லேபிள்கள்

திங்கள், 7 ஜனவரி, 2019

பூமியதிர்ச்சிகள் உணர்துவது என்ன?

பூமியதிர்ச்சிகள் உணர்துவது என்ன?

அல்லாஹ் கூறுகின்றான்:
وما نرسل بالآيات إلا تخويفا ' الإسراء : 59
"(மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை." (17:59)
سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ' فصلت : 53
"நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்! (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?" (41:53)
قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض ' الأنعام : 65 .
"(நபியே!) நீர் கூறும்; 'உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.' அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்) வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக." (6:65)
மேற்படி அல்-குர்ஆனிய வசனம் இறங்கிய போது நபியவர்கள் கூறினார்கள்:
"யா அல்லாஹ் உனது முகத்தை கொண்டு நான் பாதுகாவல் தேடுகின்றேன். உன் முகத்தைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன்"
என இரு முறை சொன்னார்கள்" ஸஹீஹுல் புகாரி 5-193
இமாம் முஜாஹித் அவர்கள் மேற்படி வசனத்திற்கு விரிவுரை வழங்கும் போது,
"'உங்களுக்கு மேல் இருந்து வரும் துன்பம்' என்பற்கு 'சத்தம், கற்களை மற்றும் காற்றைக் கொண்டு மேலிருந்து அல்லாஹ் சோதனைகளை அனுப்புகின்றான்' என்றும், 'கால்களுக்குக் கீழிருந்து வரும் துன்பங்கள்' எனும் போது 'பூமியதிர்ச்சி மற்றும் பூமி தனக்குள்ளே விழுங்கிக் கொள்வது' கொண்டு சோதிக்கின்றான்"
என குறிப்பிடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் சோதனையாக இருக்கும் மேற்படி அழிவுகளில் பாடம் கற்கக் கூடிய நன்மக்களாக நாம் மாறவேண்டும். இவ்வாறான சேதனைகள் வருவதென்பது வெறும் இயற்கையின் சீற்றம் அல்லது விஞ்ஞான ரீதியான காரணங்களை சொல்லி விட்டு சென்று விடாமல் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதே அல்லாஹ் நம்மவர்களிடம் எதிர்பார்கின்றான்.
இப்படியான அழிவுகள் வரும் போது நாம் என் செய்ய வேண்டும்?
01) நாம் செய்து கொண்டிருக்கும் பாவங்களில் இருந்து முழுமையாக விடுபட்டு உண்மையான பாவமன்னிப்பில் (தவ்பாவில்) ஈடுபட வேண்டும்.
ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ' الأعراف : 96
"நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் பரகத்துகளை பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்." (7:96)
02) ஏழை எளியவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களுக்கு தான தர்மங்களை கொடுப்பது!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் அன்பு செலுத்துங்கள், வானத்தில் உள்ளவன் உங்களுக்கு அன்பு காட்டுவான்." ஆதாரம் அபூதாவுத் 13-285
03) சத்தியத்தை நிலைநாட்டி, அல்லாஹ்வின் சட்டங்கள் இப்பூவுலகில் நடைமுறைப்படுத்தப்பட்டு, நன்மையை ஏவி தீமையை தடை செய்ய வேண்டும்:
والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم ' التوبة :71
"முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்." (9:71)
04) சக மனிதர்களுக்கு எல்லா வகையிலும் உதவும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் ஒரு சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ, அவரது தேவைகளை அல்லாஹ் நிவர்தி செய்கின்றான்." ஆதாரம் புகாரி, முஸ்லிம்.
எனவே அல்லாஹ்வின் சோதனைகள் வரும் போது மேலே சொல்லப்பட்ட நடைமுறைகளை பேணி நம்மையும் நமது சமுதாயத்தையும் பெரும் அழிவுகளில் இருந்து காத்துக் கொள்ள முயற்சிப்போமாக! நமது நிலைமைகள் சீர் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்திப்போம்.
மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

1 கருத்து:

Unknown சொன்னது…

What is the casino? - SEPT
The best casino 토토 사이트 online https://octcasino.com/ is the One of the main reasons why people are spending wooricasinos.info money on a septcasino game is by having worrione a few options. One of the reasons

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts