லேபிள்கள்

புதன், 23 ஜனவரி, 2019

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (11 – 20)


11) சூரதுல் ஹுத் ஹுத் நபி
அல்குர்ஆனின் 11-வது அத்தியாயம் நபி ஹுத் அவர்களின் சமுதாயமாகிய ஆத் கூட்டத்தை பற்றி இவ்வத்தியாயத்தின் 50 – 60 வது வசனம் வரை குறிப்பிட்டு அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம் வணங்காது பெருமையடித்ததால் அவர்கள் எப்படி அழிந்து நாசமானார்கள் என்பதை பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
ஆது' சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்; "என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
12) சூரது யூசுப் யூசுப் நபி
12-வது அத்தியாயம் யூசுப் நபியின் வாழ்கை வரலாறு மிக அழகான வரலாறு என்று அல்லாஹ் சிறப்பித்துச் சொல்கின்றான். 111 வசனங்களை கொண்ட இவ்வத்தியாயதின் ஆரம்பம் தொடக்கம் பால்கினற்றில் இருந்து அரச சிம்மானம் வரை யூசுப் நபி தமது வாழ்கையில் சந்தித்த நிலைகளை எடுத்துக்காட்டுகின்றான்.
13) சூரதுர் ரஃத் இடி
அல்குர்ஆனின் 13-வது அத்தியாயம் இடி அல்லாஹ்வை துதி செய்வதாக இவ்வத்தியாயத்தின் 13-வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
14) சூரது இப்ராஹீம் இப்றாஹீம் நபி
அல்குர்ஆனின் 14-வது அத்தியாயம் தியாகச் செம்மல், ஏகத்துவத்தின் தந்தை என போற்றப்படும் அல்லாஹ்வின் நண்பன் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பெயரில் இறக்கப்பட்டுள்ளது. 35-வது வசனம் தொடக்கம் 41வது வசனம் வரை இப்றாஹீம் நபி செய்த பிரார்த்தனைகளை அல்லாஹ் எமக்கு ஞாபகப்படுத்துகின்றான்.
(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!' (14:40)
15) சூரதுல் ஹிஜ்ர் கற்பாறைகள் நிறைந்த பகுதி
அல்குர்ஆனின் 15-வது அத்தியாயம் நபி ஸாலிஹ் (அலை) யின் ஸமூது கூட்டம் வாழ்ந்த "ஹிஜ்ர்" பகுதி கற்பாறைகள் நிறைந்த இப்பகுதி மதீனாவிற்கும், தபூகிற்கும் இடையில் அமைந்துள்ளது. தற்காலத்தில் மதாயின் ஸாலிஹ், அல் உலா என அழைக்கப்படும். இந்த சமூகம் அவர்களுக்கு அனுப்பட்ட நபியை பொய்பித்தமை பற்றி இவ்வத்தியாயத்தின் 80-84 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
16) சூரதுன் நஹ்ல் தேனீ
அல்குர்ஆனின் 16-வது அத்தியாயத்தின் 68,69 ஆகிய வசனங்களில் தேனி பற்றி குறிப்பிடும் போதுஅதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்கும்) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
17) சூரதுல் இஸ்ரா இரவுப் பயணம்
அல்குர்ஆனின் 17-வது அத்தியாயம் இதற்கு பனீ இஸ்ராயீல் (நபி யஃகூப் அவர்களின் சந்ததிகள்) என்று ஒரு பெயரும் உள்ளது. அல்லாஹ் நபியவர்களை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்ற பின்னர் ஏழு வானங்களை தாண்டி மிஃராஜ் பயணம் இடம் பெற்ற சம்பவத்தை இவ்வத்தியாயத்தின் முதலாவது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
18) சூரதுல் கஹ்ப் குகை
அல்குர்ஆனின் 18-வது அத்தியாயம் குகைவாசிகள் தொடர்பாக அல்லாஹ் இவ்வத்தியாயத்தின் 9 -26 வது வசனம் வரை குறிப்பிடுகின்றான்.
அந்த இளைஞர்கள் குகையினுள் புகுந்த போது "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை ( பலனுள்ளதாக) சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள். (18:10)
19) சூரது மர்யம் நபி ஈஸா (அலை) அவர்களின் தாயாரான மர்யம்
98 வசனங்களைக் கொண்ட இவ்வத்தியாயம் அல்குர்ஆனின் 19-வது அத்தியாயமாகும். நபி ஈஸா (அலை) அவர்களின் தாயாரான மர்யம் அம்மையாரைப் பற்றி கிரிஸ்தவ உலகம் கொண்டுள்ள பிழையான கொள்கையில் இருந்து தெளிவுபெருவதற்காக நபி ஈஸா மற்றும் அவர்களது தயார் தொடர்பாக அல்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது..(19:16)

20) சூரது தாஹா இவ்வத்தியாயத்தின் ஆரம்ப எழுத்துக்களை கொண்டு இப்பெயர் வைக்கப்பட்டது
மூஸா நபியின் வரலாற்றை எடுத்துக்காட்டும் 20-வது அத்தியாயம் 135 வசனங்களைக் கொண்டது. அல்லாஹ்வோடு பேசியதை குறிப்பிடுகின்றான்
'நிச்சயமாக நான் தான் உம்முடைய இறைவன், நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் 'துவா' என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். (20:14)--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பகலில் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்.

தூங்குவதால் உடலுக்கு ஓய்வு கிடைத்து சோர்வு நீங்குகிறது. சிலருக்கு படுத்தவுடன் தூக் கம் கண்களை...

Popular Posts