லேபிள்கள்

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

பனிக்காலத்தில் பாடாய்ப் படுத்தும் தும்மல், சளி, தலைபாரம் இவற்றிற்கு வீட்டு சிகிச்சை உதவுமா?

குளிர்காலம் வந்தாலே சளி, தும்மல், தலைபாரம் என வரிசையாக பாடாகப் படுத்துகிறது. இவற்றிலிருந்து விடுபட வீட்டு வைத்தியம் ஏதேனும் சொல்ல முடியுமா?

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.

``தலை அதிக பாரமாக இருப்பதாக உணர்பவர்கள் ஆவி பிடிக்கலாம். நொச்சி இலை, வேப்பிலை, மஞ்சள் சேர்த்த வெந்நீரில் ஆவி பிடிப்பது இன்னும் சிறந்தது. சிலருக்கு நெற்றிப் பகுதியிலும், கன்னங்களிலும் வலி இருக்கும். இவர்கள் சிறிதளவு ஓமத்தை அரைத்து, கொஞ்சம் பாலில் கலந்து நன்கு கொதிக்கவைக்கவும். அது கெட்டியாக, குழம்பு பக்குவத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். வெதுவெதுப்பான சூட்டில் அதை எடுத்து, வலி உள்ள பகுதிகளில் தடவிக்கொள்ளலாம். சித்த மருந்துக் கடைகளில் நீர்க்கோவை மாத்திரைகள் கிடைக்கும். அதை வாங்கி பற்றுபோட்டுக்கொள்ளலாம். இது தலைபாரத்துக்கு நல்ல நிவாரணம் தரும்.

நீர்கோத்து கழுத்தின் பின்பகுதியில் வலி இருப்பவர்கள், அந்த இடத்திலும் இதைப் பற்றுபோட்டுக் கொள்ளலாம். 2-3 கிராம் அளவு திப்பிலிச் சூரணத்தை தேன் அல்லது பாலில் கலந்து உட்கொள்ளலாம்.

சிலருக்கு நிலவேம்பு கஷாயம் போன்றவற்றைக் குடித்தால் வயிற்றுவலி, கேஸ்ட்ரைட்டிஸ் போன்ற தொந்தரவுகள் வருவதாகச் சொல்வார்கள். அவர்கள் 10 வேப்பிலை, அரை டீஸ்பூன் சீரகம், அதிகபட்சம் 5 மிளகு, அரை டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை 250 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைக்கவும்.

இதில் பெரியவர்கள் என்றால் 30-50 மில்லி, 12 வயதுக்குட்பட்டவர்கள் 20 மில்லி எடுத்துக்கொள்ளலாம். இது சளி, இருமல் பிரச்னைகளுக்கு மிகச்சிறந்த நிவாரணம் தரும். வயிற்றுப் புண், வயிறு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இந்தக் கஷாயம் பலனளிக்கும்."

கருத்துகள் இல்லை:

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்ப...

Popular Posts