லேபிள்கள்

சனி, 13 அக்டோபர், 2012

சொத்து வாங்கப் போறீங்களா? முதல்ல இதைக் கவனியுங்க..!


மனையோ, அடுக்குமாடிக் குடியிருப்போ, எது வாங்குவதாக இருந்தாலும் அனைத்து ஆவணங்களும் சரியாக, முறையாக இருக்கிறதா என பார்ப்பது மிக முக்கியம். சென்னையின் முன்னணி வழக்கறிஞர் சிவக்குமார் சொத்து வாங்கும்போது பார்க்க வேண்டிய ஆவணங்கள்  பற்றி விளக்குகிறார்.  
மனை - செக் லிஸ்ட்!

மனை வாங்கும்போது முதலில்  இதற்கு பட்டா (சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைக் குறிக்கும் ஆவணம்) இருக்கிறதா என பார்க்க வேண்டும். கூடவே சிட்டா (நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைச் சொல்லும் ஆவணம்), அடங்கல் (நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தில் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைச் சொல்லும் ஆவணம்) போன்றவற்றில் மனையை விற்பவர் குறித்த விவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் குறைந்தது 13 வருடங்களுக்கு வில்லங்கம் பார்க்க வேண்டும். அதில், சொத்து அடமானம் வைக்கப்பட்டிருக்கும் விவரம், இப்போது யார் பெயரில் சொத்து இருக்கிறது என்கிற விவரம் இருக்கும். இதை வைத்து ஒருவர் தப்பான சொத்தை விற்க முயலும்போது நாம் உஷாராக முடியும்.
விளை நிலத்தை மனையாக மாற்றி பல பெயர்களில் லே-அவுட் போட்டிருப்பார்கள். இதுபோன்ற மனைகளை வாங்கும்போது விளைநிலத்தை மனைகளாக மாற்றுவதற்கு அனுமதி வாங்கி இருக்கிறார்களா என்பதைக் கவனிப்பது மிக முக்கியம். குறிப்பாக, லே-அவுட் அப்ரூவல் பெற்ற மனைகளை வாங்குவது நல்லது. குறைந்தபட்சம்
           பஞ்சாயத்து அப்ரூவலாவது இருக்க வேண்டும். அப்போதுதான் நாளைக்கு வீடு கட்ட அனுமதி கிடைக்கும். வங்கிக் கடன் வாங்கி வீடு கட்ட முடியும்.
நத்தம்!
குடியிருப்புப் பகுதிகளை நத்தம் என்று அழைப்பார்கள். இதில் நத்தம், நத்தம் புறம்போக்கு என இரண்டு வகை இருக்கிறது.
புறம்போக்காக இருந்த இடத்தில் குடிசை கட்டியோ அல்லது வீடு கட்டியோ வசித்து வந்தால் அந்த இடத்திற்கு அனுபவ பாத்தியத்தின் அடிப்படையில் நத்தம் பட்டா கொடுப்பார்கள். அதன் ஒரிஜினல் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
 
கூடவே மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது இவை அனைத்தும் அந்த நபரின் பெயரில் இருக்கிறதா என பார்க்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் உங்கள் பெயருக்கு இவற்றை மாற்றுவதில் சிக்கல் ஏற்படும். அந்த பிரச்னையைத் தீர்த்தப் பிறகு சொத்தை வாங்குவதுதான் சரி..! நத்தம் இடத்தில் வீடு கட்டியிருந்தால் கட்டட அனுமதி வாங்கியிருக்கிறார்களா எனவும் கவனிக்க வேண்டும்.
ஃபிளாட் - செக் லிஸ்ட்!
அடுக்குமாடிக் குடியிருப்பு என சொல்லப்படும் ஃபிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
மூலப் பத்திரம் ஒரிஜினல் யார் பெயரில் இருந்தது, அதிலிருந்து யார் பெயருக்கு மாறியது, கட்டடம் யார் கட்டிக் கொடுத்தார், லே-அவுட் மற்றும் பிளான் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்களா என பார்க்க வேண்டும்.
மின் கட்டண இணைப்பு, குடிநீர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறது, கட்டணங்கள் நடப்பு மாதம் வரை கட்டப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
 
ஃபிளாட்டில் யூ.டி.எஸ். என்கிற பிரிக்கப்படாத மனை சரியாக ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அனைத்துத் தளங்களுக்கும் கட்டட அனுமதி பெறப்பட்டி ருக்கிறதா என்று ஆவணங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரிஜினல் சரிபார்த்தல்!
மனை அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அந்த சொத்தை வாங்குவதற்கு முன் அந்த சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களின் ஒரிஜினல் பத்திரங்கள், அதை விற்பவரிடம் இருக்கிறதா என பார்க்க வேண்டும். சிலர் ஒரிஜினல் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி இருப்பார்கள். ஆனால், ஒரிஜினல் பத்திரம் தொலைந்துவிட்டது என கூறுவார்கள். அதனால் ஒரிஜினல் பத்திரத்தைக் கண்ணால் பார்த்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது நல்லது.
பவர் ஆஃப் அட்டர்னி!    
ஒருவர் தனது பெயரில் இருக்கும் சொத்தை விற்பனை செய்ய இன்னொருவருக்கு அதிகாரம் கொடுப்பதுதான் பவர் ஆஃப் அட்டர்னி. பவர் வைத்திருக்கும் நபரிடமிருந்து ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த பவர் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா? பவர் கொடுத்தவர் உயிருடன்தான் இருக்கிறரா? என்பதைக் கவனிக்க வேண்டும்.
சில நேரங்களில் பவர் கொடுத்திருப்பவர் அதை ரத்து செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை மறைத்து நம்மிடம் சொத்தை விற்க முயற்சிப்பார்கள். இந்த மாதிரியான பித்தலாட்டத்தை தவிர்க்க, தற்போது பவர் ரத்தானால் அந்த விவரம் ஒரிஜினல் பவர் பத்திரத்தின் பின்புறத்தில்
  குறிப் பிடப்பட்டிருக்கும். அந்த வகையில் ஒரிஜினல் பவர் பத்திரத்தை வாங்கிப் பார்ப்பது அவசியம்.
மேலும், இப்போதெல்லாம் பவர் ஆஃப் அட்டர்னியில் பிரச்னை வராமல் இருக்க பத்திரப் பதிவுக்கு முன் பவர் கொடுத்தவரை சார் பதிவாளர், நீங்கள் பவர் கொடுத்தது உண்மையா என விசாரிக்கிறார். அந்த வகையில் பவரை நிறைவேற்றும்போது பவர் கொடுத்தவர் உயிருடன் இருப்பது அவசியம்.

கருத்துகள் இல்லை:

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts