலில் துணியில் கறை படிந்த இடத்தில் தடவி விடவும். பிறகு வெந்நீரை மெதுவாக துணி மீதுள்ள டூத் பேஸ்ட் மீது ஊற்றவும். உயரமாக கரை மீது படும்படி சிறிது சிறிதாக ஊற்றி வந்தால் கறை கரைந்து வெளிவரும்.

வினிகர்:

வினிகரை வைத்து கறையை வெளியேற்றிவிடலாம். சம அளவு தண்ணீர் எடுத்து அதனுடன் வினிகரை கலந்து தடவினால் துணியில் கறை நீங்கி விடும்.



--

வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஏசி போட்டாலும்உங்க ரூம் சீக்கிரமா கூல் ஆகலயா..? இந்த டிப்ஸை ஃபாலோபண்ணுங்க…

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது..

அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.. இந்த கடுமையான வெப்பத்தில் குளிர்ச்சியாக இருக்க, கண்டிப்பாக ஏசி என்பது அன்றாட தேவையாகிவிட்டது.. வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளதால், ஏசியின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதிகமாக ஏசியை பயன்படுத்துவதால், மின்சாரக் கட்டணங்கள் மாதந்தோறும் அதிகரித்து வருகின்றன, இது நிச்சயமாக பெரும்பாலான மக்களுக்கு ஒரு கவலைக்குரிய காரணியாகும்.

பெரும்பாலான ஏசிகள் சிறந்த வெப்பநிலை அமைப்பு மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் மேம்பட்ட அம்சங்களுடன் வருகின்றன, இதன் விளைவாக மின் கட்டணங்கள் உயரும்.

உங்கள் ஏசி வேகமாக வேலை செய்ய உங்கள் அறையை மூடி வைக்க வேண்டும். எனவே, ஏசியை ஆன் செய்யும் போது கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். ஏதேனும் கதவு திறந்திருந்தால், உங்கள் ஏசி, குளிரூட்டலுக்கு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, இது அதிக மின்சார நுகர்வுக்கு வழிவகுக்கும்..

ஏசி வேகமாக குளிர்விக்க, நீங்கள் வழக்கமான இடைவெளியில் பில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும். எனவே, உங்கள் ஏசி குளிர்ச்சியடையவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் உடனடியாக ஏசி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் உங்கள் ஏசி அதிக மின்சாரத்தை உட்கொள்ளும்.

ஏசி மற்றும் சீலிங் ஃபேன் ஒன்றாகப் பயன்படுத்தினால் அறையை மிக வேகமாக குளிர்விக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் மின்விசிறியை இயக்குவது, அறை முழுவதும் அனல் காற்றை வீசுவதை இது ஏசியின் குளிர்ந்த காற்றை எதிர்க்கும். எனவே, சிறிது நேரம் ஏசியைப் பயன்படுத்திய பின் அறை குளிர்ச்சியாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் மின்விசிறியை இயக்கலாம், ஆனால் குறைந்த வேகத்தில். இது அறை முழுவதும் குளிர்ந்த காற்றைப் பரப்ப உதவும்.

உங்கள் ஏசி வேகமாக குளிர்ச்சியடைய, குளியலறை அல்லது சமையலறையில் ஏதேனும் எக்ஸாஸ்ட் ஃபேன் இருந்தால், அவற்றை அணைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அறையின் வெப்ப அளவைக் குறைத்து ஏசியை சிறப்பாகச் செயல்படச் செய்யும்.



--

திங்கள், 29 செப்டம்பர், 2025

வாந்தியை நிறுத்த எளிய வீட்டுக் குறிப்புகள்.

நெல்பொறி (அ) சீரகம் மென்று தின்றால் அடங்கா வாந்தி அமைதியாய் நிற்கும். வாந்தியை நிறுத்த நல்ல உணவு நெல் பொரி.

இதைத் தனியே பொடித்துத் தூளாக்கி மோர் அல்லது தண்ணீர் விட்டுக் கரைத்துச் சாப்பிடலாம்.

நெல் பொரியைக் கஞ்சி காய்ச்சும்போது ஒரு கொதி வந்ததுமே இறக்கிவிடலாம். கொதிக்கும்போது, அதில் ஒரு ஏலக்காயையும், நான்கைந்து கிராம்பையும் போட்டு கஞ்சியாக்கினால் இந்தக் கஞ்சியே வாந்தியை நிறுத்திவிடும் மருந்தாகும்.

கஞ்சியை வடிகட்டி ½ – 1 ஸ்பூன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு போட்டுச் சாப்பிடலாம். அடிக்கடி வாந்தி எடுத்தால் ஸ்பூன் ஸ்பூனாக இந்த பொரிக் கஞ்சியைச் சாப்பிடலாம்.

பித்த வாந்தியில் வாய்க் கசப்பும், வாந்தியாகும் தண்ணீரில் மஞ்சள், பச்சை நிறம் காணப்பட்டால், இந்த நெல் பொரிக் கஞ்சியில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, மாதுளம் பழச்சாறு போன்றவை சேர்த்துச் சாப்பிடலாம்.

உமட்டல், விக்கல், நாவறட்சி இவற்றைப் போக்கும். வாந்தியினால் ஏற்படும் உடல் நீரின் குறைவை, சிறிது உப்புச் சேர்த்து இந்தக் கஞ்சியைக் குடிப்பதன் மூலம், அதன் உபாதைகளைத் தடுக்கலாம்.

உமட்டலைக் குறைக்க எலுமிச்சம் பழத்தின் தோலைக் கசக்கி முகர்ந்தால் உமட்டல் குறையும். தேனில் ஊறப்போட்ட ஆப்பிள், நாட்பட்ட வாந்தியை நிறுத்தச் சிறந்தது. ஐஸ், வாந்தியை இரைப்பையின் பரபரப்பையும் குழப்பத்தையும் குளிர்ச்சியால் மறக்கச் செய்வதன் மூலம் குறைத்துவிடும். வாந்தியை நிறுத்தும்.

மயிலிறகின் சந்திர வட்டக் கண்கள் உள்ள பகுதியை நெய்த்திரி அல்லது சிற்றாமணக்கு எண்ணெய் திரியிட்ட விளக்கில் சாம்பலாக்கி, திப்பிலியின் சூர்ணமும் 1 -2 அரிசி எடை அளவில் வகைக்குச் சேர்த்து தேனில் குழைத்துக் கொடுத்தால், இரைப்பையின் குமுறலை அடக்கி, வாந்தியை நிறுத்திவிடும். விக்கல், பெருமூச்சு, மூச்சுத் திணறல் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

வாந்தியை நிறுத்த துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

அரசம் பட்டையை நெருப்பில் சிவக்க வைத்துத் தண்ணீரில் துவைத்தெடுத்த நீரைத் தெளிய வைத்துச் சாப்பிட்டால், வாந்தி, விக்கல், நாவறட்சி குணமாகும்.

இந்துப்பு, சீரகம் சம அளவு, சிறு துண்டுகளாக்கிய எலுமிச்சம் பழத்துடன் பொடித்துச் சேர்த்து அனலில் வாட்டி சுவைத்துச் சாப்பிட, வாந்தி நிற்கும். வசம்பு சுட்ட கரி, ஏலக்காய் சுட்ட கரி, பலாச் சக்கை சுட்ட கரி 4 -6 அரிசி அளவு எடுத்து சிறிது தேனுடன் சாப்பிடலாம்.

பருத்தி விதைத்தூள், ஏல அரிசி, திப்பிலி, நெல்பொரி சம அளவு பொடித்து, அதே அளவு சர்க்கரை சேர்த்து ¼ – ½ டீ ஸ்பூன் சாப்பிட இனம் தெரியாத வாந்தி கூட நிற்கும்.

வயிற்றுக் குழப்பத்துடன் வாந்தியிருந்தால் கடுகை அரைத்து மேல் வயிற்றில் பூசி 10 -15 நிமிடங்கள் கழித்து அலம்பிவிட உடன் வாந்தி நிற்கும்.

பித்த வாந்தியை நிறுத்த: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். எலுமிச்சைப் பழத்தை துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து, மென்று சாப்பிடவும்.

கர்ப்பமாக இருக்கும் போது, பெண்களுக்கு வாந்தியை தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்

உலர் எலுமிச்சை: எலுமிச்சையை துண்டுகளாக நறுக்கி, அதனை குறைவான தீயில் சிறிது நேரம் வறுத்து, பின் அதனை சூரிய வெப்பத்தில் காய வைத்து, பின் அதனை அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எலுமிச்சையை துண்டுகளாக்கி, வெயிலில் 3-4 நாட்கள் காய வைத்து, கொடி செய்து கொள்ளலாம். பின், அந்த பொடியை வாந்தி வரும் மாதிரி இருக்கும் போது, சூடான நீரில் போட்டு, குடிக்க வேண்டும். இந்த செயலை மயக்கம் வருவது போது இருந்தாலும், குடிக்கலாம்.

இஞ்சி: இஞ்சியின் சிறிய துண்டை சாப்பிட்டாலும், வாந்தி வருவது போன்ற உணர்வு இருந்தாலும் தடுக்கலாம். வேண்டுமெனில் இஞ்சி டீ போட்டு குடித்தாலும், அதனை சரிசெய்யலாம். எனவே கர்ப்பிணிகள் வெளியே செல்லும் போது சிறு துண்டு இஞ்சியை கொண்டு செல்வது நல்லது.

எலுமிச்சை ஜூஸ்: இது ஒரு சிறந்த மற்றும் பிரபலமான ஒரு மருந்து. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் வாந்தியை கட்டுப்படுத்த, ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடிப்பது நல்ல பலனைத் தரும்.

ஓமம்: வாந்தி வந்தாலோ அல்லது வருவது போன்ற உணர்வு இருந்தாலோ, அப்போது சிறிது ஓமத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், வாந்தி வருவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, இவ்வாறு செய்தால், மயக்க உணர்வும் போய்விடும்.

மூலிகை டீ: ஒரு கப் மூலிகை டீ சாப்பிட்டாலும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தியை தடுக்கலாம். தற்போது நிறைய மூலிகை டீ உள்ளது. ஏன் இஞ்சியிலிருந்து, சீமைச்சாமந்தி டீ வரை எது வேண்டுமானாலும் குடிக்கலாம். இதனால் மயக்கம், குமட்டல், வாந்தி போன்றவற்றை குணப்படுத்தலாம்.



--

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

பனங் கற்கண்டு சாப்பிடுவதால்கிடைக்கும் பலன்கள்.

பனங்கற்கண்டு என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும்.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்றாலும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது.

அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படுவது சகஜம். உங்கள் வாய் துர்நாற்றம் நீங்க கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

தினந்தோறும் கடுமையான உடலுழைப்பில் இருப்பவர்களுக்கு உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறுவது அவசியம் ஆகும். உங்களின் உடல்சோர்வு நீங்கவும், உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகள் கிடைக்கும்.

மூளையின் செல்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் நபர்களுக்கு ஞாபகத்திறன் அதிகம் இருக்கிறது. ஞாபத்திறன் மேம்பட நினைப்பவர்கள் சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.

கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இப்பிரச்சனையை தீர்க்க 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் சுலபத்தில் கரையும்.



--

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

டால்கம் பவுடர் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள்.

தோல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு, டால்கம் பவுடர்கள் காரணம் என ஆய்வுகள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளன.

டால்கம் பவுடர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுக்கும் காரணம். பிறப்புறுப்பு பகுதியில் டால்கம் பவுடரைப் பயன்படுத்தும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே நம்மை வாட்டி வதைக்கு வியர்வையும் தொடங்கிவிடுகிறது. அதிலும் இந்த வியர்வையால், அனல்காற்று வீசும் பகுதிகளில், மக்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது.

அதேநேரத்தில், கோடை காலத்தையொட்டி பெரும்பாலானோர்களின் வீடுகளில் டால்கம் பவுடர்களை பார்க்க முடிகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்துகின்றனர். வியர்வையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த பவுடர்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட சில டால்கம் பவுடர்களைப் பயன்படுத்தில், உடலுக்குக் குளிர்ச்சியாக, இதமாக இருக்கும் என விளம்பரங்களும் வெயிடப்படுகின்றனர். உண்மை இதற்கு நேர்மாறானது.

டால்கம் என்பது தொழில்நுட்ப ரீதியாக மண்ணில் இருக்கும் ஒரு கனிமம். சுரங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. பவுடராக மட்டுமல்லாமல் லிப்ஸடிக், மஸ்காரா, பிளஷ் மற்றும் ஐ ஷேடோ உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களிலும் கலக்கப்படுகிறது. இவைத்தவிர, உணவுப் பதப்படுத்துதல், மருந்துகள், சூயிங்கம், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, பொம்மைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த டால்கம் பவுடர் உங்களுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை நம் முடிகிறதா? நம் முகத்தில் முகப்பரு வருவதற்கு டால்கம் பவுடர் தான் காரணம்.

ஆனால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். டால்கம் பவுடர் சருமத்தின் துளைகளை மூடுகிறது. ஆனால் மருத்துவ ரீதியாக இந்த ஓட்டைகள் திறந்தே இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.டால்க் என்பது மெக்னீசியம், சிலிக்கேட் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு வகை இரசாயனமாகும். இவை வியர்வையில் இருக்கும் சோடியத்தை உறிஞ்சுவதால் அதிகம் வியர்காது. வெப்பம் அதிகமாக இருக்கும்போது அதிகம் வியர்க்கும். வெப்பம் குறைவாக இருக்கும்போது வியர்வை குறைவாக இருக்கும்.

ஆனால் டால்கம் பவுடர்களைப் பயன்படுத்துவதால், உடலின் துளைகளை மூடி வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றன. இது நல்லதல்ல. அதனால் தான் மருத்துவர்கள் டால்கம் பவுடர்களை பரிந்துரைப்பதில்லை. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு சோப்பு, பவுடர்கள் தேவையில்லை. வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டினால் மட்டும் போதும்.

வேண்டாம் டால்கம் (Do not talcum)

அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், குழந்தைகளுக்கு டால்கம் பவுடர் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. டால்கம் பவுடர் குழந்தைகளுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும் என்று அந்த அகாடமி எச்சரித்துள்ளது. டால்கம் பவுடர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுக்கும் காரணம். பிறப்புறுப்பு பகுதியில் டால்கம் பவுடரைப் பயன்படுத்தும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.



--

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

தக்காளியின் தீமைகள்!

நமது தினசரி உணவில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது தக்காளி. தக்காளியை சமையலுக்கு மட்டுமல்ல, சாலட் வடிவில் அப்படியே பச்சையாகவும் பயன் படுத்துகிறோம்.

ஆனால் தக்காளியை உட்கொள்வது சில நேரங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமல்ல, சிலர் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கான காரணங்களை மருத்துவர்கள் விளக்கமாக கூறுகின்றனர்.

அனைத்து சீசனிலும் எளிதில் கிடைக்கும் தக்காளியில், ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ள தக்காளி, நோய்களை எதிர்த்து உடலை வலுப்படுத்துகிறது.

தக்காளியை தொடர்ந்து உட்கொள்வது கண்களுக்கும் நன்மை பயக்கும். ஆரோக்கியத்திற்காக தக்காளியை தினமும் சாப்பிட்டாலும், அதை தவறான முறையில் உட்கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதே சமயம், சில நோயாளிகள், தக்காளி சாப்பிட்டால் அவர்களுக்கு எதிர்மறையான பலன்கள் ஏற்படும்.

எந்தெந்த நபர்கள் தக்காளியை சாப்பிடக்கூடாது என்பது தெரியுமா?

இவர்கள் தக்காளி சாப்பிடக்கூடாது

சிறுநீரக கல் பிரச்சனை: சிறுநீரக நோய் இருந்தால், தக்காளியை சாப்பிடவே கூடாது. அது ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்களை அதிகரிக்கும். தக்காளியை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. தக்காளியில் கால்சியம் ஆக்சைடு இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

கால்சியம் ஆக்சைடு காரணமாக, 90% பேருக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, சிறுநீரகக் கற்களின் அறிகுறிகள் தென்பட்டால் தக்காளியை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

மூட்டு வலி

உங்கள் மூட்டுகளில் வலி இருந்தால், தக்காளி தீங்கு விளைவிக்கும். மூட்டு வலி உள்ளவர்கள் தக்காளியை சாப்பிடக்கூடாது, ஏனெனில் அது உங்கள் பிரச்சனையை அதிகரிக்கும். இதன் காரணமாக வீக்கம் அதிகரிப்பதோடு, மூட்டு வலி அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, மூட்டு வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அது பலனளிக்காது.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால், தக்காளி சாப்பிடாமல் இருப்பது நல்லது. வயிற்றுப்போக்கு அல்லது மலம் நீராக போகும்போது, தக்காளியை உட்கொள்வது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். தக்காளியில் இருக்கும் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா, வயிற்றுப்போக்கு பிரச்சனையை அதிகரிக்கிறது. எனவே, வயிற்றுப்போக்கு இருக்கும்போது தக்காளியை சாப்பிடக்கூடாது.

செரிமான பிரச்சனை

சில நேரங்களில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளையும் தக்காளி ஏற்படுத்துகிறது. அமிலத்தன்மை உள்ளதால் தக்காளியை அதிகம் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சனை வரலாம். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

தக்காளியை அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சனையும் ஏற்படலாம். தொடர்ந்து வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தக்காளி சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.


--

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

சிங்கமும், புலியும் சண்டை போட்டால் எது ஜெயிக்கும் என்று பார்க்கலாம்.


காட்டின் ராஜாவான சிங்கம் எப்போதும் பெண் புலி, சிங்க குட்டிகள் என குடும்பத்துடன் கூட்டமாகத் தான் வாழும்.

ஆனால் புலி தனிமையில் வாழும். அதாவது புலிகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே மற்றொரு புலியுடன் சேர்ந்து இருப்பதைப் பார்க்க முடியும். பொதுவாக புலிகள் காட்டின் உட்பகுதியில் மட்டுமே அதிக அளவில் காணப்படும். ஆனால் சிங்கக் கூட்டங்களை காட்டுப்பகுதி, சமவெளிப் பகுதிகள் மற்றும் வறண்ட பகுதிகளில் பார்க்க முடியும். ஒரு புலியின் சராசரி எடை 325 கிலோவாகும். ஒரு சிங்கத்தின் சராசரி எடை 225 கிலோ ஆகும். இந்நிலையில் புலியை விட சிங்கங்கள் எடை குறைவாக இருப்பினும் சிங்கங்கள் தான் மிகவும் வேகமாக செயல்படும். உதாரணமாக ஒரு புலி மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினால் சிங்கங்கள் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். இதனையடுத்து புலிகள் எப்போதும் தன்னுடைய உணவை தனியாக நின்று வேட்டையாடும். ஆனால் சிங்கங்கள் தன்னுடையை கூட்டமாகத்தான் வேட்டையாடும்.

அதன்பிறகு சிங்கங்கள் எப்போதும் தனக்கு பசிக்க கூடிய நேரத்தில் மட்டுமே வேட்டையாடும். ஆனால் புலி தன்னுடைய இறையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வேறு ஏதாவது விலங்கு வந்தால் உடனே அந்த விலங்கை வேட்டையாட ஆரம்பித்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் சிங்கத்தை விட புலிகள் கொடூரமானவை மற்றும் சக்தி வாய்ந்தவை ஆகும். பண்டைய ரோம் நாட்டில் சிங்கம் மற்றும் புலியை சண்டை போட வைத்துள்ளனர். அந்த சண்டையில் புலியே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் சிங்கமும், புலியும் வெவ்வேறு காலநிலையில் வசிப்பதால் அவைகள் சண்டையிட்டுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அதை மீறியும் ஒருவேளை சிங்கமும், புலியும் சண்டை போட்டால் புலி தான் வெற்றி பெறும். இருப்பினும் சண்டை சிங்கங்கள் வசிக்கும் இடத்தில் நடைபெற்றால் சிங்கமும் தன்னுடைய மானம் காப்பதற்காக கடுமையாக போராடி வெற்றி பெறுவதற்கான‌ வாய்ப்புகளும் இருக்கிறது.



--

சனி, 13 செப்டம்பர், 2025

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌ன் கண்பார்வைக்கு மிகவும் பிரச்சனையாகிவிடும். ஒரு விஷயத்தை பார்த்து ரசிப்பதற்கு நமக்கு கண்கள் மிகவும் முக்கியம். அப்படி கண்கள் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் கண் தெரியாதவர்கள், கண்களில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் என அனைவரும் கருப்பு கண்ணாடியை ஏன் அணிகிறார்கள்? அது எதற்கு என்று உங்களுக்கு தெரியுமா?

கண் பார்வையற்றவர்களால் காட்சிகளைத் தான் காண முடியாது. ஆனால், ஒளியை உணர முடியும். பார்வையுடையவர்களை விட பார்வையற்றவர்களின் விழித்திரை எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியது. அதனால் பிரகாசமான ஒளி பார்வையற்றவர்களைச் சுலபமாக பாதிக்கும். கண் தெரியாதவர்களின் கண்கள் சூரிய வெளிச்சம் அல்லது லைட் வெளிச்சத்தில் மிகவும் உணர்வு திறன் குறைவாக இருக்கும். அவர்கள் கண்ணாடி போடாமல் சாதாரணமாக வெளியில் செல்லும் போது சூரிய வெளிச்சம் அவர்களின் கண்களில் படும். இதனால் கண் கூச்சம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும். விழித்திரையின் மீது விழுகின்ற பிரகாசமான ஒளிக்குத் தடுப்புச் சுவராக கருப்புக் கண்ணாடி செயல்படுகிறது. அதனாலேயே பெரும்பாலான பார்வையற்றவர்கள் கருப்புக் கண்ணாடியை அணிகிறார்கள். நாங்கள் பார்வையற்றவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஓர் அடையாளமாகவும் கருப்புக் கண்ணாடி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் கண் தெரியாதவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்துள்ளார்கள். இதை போட்டால் அவர்கள் வெளியில் செல்லும் போதும் அவர்களுக்கு சூரிய ஒளி பட்டால் எரிச்சல் ஏற்படாது.



--

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க அசத்தலான வழிகள்.

ஒருவரது வயிற்றில்    புழுக்கள் இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை தான்.

தற்போதைய மோசமான வாழ்க்கை முறை, கெட்டுப் போன உணவை உண்பது, சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது மற்றும் அசுத்தமான நீரைக் குடிப்பது போன்றவற்றால் வயிற்றில் புழு க்கள் உருவாகின்றன.

இதனால் அடிக்கடி வயிற்றில் திடீர் வலி, பசியின்மை, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

எனவே இவற்றை எளிய முறையில் போக்க ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன், 1/2 டீஸ்பூன் செலரி பவுடர் சேர்த்து கலந்து, அதை ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட வேண்டும். விருப்பமுள்ளவர்கள், இத்துடன் ஒரு சிட்டிகை ப்ளாக் சால்ட, 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கலந்து உட்கொண்டு வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இப்படி இரவு தூங்கும் முன் செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

கேரட்டை தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், அது வயிற்றில் உள்ள புழுக்களை மலத்தின் வழியாக எளிதில் வெளியேற்ற உதவும்.

பப்பாளியின் விதைகளை அரைத்து, அதை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வர, வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். இல்லாவிட்டால், பாப்பாளியின் இலைகளை சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, அதை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம்.

ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது வெல்லத்தை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.

பூண்டை அரைத்து, அதில் கல் உப்பு சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பூண்டு பால் கூட குடிக்கலாம். இவ்வாறு செய்தால், குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களின் வயிற்றில் உள்ள புழுக்களும் அழிந்துவிடும்.

தினமும் துளசியை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு வேளை துளசி இலைகளை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளையின் தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை ஒரு நாளைக்கு 2 வேளை நீரில் கலந்து குடித்து வர, சில நாட்களில் புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.

பாகற்காயை அரைத்து சாறு எடுத்து, தேன் கலந்து, ஒரு நாளைக்கு 2 வேளை குடித்து வருவதன் மூலம் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம் இல்லாவிட்டால் பாகற்காயின் விதைகளை உலர்த்தி அரைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிடலாம்.

ஒரு கப் சுடுநீரில் 1-2 கிராம்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் அந்நீரை குடிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை குடித்து வந்தால், புழு பிரச்சனை இல்லாமல் வாழலாம்.



--

துணிகளில் படிந்தகறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது. அதை நீக்காமல்...

Popular Posts