லேபிள்கள்

செவ்வாய், 19 ஜூன், 2018

உங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்!

உங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்!
வருடத்தில் 350 நாட்கள் பி.எஸ்.என்.எல் பிராடுபேண்டு சொதப்பும்.மற்ற நாட்களில் ஆச்சர்யப்படுத்தும். ஆனால், அந்த ஐந்து நச் நாட்கள் வர்தா புயல் சமயத்தில் வந்ததுதான் அதிசயம். மற்ற "ஸ்பீடு" பிராண்ட்பேண்டுகள் இன்னும் 'ஐ எம் பேக்' முழுமையாக சொல்ல முடியாமல் தவிக்கின்றன. எந்த சூழல் என்றாலும் வைஃபை சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசுகளின் எவர்க்ரீன் பிரச்னை. இந்த ட்ரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணா, உங்க வைஃபை ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும்.



* அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள்.

* ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வாங்குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இடமாக பார்த்து வைத்தால் நலம். காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். எங்கிருந்து பார்த்தாலும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இருந்தால் இன்னும் விசேஷம்.

* ரெளட்டருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந்தால் சிக்னல் தடைபடும். காரணம் உலோக பொருட்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கும். பக்கத்து வீட்டு ரெளட்டரிடம் இருந்து உங்கள் ரெளட்டரை முடிந்தவரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல்களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப்படும்.

* சில இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ் நீங்கள் உபயோகிக்காத சமயங்களிலும் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும். அதையெல்லாம் முறையாக மூட வேண்டியது அவசியம். இல்லையேல், கணிசமான பேண்ட்விட்த்தை அவை எடுத்துக்கொண்டு வேகத்தை குறைத்துவிடும்
* அவ்வபோது மோடமை ரீசெட் செய்யுங்கள். கேட்க சிம்பிளான வேலையாக இருந்தாலும் அதிக பயன் தரக்கூடிய ட்ரிக் இது. ரீசெட் செய்யும்போது சில பிரச்னைகள் தன்னாலேயே சரியாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அவ்வபோது சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.

* உங்கள் வைஃபை செட்டிங் WEP-ல் இருந்தால் அதை WPA அல்லது WPA2 என்ற செட்டிங்கிற்கு மாற்றுங்கள். காரணம் WEP நெட்வொர்க்கை எளிதாக ஹேக் செய்ய இயலும். யாருக்குத் தெரியும்? பார்க்க பால்வாடி பையன் போல இருக்கும் உங்கள் பக்கத்துவீட்டுக்காரரே பெரிய ஹேக்கராக இருக்கலாம்
* இது ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான். அவ்வப்போது உங்கள் வைஃபை பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருங்கள். மொக்கையாக உங்கள் பெயரையே பாஸ்வேர்டாக வைத்தால் பக்கத்து வீட்டுக்காரர் பொங்கல் கொண்டாடிவிடுவார்.

* இது எதுவுமே வேலைக்கு ஆகாவிட்டால் பேசாமல் ஒரு ரிப்பீட்டர் வாங்கி மாட்டிவிடுங்கள். ரெளட்டரின் ரேஞ்ச் 150 மீட்டர்கள். ரிப்பீட்டர் அந்த ரேஞ்சை அதிகரித்து சிக்னலை பல மடங்கு பூஸ்ட் செய்யும். நம்பி வாங்குங்க. கொடுத்த காசுக்கு நல்ல எஃபெக்ட் இருக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts