லேபிள்கள்

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

டிப்ஸ்... டிப்ஸ்...சமையல் டிப்ஸ்..!1.புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை, காற்றுபட்டால் நீர் விடும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படக்கூடும். கண்ணாடி அல்லது பீங்கான் டப்பாக்களில் பாதுகாத்து வையுங்கள்.
2.பிரெட் துண்டுகளின் மேல் வெண்ணெய் தடவுவதற்கு முன்னால், வெண்ணெயில் சிறிது பால் விட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெண்ணெயை சீராகத் தடவ சுலபமாக இருக்கும் என்பதுடன், வெண்ணெயும் குறைவாகவே தேவைப்படும்.

3.சட்னி வகைகள் (குறிப்பாக தேங்காய் சட்னி) மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான ராய்த்தா தயார்.

4.ரவை, சேமியா உபயோகித்து கிச்சடி தயாரிக்கும்போது, தக்காளிப் பழத்தை முதலிலேயே சேர்த்தால், தக்காளித் துண்டுகள் மிகவும் குழைந்துவிடுவதுடன் கிச்சடியின் நிறமும் மாறிவிடும். தக்காளி போடாமல் கிச்சடி தயாரித்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடுங்கள். தக்காளித் துண்டுகளை கிச்சடியின் மேல்தூவி, ஒரு ஃபோர்க்கால் ஒரு முறை கிளறிவிட்டு கொஞ்ச நேரம் மூடி வைத்துவிடுங்கள், கிச்சடியின் சூட்டில் தக்காளி பதமாக வெந்துவிடுவதோடு, கிச்சடியின் நிறமும் மாறாமல் இருக்கும்

5.கால் கிலோ வெங்காயம், கால் கிலோ தக்காளி இவற்றைத் துண்டுகளாக நறுக்கி, நாலைந்து மிளகாய் வற்றலுடன் வதக்கிக் கொள்ளவும். இதை தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தேவையானபோது இதை உபயோகித்து... சைட் டிஷ், கிரேவி போன்றவற்றை விரைவில் தயாரித்து விடலாம்... சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே. அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி ' என்பார்கள் நம் வீட...

Popular Posts