லேபிள்கள்

செவ்வாய், 19 மார்ச், 2024

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும்.

மேலும் அந்த சத்தத்தைக் கேட்கும் போதும், அடுத்தடுத்தும் இதேபோன்று கேட்குமோ என நினைத்து நாம் பத்து விரல்களிலும் நெட்டி முறிப்போம்.

அதேபோல், கழுத்து இடுப்பு என்று அனைத்து மூட்டுகள் இணையும் பகுதிகளிலும் நாம் நெட்டி முறிப்போம். இது நல்லதா? கெட்டதா என்று நமக்கு தெரியாது. ஆனால் இந்தப் பழக்கம் நம்மோடு ஒட்டிவிட்ட ஒன்றாகிவிட்டது.

இப்படி நாம் அடிக்கடி செய்வதால் எலும்புகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து எலும்பு மருத்துவர் ஆசிக் அமீன் கூறியது வருமாறு: நமது விரல் எலும்புகளின் இணைப்பு பகுதிக்கு இடையில் சைனோவியல் என்ற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமல் இருக்க எண்ணெய்போல் செயல்படுகிறது.

நாம் நீண்ட நேரம் அசையாமலிருக்கும்போது சைனோவியல் திரவம் எலும்புகளுக்கு இடையே அதிகமாகச் சேர்ந்துவிடும். அப்போது நெட்டி முறித்தால் முழங்கால் வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படும். மேலும் நெட்டி முறிக்கும்போது எலும்புகள் இணைப்பு விரிவடைவதால்தான் சொடுக்கு சத்தம் கேட்கிறது.

இந்த சத்தத்தால்தான் நாம் மீண்டும் மீண்டும் நெட்டி முறிக்கிறோம். இந்த பழக்கத்தில் இருந்து விடவேண்டும் என்றால், அப்பகுதிகளை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்துவது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts