லேபிள்கள்

வியாழன், 14 மே, 2015

அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்

அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்


முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அல்லது மதக்கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டாத அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் இவை:
முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
-
ஜவஹர்லால் நேரு -
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள்இ 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களேஇ அப்படியின்றிஇ அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
-
எஸ். எச். லீடர் -
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
-
வாஷிங்டன் இர்விங் -
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
-
டாக்டர் ஜான்சன் -
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
-
பெர்னாட்ஷா -
திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
-
நெப்போலியன் -
இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
-
ஜி.ஜி. கெல்லட் -
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது.
-
வில்லியம்மூர் -
ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
-
காந்திஜி -
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
-
தாமஸ் கார்லைல் -
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
-
டால்ஸ்டாய் -
அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
-
கிப்பன் -
செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம்.
-
கலைஞர் கருணாநிதி -
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு 'குடிஅரசு' எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார்.
-
கவியரசி சரோஜினி நாயுடு -
இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.
எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
-
மைக்கேல் ஹெச். ஹார்ட் – 'The 100 என்ற நூலில்..

சுருக்கமாக சொல்வதென்றால், தெளிந்த சிந்தனையும் நடுநிலை நோக்கும் கொண்ட அறிஞர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்வைப் புரட்டிப் பார்க்கையில் அதில் சுயநலமற்ற தொலைநோக்குக் கொண்ட சீரிய சிந்தனை பிரதிபலிக்கக் கண்டார்கள். கீழ்த்தரமான எண்ணங்களும் குறுகிய மனப்பான்மையும் உடையவர்கள் தங்கள் மனப்போக்கிற்கு ஏற்றவாறு அண்ணலார் மீது களங்கம் சுமத்த ஏதும் வாய்ப்பு கிடைக்காதா என இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான்.
நாம் உம்மை அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம் (21:107)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் ஏற்படுத்தியத் தாக்கம், அவர்கள் ஏற்படுத்திய சமூக புரட்சி, அவர்களிடம் இருந்த நற்பண்புகள் ஆகியவைகளை முஸ்லிம்கள் சொல்லுவிதைவிட முஸ்லிமல்லாத அறிஞர்கள், அறிவுஜீவிகள் போன்றோர் சொல்லுவதே இந்த தலைப்பிற்கு மேன்மையாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.

மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார் இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பதுஇ எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.( St. PAUL) ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.  Source – (Thehundred)
தமிழில் அந்த நூறு பேர்.
ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோஇ வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். (எழுத்தாளர் பா. ராகவன்)
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். (பெர்னாட்ஷா)
'நிச்சயமாக நீர் மிக உயர்ந்த நற்குணம் உடையவராக இருக்கின்றீர்' (68:04)
காந்திஜி இவ்வாறு கூறுகிறார், ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
(
மகாத்மா காந்தி)
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
(
டாக்டர் ஜான்சன்)
இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது (33:21)
முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம்,  அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.
(
ஜவஹர்லால் நேரு)
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (48:01)
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
(
எஸ். எச். லீடர்)
இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
(
வாஷிங்டன் இர்விங்)
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார் (48:29)
நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
(
தாமஸ் கார்லைல்)
(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம் பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.(2:99)
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. (டால்ஸ்டாய்)
'இவர்களுக்காக துக்கமும், வேதனையும் அடைந்தே உமது உயிர் போய்விட வேண்டாம்'. (35:08)
செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.
(
கலைஞர் கருணாநிதி)
முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்தும் அவர்களின் அடிப்படையான நேர்மையான நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மத் (ஸல்) அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது பல பிரச்னைகளையும் கேள்விகளையும் தாம் எழுப்புகிறதே தவிர பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாயில்லை. மேலும் உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களில் முஹம்மதைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.(Mohammed at Mecca , Oxford 1932, P.52)

அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடிதளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்குப் பின்னரும் இன்று வரை இந்திய ஆப்ரிக்க துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.நான் ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார் என்பது தான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரேவிதமான பறைசாற்றலாகும். ஒருபுறம் கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்குக் குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்தை தாண்டி (கடவுள் என்கிற அளவுக்கு) உயர்த்தியதில்லை. அவர் அளித்து விட்டுச் சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்தி (மிகைத்து விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.(நுனயறயசன Gibbon Simon Ocklay, History of the Saracen Empire. London, 1870, p.54)

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு.
எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு அவரது அஞ்சாமை இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல. (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi)

அவன் தான் என்னுடைய தூதரை நேரான வழியைக் கெண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணை வைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (2:32)

இவ்வளவு மகத்தான சிறப்புக்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை சில அறிவற்றவர்கள் அவர்கள் மீது தூற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பார்க்கும் பொழுது பெரும் நகைப்புக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான தவறான சிந்தனையும் முஸ்லிம்களுக்கெதிரான காழ்புணர்ச்சியே அவர்களின் தவறான கொள்கைக்கு காரணமாக உள்ளது. ஆகவே பகுத்தறிவுமிக்க மனிதனாக படைக்கப்பட்ட நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மேலேயுள்ள கூற்றுக்கள் எல்லாம் உண்மைதானா? இந்த அசாதாரணமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா? என்பதை நாம் அனைவரும் தூயவடிவில் அறிவதற்கு முன்வர வேண்டும். நமக்கு இருக்கின்ற கருத்துவேருபாடுகளை கழைந்து ஒரு மாசற்ற மனிதாக அவரை நாம் அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பழையபடி நாம் மனதுக்குள் சில கருப்புப்புள்ளிகளை வைத்துக்கொண்டு இன்னும் அவர்கள் மீது மனித தன்மையற்ற செயல்களை  செய்ய முற்பட்டால் இன்னும் ஒரு நபியல்ல ஓராயிரம் நபி வந்தாலும் உங்களை திருத்தமுடியாது. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவனாக!
விவேகானந்தர்
குர்ஆனும், அண்ணல் நபியின் அருள்வாக்கு என்று பரம்பரையாகச் சொல்லப்படுகின்ற ஹதீஸின் பல பாகங்களும் நேராகவோ மறைமுகமாகவோ சொல்லிக்காட்டாத விஞ்ஞானமோ கலையின் துறையோ இல்லை. (ஞானதீபம் பாகம்-8)
மகாத்மா காந்தி
இஸ்லாம் பொய்யான மதமல்ல. எவ்வாறு நான் அதை அறிந்திருக்கிறேனே அவ்வாறே எல்லா முஸ்லிமல்லாதவரும் படித்துணர வேண்டும். அப்போதுதான் என்னைப்போல் எல்லாரும் இஸ்லாமின்பால் அன்புகொள்வார்கள்.
முஹம்மது நபி பெரிய தீர்க்கதரிசி, மஹh வீர புருஷர், கடவுளைத் தவிர மனிதர் ஒருவருக்கும் அஞ்சாதவர். அவர் சொல்லொன்றும் செயலொன்றுமாக நான் கண்டதில்லை. அவர் எப்படி உணர்ந்தாரோ அப்படியே செய்தார்.

அப்புண்ணிய புருஷர் ஓர் பக்கிரி. அவர் செல்வத்தை விரும்பி இருப்பின் ஏராளமாகச் சேர்த்திருக்கலாம். அவரும் அவருடைய குடும்பத்தாரும் பந்துக்களும் மனமுவந்து அனுபவித்த கஷ்டங்கள், துயரங்களைப் படிக்கும்போது என் கண்களிலிருந்து நீர் ததும்புகிறது,

கடவுளிடம் அவர் மனது சதாகட்டுப்பட்டிருந்தது. கடவுள் கட்டளைக்கு எப்போதும் பயந்தே நடந்தார். மனித சமூகத்திடம் அளவற்ற கருணையும் கொண்டார்.
அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?

அம்மஹhனின் சிறிதும் பிசகாத, ஆடம்பரமற்ற வாழ்க்கையும், †தான்என்ற அகம்பாவத்தை அறவே நீக்கிய தன்மையும், கொடுத்த வாக்குறுதியை தவறhது கண்ணியப்படுத்துதலும், நண்பர்களிடத்தும், தம்மைப் பின்பற்றியவர்களிடத்தும் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் அவருடைய ஆண்மையும், அஞ்சாமையும், கடவுளினிடத்திலும் தாம் கொண்ட வேலையிடத்தும், தளராத நம்பிக்கையும் ஆகிய இவைகளே அவருடைய வெற்றிக்குக் காரணமாயிருந்து, எதிர்த்துவந்த பல இடையூறுகளையும் வென்றன. (யங் இந்தியா 21. 03. 1929)
அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?
குருநானக் (சீக்கிய மத நிறுவனர்)
வேதாகம, இதிகாச, புராணங்களின் காலங்கள் மலையேறிவிட்டன. ஆனால், திருக்குர்ஆன் இப்பொழுது உலகிற்கு வழிகாட்டியாயிருக்கிறது. உலக சீரமைப்புக்குப் பாடுபட்ட அண்ணல் நபி கள் பால் நான் கொண்டிருக்கும் மட்டற்ற மரியாதையின் காரணமாக, இரு முறை அரேபியா சென்றுவரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஜவஹர்லால் நேரு
அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் நுழைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற நிலையில் இந்திய நாட்டின் தென்பகுதியை அடைந்துவிட்டது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின், இஸ்லாத்தைப் பரப்பும் துணிவால் அவர் தம்மீதும் தமது கொள்கைமீதும் எத்துணை உறுதி பூண்டிருந்தார் என்பது தெளிவு.
இத்தகைய உறுதியான மனோபாவத்தை அன்றைய சூழ்நிலையில் அவர் உண்டாக்கிக்கொண்டது ஆச்சிரியப்படத் தக்கதே. இத்தகைய ஒரு உறுதியால்தான் மனித வாழ்க்கைக்கு புறம்பான நிலையிலிருந்த காட்டரபிகளைக் கொண்டு உலகில் சரிபாதி பகுதியிலே வெற்றிக்கொடி நாட்டினார்.

இத்தகைய வெற்றிக்குக் காரணம், முதலாவதாக முஹம்மத் நபி (ஸல்) கொண்டிருந்த உறுதி-ஊக்கம். இரண்டாவதாக இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவம். (டிஸ்கவரி ஆப் இந்தியா)
பண்டித கோபால கிருஷ்ண கோகலே
மகான் முஹம்மத் (ஸல்) அவர்களின் புனித வாழ்வைப் பற்றிய விசாரணையில் நான் இறங்கியபோது, எனக்குத் தௌpவாக்கிய சில உண்மைகளைப் பற்றி நான் எழுதுவதில் மகிழ்கிறேன்.
அவர்களைப் அகில உலக சீர்திருத்தத்துக்காகவே ஈசுவரன் அனுப்பியுள்ளான். ஒரு பெரும் சீர்த்திருத்தக்காரருக்கு இருக்க வேண்டிய அனைத்துச் சக்திகளும், ஒரு மாமனிதருக்கு அமைந்திருக்க வேண்டிய எல்லா குணநலன்களும் அவர்களிடம் காணப்பட்டன.

அக்கிரமச் செயல்களில் மூழ்கிக் கிடந்த அரேபிய நாட்டினரை முழுமையான மனிதர்களாக மாற்றிவிட்டார் அவர். அவர்களுள் ஈவு இரக்கத்தை, கனிவை, சகிப்புத்தன்மையை உண்டுபண்ணி, காட்டுமிராண்டிகளாக, அறிவீனர்களாகத் திரிந்துகொண்டிருந்த அம்மக்களைச் சில நாட்களுக்குள் உயர்ந்த ஆட்சியாளர்களாக மாற்றி அமைத்துவிட்டார்.

தம் சகோதரர்களின் உதிரத்தைச் சிந்தச்செய்வது சர்வ சாதாரணமான செயலென்று கருதிவந்தவர்களின் உள்ளங்களில் அண்ணல் அவர்களின் சீரிய போதனைகள் ஈவு இரக்கத்தை, பரிவை உண்டுபண்ணிவிட்டன. இழந்துவிட்ட சமாதானத்தை, அமைதியை அவர்கள் மீண்டும் நிலைபெறச் செய்துவிட்டனர். அவர்கள் சாந்தி சமாதானத்தின் பாதுகாவலர்களாக அமைந்துவிட்டனர்.
அக்கிரமக்காரர்களிடம் மகான் அவர்களுக்கு பரிவு ஏற்படாது. ஈசுவரன் அவர்களுக்குத் தூய உள்ளத்தையும், தயாள குணத்தையும் அளித்திருந்தான். அவர்கள் என்றும் நீதி வழுவியதே கிடையாது. அரேபியாவை வெற்றி கொண்ட பின்னர், தோல்வி கண்ட மக்களுக்கு அவர்கள் அருளாகவும், ஆதரவாகவும் அமைந்திருந்தார்கள்.

