லேபிள்கள்

புதன், 13 ஜூன், 2012

சிறுநீரக கல்


உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம்.
* சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.
* சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.
சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.
* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.
* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.
* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.
* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.
* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவது நல்லது.
பல்வேறு காரணங்களினால் சிறுநீரகங்களில் பிரச்னைகள் தோன்றலாம், அது வேலைநிறுத்தம் வரை சென்றுவிடலாம் என்றாலும் முக்கியக் காரணம் உயர்ரத்த அழுத்தமாக இருக்கும்.
மற்றொரு முக்கியக் காரணம் சர்க்கரைநோய்.
கருவில் உண்டான பிரச்னைகளால் சிலருக்குப் பிறவியிலேயே சிறுநீரக நோய்கள் உருவாகிவிடும்.  வேறு சிலருக்கு மரபணுவின் காரணமாக, அதாவது முன்னோர்களின் அருட்கொடையாக சிறுநீரக நோய்கள் தோன்றும். இதை  என்பார்கள். மூன்றாவது வந்து சேர்ந்த சிறுநீரக நோய்கள்’. அதாவது இந்த மூன்றாவது வகையின் கீழ் வருகிற நீண்டகால சிறுநீரக நோய்க்கு  முக்கியக் காரணங்களாகத்தான் அதிக ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அமைகின்றன.
ஏன், எப்படி என்பதைப் பார்ப்போம்.
பொதுவாக ரத்த அழுத்தம் 120/80 என்கிற அளவில் இருந்தால் அதை நார்மல் என்பார்கள். இதில்
  120 என்பது சிஸ்டோலிக் ரத்த அழுத்தம்’. அதாவது இதயம் முழுவதுமாகச் சுருங்கும்போது, உண்டாகும் ரத்த அழுத்தம்.80 என்பது டயஸ்டோலிக் ரத்த அழுத்தம்’. அதாவது இதயம் முழுவதுமாக விரிவடையும்போது, உண்டாகும் ரத்த அழுத்தம்.நம் உணர்வுகளுக்கும், உணவுக்கும் தகுந்தமாதிரி அவ்வப்போது ரத்த அழுத்தம் கொஞ்சம் ஏறலாம். இறங்கலாம். தப்பில்லை. ஆனால் பொதுவாகவே ரத்த அழுத்தம் அதிகமானால் அது கவலைக்குரிய விஷயம்தான்.ரத்த அழுத்தம் அதிகமாவதற்குப் பல காரணங்கள். கொழுப்புச் சக்தி அதிகம் உள்ள உணவு வகைகளைத் தொடர்ந்து உட்கொள்வதால் இப்படி ஆகலாம். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, ரத்தக் குழாயின் உள் பக்கத்தில் படிந்துவிடுகிறது. இதனால் ரத்தக் குழாயின் உள்பக்கம் சிறுத்துவிடுகிறது. பாதை குறுகலாகிவிட்டாலும் அதே அளவு ரத்தம் அங்கு பாய வேண்டுமென்றால், அதிக அழுத்தம் அதற்குத் தேவைப்படும் இல்லையா?உணவில் அதிக உப்பைச் சேர்ப்பதாலும் ரத்த அழுத்தம் அதிகமாகலாம். ரத்தத்தில் உள்ள தண்ணீரை உப்பில் உள்ள சோடியம் இழுத்துக் கொள்கிறது. இதனால் ரத்தத்தின் அளவும், ரத்த அழுத்தத்தின் அளவும் அதிகமாகின்றன.மன  அழுத்தம் காரணமாகவும் ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு உண்டு.
ரத்தக் குழாய்கள் குறுகலாகி விடுவதால், அவற்றில் செல்லும் ரத்த அளவு குறைந்துவிடும். முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண், மூளை போன்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த அளவு குறையும்போது, அந்த உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.கடுமையான உயர் ரத்த அழுத்தம் குறுகிய காலத்திலேயே சிறுநீரகங்களைப் பாதிக்கும். மிதமான உயர் ரத்த அழுத்தம் எந்தவித அறிகுறியும் இன்றி, தொடர்ந்து பல வருடங்களாக சிறுநீரகங்களைப் பாதித்து மோசமான இழப்பினை நாம் உணராமலேயே உண்டாக்கிவிடும். அதனாலேயே உயர் ரத்த அழுத்ததினை ஒரு மௌனமான உயிர்க் கொல்லி  என்கிறார்கள்.
சிறுநீரகங்கள் ரத்த அழுத்தத்தினைச் சீர்செய்யும் ரெனின்  என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன என்று குறிப்பிட்டோம். சிறுநீரகம் பாதிக்கப்படும்போது. இந்த ஹார்மோன் சுரப்பதிலும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு ரத்த அழுத்தம் மேலும் சீரின்றிப் போகலாம். இதனால் சிறுநீரகங்களுக்கு மேலும் பாதிப்பு.எனவே, சிறுநீரகங்களை மனத்தில் கொண்டும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதித்து சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகக்கும். மாரடைப்பு, ரத்த நாளங்கள் வெடித்தல் போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கும். கண்ணில் உள்ள ரத்த நாளங்களைச் சிதைத்து, கண் பார்வை இழப்பும் நேரலாம்.
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை எப்படி அறிவது?
ரத்த, சிறுநீர் சோதனைகள், சிறுநீரகங்கள்
  பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதனைத் தெரிவிக்கும். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கச் சிறுநீரில் புரதம் இருப்பது தான் முக்கியமான அறிகுறி.
ரத்தத்தில் உள்ள கிரியாட்டினைன்  அளவு, சிறுநீரகங்களால் கழிவுப் பொருள்கள் போதுமான அளவு வெளியேற்றப்படுகிறதா என்பதனைக் காட்டும்.
உங்களுக்குக் கால்களில் வீக்கம், காரணம்
  சொல்லமுடியாத சோர்வு, பலவீனம், தினசரி பழக்கப்பட்ட வேலைகளைச் செய்வதில் சிரமம், பசியின்மை, குமட்டல் ஆகியவை தொடர்ந்து இருந்தால், கட்டாயமாக மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இப்போது சிறுநீரக நோய்களின் இன்னொரு காரணமான சர்க்கரை நோயைப் பார்ப்போம்.
விளையாட்டு வீரர்களுக்கு அடிக்கடி பரிந்துரைக்கப்படும் ஓர் உணவுப் பொருள் குளுக்கோஸ். சேர்ந்த உடலுக்கு உடனடியாகச் சக்தி தரும் விஷயம் இது.ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அப்படியே உடலுக்குத் தேவைப்படும் சத்தாக மாறிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் சிலருக்கு இப்படி நடப்பதில்லை. ஏன்?ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை நம் உடலிலுள்ள திசுக்கள் அப்படியே உறிஞ்சி விடுவதில்லை. நம் கணையத்தில் சில திசுக்கள் உள்ளன. ஐலெட்ஸ் ஆஃப் லங்கர்ஹான்ஸ்
  எனப்படும் இந்தத் திசுக்கள். இன்சுலின் என்ற சுரப்பியைச் சுரக்கின்றன. இந்தச் சுரப்பிதான் குளுக்கோஸை, திசுக்கள் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுகிறது.
துரதிர்ஷ்டவசமாகச் சிலருக்கு இன்சுலின், தேவையைவிடக் குறைவாகச் சுரக்கலாம். அப்போது என்ன ஆகும்? ரத்தத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் தங்கிவிடும் ( அவை திசுக்களால் உறிஞ்சிக்கொள்ளும் விதத்தில் இல்லாதவை) அதேசமயம் தேவைக்குக் குறைவான அளவே திசுக்களால் குளுக்கோஸை ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதனால் உடலில்  சோர்வு, களைப்பு.இது ஒரு பக்கமிருக்க, இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் சிறுநீரகங்களுக்கு வேலை அதிகமாகிறது. அதிக அளவ குளுக்கோஸை வடிகட்ட வேண்டியிருக்கிறதே!அளவுக்கு மேல் பாரம் ஏற்றினால், அது மயிலிறகாக இருந்தாலும் வண்டியின் அச்சாணி முறிந்துவிடுமல்லவா? அதுபோல, எல்லை தாண்டி குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து விடுவதால் சிறுநீரகம் பாதிப்படைகிறது.சர்க்கரைநோய் பல வருடங்களுக்குக் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், மற்ற பாகங்களைவிட கண்களும் சிறுநீரகங்களும் அதிகம் பாதிப்படைகின்றன. இதற்குக் காரணம், அவற்றில்தான் நிறைய ரத்தக்குழாய்கள் உள்ளன. தவிர, அவை மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வேறு.
நம் சிறுநீரகங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சக்தி உண்டு. பகலில் அதிகமாக வடிகட்டும் பணியைச் செய்யும் இவை, இரவில் குறைவாகவே இந்த வே¬யைச் செய்கின்றன. இல்லையென்றால் என்னவாகும்? இரவில் பலமுறை நாம் எழுதந்திருக்க வேண்டி வரும். அதனால்தான்
  இயற்கை, சிறுநீரகங்களை இப்படிச் செயல்பட வைத்திருக்கிறது.
ஆனால் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாக ஆக, சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. அதிகப்படியான குளுக்கோஸ் விஷமாக மாறி, அங்கு நெஃப்ரான்களைப் பாதிக்கிறது. இதைத் தொடர்ந்து சிறுநீரகத்தின் வடிகட்டும் பணியிலும் மாறுதல் ஏற்படுகிறது. காலக்கட்டுப்பாட்டோடு இயங்குவதைச் சிறுநீரகம் மாற்றிக்கொள்கிறது. இதனால்தான் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர் இரவில் பலமுறை சிறுநீர் கழிக்கிறார்.சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது என்பதன் மூலம் அறிகுறி சிறுநீரில், மிகவும் சிறிய அளவிலான ஆல்பியுமின் என்ற புரதச்சத்து வெளியேறுவது£ன். இந்தக் கட்டத்திலேயே இதை அறிந்துக்கொண்டு, சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பாதிப்பைச் சரி செய்யமுடியும். இல்லையென்றால் சிறுநீரில் உப்பு அதிகமாகக் கலந்து, நாளடைவில் கைகால் வீக்கம் என்று தொடங்கி சிறுநீரகச் செயலிழப்பில் முடியலாம்.
அடுத்தடுத்து உடனடியாக இவை நேர்ந்துவிடுமா? நல்லவேளையாக இல்லை.புரதச் சத்துக்களை இழக்கத் தொடங்கி சில வருடங்கள் (சுமார் எட்டு வருடங்கள்) தகுந்த சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருக்கவிட்டால், சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்பு மிக அதிகம்.இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனது செயல்திறனை இழக்கும் சிறுநீரகம், நாளடைவில் தனது வடிகட்டும் திறனை மொத்தமாகவே இழந்துவிடலாம். (அப்போது உடலுக்குத் தேவையான, புரதம் உள்ளிட்ட, பல சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடுகிறது. சர்க்கரை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் சேரும் சத்துக்கள், சிறுநீர் வழியாக வெளியேறிவிடுவதால்தான், அவர்கள் மிகவும் இளைத்துவிடுவார்கள்.)சர்க்கரைநோயைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், சிறுநீரகப் பாதிப்புகளையும் கணிசமாகக் குறைக்கலாம். பாதிப்பு நேர்ந்தபின் சிறுநீரகங்களைச் சரிசெய்வது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம்.நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான  முக்கியக் காரணங்கள், சர்க்கரை நோயும் அதிக ரத்த அழுத்தமும் என்பதைப் பார்த்தோம். இதே காரணங்கத்£ன். கண்களின் பாதிப்புக்கும் பார்வை இழப்புக்கும்கூட முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.
எனவே உங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய இரண்டும் இருந்தால், உங்கள் பார்வை மிகுந்த ரிஸ்கில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட இந்த இரண்டு காரணிகளையும்  உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
கிட்னி கல்லின் அற்குறிகளும், தடுப்பு முறைகளும்:
கிட்னி கல்லின்  அறிகுறிகள்:
* சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.
* சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும். நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும்.
* தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம்.
* சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.
சிறுநீரக கல் வராமல் இருக்க தடுப்பு முறைகள்:
* அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது. அதிகமான பருப்பு மற்றும் விதைவகைகள் உட்கொள்வது. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.
* முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல் குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல். குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல். குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.
* நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.
* முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
* பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை. புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.
இந்த உணவு முறைகளை பின்பற்றி வந்தால் கிட்னி கல் வருமுன் காக்கலாம்.
சிறுநீரக கோளாறின் எதிரி மசாலா!
சிறுநீரக செயல் இழப்பு வராமல் தடுக்க அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். வெளியில் சென்றுவிட்டு வரும் போதும், உடற்பயிற்சி முடித்த பின்னரும் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் குடிப்பதை தள்ளிப்போடுவது தவறானது.
*தேவையற்ற தாதுக்களை உடலில் சேர்க்கும் துரித உணவுகளை தவிர்ப்பது மிகவும் அவசியம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தண்ணீர் குடிக்கும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 1 லிட்டருக்கும் குறைவான நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்வது முக்கியம்.
*காய்கறிகளை வேகவைத்து தண்ணீரை வடிகட்டிய பின்னர் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மிகச்சிறிய அளவில் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.உப்பையே மறந்து விட்டாலும் நல்லதுதான்.அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை கிராம் உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். மட்டன், சிக்கன்,  முட்டை போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதில் சேர்க்கப்படும் மசாலா சிறுநீரகப் பழுது உள்ளவர்களுக்கு எதிரி.
*இதே போல் கெமிக்கல் கலந்த பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்த்து விட வேண்டும். பருப்பு வகைகள் குறைவாக சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகம் பழுதடைவதை தள்ளிப் போடலாம். எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம்.
சிறுநீரக நோய்கள் நீங்க சிறுநீரக கற்கள் கரைய
சிறுநீரக கற்கள் கரைய சில எளிய வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளது.
பிரஞ்சு பீன்ஸ் : இதை விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து அதை நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்து விட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்தவும். அதனால் சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும். அது வெளிவரும் நேரம் நல்ல வலி இருக்க வாய்ப்புள்ளது. நீர் அதிகம் குடித்தால் சீக்கிரம் வெளிவந்துவிடும்.
வாழைத்தண்டு சாறு: வாழைத்தண்டு சீறு சிருநீரக கல் வராமல் தடுக்கவும் வந்தால் அது கரைந்து விடவும் மிக நல்லது . எனவே வாழைத்தண்டு சாறு எடுத்த தினமும 3 வேளைகளில் குடித்து வந்தால் சிருநீரக கல் கரைந்துவிடும். வாழைத் தண்டு மட்டுமல்லாது வாழைப்பூவும் சிறுநீருக்கு நல்லது.
வாழைச் சாறு: சரியான முறைப்படி வாழைமரத்தின் கீழ் தோண்டி அதன் வேரை அறுத்து, ஒரு சிறிய பாலித்தின் பை அல்லது சிறிய பிளாஸ்டிக் கண்டைனரில் அந்த வேர்கள் இருக்கும்படி வைத்து கட்டிவிட்டு அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால் வேரின் வழியாக சாறு வடிந்திருப்பதை காணலாம். அதை அப்படியே குடித்துவிட்டால் போதும்.
துளசி: துளசி இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் திருநீரகக்கல் உடையும்
மாதுளை: இந்த பழத்தின் விதையை பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளு (காணம்) சாருடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும்.
அத்திப்பழம்: இதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வறும் வயிற்றில் அருந்தி வரலாம்.
சிறுநீரகக்கல் வராமல் தடுக்க:
நோய் வந்தபின் மருத்துவரை அணுகுவதை விட அது வராமல் தடுப்பதே மிகச்சிறந்தது.
சிறு நீரகக்கல் உருவாவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வழிமுறை நீர் அருந்துதல். தினமும் குறைந்தது 1 லிட்டர் தண்ணீராவது அடிக்கடி குடித்து வந்தால் உடல் கழிவுகள் எளிதாக வெளியேற துணைபுரிவதால் சிறுநீரகத்திற்கு அதிக வேலைப்பளு கொடுக்காமல் அதில் உப்புக்கழிவுகள் கட்டிப்படுவதையும் குறைக்கும்.
அதே போல நீர்த்தன்மை அதிகம் கொண்ட பழங்களான இளநீர், திராட்சை, ஆரஞ்சு, தர்ப்பூசணி அதிகம் உட்கொளளலாம்.
நன்றி: தினகரன்

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts