லேபிள்கள்

வெள்ளி, 23 ஜனவரி, 2015

அதிகாலையில் எழுதல்: அல் ஃபஜருடைய அருளை எப்படி அடைவது


பெலா கான்
விரைவில் வரும் பறவைக்கு புழு கிட்டும் என்பது நாம் கேட்டு பழகிப்போன சொற்றொடர், ஆனால் உண்மை அதனால் நாம் நம்முடைய வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தின் தலைவிதியை மாற்றக்கூடிய ஒரு பழக்கத்தைப்பற்றி பேசுவோம். அது ஃபஜரில் எழுவதும் அதன் பின்னுள்ள நேரத்தை பயன்படுத்துவதும்.

வேடிக்கை என்னவென்றால் முஸ்லிம்களாகிய நாம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள்  ஃபஜருக்குப் பிறகு துவா கேட்பது அருளப்படும் என்று சொல்லியிருந்தும், ஃபஜருக்குப் பிறகு உறங்குவதை மிகவும் நேசிக்கிறோம். அது மட்டுமல்ல, முஸ்லிமல்லாத சுய முன்னேற்ற குருக்களும், பெரும் தொழிலதிபர்களும், பெரும் பணக்காரர்களும் இந்த வைகறையில் எழும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
முதலில் நாம் அதிகாலையில் எழுவது ஒன்றும் மிக சிரமமான செயல் அல்ல என்பதை ஒப்புக்கொள்வோம்; இக்கட்டுரையைப் படித்தபின், அது ஆயிரம் முறை எளிதானதாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்.
ஒரு பழக்கத்தை எப்படி வளர்த்துக்கொள்வது?
இதில் நாம் மிகத்தெளிவாக இருப்போம் நாம் ஃபஜருக்கு எழுந்து, தொழுது, குர்ஆன் ஓதியபின், ஃபஜருக்குப்பின்னுள்ள நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்க்க முயல்கிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை தொழுகையை நிலைநிறுத்துவீராக.  இன்னும் ஃபஜ்ருடைய குர்ஆனையும். நிச்சயமாக ஃபஜர் தொழுகை சான்று பகர்வதாக இருக்கிறது. [குர்ஆன்17:78]
உரக்கச் சொல்லுங்கள்.  உங்களைச் சுற்றியுள்ள சூழல் உங்கள் உறுதிமொழியை பதிவு செய்யட்டும்! நினைவு கொள்ளுங்கள், எண்ணத்திற்கும் கூலி உண்டு.
இப்போது, உங்களுக்கு நீங்களே ஒரு 21 நாள் சவாலைக்கொடுத்து ஆரம்பம் செய்யுங்கள். அது தொடர்ந்து 21 நாட்களாக இருக்க வேண்டும். தவறினால், மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்குங்கள். கவலை வேண்டாம் கைவிடுவதை விட உயிரை விட்டாவது முயல வேண்டும்.
உங்களுடைய நங்கூரம் எது?
நீங்கள் இரு வழிகளில் பழக்கத்தை வளர்க்கலாம்:
1.        மனோபலத்தின் சக்தியைப்பயன்படுத்தி, ஒரு திட்டத்தைப் பின்பற்ற உங்களை நீங்களே கட்டாயப்படுத்துங்கள்.
2.        உங்கள் நங்கூரம் எது என கண்டுபிடியுங்கள்.  உங்களுடைய பழக்கத்தை உண்மையில் தூண்டுவது எது? உதாரணமாக, நீங்கள் கண்விழித்து, குளியலறைக்குச் செல்லும்போது பல்விளக்கும் குச்சியை எடுக்கிறீர்கள், உங்களை அறியாமலே பேஸ்டையும் எடுத்து குச்சியில் வைத்து உங்கள் வாயில் வைக்கிறீர்கள். இந்த முடிவை எடுப்பதற்கு நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை அப்படியே வாயில் வைக்கிறீர்கள்.
அதனால் நீங்கள் எழ எது தூண்டுதலாக இருக்கிறது? அலாரமா? முஅத்தினுடைய குரலா? அல்லது உங்கள் முகத்தில் யாராவது குளிர்ந்த நீரை ஊற்றினார்களா?
நீங்கள் காலை 7 மணி விமானத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், மிகத் தாமதமாக காலை 3 மணிக்குப்படுத்தாலும், நேரத்திற்கு எழ மாட்டீர்கள்? நிச்சயமாக எழுவீர்கள்.  ஏன்?  உங்கள் அடிமனதில் உள்ள விமானத்தை விட்டு விடுவோமோ என்ற பயம் தான். அதனால், அதிகாலையில் எழுவதற்க்காக உங்களுடைய எல்லா உத்திகளும் தோல்வியடைந்தால், உங்கள் தூண்டுதலை சரி செய்ய வேண்டும்.
வழக்கமாக, கவனிக்க வேண்டிய ஏதாவது ஒரு அடிப்படை காரணம் இருக்கும்.  அதை நீங்கள் கண்டுபிடித்தால், ஃபஜருக்கு எழுவது உங்களுக்கு எளிதாக இருக்கும்.  நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இறையச்சம் இந்தப்பழக்கத்தை வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கும்.
'…எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் தக்க வழியை ஏற்படுத்துவான்.'[அல் குர்ஆன்65:2]
நீங்கள் மிக வேகமாகச் செல்கிறீர்களா?
நீங்கள் காலையில் எழுந்து, ஃபஜர் தொழுது, ஒரு ஜுஸ்வு ஓதி, திக்ருகளையும் ஓதி, காலை நடைபயிற்சி, பின் உடற்பயிற்சி, காலை உணவு, ஒரு புத்தகம் படித்தல் எல்லாம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அது எப்படி இருக்கிறது?  நன்றாக இருக்கிறதா? இல்லை.  நினைவிருக்கட்டும்: பெரிதாக கனவு காணுங்கள், ஆனால், சிறிதாகத் தொடங்குங்கள்.  ஒரு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள நீங்கள் உங்கள் கவனத்தைக் கவரக்கூடிய ஏதாவது ஒன்றை தொடங்க வேண்டும்.
ஃபஜர் தொழுத பின் 5 அல்லது 6 ஆயத்துக்கள் (ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு)ஓதுவதில் தொடங்கி, அங்கிருந்து உருவாக்குங்கள். ஞாபகத்தில் இருக்கட்டும், அல்லாஹ் (சுபஹ்) சிறியவைகளாக இருந்தாலும், தொடர்ந்து செய்யக்கூடியவற்றை விரும்புகிறான்.
பெரும் அடிகளை எடுத்து வைத்து பாதியில் பெரும் தோல்வியைத் தழுவுவதை விட சிறிய அடிகள் நல்லது.
எந்த செயல்முறையோடு தொடங்குவீர்கள்?
நீங்கள் காலையில் எழ, மிஸ்வாக் கொண்டு பல் துலக்க, ஃபஜர் தொழ, குர்ஆனிலிருந்து 5 அல்லது 6 வசனங்கள் ஓத வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.  நீங்கள் செய்ய வேண்டியது வரிசைக்கிரமத்தை பின்பற்றுவதுஏனென்றால், இந்த தொடர் பழக்கம் உங்களுடைய நரம்பு பாதைகளில் நன்றாகப்பதிந்து விடுகிறது.
அதே வரிசையில் பழகிய பிறகு, நீங்கள் மீண்டும் மீண்டும், அடுத்து என்ன? என்று  நினைக்க அவசியமில்லை. மேலும், உங்களுடைய மூளையின் தீர்மானிக்கும் பகுதிகளை காலையில் அமைதியாக இருக்க விட வேண்டும். இப்படி வரிசைக்கிரமத்தை கடைபிடித்தால், உங்களை தன்னியக்கத்தில் வைப்பது மிகவும் எளிதாகி விடும்.
உங்களுக்கு எப்படி பரிசளிப்பீர்கள்?
கொண்டாட்டம், பாராட்டு, நன்றி, பரிசு இவையெல்லாம் முஸ்லிமின் அகராதியிலிருந்து மறைந்து விட்டன.  நினைவில் கொள்ளுங்கள், நோன்பாளி இரு கூலி பெறுகிறார்; ஒன்று அவருடைய அதிபதியைச் சந்திக்கும்போது, மற்றது, நோன்பு திறக்கும் சமயத்தில்.
பரிசு பெறும் ஆவல் ஒரு பழக்கத்தை வளர்ப்பதை எளிதாக்குகிறது.  அதனால், ஃபஜர் தொழுது, அதன் பின் குர்ஆன் ஓதுவதற்கு உங்களுக்கு நீங்களே என்ன பரிசு கொடுக்கப்போகிறீர்கள்?  சத்தான காலை உணவு, உங்களிடமுள்ள சிறந்த ஆடை, அல்லது நீங்கள் மிகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் ஹலாலான எதுவாக இருந்தாலும் சரி.
நீங்கள் விரும்பினால், யாருடனாவது இதில் கூட்டு சேர்ந்து கொள்ளலாம்.  உங்கள் வெற்றி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத்தவறாதீர்கள்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts