லேபிள்கள்

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

ஷாப்பிங் லிஸ்ட் போடுறீங்களா?

ஷாப்பிங் லிஸ்ட் போடுறீங்களா?

வீட்டில் செய்யும் வேலைகளிலேயே மிகவும் போர் அடிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது மளிகைப் பொருட்களுக்கு செய்யும் ஷாப்பிங் தான். இந்த பிரச்சனை அனைத்து மாதமும் தவறாமல் வந்துவிடும். பிரச்சனை என்றதும் பெரிய பிரச்சனை என்று நினைக்க வேண்டாம், அந்த பொருட்கள் வாங்க சென்றால், கையில் இருக்கும் பணம் செல்லும் வழியே தெரியாமல் போய்விடும். ஆனால் சில வீட்டில் இருக்கும் பெண்கள், இந்த மளிகைப் பொருட்களை எளிதில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி அழகாக வாங்கிவிடுவர். இதற்கு காரணம் அவர்கள் போடும் ப்ளான் தான்.
ஏனெனில் அந்த மாதியான ப்ளான் போட்டால், மாத இறுதியில் எந்த ஒரு பணப்பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த ப்ளான் சரியாக இல்லையெனில் ஒரு வேலைக்கு இரண்டு வேலை என்பது போல் ஆகிவிடும். அதாவது ஒரு பொருளை வாங்கி, மற்றொரு முக்கியமான பொருளை வாங்காமல், பின் மறுமுறையும் கடைக்குச் செல்வோம். அவ்வாறு செல்லும் போது, பெண்களின் கை என்ன சும்மாவா இருக்கும். ஒரு பொருளுக்கு இரண்டு பொருளாக வாங்கிவிவோம். பின் பணம் என்ன நீண்ட நாட்களா இருக்கும்.
எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உங்கள் பணத்தை சேகரிக்கலாமே!!!
முன்னரே ப்ளான் போடுதல்
எப்போதும் மளிகைப் பொருட்கள் வாங்க போகும் முதல் நாளே என்ன வாங்க வேண்டும் என்று யோசித்து லிஸ்ட்டை எழுதிக் கொள்ள வேண்டும். இதனால் எந்த ஒரு பொருளையும் மறக்காமல் இருப்பதோடு, நம்மிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறும் வாங்கலாம்.
பட்டியலை தயாரித்தல்
வாங்கும் மளிகைப் பொருட்களின் பட்டியலைப் போடும் போது இரண்டு வகையான பட்டியலை தயாரித்தல் நல்லது. ஏனெனில் முதல் முறை போடும் போது எதையாவது மறந்துவிடும் வாய்ப்பு உள்ளது. மேலும் முதல் பட்டியலில் அனைத்தையும் எழுதிவிட்டு, பின்பு மற்றொன்றில் வேண்டியவற்றை எழுதினால் நமது பட்ஜெட்க்கு ஏற்றவாறு இருக்கும்.
பட்டியல் பேப்பரை கையில் வைத்திருத்தல்
ஷாப்பிங் போகும் போது கையில் அந்த பட்டியலையும் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு பொருளையும் வாங்கியப் பின்பு அதில் ஒரு டிக் மார்க் போட்டுக் கொண்டால், எதை வாங்கினோம், எதை வாங்கவில்லை, சரியாகத் தான் வாங்கினோமா என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
வாழ்க்கைத்துணையுடன் சரியான ஒருங்கிணைப்பு
கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க செல்லும் போது சரியான ஒருங்கிணைப்பு இல்லையெனில் பின்பு ஷாப்பிங் செலவு தான் அதிகரிக்கும். பின் தேவையில்லாத சண்டைகள் வரும். ஆகவே இருவரும் ஒருங்கிணைந்து பட்டியலிட்டு வாங்கினால், பொருட்களும் தவறாமல் இருக்கும், பணமும் மிச்சமாகும்.
குடும்பத்தில் ஆலோசிக்க வேண்டும்
ஷாப்பிங் லிஸ்ட்டை தயாரிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை. அவ்வாறு தயாரிக்கும் போது குடும்பத்தில் உள்ளவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டு, பின்னர் தயாரித்தால், மாதத்தின் இறுதியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.
கிச்சனை பார்த்தல்
எந்த ஒரு மளிகைப் பொருளையும் வாங்கும் முன்பு, கிச்சனுக்கு சென்று பார்த்து, பொருட்கள் ஏற்கனவே இருந்தால், அவற்றை தேவையில்லாமல் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா? மேலும் தேவையில்லாமல் பொருட்களை சேகரித்து வைப்பது வேஸ்ட் தான்.
பட்டியலை வகைப்படுத்தவும்
மாதாமாதம் மளிகைப் பொருட்கள் மட்டும் தேவைப்படுவதில்லை. பால், காய்கறிகள் மற்றும் பல பொருட்கள் வாரம் ஒரு முறை அல்லது தினமும் வாங்க வேண்டியிருக்கும். ஆகவே அவற்றையும் மனதில் வைத்து மளிகைப் பொருட்களின் லிஸ்ட்டை எழுத வேண்டும்.
பட்ஜெட் போடுதல்
அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ப்ளான் போடும் முன், பட்ஜெட்டை பார்க்க வேண்டும். சொல்லப்போனால் பட்ஜெட்டைப் பொறுத்து ப்ளான் போடுவது நல்லது. இதனால் பணத்தை அளவாக செலவழிக்கலாம்.


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts