பிளாஸ்கில் பால் ஊற்றும்போது நல்ல சூடாக ஊற்றினால் நீண்ட நேரம் சூடு தாங்கும். இப்பொழுது உலோக பிளாஸ்குகள்தான் வந்துவிட்டதே. கண்ணாடி ரீபில் உடையுமோ என்ற பயமே வேண்டாம்.
தேநீரை ஊற்றும் முன்பு இரண்டு முறை வடிகட்டி நல்ல சூட்டில் ஊற்ற வேண்டும். தேயிலை இலை துணுக்குகள் பிளாஸ்கில் ஊற்றி வைக்கப்படும் தேநீரில் இல்லாமல் இருந்தால் மணமிக்க சுவையான டீ கிடைக்கும்.
பிளாஸ்க்கில் நாற்றம் வராமல் இருக்க கழுவும்போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையைப் போட்டு வெந்நீர் ஊற்றி குலுக்கி கழுவி வைத்தால் நாற்றம் வராது.
பிளாஸ்க்கில் காபி, டீ, ஹார்லிக்ஸ் எது எடுத்துச் சென்றாலும் குடித்த பிறகு உடனே தண்ணீர் ஊற்றிக் கழுவினால் பிரஷ் கொண்டு தேய்க்க சுலபமாக இருக்கும்.
பிரிஜ் துர்நாற்றம் வராமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலை அல்லது அடுப்புக் கரி அல்லது சாறு பிழிந்த எலுமிச்சை மூடியைப் போட்டு வைக்க வேண்டும்.
தயிரிலிருந்து வெண்ணெய் எடுப்பதற்கு தயிரைக் கடைந்து சிறிது நேரம் பிரிஜ்ஜில் வைத்தால் வெண்ணெய் தானே தனியாகப் பிரிந்து வரும்.
மிளகாய் வாங்கும்போது கெட்டியாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும். காம்பை உடைத்தால் "சட்' என்று உடைய வேண்டும்.
கீரைத்தண்டு வாங்கும்போது குட்டையானதாகவும் கிளைகள் நிறைய இருப்பதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.
வாழைப்பூ கெட்டியான பூவாக இருந்தாலும் பூவின் உள்ளே இருப்பவை பிஞ்சாக இருக்க வேண்டும்.
அவரைக்காய், பீன்ஸ் வாங்கும்போது அதிலுள்ள நாரை உரித்தால் எளிதாக உரிய வேண்டும். பிஞ்சாக இருந்தால் நல்லது.
வாழைத்தண்டு, சுரைக்காய், சௌசௌ வாங்கும்போது நகத்தால் அழுத்திப் பார்த்தால் நகம் பதிய வேண்டும்.
மலைச்சுண்டைக்காயின் மேல் பகுதி வாய் பிளந்திருக்கக் கூடாது.
பாகற்காய் சிறியதாக மஞ்சள் கலக்காத பச்சை நிறத்தில் இருக்க வேண்டும்.
காலிஃபிளவர்களில் இடைவெளி இல்லாமல் பூ இணைந்திருக்க வேண்டும். நன்கு மென்மையாகவும் இருக்க வேண்டும். புழுக்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
புடலங்காய் முறுக்கிப் பார்த்தால் நெளிய வேண்டும்.
பீர்க்கங்காய் நன்கு பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். கோடு போன்ற பாகம் சற்றுமுன் நோக்கி இருக்க வேண்டும். கோட்டுக்குப் பக்கத்திலுள்ள குழி போன்ற பள்ளப்பகுதி நன்கு ஆழமாகவே இருக்க வேண்டும். அமுக்கிப் பார்த்தால் மென்மையாக இருக்க வேண்டும்.
முட்டைக்கோஸ் அழுத்தமாகவும் கெட்டியாகவும் இருத்தல் நல்லது. வெளிர் பச்சை நிறமுள்ளதாகவும் கனமுள்ளதாகவும் இருக்க வேண்டும்
http://www.pettagum.blogspot.in/2014/09/blog-post_90.html
--

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக