லேபிள்கள்

புதன், 29 மார்ச், 2023

அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?


பொதுவாக நம் வயிற்றில் பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். நேரந்தவறி சாப்பிடுவதாலும்  அதிகம் சூடாகச் சாப்பிடுவதாலும் பட்டினி கிடப்பதாலும் இரைப்பையில் புண்கள் வரும்.

புகைப்பிடித்தல் மது அருந்துதல் மென் குளிர்பானம் பானங்களை அதிகமாகக் குடிப்பது. மோசமான சுற்று சூழல் கலப்படம் செய்யப்பட்ட உணவு அசுத்தமானக் குடிநீர் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா ஆகியவற்றால் குடல் புண் ஏற்படுகிறது.

அதிகமான காரம் நிறைந்த உணவுப்பொருட்கள் உண்பது புளிப்பு மிகுந்த மசாலா கலந்த உணவு எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவதனால் ஏற்படுகிறது.

கவலை மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகள் சாப்பிடுவதாலும்  ஏற்படும்.

தினமும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

வயிற்றில் எரிச்சல் காரணமின்றிப் பற்களைக் கடித்தல்வயிறு வீங்குதல்உதட்டின் உள்பகுதி, நாக்கின் அடி பகுதியி, கடவாயின் உள்பகுதியில் புண்கள் உண்டாகும்.

மசாலா வகை உணவுகளை சாப்பிட்டா பின் ஏப்பம் வரும் போது தொண்டையில் தாங்க முடியாதஎரிச்சலை உண்டாக்கும். ஆரம்ப நிலை அல்சர் உள்ளவர்களுக்கு பசியின்மை உண்டாகும்

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-main-causes-of-ulcers-121061800028_1.html


--

கருத்துகள் இல்லை:

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்ப...

Popular Posts