தைராய்டு உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு. இது முன்கழுத்தில் மூச்சுக்குழல் பகுதியில் அமைந்துள்ளது.
இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது.
தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்சனையை ஹைப்பர் தைராய்டிஸம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பதால், தைராய்டு உள்ளவர்கள் அவற்றை சிறிது உட்கொண்டாலும், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட காரணமாவதுடன், அயோடின் அளவையும் குறைத்துவிடும்.
சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை உறிஞ்ச முடியாமல் செய்கிறது. எனவே இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.
முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் அயோடின் உறிஞ்சுவதைப் பாதித்து, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, இந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக