லேபிள்கள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்!

நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த வகையில் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரு நிலைகளின் மூலமாக இறைவன் தன்னுடைய அடியானுக்கு, அவனின்அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகிறான். அதிகமனோர் நன்றி செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான்.
"நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை"(40:61)
ஆரோக்கியமான உடல்நிலயை தந்து, உடல் உறுப்புக்கள் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தவில்லை எனில் நம்மைவிட நன்றிமறந்தவர்கள் யாராக இருக்க முடியும். இறைவனிடம் மிகப்பெரும் நன்றியுள்ள அடியாராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் "சிறிய மெளத்துக்குப்பிறகு மீண்டும் உயிர் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்" என்று கூறி அன்றைய காலைப்பொழுதை இன்முகத்துடன் வரவேற்பவராக இருந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் காண்கிறோம்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும், மழைக்காலங்களிலும் போர்க்காலங்களிலும், பஜ்ருடைய முன் சுன்னத் 2 ரக் அத்தையும் பர்ளு தொழுகையையும் தொடர்ந்து தொழுது வந்ததையும் ஹதீஸ்களில் காண முடிகிறது. இங்கே நம்முடைய நிலையை சீர்தூக்கிப்பார்க்கும் நிலையில் உள்ளோம். இரவில் தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழும்போது, அவசர கதியில் இறைவனை புகழ்வதும் இல்லை, தொழவேண்டும் என்ற சிந்தனையும் வருவதில்லை.
தொழுகையில் அதன் நேரத்தில் தொழவேண்டும் என்ற குர்ஆன் வசனம், தாமதமாக உறங்கி தாமதமாக எழுபவன் ஷைத்தான், தொழாதவனின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான், தொழாதவன் அன்றைய பொழுதை சோம்பலுடன் கழிக்கிறான் போன்ற ஹதீஸ்களை நன்கு அறிந்திருந்தும், தொழுகையில் பொடுபோக்காக இருப்பதை என்னவென்று சொல்வது. இறைவனிடத்திலே நன்றியுள்ள அடியானாக மாறுவதற்கு பதிலாக, இறைவனிடத்திலே சபதமிட்டு வந்த ஷைத்தான் வெற்றி அடைவதற்கு உதவி செய்வதுபோல் உள்ளது நமது செயல்பாடுகள்.
இரவில் முந்நேரம் உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, இறைவனைப்புகழ்ந்து, பஜ்ர் தொழுகையை நேமமாக தொழுது, இறைவனின் அருளைப்பெற்று, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையப்பெற்றவர்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக
http://www.pettagum.blogspot.in/2014/09/blog-post_45.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தயிர் தகவல்கள்.*

* தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன் , வெல்லம் சேர்த்துச் சாப்பிட உடல் ...

Popular Posts