லேபிள்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2022

சமையல் அறையில் உள்ள பூச்சிகளை விரட்ட உதவும் எளிய டிப்ஸ்கள் !!

 

நமது சமையல் அறையை எவ்வளவுதான் சுத்தமாக வைத்தாலும் கொசு, போன்ற சிறு பூச்சிகள் வருவது உண்டு. இது சில நேரங்களில் நமது உணவுகளில் விழுந்து அல்லது உணவின் மீது அமர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை உடலில் ஏற்படுத்துவது உண்டு

ஆகவே இந்த பூச்சிகள் மீது நாம் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. சரி இந்த பூச்சிகளை எளிய முறையில் விரட்ட உதவும் சில டிப்ஸ்கள் குறித்து  பார்ப்போம்.

ஒரு மெல்லிய துணிக்குள் ஆரஞ்சு தோலை வைத்து அதை சமையல் அறையில் கட்டி தொங்க விடுங்கள். இவ்வாறு செய்தால் பூச்சிகளினால் ஏற்படும் தொல்லையை எளிமையாக நீங்கும்.

உங்கள் சமையல் அறையில் அதிக அளவில் கொசு, போன்றவை இருந்தால் உப்பு மற்றும் மிளகு போன்ற பொருள்களை கொண்டு எளிமையாக சரி செய்து  விடலாம். இதற்கு 2 கப் கொதிக்க வைத்த நீரில் உப்பு மற்றும் மிளகு பொடியை சேர்த்து கொள்ளவும். பின்பு இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்பிரே செய்து  விட்டால் அவற்றை அழித்து விடலாம்.

சமையல் அறையின் மூலை முடுக்கு போன்ற பகுதிகளில் மஞ்சள் மற்றும் உப்பை கலந்து சிறிதளவு தூவி விடுங்கள். இதில் இருக்கும் கிருமி நாசினி தன்மை இந்த பூச்சிகள் வருவதை தடுத்துவிடும். மேலும், உணவுகளை பாதுகாப்பாக வைக்கும் இடங்களில் கூட சிறிதளவு இந்த கலவையை தூவி விடுங்கள், செலவே  இல்லாமல் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

உடல் நலத்தை பாதுகாக்கும் முக்கியமான பொருளில் ஒன்று சுக்கு. இது வீட்டை பராமரிக்கவும் உதவுகிறது. இதற்கு 1 ஸ்பூன் சுக்கு பொடியை வெந்நீரில் கலந்து அதை பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்தால் மிக எளிதாக அவற்றை கொன்று விடலாம்.

https://tamil.webdunia.com/article/useful-home-tips/simple-tips-to-repel-pests-in-the-kitchen-121022500071_1.html


--

கருத்துகள் இல்லை:

தரமான செங்கல்லைகண்டறிவது எப்படி? செங்கல் கட்டுமானத்தில் என்னசெய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

இன்று ஹாலோபிளாக் , கான்கிரீட் கல் , ஏஏசி கல் , போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்து விட்டாலும் , நம...

Popular Posts