லேபிள்கள்

திங்கள், 5 ஜனவரி, 2015

ஆதார் என்றால் என்ன?


ஆதார் என்பது 12 எண்களைக் இலக்கங்களைக் கொண்ட ஒரு எண். இதை யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிடி ஆஃப் இந்தியா தனது எல்லா குடிமக்களுக்கும் வழங்குகிறது. இந்த எண்ணில் புகைப்படம் உள்ளிட்ட ஒருவரைப் பற்றின மிக முக்கிய தகவல்கள் ஒரு சென்ட்ரல் டேட்டா பேஸில் பதிய வைக்கப்பட்டிருக்கும். ஆதார் ஒப்புநோக்க எளிதானது மேலும் தனிதன்மையுடையது என்பதால் கள்ள எண்களையும் தவறான தகவல்களையும் தவிர்க்க ஏற்றது. ஜாதி மத பேதங்கள் இல்லாமல் அனைவருக்கும் ஒன்றானது.
1. இது ஒரு 12 இலக்க எண்,  அட்டை மட்டுமல்ல
2. அனைவருக்கும் ஆனது. கைக்குழந்தைகளுக்குக் கூட. அதாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிரத்யேக ஆதார் யு.ஐ.டி எண் கொடுக்கப்படும்.
3. அது இங்கு வசிப்பவர்களுக்கு ஒரு அடையாளம் தருகிறது. குடியுரிமை பற்றினது அல்ல. இந்தியர்களுக்கு மட்டுமானதும் அல்ல.
4. ஆதார் கார்ட் பெற்றுக் கொள்வது விருப்பத்தின் பேரிலானது, கட்டாயம் அல்ல.
5. நம் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளலாம். அதாவது அடையாள அட்டை ஏதும் இல்லாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம்.
6. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிபட்ட ஆதார் அடையாள எண் வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு எண்ணுக்கு மேல் கிடைக்காது.
7. யு.ஐ.டி ஒரு தனி நபர் பற்றின அரசாங்க மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் அளிக்கும். மேலும் விபரங்கள் ஏதும் யு.ஐ.டி கொடுக்காது.
8.ஆதார் யு.ஐ.டி எண் விபரங்கள் ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றுக்கு பயன்படும்..ஆனால் அவற்றுக்கு மாற்றாகாது. 

எதற்காக ஆதார் பெற வேண்டும்?
1. கிராமப்புரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மிகப் பயன் தரத்தக்கது
2. தெளிவான அடையாளம் தரும் ஒரு நபருக்கு
3. வங்கிகளில் ஏழைகளும் எளிதில் கணக்கு வைத்துக் கொள்ள ஏது செய்யும்
4. அரசாங்க மற்றும் தனி நபர் நிறுவனங்களின் சேவைகளை ஏழைகளும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்
5. அரசாங்கத்தின் நலம் தரும் திட்டங்கள் மக்களுக்குப் பயன் தரவும் போய்ச் சேரவும் எளிதாக இருக்கும்

யாரெல்லாம் ஆதார் பெற்றுக்கொள்ளலாம்?
இந்தியாவில் வசிக்கும் மற்றும் யு.ஐ. டி.ஏ.ஐ யின் வெரிஃபிகேஷனை திருப்தி செய்யும் எவரும் ஆதார் பெறலாம்.

எப்படி பெறுவது?
உள்ளூர் ஊடகங்களில் ஆதார் பற்றின பிரச்சாரங்கள் செய்வார்கள். ஊடகங்களில் தெரிவிக்கப்படும் (ஆதாரங்களை)  certain documents எடுத்துப் போக வேண்டியிருக்கும். 
என்னென்ன ஆதாரங்கள் தேவைப்படும்?
பதிவு செய்யும் நேரம் தேவைப்படும்ஆவணங்கள்
1. (ஆதார் விண்ணப்பப் படிவம்) Aadhaar application form
2. வசிப்பிடம் பற்றின தகவல்
3. அடையாள அட்டை புகைப்படத்துடன்
ஒவ்வொரு ஊருக்கும் இவை மாறுபடலாம்
தேவைப்படும் தகவல்கள்
1. பெயர்
2. பிறந்த தேதி
3. பால்
4. முகவரி
5. பெற்றோர் மற்றும் காப்பாளர் பற்றின தகவல்
6. தொடர்பு கொள்ள தொலைபேசி மற்றும் ஈ மெய்ல் முகவரி
மேலும்
1. புகைப்படம்
2. 10 விரல் அடையாளங்கள்
3. விழிப்படல அடையாளம்
எங்கு பதியலாம்?
இங்கு சொடுக்குங்கள் Enrollment camps
விண்ணப்படிவம் எங்கு கிடைக்கும்?
இங்குசொடுக்கவும் Aadhaar application form
பதிவு செய்து கொள்ளும் முகாம்களில் படிவங்கள் கிடைக்கும் அல்லது இங்கு பிரிண்ட் செய்து கொள்ளலாம் சொடுக்கவும்  here. 

முதன்மை அட்டை:

நாடு முழுவதும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அரசின் உதவிகள், சலுகைகள் பெற
  விண்ணப்பிக்க இதுவே முதன்மையான அடையாள அட்டையாக இருக்கும். சமையல் எரியவாயு இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற, பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, குடும்ப அட்டை பெற அனைத்துக்கும் இதவே முதன்மையான தேவையாக இருக்கும். அது மட்டுமின்றி அடிக்கடி வீடு மாறும் போது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புகளை எளிதில் மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

அடையாள அட்டையில் என்ன இருக்கும் ?

தேசிய அடையாள அட்டையின் மேல் புறத்தில் உள்ள புகைப்படம், பெயர், 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் மட்டுமின்றி உள்ளே சிப் ஒன்று இருக்கும். அது 2 பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்றில் கைரேகைப்பதிவுகள், கருவிழிப்பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருக்கும். மாற்ற முடியாது. இன்னொரு பகுதியில் முகவரி, பணி, கல்வித்தகுதி வங்கி கணக்கு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதனை வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். வங்கி கடன், கையிருப்பு அட்டை போன்று கையளவு அட்டையாக இருக்கும்.

ஆதார் அட்டை எதற்கெல்லாம் தேவை? எப்படி பெறலாம்?

 கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது. கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது.

1.பாஸ்போர்ட்

2.நிரந்தர கணக்கு எண் அட்டை

3.ரேஷன் / PDS புகைப்பட அட்டை

4.வாக்காளர் அடையாள அட்டை

5.ஒட்டு உரிமம்.

6. அரசு புகைப்பட அடையாள அட்டைகள்

7. NREGS வேலை அட்டை

8. அறியப்பட்டதா கல்வி நிறுவனம் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை

9. படைக்கல உரிமம்

10. Photo வங்கி ஏடிஎம் கார்டு

11. Photo கடன் அட்டை

12. ஓய்வு கால ஊதியம் பெறுபவர் புகைப்பட அட்டை

13. சுதந்திர போராட்ட வீரர் புகைப்பட அட்டை

14. ஜாம் புகைப்பட கைச்சாத்து புத்தகம்

15. CGHS / ECHS புகைப்பட அட்டை

16. முகவரி அட்டை பெயர் மற்றும் தபால் வெளியிட்ட புகைப்பட கொண்ட லெட்டர் ஹெட் குழு ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி வெளியிட்ட கண்டறிந்து கொண்ட நிகழ்வு சான்றிதழ்

புகைப்படங்கள் இல்லாமல் ஆவணங்கள் ஏற்று முடியாது. பழைய புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ள உள்ளன.

முகவரி சான்று (PoA) (பெயர் மற்றும் முகவரி அடங்கிய)

1. பாஸ்போர்ட்

2. வங்கி அறிக்கை

3. தபால் கணக்கு அறிக்கை

4. ரேஷன் அட்டை

5. வாக்காளர் அடையாள அட்டை

6. ஒட்டு உரிமம்

7. அரசு புகைப்பட அடையாள அட்டைகள்

8. மின்சார பில் (3 மாதங்களுக்கு விட பழைய இல்லை)

9. தண்ணீர் பில் (3 மாதங்களுக்கு விட பழைய இல்லை)

10. தொலைபேசி தொலைபேசி பில் (3 மாதங்களுக்கு விட பழைய இல்லை)

11. சொத்து வரி ரிசிப்ட் (இல்லை பழைய விட 3 மாதங்கள்)

12. கடன் அட்டை அறிக்கை (இல்லை பழைய விட 3 மாதங்கள்)

13. காப்பீட்டு ஆவணம்

14. லெட்டர் ஹெட் வங்கி புகைப்பட கொண்ட கையெழுத்திட்ட கடிதம்

15. NREGS வேலை அட்டை

16. படைக்கல உரிமம்

17. ஓய்வு கால ஊதியம் பெறுபவர் அட்டை

18. சுதந்திர போராட்ட வீரர் அட்டை

19. ஜாம் கைச்சாத்து புத்தகம்

20. CGHS / ECHS அட்டை

21. லெட்டர் ஹெட் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அல்லது குழு மூலம் ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி வெளியிட்ட முகவரி கொண்ட நிகழ்வு சான்றிதழ்

22. கிராம பஞ்சாயத்து தலைவர் வழங்கப்பட்ட முகவரி அல்லது அதன் சமமான அதிகாரம் சான்றிதழ் (கிராமப்புறங்களில்)

23. வருமான வரி மதிப்பீட்டு ஆணை

24. வாகன பதிவு சான்றிதழ்

25. பதிவு விற்பனை / லீஸ் / வாடகை ஒப்பந்தம்

26. தபால் திணைக்களம் வெளியிட்ட புகைப்பட கொண்ட முகவரி அட்டை

27. ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ் மாநில அரசு வெளியிட்ட புகைப்படம் கொண்டிருக்கும்.

ஆதார் அட்டை பெறுவது எப்படி?

1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும்.

3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும்.

 8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும்.

9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.

11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை.

12. ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.
  
ஆதார் படிவத்தில் அச்சு மற்றும் எழுத்துப் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
பதிவு செய்து கொள்ளும் போதே தவறுகளை நேரில் பார்த்து சரி செய்து கொள்ள வசதி உண்டு. அப்படியும் பிழைகள் நேர்ந்தால்.. 48 மணி நேரத்துக்குள் தேவையான ஆவணங்களை எடுத்து சென்று சரி செய்து கொள்ளலாம். 

ஆதார் கார்ட் விண்ணப்பித்து எத்தனை நாளில் கிடைக்கும்? 
பல சோதனைகளைத் தாண்டி வர வேண்டியிருப்பதால் 60 லிருந்து 90 நாட்கள் ஆகலாம்.
விண்ணப்பம் மறுக்கப்படுமா?
மறுக்கப்படலாம்
1. தவறுகள் நேர்ந்தால்
        2. மேலும் உங்களைப் பற்றின உடற்கூறு ரீதி ஆதாரம் மற்றும்   ஒருவரின் ஆதாரமும் ஒன்று போல் இருந்ததால்.


மேலும் விபரங்களுக்கு http://uidai.gov.in/ என்ற இணைய தள முகவரியை பார்வையிடலாம்.

மேலும் ஆதார் ஹெல்ப் லைன் தொலை பேசி எண்: டோல் ஃப்ரீ எண் : 1800-180-1947
இதுகுறித்துஇ மேலும் விவரங்களை அறிய 044-28582798, 0431-241245, 0452-2526398, 0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்களில் உள்ள விதைகளின் பயன்கள்

பழங்கள் சாப்பிட சிறந்த பொருட்களில் ஒன்றாகும். சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதுடன் , ஒட்டு மொத்தமாக நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பலவி...

Popular Posts