லேபிள்கள்

புதன், 6 மார்ச், 2024

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

'மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு...' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் சிலிண்டர். நிலையில்லாத விலையில், அலைபோடும் காஸ் சிலிண்டர்கள் பயன்பாடு பொது மக்களுக்கு அத்யாவசியமானது.

அடுப்பு எரிந்தால் தான், உயிர் வாழ முடியும் என்பதால், எந்த காரணம் கொண்டும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது. ஆனால், வந்திறங்கும் சிலிண்டர்கள், குறைந்தது 40 நாட்களாகவது வர வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் ஆசையாக இருக்கும். ஆனால், 30 நாட்களுக்குள் சில நேரம் முடியும் போதும் தான், எரிச்சல் மேலோங்கும். அதற்கு காரணம் இருக்கிறது. அதை சரி செய்தால், நீங்கள் பயன்படுத்தும் முறையில் கீழ் காணும் தவறுகள் இருந்து, அதை திருத்திக் கொண்டால், கட்டாயம் நீங்கள் நினைத்தது போல காஸ் சிலிண்டர் பயன்பாடு நீண்ட நாட்கள் வரும்.

இதோ உங்களுக்கான டிப்ஸ்:

பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் போது, அது ஈரமாக இல்லாதவாறு துடைத்து அல்லது காய வைத்ததை உபயோகிக்க வேண்டும். இதனால் பாத்திரம் எளிதில் சூடாகும், எரிபொருள் சிக்கனமும் இருக்கும்.

சமைக்கும் முன்பு, நாம் பலர் செய்யத் தவறும் ஒரு விசயம்... அதற்குரிய பொருட்களை பாத்திரத்தில் வைத்த பின் ரெடி செய்வது அல்லது தேடுவது. இது இரண்டும் காஸ் பயன்பாட்டை அதிகரிக்கும். சமையலுக்கு தேவையான பொருட்களை தயார் செய்த பிறகு தான், அடுப்பை பற்ற வைக்க வேண்டும். இதனால் வீண் தேடுதல் படலம் தவிர்கக்ப்பட்டு காஸ் மிச்சம் செய்யப்படும்.

இதுவும் அதே மாதிரி தான். வீட்டில் அனைவரும் ப்ரிட்ஜ் பயன்படுத்துகிறோம். நேரடியாக ப்ரிட்ஜில் இருந்து பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தினால், அதன் குளிர் தன்மையை போக்க சூடாகும் நேரம் அதிகரிக்கும். இதனால் எரிபொருள் அதிகம் செலவாகும். அதுவே ப்ரிட்ஜில் இருந்து எடுத்த பொருளை சிறிது நேரம் வெளியில் வைத்து, அதன் குளுமை போனதும், சமைப்பது சிலிண்டரை மிச்சப்படுத்தும்.

நாம் சமைக்க பயன்படுத்தும் பாத்திரம் சூடாகிவிட்டால், உடனே ஸ்டவ்வை 'சிம்'மில் வைக்க வேண்டும். பாத்திரம் சூடாக மட்டுமே வேகம் தேவை. அதன் பின் குறைந்த அளவில் சமைப்பது தான் காஸ் சிலிண்டருக்கும் நல்லது. சமைக்கும் உணவுக்கும் நல்லது. மித வெப்பத்தில் சமைக்கப்படும் உணவுக்கு ஊட்டசத்து அதிகம் என்கிறார்கள்.

சமைக்கும் போது, நாம் செய்யும் முக்கிய தவறில் ஒன்று, பாத்திரத்தை திறந்து வைத்து சமைப்பது. இதனால் கொதிப்பான் வெளியேறி சமையல் நேரம் அதிகமாகும். அப்போது காஸ் சிலிண்டர் இன்னும் அதிகம் செலவாகும். பாத்திரத்தை மூடி சமைக்க வேண்டும்.

குக்கர் ஒரு விரைவு சமையல் முறை என்பதால், குக்கரில் சமைப்பது பெரிய அளவில் காஸ் சிலிண்டர் செலவை மிச்சப்படுத்தும். முடிந்த வரை குக்கம் பயன்பாடு சிலிண்டருக்கு ஆயுள் தரும்.

தண்ணீர் அதிகம் பயன்படுத்துவது, தேவைக்கு அதிகம் சேர்ப்பதை தவிர்க்கவும். தண்ணீர் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான சமையல் நேரமும் அதிகரிக்கும். இதனால் காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரிக்கும்.

சுடுதண்ணீர் அதிகம் பயன்படுத்துபவர் என்றால், அடிக்கடி அதற்காக காஸ் பயன்படுத்தாமல் ஒரு முறை சுட வைத்து விட்டு பின்னர் அதை தெர்மாஸ் பாட்டில் போன்றவற்றை கொண்டு நீண்ட பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம்.

மிக முக்கியமான ஒன்று... அடிக்கடி நமது காஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பை சோதனை செய்து கொள்ள வேண்டும். ரெகுலேட்டர், பர்னர், பைப்புகள் சரியாக இருக்கிறதா, லீக் ஆகிறதா என்பதை சோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன், சமைத்ததும், சிலிண்டரை ஆப் செய்து விடுவது கசிவிலிருந்து பாதுகாக்கும்.

இவையெல்லாம் கேட்க சிறிதாக இருக்கலாம்; ஆனால் நடைமுறைப்படுத்தினால் பெரிய அளவில் பயனளிக்கும். எனவே இந்த முறையை முயன்று பாருங்கள்... உங்கள் காஸ் சிலிண்டர் நீங்கள் நினைத்த நாட்களுக்கு பயன்படலாம்.

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts