லேபிள்கள்

திங்கள், 1 டிசம்பர், 2014

தெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....

பிளாடிக்கை வீட பன்மடங்கு சுற்று சூழலை கெடுக்கும் தெர்மோக்கோல் !!! ஒரு விழிப்புணர்வு பார்வை...!!!

இன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE-ஐ பற்றி பார்ப்போம்... இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது. 

இதுவும் ஒரு பாலிமர் தான்...பிளாஸ்டிக்-ன் அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..இந்த தெர்மொகோல்-ஐ நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை... PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோல்-ல் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்)மிக அதிகமாக பயன்படுகிறது.
இதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.
முக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..

நமது வீட்டு சாக்கடை,,தெரு சாக்கடை,,பாதாள கழிவுநீர் குழாய் அடைப்பு போன்றவைகளில் இவை அடைத்துக்கொண்டு தரும் துன்பங்கள் கணக்கில் அடங்கா.

மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால்...இவை பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும். பிளாஸ்டிக் போல இதுவும் மக்காத தன்மை உள்ளது.பிளாஸ்டிக்-ஆவது சிலபல நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு .... மக்கும் தன்மையே கிடையாது...
ஒரு நாளைக்கு இவை உற்பத்தி செய்யப்படுபவை பல ஆயிரம் கிலோக்கள்...இவை அனைத்தும் பூமிக்கு கேடு...

வெளி நாடுகளில் இவை அழிக்கபடுவதில்லை...இந்த விஷயத்தில்
அவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால்...இவற்றை சேகரித்து மறு சுழற்சியாக செய்கிறார்கள்...இவற்றை COLLECT செய்யவே தனியாக துறை இருக்கின்றது. முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சி செய்யப்பட்டவையே...

இவற்றை நாம் எப்படி பாதுகாப்பாக அழிக்கலாம்.???

1.முடிந்த அளவுக்கு இவற்றை மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்வோம்.

2.கைவினை பொருட்கள் செய்யதெரிந்தவர்கள்...இவற்றை பயன் படுத்தி பொம்மைகள்,மற்றும் இதர பயன் தரும் பொருட்கள் செய்து பணம் ஈட்டலாம்...

3.பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்...

4.முடிந்தவரை இவற்றை பொது இடங்களில் தூக்கி எரியாமல் வீட்டிலேயே எங்கேயாவது பரண் மேல் போட்டு வைக்கலாம்...(தீ பிடிக்கும் அபாயம் உள்ளது)

5.மறு சுழற்சிக்கு இவற்றை COLLECT பண்ணுமாறு மற்ற தொழில் நிறுவனங்களையோ, அரசாங்கத்துக்கோ கோரிக்கை விடுக்கலாம்.

6.இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

7.இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல் ) கொண்ட வாயுக்கள் 
வெளியேறும்.ஓசோன் படலத்தை வீணாக்கிவிடும். 

8.முக்கியமாக குழந்தைகள் இதை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
பொதுவாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் இந்த தெர்மொகோல் இல்லாத இடமே இல்லை எனலாம். பிளாஸ்டிக் போன்று இதன் அபாயம் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. பிளாடிக் ஆவது அதன் மேல் எந்த எடை பொருட்கள் இருந்தாலும் .   பூமியில் படிந்து மக்க ஆரம்பிக்கும்.  ஆனால் இந்த தெர்மொகோல் 
பூமியில் ஒரு போர்வை போல் படர்ந்து நம் இயற்க்கை அன்னையை அழித்துக்கொண்டிருக்கிறது.  இதை படிக்கும் அன்பர்கள்.சற்றே சிந்தித்து... இவற்றின் தீமைகளை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்...
இயற்கையை காப்போம்...மண் வளம் காப்போம்... 
http://pettagum.blogspot.in/2013/11/blog-post_6219.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உலர் பழங்கள்...!!

உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை , உலர் ஆப்ரிக்காட் , உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்ன...

Popular Posts