லேபிள்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

ரத்தப்போக்கை நிறுத்தும் மாதுளை!

ரத்தப்போக்கை நிறுத்தும் மாதுளை!
மாதுளை... இது மாதுளங்கம், பீசபுரம், தாடிமக்கனி என வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பூ, பிஞ்சு, பழம், விதை, பட்டை, வேர் என மாதுளம் மரத்தின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவக் குணமுடையவை. மாதுளம்பூ மொக்கை காயவைத்துப் பொடியாக்கி சாப்பிட்டுவந்தால் இருமல் நிற்கும்.

மாதுளம்பூவின் சாற்றுடன் அறுகம்புல்லின் சாற்றையும் சேர்த்துக் குடித்துவந்தால் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் நிற்கும். மாதுளம் பிஞ்சை நறுக்கி, நீர்விட்டுக் கொதிக்கவைத்து குடித்துவந்தால் சீதபேதி நிற்கும். பிஞ்சுக்காய்களை மையாக அரைத்து பாலில் கலந்து, காலை - மாலை என குடித்துவந்தால் மாதவிடாயின்போது வரக்கூடிய அதிக ரத்தப்போக்கு சரியாகும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து குடித்துவந்தால் காய்ச்சல், தாகம், அழலை போன்றவை குணமாகும்.


பழத்தோலை உலர்த்திப் பொடி செய்து சாப்பிட்டுவந்தால் இளைப்பு நோய் குணமாகும். வேர்ப்பட்டையுடன் லவங்கம் சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் தட்டைப்புழு மலத்துடன் வெளியேறும்.

மாதுளம்பழத்தை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும். பெண்கள் சாப்பிடுவதனால் கருப்பையில் வரக்கூடிய நோய்கள் விலகும். மேலும், மாதுளம் பழத்தை சாப்பிடுவதன்மூலம் இருபாலருக்கும் வெப்பத்தால் வரக்கூடிய காய்ச்சல், நெஞ்செரிச்சல், காதடைப்பு, மயக்கம் போன்றவை சரியாவதோடு உடல் குளிர்ச்சியடையும். மரத்தில் தானாகப் பழுத்து வெடித்த பழங்களை எடுத்து துணியில் வைத்துப் பிசைந்து சாறெடுத்து கற்கண்டு சேர்த்துக் குடித்தால் முழுமையான பலன் கிடைக்கும். மாதுளை இதயத்துக்கு பலத்தையும், மூளைக்கு வலிமையையும் சேர்ப்பதோடு பித்த நோய்களையும் குணப்படுத்தும். மாதுளம்பழச் சாறு குடிப்பதால் உடம்பில் வரக்கூடிய கட்டிகள் குணமாவதோடு, புற்றுநோய்க் கட்டிகளும் குணமாகின்றன.

மாதுளம்பழச் சாற்றுடன் கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து காலையும் மாலையும் குடித்து வந்தால் மகப்பேறு நேரங்களில் வரக்கூடிய ரத்தச்சோகை சரியாகும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts