லேபிள்கள்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

நபிகளின் நல்லுரைகள்

அழிவில்லாத கல்வி

நபிகளின் நல்லுரைகள்

* சன்மார்க்க கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண் மீதும் கட்டாயக் கடமையாகும்.

* மார்க்க கல்வியை கற்றுக் கொள்வதற்காக எவர் ஒரு ஊருக்கு புறப்பட்டு விடுகிறாரோ அவர் அதனைக் கற்று மீண்டும் ஊர் திரும்பும்வரை சன்மார்க்க வழியில் ஈடுபட்டவராகவே கருதப்படுவார்.

* இஸ்லாத்தை உயிர்ப்பிப்பதற்காக ஒருவன் கற்றுக்கொண்டு வரும்
சமயத்தில் மரணித்து விடுவானேயானால் சொர்க்கத்தில் நபிமார்களுடன் இருக்கும் நற்பதவியை கிடைக்கப் பெற்றவனாகிவிடுகிறான்.

* மார்க்கக்கல்வியை தேடிப்புறப்பட்டவர் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார்.

* மனிதன் கல்விக்காக செய்கிற தருமம் அவன் மரணித்த பிறகும் நன்மை பொழியும்.

* கற்றுக்கொடுப்பவரும் கற்றுக் கொள்பவரும் நேர்வழியில் இருக்கின்றனர். இந்த நிலை அற்றவர்களிடம் எந்த நல்வழியுமில்லை.

* அல்லாஹ்வின் சேவைக்கல்லாமல் (உலக வாழ்வின்) நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தை இருப்பிடமாகக் கொள்ளட்டும்.

* எந்த ஒரு அடியானை இறைவன் இழிவுபடுத்த விரும்புகிறானோ அவனை மார்க்க கல்வியை கற்றுக்கொள்வதை விட்டு நீக்கி விடுகிறான்.

* மார்க்க கல்வி நபிமார்களின் உரிமைப் பொருள். செல்வம் பிர்அவ்னின் உரிமைப் பொருள். அதிகமாக வணக்கம் புரிவதைவிட அறிவை அதிகமாக்கிக் கொள்வதே மேலாகும்.

* கல்விக்கு அழிவே இல்லை. அதுபோன்று அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவே இல்லை.

* எனக்குப்பின் மார்க்கக்கல்வி வெகுவிரைவில் அகன்றுவிடும். பின்பு குழப்பங்கள் வெளிப்பட்டுவிடும். அறியாமை மிகைத்துவிடும். அதனால் மக்கள் மத்தியில் கட்டாயக் கடமையான விஷயங்களில் கூட (சண்டை) சச்சரவுகள் உண்டாகிவிடும். அவர்களை சமாதானம் செய்து வைக்கும் அளவுக்கு அறிவுள்ளவர் அப்போது இருக்கமாட்டார்கள்.

* எனது உம்மத்தினரை நாசப்படுத்தும் வஸ்துக்கள் இரண்டு; 1. கல்வி கற்பதை விட்டுவிடுவது 2. பொருள்களை சேர்ப்ப தில் முழு நேரத்தையும் செலவு செய்வது.

* நம்மிடத்தில் ஒரு ஹதீஸை அல்லது ஒரு சட்டத்தைக் கேட்டு அறிந்து கொள்வது ஆயிரம் ரகஅத் நபில் தொழுவதை விட மேலானதாகும். ஏனென்றால் அவர் மார்க்க கல்வி கற்கும் நிலையில் அவருக்கு மரணம் வருமேயானால் (ஷஹீதாக) வீரத்தியாகியாக மரணிக்கிறார்.

* உங்களுக்கு மார்க்க கல்வியை கற்றுக் கொடுத்தவரை கண்ணியப்படுத்துங்கள்.

* அல்லாஹ்வின் சேவைக்கு அல்லாமல் வேறு (உலக வாழ்வின்) நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தையே தன் இருப்பிடமாகக் கொள்வான். 

பிராணிகளிடம் அன்பு செலுத்துங்கள்

விலங்குகளிடத்தில் நபிகள் நாயகம் அதிக அக்கறை கொண்டிருந்தார். அவைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.

ஒரு முறை, நபிகள் நாயகம் ஒரு வழியில் சென்றபோது கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஒட்டகத்தைப் பார்த்துச் சென்றார். மீண்டும் அவ்வழியே வந்தபோது ஒட்டகத்தின் உரிமையாளரை பார்த்து "இந்த ஒட்டகத்திற்கு தீனி போட்டீரா?' என்று கேட்டதற்கு, அவர் "இல்லை' என்றார். ""அறிந்துகொள்ளும். நாளை கியாம நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் இந்த ஒட்டகம் வழக்காடும்,'' என்று எச்சரித்தார். ஆடு, மாடு, மற்றும் கால்நடைகளுக்கு துன்பம் செய்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகிறது. ஈயின் இறக்கைகளில் ஒன்றில் விஷமும் மற்றொன்றில் அவ்விஷத்திற்கு மருந்தும் உள்ளது. ஈ, உங்கள் பானம் உள்ள பாத்திரங்களில் விழும்போது மருந்துள்ள இறக்கையை மேல் துõக்கியும், விஷமுள்ள இறக்கையை (பானத்தில்) முக்கியவாறே விழும். ஆகவே நீங்கள் அவ்விரு இறக்கைகளையும் முக்கிய பின் வெளியே எடுத்து விடுங்கள்,'' என்ற தகவலையும் சொல்லியுள்ளார். அவர் ஆடுகள் பற்றி கூறும்போது, "" செம்மறி ஆடுளை அன்புடன் நடத்துங்கள். அவற்றை பாதுகாத்து வாருங்கள். ஏனென்றால் சொர்க்கத்தில் உள்ள நாலுகால் பிராணிகளில்அவையும் உள்ளன,'' என்றார்.

ஒரு மனிதன் ஒரு குருவியை அடித்தால் கூட, கியாம நாளில் அதைப்பற்றி விசாரணை செய்யப்படுவான். நீங்கள் ஒரு சிறிய சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டுவீர்களானால் அல்லாஹ் உங்கள் மீது அன்பையும் அருளையும் பொழிவார். நீங்கள் சேவல் கூவுவதைக் காதில் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளை வேண்டுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அது (அந்த நேரம்) வானவரைக் கண்டுள்ளது. அதல்லாமல் நீங்கள் கழுதையின் சப்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு கேளுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அது ஷைத்தானைக் கண்டுள்ளது. எவராவது வீட்டில் நாயை வளர்ப்பாராயின், அவருடைய நன்மைகளில் ஒவ்வொரு தினமும் ஒரு கிராத் அளவு நன்மை குறைந்துவிடும். வேட்டைநாய் அல்லது வயல்களை காவல்புரியும் நாய் அல்லது கால்நடைகளை காவல் புரியும் நாய்களுக்கு இது பொருந்தாது.

மார்க்க விதிகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனக்கூறிய நாயகம், ""என்னுடைய உம்மத்தவர்களில் கருத்து வேற்றுமையும் பிரிவினைகளும் விரைவில் ஏற்படும். நல்ல வார்த்தைகளும் கெட்ட பழக்கங்களும் உடைய ஒரு கூட்டத்தினர் குர்ஆன் ஓதுவார்கள். அது அவர்களுடைய தொண்டையைக் கடக்காது. எய்யப்பட்ட பிராணியிலிருந்து வெளியேறும் அம்புபோல் அவர்கள் தங்களுடைய சன்மார்க்கத்திலிருந்து வெளியேறி வருவார்கள்,'' என்கிறார்.



--
*more articles click*
www.sahabudeen.com



கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts