லேபிள்கள்

செவ்வாய், 6 டிசம்பர், 2022

யாரெல்லாம் திராட்சை பழத்தை சாப்பிடக்கூடாது தெரியுமா....?


திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிக அளவில்  காணப்படுகின்றன.

இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும். கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும்

சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும். இதற்கு திராட்சை சாறு  அருமருந்தாகிறது.

ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திரட்சை பலச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி உறக்கத்தைத் தரும்.அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிர்க்கு திராட்சை சிறந்த மருந்து. சீரற்ற மாதவிடாய் சீராடைகிறது

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்குகிறது. இதய பலவீனமானவர்களுக்கு திராட்சை சிறந்த மருந்து. தலைவலி, காய்க்காய் வலிப்பு  போன்றவற்றை குணப்படுத்தகிறது

யார் சாப்பிடக்கூடாது

அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாத உடம்புக்குள்ளானவர்களும், அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது என  மருத்துவர்களின் அறிவுரையாகும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-who-should-not-eat-grapes-121022200014_1.html

--

கருத்துகள் இல்லை:

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts