லேபிள்கள்

வெள்ளி, 26 ஜூன், 2020

பழங்களின் தோல்களும்அவற்றின் நன்மைகளும் என்ன...?

ஆரஞ்சு தோல்: ஆரஞ்சு தோல் உடல் எடையை குறைக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும். புற்று நோயை தடுக்கும். இதயத்தை பலப்படுத்தும் ஆரஞ்சு தோலில் புளிக்குழம்பு செய்து சாப்பிட்டால் சுவையும் சத்துக்களும் அபாரமாய் இருக்கும்.
வாழைப்பழத் தோல்: வாழைப்பழத்தோலை பற்களில் தினமும் தேய்த்து வந்தால், மஞ்சள் பற்களை வெள்ளையாகும். காயங்கள் மீது தடவினால், புண் மிக விரைவில் ஆறும். பாத வெடிப்புகளில் தினமும் இந்த தோலை தேய்த்து வந்தால், ஒரு வாரத்தில் வெடிப்பு மறையும்.
 மாதுளை தோல்: மாதுளம் பழத் தோல் லேசான துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது இதய நோய்கள் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த அதனை வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.
 வெள்ளரிக்காய் தோல்: வெள்ளரிக்காய் தோலில் நிறைய ஆண்டி ஆக்ஸிடெண்ட் இருக்கிறது. நார்ச்சத்தும் நிறைந்தது. உடல் எடையை குறைக்கும். மலச்சிக்கலை குணப்படுத்தும். கண்பார்வையை அதிகப்படுத்தும்.
 ஆப்பிள் தோல்: ஆப்பிளின் தோலில் ஃப்ளேவினாய்டு உள்ளது. இது புற்று நோயை எதிர்க்கும். நோய் எதிர்ப்பு செல்களை வலுப்படுத்தும்.  இதிலுள்ள அர்சோலிக் அமிலம் உடல் பருமனை குறைக்கும்.
 எலுமிச்சை தோல்: எலுமிச்சையின் தோல் பற்களில் உண்டாகும் தொற்றுக்களை அழிக்கும். இதிலுள்ள லெமனோன் மற்றும் சல்வெஸ்ட்ரால் இரண்டுமே புற்று நோயை விரட்டும். நச்சுக்களை உடலிருந்து வெளியேற்றும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts