லேபிள்கள்

வியாழன், 3 செப்டம்பர், 2020

வலதுபுறம் உறங்கி வயதைக்கூட்டுங்கள்!

     ஜெ. நாகூர்மீரான்    
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்பற்றிய சுகாதாரம் குறித்துள்ள ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. அவை இன்றைய நவீன அறிவியலோடு ஒத்துப்போகின்றன. அவ்வாறு ஹதீஸ்கள் பலவற்றை எடுத்து சிகிச்சையின்போது கடைப்பிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இரவு உறங்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த முறையில் உறங்கினார்கள், அந்த முறை குறித்து இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவது என்னவென்பதைக் காண்போம்.
o மல்லாக்க, குப்புற, இடது, வலது ஒருக்களித்து பல நிலைகளில் மனிதர்கள் உறங்குகின்றனர். அவ்வாறு உறங்குவது சரியல்ல. வலதுபுறமாக மட்டுமே துயில வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த ஹதீஸ்களைக் காண்போம்.
'அல்பகரா இப்னு அஸீஃப்' கூறியதாக புகாரி ஷரீஃபில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படுக்கும்போது வலப்புறமாகப் படுத்து, "யா அல்லாஹ்! என் ஆன்மாவை உன்னிடம் ஒப்படைக்கிறேன். எனது முகத்தை உன்னை நோக்கியே திருப்பிக் கொள்கிறேன். உன் உதவியை நாடுகிறேன். உன்னையன்றி என்னைக் காப்பாற்ற எவருமில்லை. மேலும், உனது வேதத்தை நம்புகிறேன். நீ தந்த நபித்துவத்தையும் நம்புகிறேன்." என்பார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக அல்பகரா இப்னு அஸீஃப் அவர்களின் மற்றொரு ஹதீஸின் பதிவு: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் 11 ரக்அத் தொழுவார்கள். விடியல் வந்ததும், இரண்டு ரக்அத் விரைந்து தொழுது முடித்து வலதுபுறமாகப் படுத்திருப்பார்கள், முஅத்தின் அதான்ஒலி (பாங்கு சப்தம்) தரும் வரை."
o வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுத்திருப்போருக்கு சுவாச அமைப்பில் சிறிய அளவில் கோளாறு ஏற்படும். காரணம், முதுகெலும்புடைய கனம் கீழே அழுத்தும். மனிதன் மூச்சு விடும்போது நெஞ்சு மேலிருந்து கீழ் செல்லும். மனித உடல் உறுப்பு செயல்பாட்டுக்கு பாதகமாக குப்புறப்படுத்துறங்தகுதல் அமையும்.
o குழந்தைகளை குப்புறப்படுக்க வைத்ததால் அதிகமான மரணங்கள் சம்பவிப்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஆய்வாளர் கண்டுபிடித்திருக்கிறார்.
o சமீபத்தில் எனது சகோதரி குழந்தை பெற்றார். அவரைக் காண மருத்துவமனை சென்றிருந்தேன். பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். எனது தாயார் கூறினார், "படுத்துக்கொண்டே ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுத்தார். குழந்தை ஒரு புறமாகச் சாய்ந்து பால் அருந்தி மூச்சுத் திணறி இறந்துவிட்டது.
வேறு ஒரு பெண்ணுக்கும் அன்றைக்கு இப்படி ஒரு குழந்தை இறந்து போனது என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, இது மாதிரி பால் கொடுக்கக் கூடாதென எத்தனை முறை கூறியிருக்கிறோம் என்று நர்ஸ் கோபமாகக் கத்திவிட்டுச் சென்றார்.
o குப்புறப்படுத்து உறங்குதலை அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். அவ்வாறு உறங்கிய ஒருவரை அதட்டியிருக்கிறார்கள்.
வானத்தை நோக்கியபடி மல்லாந்து படுத்தால், மூச்சு வாய் வழியாகச் செல்லும். காரணம் நமது கீழ்த்தாடை மிக நெகிழ்வாக இருக்கின்றது. சுவாசித்தல் மூக்கு வழியாக நடப்பதுதான் சுகாதாரமானது. மூக்கு வழியாக சுவாசிக்கும்போது நாசியிலிருக்கும் ரோமங்கள், வாகு, இரத்தத் தந்துகிகள் சேர்ந்து மனித சுவாசக் காற்றை சூடுபடுத்தி வடிகட்டி, சுத்தப்படுத்தி உடலுக்குள் அனுப்புகின்றன.
மாறாக வாய் வழியாக சுவாசிப்பதால் அசுத்தங்கள் அப்படியே உடலுக்குள் செல்கின்றன. மேலும், வாயிலுள்ள பசைத்தன்மை, "Pyorrhea" என்ற பாக்டீரியாவை உடலுக்குள் கொண்டு செல்கின்றது.
o இடது புறமாகப் படுப்பதும் சிறந்த முறையல்ல. மனிதருக்கு இரண்டு நுரையீரல்கள். வலதுபுற நுரையீரல் கனமுடையது. இடதுபுற நுரையீரல் கனமற்றது. இடதுபுறமாக உறங்கினால் கனமான வலதுபுற நுரையீரல் இதயம் மேல் நகர்ந்து கனத்தால் அழுத்தி அதன் செயல்பாடுகளைக் குறைக்கும். இதன் காரணமாகவே பலர் இதயத்துடிப்பு நின்று மரணிக்கின்றனர். என்று கண்டுபிடித்துள்ளனர்.
o "Sympathetic Nervous Activity" "பரிவு நரம்பு செயல்பாடு". இந்த நரம்புதான் இதயத்துடிப்பை, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது. வலது புறமாகப் படுப்பதன் மூலம் இந்த நரம்புடைய செயல்பாடு நன்றாக இருக்கிறதென்று சமீபத்திய மருத்துவ ஆராய்ய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
o கனம் முறைவாக இடது புற நுரையீரல் இருப்பதால், வலது புறமாக உறங்கும்போது அது கீழ் நகரும்போது, இதயம் சற்றே மேலிருப்பதால் இதயத்துடிப்புகள் சரியாக இயங்குகின்றன், பாதிப்படைவதில்லை.
o மேலும், உணவருந்திவிட்டு இடப்புறமாகப் படுப்போருக்கு உணவு குடலுக்குள் பயணித்து செரிமானம் அடைய 5 லிருந்து 8 மணி நேரம் ஆகும். அதே சமயம் வலதுபுறமாகப் படுப்போருக்கு செரிமானம் அடைய இரண்டரை மணி நேரத்திலிருந்து நாலரை மணி நேரமே ஆகின்றதென்று கூறப்படுகிறது.
இன்றைய நவீன விஞ்ஞானம் கூறியிருப்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னமேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பது மனித இனத்தின்மீது அவர்கள் கொண்டுள்ள அக்கரையை நமக்கு தெளிவாக்குகிறது.
தூக்கம் பற்றி இஸ்லாம் 
நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வதுபோல் உளூச் செய்துகொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர்,
'யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன்.
என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன்.
என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன்.
உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன்.
உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை.
யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன்.
நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்'
என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ பிரார்த்தித்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்" என்று என்னிடம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது 'நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன்' என்று சொன்னேன். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்' என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்" (அறிவிப்பவர் பராவு இப்னு ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 247, 6311, 6313, 6315, 7488 முஸ்லிம் 5249, திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா, தாரமீ)

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சமையலறைக் குறிப்புகள்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க நமது சமையலறையில் ' சர்க்கரை ' முக்க...

Popular Posts