மகான் முஹம்மத் மீதும், அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும் இன்னல்களும் தொல்லைகளும் இழைத்துவந்த கயவர்களை வெற்றி கொண்ட பின் தூக்கிலிட்டிருக்கலாம். அதுதான் நியாயமும்கூட. எனினும், அவர்களைப் பழிக்குப் பழி வாங்காமல் யாவரையும் மன்னித்துவிட்டனர் மகான் முஹம்மத் அவர்கள். இந்த அரிதான நிகழ்ச்சிக்கு நிகரானவொன்றை நான் உலகச் சரித்திலேயே கண்டதில்லை.

மகான் அவர்கள் பிறப்பதற்கு முன்னர் அரேபியாவிலும் இந்தியாவில் நடப்பது போன்றே விக்கிரக ஆராதனை நடந்துவந்தது. மகானின் போதனைகளால் விக்கிரக வழிபாடு முற்றாக ஒழிந்தது. இதன் பின்னரே ஒரே இறைபக்தியும் ஏகத்துவ எண்ணமும் மக்களின் உள்ளங்களில் தோன்றியது.
மகான் பிறப்பதற்கு முன்னர், பெண்களுக்குரிய உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டுவந்தன. பெண்கள் இம்சிக்கப்பட்டுவந்தனர். அவர் பெண்களுக்கு உயர்நிலையை வழங்கினார். மேலும், அவர்களுக்கான உரிமைகளையும் அவர் வகுத்துத் தந்தார்.

ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையை முற்றும் களைந்து எல்லோரிடையிலும் சமத்துவத்தை நிலவச் செய்த மகான் அவர்களின் அந்த இயக்கம் இன்றும் உயிருடன் இயங்கிவருகிறது. ஏதேனும் ஒரு பள்ளிவாசலுக்குச் சென்று பாருங்கள். அங்கு ஏழையும், செல்வனும், உயர்ந்தவனும், தாழ்ந்தவனும், யாசிப்பவனும், கொடுப்பவனும் ஒரே வரிசையில் நின்று தோளோடு தோள் உராய்ந்து கம்பீரமாக நிற்கும் காட்சியைக் காண்பீர்கள்.

இத்தகைய தனிப்பெரும் விஷேசத் தன்மைகளால்தான் மகான் அவர்களை அறிஞர் பெருமக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.அவர்களை மதிக்கின்றனர்.
வாருங்கள்* எல்லோருமாகச் சேர்ந்து ஒரே குரலில் முழங்குவோம்.
டாக்டர் அம்பேத்கார் (இந்திய அரசியல் சாசனத்தைத் வகுத்தவர்)
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி, மனிதனை மனிதனாக வாழச்செய்து, சமுதாயக் கூட்டுறவு அடிப்படையின் மீது மக்களை வாழ்விக்க ஒரு நிரந்தர நெறிமுறையை வகுத்துத் தந்த வீரர் முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை.

ரவீந்திரநாத் தாகூர்
முசல்மான்களை ஒன்றாக இணைப்பது, அவர்களுக்குத் தர்மத்திலுள்ள பற்றே. சடங்குகளிலுள்ள பிடிப்பு அல்ல. அனாவசியமான கட்டுப்பாடுகள் அவர்கள் செய்யும் வேலைகளை அடக்கவில்லை. இஸ்லாமிய தர்மம் அவர்களை மிகவும் நெருக்கமாக ஒன்றுபடுத்தியிருக்கிறது. ஒரு கொள்கையைப் பல அர்த்தங்களைக்கொண்டு பார்க்காமல் ஒரே கருத்துடன் வழிபடுகின்றனர். அழைத்த மாத்திரம் எல்லோரும் ஒன்று சேர்ந்து, விருப்பத்துடன் உயிரைத் தரக்கூடிய தன்மை வாய்ந்தது இவர்களின் தர்ம உணர்வு.
(
கோரா நாவல்)

கவிக்குயில் சரோஜினி தேவி
சகோதரத்துவப் பாடத்தை, சுதந்திர உணர்வை, சமத்துவப் பண்பாட்டைப் போதித்து இவ்வுலகைப் பொலிவுறச் செய்த பெருமைக்குரிய அண்ணல் நபியின் திருப்பெயர் உலகம் உள்ளளவும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நவீன உலகத்தில் உண்மை ஜனநாயக அரசியலை இஸ்லாம் நிலை நாட்டிற்று என்னும் ஒரே அம்சத்தில்தான் இம்மதம் ஏனைய மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது எனக் கூறுகிறேன்.
உலகம் இன்று எதை வேண்டி நிற்கிறது? உலக மக்களின் தற்போதைய வேண்டுதல் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய ஒரு சமூக அமைப்பைப் படைக்க வேண்டும் என்பதுதான்.
இந்த உயர்நிலை இலட்சியத்தை, தேவையைப் பாலைவனத்தின் தீர்க்கதரிசி ஒட்டகமோட்டி (அண்ணல் நபி) பதிமூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே உபதேசித்து அருளினார். (கட்டுரைத் தொகுப்புகள்)

ஹர்தே பிரகாஷ்
அராபியப் பாலைப் பிரதேசத்தில் முஹம்மது நபி (ஸல்) அவதரித்தது அரேபிய நாட்டிற்கும், இதர எல்லா நாடுகளுக்கும் அனுகூலமாகவே நிலவியது. இப்பெரியாரது வாழ்க்கையில் உலகுக்குப் பொதுவாகக் கிடைத்த நன்மைக்காக அரேபியா மட்டுமல்ல, அகில உலகமே நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா
இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும் எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்துள்ளது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காண முடியும். (காஞ்சிபுரம் மீலாது விழாவில்)

இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான இறைமறை குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்துகொள்ளும் வாய்ப்பு என் இளமைக் காலத்திலேயே என் இதயத்தில் இடம் பிடித்துவிட்டது. திருக்குறளை நான் தெரிந்துகொண்ட காலத்திலேயே திருக் குர்ஆனையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமைகொள்கிறேன்.
ஏறத்தாழ முன்னூற்றுக்கும் அதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கின்றேன். நானும் எனது கொள்கையும் சொல்லிவந்த சமுதாயச் சீர்திருத்த பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏக தெய்வக் கொள்கை எங்கட்கும் பெரிதும் பிரசாரத் துணை நின்றது. கல்லையும் மண்ணையும் பூஜிக்காதீர். கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு. மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக் கொண்டிருந்த எங்கள் இலட்சியப் பணி மீலாது மேடையணி மூலம் சுடர்விட நல்ல வாய்ப்பு இருந்தது.

மார்க்கம் நடைமுறையில் வரும்போது, அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும் சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால், சுற்றுச் சார்பு எப்படி இருக்கின்றதோ, அப்படியே அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் சுற்றுச் சார்பு அறிந்தவர்கள்.
ஆனால், சுற்றுச் சார்புக்கு மாற்றமாக நாம் நடந்தால் தனக்குத் தீமையே விளையும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டுக் கிடக்கும் சுற்றுச் சார்புகளை அழித்தும் எவர் நல்ல சுற்றுச் சார்புகளை, ஏற்படுத்துகிறாரோ அவரைத்தான் மகான் என்று நாம் அழைக்கிறோம்.

ஆனால், அத்தகைய மகான்கள் நமக்கு எப்பொழுதும் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும்பொழுது நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. (7.10.1957 சென்னை கடற்கரை மீலாது விழாவில்)
நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீஸும், இஸ்லாத்தின் இணையற்ற இலட்சியப் பொக்கிஷமான இறைமறை திருக் குர்ஆனும், மனிதன் அன்றhட வாழ்வில் கடைபிடிக்க முடியாத ஒன்றைக் கடமையாக்க முனையவில்லை. கடைபிடிக்கும் நடைமுறை வழியில் கணிசமாகக் கடைபிடிக்க வலியுறுத்தியது. இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப் பெரும் தூண்டுகோலாகும். (21.03.1966 அபிவிருத்தீஸ்வரம் பள்ளிவாசலில்)

மதுரை ஆதினகர்த்தர்
இஸ்லாம் மார்க்கத்தின் ஏகத்துவக்கொள்கையையும் அதனைப் பின்பற்றி ஒழுகுவதால் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் அளப்பரிய தன்மைகளைப் பற்றியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தௌpவாகக் கூறிச் சென்றுள்ளார்கள். பெருமானாரைப் பின்பற்றுவதிலே பெருமையுண்டு. உண்மையுண்டு. எண்ணிறந்த நன்மைகள் உண்டு. கடவுள்கொள்கையில் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தினார். சமுதாயக்கொள்கையில் சமத்துவத்தை நிலைநிறுத்தினார். சமயக்கொள்கையில் தௌpவையும் எளிமையையும் நிலைநிறுத்தினார். இது எப்படி அவரால் முடிந்தது என்றால், அல்லாஹ்வின் பேரருளால் அவருக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது.

ப.க. வாஸ்வாணி (சிந்து ஞானி)
மாவீரர்களில் ஒருவராக நான் முஹம்மதுவைக் காண்கிறேன். உலக மக்களின் பல பகுதியினரை உயர்நிலைக்குக் கொண்டு வரும் ஓர் உன்னத சக்தி அவருக்கு இருந்தது. இந்திய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அவருடைய போதனைகள் பெரிதும் உதவியுள்ளன.

ஜார்ஜ் பெர்னாட்ஷா
நான் அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அவர் மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றப் பிறந்தவர் என்பது என் கருத்து.
வரலாற்றில் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஓர் அதிர்ஷ்டத்தின் காரணமாக நபிகள் நாயகம் மூன்று விதமான நிறுவனராய் விளங்குகின்றhர்கள். அன்னார் ஒரு சமுதாயத்தின் நிறுவனர். ஒரு பேரரசின் நிறுவனர். ஒரு மதத்தின் நிறுவனர்.

சேம்பர்ஸ் என்ஸைக்ளோபீடியா
முஹம்மத் நபி (ஸல்) தமது சொந்த வாழ்க்கையில் சமூகத்தன்மையும், விசுவாசமும், குடும்பத்தின் மீது பரிவும், மன்னிக்கும் தன்மையும் உடையவராய் இருந்தார். அவர் தமது அதிகாரத்தின் உச்ச நிலையிலே இருந்தபோது மிகவும் எளிதான வாழ்க்கையே நடத்தினார்.

ஜெனரல் பர்லாங்
அரேபிய நபியின் சரிதையை அவர்களது குZதிசியங்களை- அவர்களது வாழ்க்கையை நாற்பது வருடமாக ஆராய்ந்துவருகிறேன். உலகம் இன்றுவரை கண்டிருக்கும் தலைவர்களில் இவர்கள் நிகரற்றவர் என்றே கூறவேண்டும்.

ஸ்டான்லி லேன்புல் (வரலாற்றாசிரியர்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மினும் தாழ்ந்தவர்களிடம் மிக்க அன்பாகவும், அனுதாபமாகவும் நடந்துகொண்டார். குழந்தைகளிடம் அதிகம் அனுதாபமுள்ளவராய் இருப்பார். இவர் தமது வாழ்நாளில் ஒருவரையும் அடித்தது கிடையாது. ஒரு சமயம் ஒருவருக்கு சாபமிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது "நான் சாபமிடுவதற்காக அனுப்பப்படவில்லை. மானிடர்களுக்கு அருளாகவே அனுப்பப்பட்டேன்" என்று கூறினார்.

தாமஸ்கார்லைல்
பெருமானார் (ஸல்) பூவுலகில் மக்களுக்குப் போதனைகள் புரிந்தவை அனைத்தும் உண்மைகள் பொதிந்தவை. கருத்தாழமிக்கவை.
ஜுல்ஸ் மாஸர்மான் (அமெரிக்கா- யூத மனோதத்துவ விஞ்ஞானி)
சரித்திரத்தில் பெருந்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் கீழ்க்காணும் மூன்று அம்சங்களுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். அவை
1)
தலைவராக இருப்பவர், வழிநடத்தப்படும் மக்களின் நல்வாழ்வுக்கு வகை செய்ய வேண்டும்.
2)
ஒரு சமுதாயத்தை உருவாக்கி, அந்த மக்கள் போதிய பாதுகாப்பும் பெறுகிறேhம் என்ற உணர்வினைப்பெற வழிவகுக்க வேண்டும்.
3)
அவர்கள் அனைவருக்கும் ஒரே நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

பாஸ்டர், மற்றும் சால்க் போன்ற தலைவர்கள் முதல் நிபந்தனைக்கு மட்டும் உட்பட்டவர்கள். காந்தி கன்பூஷியஸ், அலெக்ஸhண்டர், சீஸர் மற்றும் ஹிட்லர் போன்ற தலைவர்கள் இரண்டாவது மூன்றhவது நிபந்தனையின் கீழ் வருகின்றவர்கள். ஆனால், புத்தர் மற்றும் ஏசு மூன்றhவது நிபந்தனைக்கு மட்டும் உட்பட்டவர்கள். எல்லாக் காலத்திலும் நின்று நிலவக் கூடிய பெரும் தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே. காரணம் அவர்களிடத்தில் இம்மூன்று அம்சங்களும் குறைவின்றி அமைந்திருந்தன. மேலும் மோசேயிடத்திலும் இவ்வம்சங்கள் யாவும் சற்றுக் குறைவான அளவில் இருந்தன. (15.07.1974 ஆமாண்டு டைம் வார இதழ் சரித்திரத்தில் முக்கியமான பெருந்தலைவர் யார்?† என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில்)

பாஸ்வொர்த் ஸ்மித் (வரலாற்றாசிரியர்)
அரசாங்கத்தின் தலைவராகவும், மத விஷயத்தில் தலைவராகவும் இருந்துகொண்டு அன்னார் ஏககாலத்தில் சீஸராகவும் போப்பாகவுமே விளங்கிவந்திருக்கின்றhர். ஆனால் அவர் போப்புக்குரிய படோடோபங்கள் இல்லாத ஒரு போப்பாகவும் சீஸருக்குரிய படைகளும் இல்லாத ஒரு சீஸருமாகவே விளங்கிவந்தார். ஒரு நிரந்தர படை இல்லாமலும், மெய்காப்பாளர் ஒருவருமில்லாமலும், அரண்மனை ஒன்றுமில்லாமலும், ஒரு நிரந்தரமான வருவாய்க்கு வழி ஒன்றுமில்லாமலும் எப்போதேனும் ஒருவர் ஆண்டவனது அதிகாரத்தைக் கொண்டே தாம் இவ்வுலகில் ஆட்சிபுரிந்துவந்ததாக கூறிக்கொள்ள உரிமை பெற்றிருப்பாராயின் அன்னவர் முஹம்மதாகவே இருந்துவந்தார். ஏனெனில் அவர் எல்லாவிதமான அதிகாரத்தையும் அதற்குரிய உபகரணங்கள் இல்லாமலும், அதற்கு வேண்டிய உதவிகள் இல்லாமலுமே செலுத்திவந்தார்.

ரெமண்ட் டெரோகு
வரலாற்றில் குறிப்பிடக் கூடிய முதல் சர்வதேச சமுதாயப் புரட்சிக்கு வழிகோலியவர் முஹம்மதுவே ஆவார். நீதி, தர்மம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தச் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ளாத உலகமுழுவதும் விரவக்கூடிய ஒரு நாட்டிற்கு அவர் அடிப்படைகள் இட்டிருக்கிறhர். மனித சமுதாயத்தையும் பரஸ்பரம் உதவும் கடமையையும், சர்வதேச சகோதரத்துவத்தையும் அவர் போதிக்கிறார்.

ஜான்டேவன் போர்ட் (விஞ்ஞானி)
நீதி நெறி வகுத்தோரும், வெற்றி பல கண்டோரும் ஆகியவருற்றுள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வரலாற்றினைப் போன்று சரியான ஆதாரபூர்வமானதாகவும் விரிவானதாகவும், விஷயங்கள் அடங்கியதாகவும் உறுதியான உண்மையுள்ளதாகவும் உள்ள வரலாற்றினை உடையவர் என நன்கு அறிந்த எந்த ஓர் அறிஞர் பெருமான் பெயரையும் குறிப்பிட இயலாது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
 நன்றி:SLTJ


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts