1.குழந்தை பிறந்ததும் கூடுமானவரை பார்முலா மில்க் கொடுப்பதை விட தாய் பாலே சிறந்தது.
2. பால் அதிகமாக சுரக்க = ஹார்லிக்ஸ் ,ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குடிக்கவும். ஒரு நாளைக்கு ஐந்து டம்ளர் குடிக்கலாம். ஓவ்வொரு முறை பாலுட்டும் போதும் தாய்மார்கள் சூடாக மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலுட்டுவது நல்லது.
3.குழந்தைக்கு சளி இருப்பது போல் தோன்றினால் இஞ்சி காபி குடிக்கலாம்.குளுமையான அயிட்டங்கள் சாப்பிட கூடாது,மிளகு சேர்த்த உணவு சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்காது
4.குழந்தை பெற்றதும் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் லேசாகி இளகிய நிலையில் இருக்கும், அதுக்கு தான் அந்த காலத்து பாட்டி மார்கள் பச்ச உடம்பு காரி என்கிறார்கள்.
5.தாய்மார்கள் இரண்டு காதுகளையும் ஒரு ஸ்கார்ஃப் கொண்டு சுற்றி கொள்ளவும். காலில் என்னேரமும் செருப்பு அனியவும். இரவில் தூங்கும் போது சாக்ஸ் போட்டு கொள்ளவும். இப்படி செய்வதால் நரம்புகளில் காத்து ஏறுவதை தவிர்க்கலாம்.
6.எலும்புகள் வலுவடைய சிக்கன், மட்டன்,ஆட்டு கால், மீன் போன்றவைகளில் மிளகு சேர்த்து எலும்புகளில் சூப் வைத்து 40 நாட்கள் வரை முன்று டம்ளர் அளவிற்கு குடித்தால், உங்கள் எலும்பும் பலம் பெறும், உங்கள் குழந்தை எலும்பும் பலம் பெறும்.பாலும் நல்ல சுரக்கும்.
7.பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறும் பத்து மாதமாக பெரியதாக இருந்ததால் சுருங்க நாள் எடுக்கும். நார்மல் டெலிவரி ஆனவர்கள் இடுப்பை சுற்றி ஒரு ஜான் அளவிற்கு பெல்ட் போடவும், இல்லை மெல்லிய காட்டன் சேலையை மேல்வயிறுக்கும், அடிவயிற்றிக்கும் சுருட்டி இருக்கமாக கட்டி கொள்ளவும். சாப்பிடும் நேரம்,பாத்ரூம் போகும் நேரம் தவிர மற்ற நேரம் கண்டிப்பாக கட்டவும்.இது தொடர்ந்து 40 நாள் வரை அதற்கு மேல் கொண்டும் கட்டாலாம்.
8.வயிற்றில் சுருக்கம் விழாமால் இருக்க நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயிலில் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது நிவ்யா கிரீமும் கலந்து வயிற்றில் தேய்த்து குளிக்கவும். நாளடைவில் சுருக்கம் மறைந்துவிடும். (இது சுருக்கம் விழாமல் இருக்க பிள்ளை உண்டாகி முன்றாம் மாதத்திலிருந்து வயிறு விரிவு கொடுக்கும் போது அரிப்பெடுத்தால் சொரியாமல் ஏதாவது கிரீம் (அ) ஆலிவ் ஆயில் தடவி வந்தால் பிரசவத்திற்கு பிறகு சுருக்கம் அவ்வள்வாக விழாது.
http://pettagum.blogspot.in/2015/09/blog-post_62.html--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக