லேபிள்கள்

திங்கள், 12 அக்டோபர், 2015

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...?

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...?
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 10 அக்டோபர், 2015

காய்கறி வாங்குவது எப்படி?

காய்கறி வாங்குவது எப்படி?

இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 8 அக்டோபர், 2015

‘என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?’

 'என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?'
 என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம்.

'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்' என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை.
நம் உடல் செல்கள் உற்பத்திய£வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' என்றவர் கொலஸ்ட்ரால் கண்டறியும் முறை, தடுக்கும் வழிகளைப் பட்டியலிட்டார்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்
கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.
2. நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்
நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.
3. டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்

இது கெட்ட கொழுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் 'டிரான்ஸ் ஃபேட்' என்று இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.
4. கொலஸ்ட்ராலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்
வயதானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 மி.கி. அளவு கொழுப்பு தேவை. இதய நோயாளிகளுக்கு 200 மி.கி. போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை போன்ற விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களில் இருந்து அதிக அளவில் கொழுப்பு கிடைப்பதால், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.
5. நார்ச் சத்து தினமும் தேவை

உணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச் சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச் சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
6. குறைந்த அளவு அசைவ உணவு
'ரெட் மீட்' எனப்படும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது. முடிந்தவரை இறைச்சி உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் உணவில் முட்டை சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
7. மீன் உணவு
எண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்க உதவும்.
8. முழு தானியங்கள்
தினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது. சிவப்பு அரிசி, முழு தானிய பிரட் மற்றும் ஃபிளாக்சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகமாக இருக்கிறது.
9. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்
உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரண்டு கிலோ எடை குறைத்தாலும்கூட, இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் பேருதவியாக இருக்கும். சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. வாரத்துக்கு அரை கிலோ என்ற அளவில் நிதானமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
10. தொடர் உடற்பயிற்சி
தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.
11. மது மற்றும் சிகரெட் தவிர்த்தல்
அதிக அளவில் சிகரெட் புகைப்பது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதேபோல ஆல்கஹால் அருந்தும்போதும் அதிக அளவில் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
12. மாத்திரை
ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு 'ஸ்டேடின்' என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.
நன்றி:- ரேவதி, பா.பிரவீன் குமார் விகடன்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 6 அக்டோபர், 2015

தயிர் சாதத்தின் அற்புதங்கள்.

தயிர் சாதத்தின் அற்புதங்கள்.

புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதேஉடம்புக்கு ஆகாது!" என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், "இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?" என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்' உணவு என்று சொல்வோம்." இவ்வாறு, ப்ரோபயாடிக் உணவின் மகத்துவத்தை விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் காந்திமதி மற்றும் பவானி. 
ப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன?
"இரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கானிசம்ஸ்) நம் உடலில் உள்ளன. ஒருவகை நுண்ணுயிரியானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம். மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடியது. இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக் என்று சொல்வோம்.
நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.
இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ' மற்றும் 'லாக்டோ' என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.
இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
 தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.
நன்மைகள்
வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.
 உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.
 தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.
 உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.
 கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.
 சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
 கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வீட்டுக்குறிப்புக்கள்!

  • வெண்டைக்காயை நறுக்கி சமைத்தாலும் கூட, சிலது ஒன்றுடன் ஓட்டிக்கொண்டிருக்கும். அவ்வாறான வெண்டைக்காயை உதிரியாக சமைப்பதற்கு, சிறிதளவு தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • குக்கரில் பருப்பை சமைப்பதற்கு முன் அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்தால், சீக்கிரமாக சமைத்துவிடலாம்  
  • பரு‌ப்பை வேக வை‌க்கு‌ம் போது ஒரு கா‌ய்‌ந்த ‌மிளகாயை ‌கி‌ள்‌ளி‌ப்போ‌ட்டா‌ல் ‌சீ‌க்‌கிரமே வெ‌ந்து ‌விடு‌ம்.
  • கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.
  • கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
  • பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.
  • தேங்காய் பர்ஃப்பி செய்கையில் இயற்கை வண்ணம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், கேரட் அல்லது பீட்ரூட் துருவளை சேர்த்துக்கொள்ளலாம்.
  • சிக்கன் செய்வதற்கு முன் சிறிதளவு உப்பை ஃப்ரையிங் பேனில் தூவினால், சிக்கனை வழவழப்பாக கருகாமல் எளிதில் சமைத்து எடுக்கலாம். 
  • சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார்போல் எடுத்துக் கொ‌ள்ளவு‌ம்.
  • கோதுமை மாவை ‌‌பிசையு‌ம் போது வாழை‌ப் பழ‌த்தையு‌ம் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து பிசையலாம்.
  • பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.
  • தேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து இருக்கக் கூடாது. தேய்த்தவுடன் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து விடவும்.
  • சென்னா போன்ற பருப்பு வகைகளை சமைப்பதற்கு முந்தின நாளே ஊற வைக்க மறந்துவிட்டீர்களா கவலை வே‌ண்டா‌ம்.
  • நன்றாக கொதி‌க்க வை‌த்த தண்ணீரில் சமைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்ன‌ர் ஊற வை‌த்தா‌ல் ‌கூட போது‌ம்.
  • இ‌ட்‌லி‌க்கு மா‌வை ‌மி‌க்‌சி‌யி‌ல் அறை‌க்கு‌ம் போது ஊற வை‌த்த அ‌ரி‌சி, உளு‌ந்த‌ம் பரு‌ப்பை ‌சி‌றிது நேர‌ம் கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து‌‌வி‌ட்டு அரை‌த்தா‌ல் மாவு சூடாவது த‌வி‌ர்‌க்க‌ப்‌படு‌ம்.
  • முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு தே‌க்கர‌ண்டி வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.
  • ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும்.
  • முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.
  • மு‌ட்டையை வேக வை‌த்தாலு‌ம் ச‌ரி ஆ‌ம்லே‌ட் போ‌ட்டாலு‌ம் ச‌ரி பய‌ன்படு‌த்துவத‌ற்கு மு‌ன்பு அதனை லேசாக கழு‌வி ‌விடவு‌ம்.
  • பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.
  • பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.
  • பா‌ல் கா‌ய்‌ச்சு‌ம் பா‌த்‌திர‌த்தை இர‌ண்டு நா‌ட்களு‌க்கு ஒரு முறையாவது வெ‌யி‌லி‌ல் காய வை‌க்கவு‌ம்.
  • தினமு‌ம் ஒரே பா‌த்‌திர‌த்‌தி‌ல் பாலை‌க் கா‌ய்‌ச்சாம‌ல் இர‌ண்டு பா‌த்‌திர‌ங்களை மா‌ற்‌றி மா‌ற்‌றி பய‌ன்படு‌த்துவது‌ம் ந‌ல்லது.
  • பாலை‌க் கா‌ய்‌ச்சு‌ம் மு‌ன்பு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி ‌சி‌றிது கொ‌தி‌க்க வை‌த்து, அ‌ந்த ‌நீரை ‌கீழே ஊ‌ற்‌றியது‌ம் பா‌ல் கா‌ய்‌ச்‌சினா‌ல் பா‌ல் கெடுவதை த‌வி‌ர்‌க்கலா‌ம். 
  • பாயச‌ம் செ‌ய்யு‌ம் மு‌ன்பு ஜ‌வ்வ‌ரிசையை ‌சி‌றிது நேர‌ம் த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊற வை‌க்கலா‌ம்.சே‌மியாவை வாண‌லி‌யி‌ல் போ‌ட்டு லேசாக வறு‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • அவ‌ல் பாயாச‌ம் செ‌ய்யு‌ம் போது ஒரு க‌ப் பாலு‌ம், ஒரு க‌ப் தே‌ங்கா‌ய் பாலு‌ம் சே‌ர்‌த்து செ‌ய்தா‌ல் சுவை அருமையாக இரு‌க்கு‌ம்.
  • ஏல‌க்கா‌யி‌ன் மே‌ல் பகு‌திக‌ள் ‌சில குழ‌ந்தைகளு‌க்கு‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். எனவே பாயாச‌த்‌தி‌ல் ஏல‌க்கா‌யி‌ன் ‌விதைகளை ம‌ட்டு‌ம் த‌ட்டி‌ப் போ‌ட்டா‌ல் போது‌ம்
  • அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.
  • அ‌ரி‌சி‌யி‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌க்காம‌ல் இரு‌க்க அ‌ரி‌சி கொ‌ட்டு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌‌‌ல் வே‌ப்‌பிலைகளை‌ப் போ‌ட்டு ‌பி‌ன்ன‌ர் அ‌ரி‌சி கொ‌ட்ட வே‌ண்டு‌ம்.
  • எதையு‌ம் அ‌ப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம்.அ‌வ்வ‌ப்போது சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம். 
  • தோசை மாவுடன் கொஞ்சம் சோள மாவு சேர்த்து தோசை சுட்டால் உடம்பிற்கு நல்லது. சாப்பிடவும் ருசியாக இருக்கும்.
  • தோசை‌க்கு அரை‌க்கு‌ம் அ‌ரி‌சி‌யி‌ல் அ‌ல்லது உளு‌ந்த‌ம் பரு‌ப்‌பி‌ல் ‌சி‌றிது வெ‌ந்தய‌த்தை‌ப் போ‌ட்டு அரை‌த்தா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. தோசை ந‌ன்கு ‌சிவ‌ந்து வரு‌ம்.
  • இட்லி மாவில் உளுந்து மாவு அதிகமாகி போனால் இட்லி சரியாக வராது. அந்த சமயத்தில், ஒரு கைப்பிடி அரிசி மாவை (பவுடர்) இட்லி மாவில் கலந்து சுட்டால், இட்லி பஞ்சு போல் பம்மென்று உப்பிக் கொண்டு வரும்.த‌க்கா‌ளியை ப‌த்‌திரமாக பாதுகா‌க்க ஒரு எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அதனை த‌ண்‌ணீ‌‌ரி‌ல் போ‌ட்டு வை‌த்தா‌ல் போது‌ம். எ‌ளி‌தி‌ல் அழுகாது.
  • தக்காளி காயாக இரு‌ந்தா‌ல் அதனை பச்சையாக உடனே ஃப்ரிஜிற்குள் வைக்கா‌தீ‌ர்க‌ள்.
  • த‌க்கா‌ளி‌யி‌ன் காம்பு பாகம் பாத்திரத்தில் படும்படியாக வைத்து, அது பழுத்த பின்னர் ஃப்ரிஜிற்குள் வைக்கவும்.
  • பூ‌‌ரி ந‌ன்றாக உ‌ப்‌பி வர வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூ‌ரி மா‌வி‌ல் வறு‌த்த ரவையை சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.
  • பூ‌‌ரி செ‌ய்யு‌ம் போது ‌சி‌றிது மைதா மாவு, 1 தே‌க்கர‌ண்டி ரவையை சே‌ர்‌த்து செ‌ய்தா‌ல் பூ‌ரி அ‌திக நேர‌ம் ‌மிருதுவாக இரு‌க்கு‌ம்.
  • பூ‌ரி செ‌ய்யு‌ம் மா‌வி‌ல் ஒரு வாழை‌ப்பழ‌த்தை‌ப் போ‌ட்டு ‌பிசை‌ந்து செ‌ய்தா‌ல் சுவையு‌ம், ‌மிருது‌த்த‌ன்மையு‌ம் கூடு‌ம்.  
  • பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
  • பச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
  • ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம். 
  • குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.
  • குழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.
  • பொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.
  • வெங்காயம் அல்லது அசைவம் சமைத்த பின்னர் நமது கைகள் மற்றும் நறுக்கப் பயன்படுத்திய கத்தியில் அசைவ நா‌ற்ற‌ம் இரு‌க்கு‌ம்.
  • அ‌ந்த அசைவ நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அதாவது எலுமிச்சைப் பழ சாறை ஊற்றி கை ம‌ற்று‌ம் க‌த்‌தியை‌க் கழுவினால் போதும். நா‌ற்ற‌ம் போ‌ய்‌விடு‌ம். 
  • வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
  • டையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
  • தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, முதலில் அதை பிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்த பின்னர் பிரிட்ஜில் வைக்கலாம்.
  • உருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க, அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைக்கவும்.
  • காலை உணவிற்கு பின் நூடுல்ஸ் மீதம் வந்தால், அதனுடன் சில பச்சை காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து ஒரு சாலட் தயாரிக்கலாம்.
  • http://pettagum.blogspot.in/2013/12/blog-post_2932.html


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 2 அக்டோபர், 2015

பேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா?

பேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா?

ஆண்டராய்ட் மொபைலோ.. ஆர்ட்னரி மொபைலோ….! லேப்டாப் கம்ப்யூட்டரோ….டேப்ளட் கம்ப்யூட்டரோ…. அட எதுவா இருந்தாலும் நமக்கு ஒரு பெரிய தலைவலியை கொடுக்கிறது பேட்டரி பிரச்னைதாங்க
அடிக்கடி பேட்டரி லோன்னு (Battery Low) காட்டி, நமக்கு எரிச்சலை ஏற்படுத்தற விஷயம் இதுஎன்னசெய்யலாம்..? வாங்க பார்க்கலாம்..
ஒரு முக்கியமான விஷயத்தை முதல்லேயே சொல்லிடறேன்.. சாதாரணமா நூத்துக்கு 60 பேர் சரியா பேட்டரி சார்ஜரை பிளக் இன் செய்கிற (Battery Charger Plugin) முறையே தெரியறதில்ல
உங்களோட கம்ப்யூட்டரா, ஆண்ட்ராய்ட் போனோ.. டேப்ளட்டோ… (android, computer, tablet, cellphone)அது எந்த ஒரு எலக்ரானிக் சாதனமா இருக்கட்டுமே..எதுவா இருந்தாலும் அதுக்கு சார்ஜ் போடறதுக்கு ஒரு முறை இருக்குங்க..

அதாவது,
சார்ஜ் செய்ற ஒயரில் இருக்கிற முனைகளை அந்தந்த பகுதிகள் சரியா செருகிவிட்டுட்டு அப்புறம்தான் கரண்ட் சுவிட்சே ஆன் (Power Switch) பண்ணனும்நிறைய பேர் இப்படி செய்றதில்லை..
முதல்ல கரண்ட் பாக்ஸ் பிளக்ல வயரை செருகி சுவிட் ஆன் பண்ணிட்டு.. அப்புறமா லேப்டாப்ல செருகுவாங்க
அல்லது சுவிட்போட்டவாக்ல இருக்கிற பிளக்பாய்ண்ட்ல அப்படியே ஒயர் செருகி, லேப்டாப்புக்கு சார்ஜ் பண்ணுவாங்க
இப்படியெல்லாம்செய்யவே கூடாதுங்கஇரண்டு பக்க முனைகளையும் அந்தந்த போர்ட்கள்ல செருகின பிறகுதான்கரண்ட் சுவிட்சை ஆன் பண்ணனும்..அதுதான் சிறந்த முறை
நேரடியா கரண்ட் பாய்ஞ்சுகிட்ட இருக்கிற ஒயரே அப்படியே லேப்டாப், போன்ல செருகினா.. பேட்டரி சீக்கிரமா ரிப்பேர் ஆகிடும்சார்ஜ்ம் நிக்காது

1. நிறைய நேரம் கரண்ட்ல போட்டா நிறைய சார்ஜ் ஏறிடும்னு நாம நம்பறோம்..அதுதாங்க தப்புஅந்த பேட்டரிக்குன்னு ஒரு கெபாசிட்டி இருக்குகுறிப்பிட்ட நேரத்துலகுறிப்பிட்ட அளவுதான் அது சார்ஜ் பண்ணிக்கும்.. அதுக்க மேலயும் நீங்க கரண்ட்ல போட்டு வச்சிருந்தாலும் சார்ஜ் ஆகாவே ஆகாதுங்க
2. இப்படி ரொம்ப நேரம் சார்ஜ் போட்டிருந்தால்அந்த பேட்டரி சூடாகுமே தவிர, அந்த கெபாசிடிக்கு மீறி துளிகூட பேட்டரில கரண்ட் தங்காதுங்கபேட்டரி சூடேறிச்சுன்னா..அப்புறம் சொல்லவே வேண்டாம்.. இது எல்லா எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பொருந்தும்கடைசியில ரிப்பேர்தான் ஆகும்
3. தொடர்ந்து கரண்டு பாய்ந்தால் மட்டுமில்லீங்க.. நீங்க தொடர்ந்து போனை யூஸ் பண்ணிட்டே இருந்தாலும் கூட போன் சூடாகிடும்…. இது உங்களுக்கே தெரியும்ஒரு கேம் விளையாடறீங்கஒரு மணி நேரம்.. ரெண்டு மணி நேரம் கூட ஆகிடும்அப்போ உங்க கையே சுடற அளவுக்கு ஹீட் ஆகியிருக்கும்.. எல்லாமே பேட்டரியிலிருந்து போனுக்கு கரண்ட் சப்ளை ஆகிறதாலயும், மற்ற பகுதில் மின்சாரத்தில இயங்குறதாலயும்  வெளிப்படுற வெப்பம்தான் காரணம்.
4. லேப்டாப் கம்ப்யூட்டர்ல இருக்கிற பேட்டரியும் அப்படிதாங்க…. தொடர்ந்து லேப்டாப் கம்ப்யூட்டரை பயன்படுத்தறதால கம்ப்யூட்டரும் சூடேறும் (Computer heating)…. பேட்டரியும் சூடேறும்கொஞ்சநேரம் லேப்டாப்பை நிறுத்தி வைக்கிறதுதான் சரியான தீர்வு.. சூடேற..சூடேற யூஸ் பண்ணிட்டே இருந்தால் அப்புறம் உங்களுக்குத்தான் நஷ்டம்

WiFi, Bluetooth யூஸ் பண்ணிட்டு, மறக்காம அதை ஆப் பண்ணிடுங்கநம்ம எப்பவுமே புளூடூத் ஓப்பன் பண்ணி பைல் டிரான்ஸ்பர் பண்ணுவோம்.. ஆனால் அதை ஆப் பண்ண மறந்திடுவோம்.. அதுதான் பிரச்னைதொடர்ந்து தேவையில்லா அப்ளிகேஷன்கள் பின்னணியில் இயங்கினால் தேவையில்லாம சிஸ்டம் சூடாகிற வேகம் அதிகமாகும்.. பேட்டரிக்கும் பளு அதிகமாகும்.. அப்புறம் பிரச்னைதான்
ஏதாவது அப்ளிகேஷன் அல்லது சாப்ட்வேர்கள் டவுன்லோட் செய்யும்போது, ஏற்கனவே இருக்கிறத தேவையில்லாத அப்ளிகேஷனை அன்இன்ஸ்டால் செய்வது நல்லது. (Uninstall unwanted application) நிறைய அப்ளிகேஷன்களோட டவுன்லோட் செய்யும்போது டவுன்லோட் வேகம் பாதிக்கும்.. சிஸ்டமும் திணறும்….

தொடர்ந்து ஒரு லேப்டாப்பிலும் கேம்ஸ் (Continuous gaming) விளையாடிட்டே இருந்தாலும், லேப்டாப் சூடாகும்சூடான பேட்டரியும் பாதிக்கும் (Battery Spoil)..
வேறென்ன செய்தால் பேட்டரியோட பேக்கப்பை அதிகநேரம் வச்சிருக்கலாம்?
உங்களோட சிஸ்டத்திலோ அல்லது ஆண்ட்ராய்டிலோ திரையின் வெளிச்சத்தை கரெக்டா வச்சிக்கோங்க..(Correct Screen Lightning) அதிக வெளிச்சமாக இருந்தால், பேட்டரியும் அதிகம் செலவாகும். தேவையான அளவு வச்சிக்கிட்டாலே போதுமேஇதனால கண்ணுக்கும் அதிக பிரச்னை வராது.
லேப்டாப்பை ஆப் பண்ண நினைச்சீங்கன்னா.. Turn Off வசதியை பயன்படுத்துங்கமுறையா இப்படி செய்வதால பேட்டரி வீணாவதை தடுத்து நிறுத்தலாம்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 28 செப்டம்பர், 2015

ஈத்தம்பழமும் நஞ்சுக்கெதிரான மருந்தும். விமரிசிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு-2

ஈத்தம்பழமும் நஞ்சுக்கெதிரான மருந்தும். விமரிசிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு-2


அஜ்வா ஈத்தம் பழங்களைப் பற்றி ஆய்வு செய்த ஒரு யூதர் இதிலுள்ள உண்மைகளையுணர்ந்து இஸ்லாத்தைத் தழுவி இது தொடர்பில் நூலொன்றையும் எழுதியிருக்கிறார். ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள இவ்வாறான செய்திகளை முறையாக ஆராய்ந்தால் பல உண்மைகளை வெளியுலகிற்கு கொண்டுவரலாம் என்பதற்கு இதுவும் சான்றாகும். 'அஜ்வா ஈத்தம் பழத்தில் விஷம் நீக்கும் மருந்திருக்கின்றது' என்பதை மருத்துவ விற்பன்னர்கள் யாராவது சொல்லியிருந்தால் இதை மறுப்பவர்கள் ஏற்றிருப்பார்கள். மருத்துவ உலகு இதை நிரூபிக்கவில்லை என்பதும் இதை இவர்கள் மறுப்பதற்கு வலுவான காரணியாகும். மருத்துவ உலகம் இதனை இதுவரை நிரூபிக்கவில்லை என்பது உண்மையாயினும் மறுக்கவில்லை. நாம் அது பற்றிய தெளிவுடன் இருப்பது இந்த ஹதீஸை திறன்படப்புரிய உதவும் இன்ஷா அல்லாஹ்.
ஈத்தம் பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்கள், நோய் எதிர்ப்புச் சக்திகள் பற்றிய சிறிய அறிமுகமொன்றைப் பார்ப்போம். நஞ்சு நமது உடலில் புகுந்தால் அதை எதிர்க்கும் ஆற்றல் ஈத்தம் பழத்தில் உள்ளதா? என்பதை அறிய இது நமக்கு உதவியாக இருக்கும். நச்சுத் தன்மைமையை எதிர்க்கும் சக்தி பொதுவாக எல்லா வகை ஈத்தம் பழங்களிலும் இருக்கும் போது அஜ்வா வகை ஈத்தம் பழத்தைச் சுட்டிக்காட்டி அதில் நச்சுத் தன்மையை நீக்கும் சக்தியுள்ளது என்று நபியவர்கள் கூறியிருக்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அதில் மற்ற வகை ஈத்தம் பழங்களை விடவும் விஷேடத் தன்மையுள்ளது என்பதை நாம் புரிய வேண்டும்.
5-ஈத்தம் பழமும் அறிவியலும்
மனித உடலுக்குத் தெவையான ஊட்டச் சத்துகளை Macro nutrition, Micro nutrition  என இரு வகையாகப் பிரிப்பார்கள். புரதம், மாப்பொருள், கொழுப்பு என்பன  Macro nutrition என அழைக்கப்படும் பிரதான ஊட்டுச்சத்துக்கள். மனித உடலுக்கு இன்றியமையாதவைகளாகும். நமது உடலுக்கு நாளொன்றுக்குத் தேவையான பிரதான ஊட்டச் சத்துக்களனைத்தும் சிறிதளவு ஈத்தம் பழங்களில் காணப்படுகின்றன. 100 கிராம் ஈத்தம் பழத்தில் 75 கிராம் மாப்பொருளும், 2 கிராம் புரதமும் காணப்படுகின்றன.
ஈத்தம் பழத்தில் Micro nutrition என அழைக்கப்படும் இரண்டாம் தர ஊட்டச்சத்துக்கள் பல:
சோடியம் 2 மில்லி கிராம்,
சீனி 63 கிராம்,
விட்டமின் ஏ10,
விட்டமின் சீ 4 மில்லி கிராம்,
விட்டமின் ஈ 5 மில்லி கிராம்,
விட்டமின் கே 2.7 மைக்ரோ கிராம்,
மைக்ரோ தயமின் 0.052 மில்லி கிராம்,
ரைபோ பிலாவிட் 0.066 மில்லி கிராம்,
நயாஸின் 1.274 மில்லி கிராம்,
விட்டமின் பீ 6 0.165 மில்லி கிராம்,
விட்டமின் பீ 12 0 மைக்ரோ கிராம்,
போலேட் எசிட் 19 மைக்ரோ கிராம்,
கல்சியம் 39 மில்லி கிராம்,
அயன் 1.02 மில்லி கிராம்,
மெக்னீஸியம் 43 மில்லி கிராம்,
பொஸ்பரஸ் 62 மில்லி கிராம்,
பொட்டாஸியம் 656 மில்லி கிராம்,
ஸின்க் 2.29 மில்லி கிராம்,
கொப்பர் 2.206 மில்லி கிராம்,
மென்கனீஸ் 0.262 மில்லி கிராம்,
செலேனியம் 3 மைக்ரோ கிராம்
மற்றும் அனைத்து கொழுப்பு வகைகளும் 100 கிராம் ஈத்தம் பழத்தில் காணப்படுவதாக அறிவியல் ஒத்துக் கொள்கிறது. ஊட்டச்சத்துக்களில் சேராத நார்ச்சத்தும்(Fiber) குறிப்பிடத்தக்களவில் ஈத்தம் பழத்தில் காணப்படுகின்றது. மலச்சிக்கலிலிருந்து நிவாரணமளித்தல், உடலின் கழிவுகளை வெளிப்படுத்தல், உடலுக்கு அழகைக் கொடுத்தல் போன்றவை நார்ப்பொருளாலேயே நமக்குக் கிடைக்கின்றன. சுருங்கச் சொல்வதென்றால் ஒரு மனிதனுக்கு அன்றாடம் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும், பிற சத்துக்களும் சிறியளவு பேரீத்தம் பழங்களில் காணப்படுகின்றன என்று சொல்லலாம்.
6-ஈத்தம் பழமும் நஞ்சுக் கெதிரான சக்தியும்
மேற்கண்ட ஊட்டச் சத்துக்களினூடாக ஈத்தம் பழங்களில் காணப்படும் நஞ்சுக்கெதிராக போராடும் சத்துக்கள் பற்றிப் பார்ப்போமாயின் நச்சுத்தன்மை நீக்கும் திறன் நார்ப்பொருளில் காணப்படுகின்றது எனவே அதிகளவிலான நார்ப்பொருள் ஈத்தம் பழங்களில் காணப்படுகின்றது. அந்த வவகையில் ஈத்தம் பழங்களில் நச்சுத்தன்மையை அழிக்கும் விஷேட சத்துள்ளது என்பது உறுதியாகின்றது. நயாஸின் என்பது நச்சுத்தன்மைக் கெதிரான அதிசிறந்த பொருளாகும். இது ஒருவருக்கு ஒரு நாளைக்கு சில மைக்ரோ மில்லி கிராமளவில் தேவைப்படுகின்றது. இது 1.274 மில்லி கிராம் அளவில் ஈத்தம் பழத்தில் காணப்படுவதாக மேலே பார்த்தோம். இது போலத்தான் விட்டமின் பீ 6 என்பதும் நச்சுத்தன்மைக் கெதிரான அதிசிறந்த விட்டமினாகும். இது 100 கிராம் ஈத்தம் பழத்தில் 0.165 அளவில் காணப்படுகின்றது. எனவே நாம் ஏழு அஜ்வா ஈத்தம் பிங்களைச் சாப்பிட்டால் அதில் காணப்படும் நார்ச்சத்து, நயாஸின், விட்டமின் பீ 6 போன்ற விஷேடச் சத்துக்ளிலிருந்து நச்சுத்தன்மை நீக்கும் சத்து நமக்குக் கிடைக்கின்றது.
இது போலவே 100 கிராம் ஈத்தம் பழத்தில் போலேட் எசிட் 19 மைக்ரோ கிராம் காணப்படுகின்றது. இவ்வாறே 100 கிராம் ஈத்தம் பழத்தில் 3 மைக்ரோ கிராம் செலேனியம் உள்ளது. இதுவும் அதி சிறந்த சத்துக்களில் ஒன்றாகும். எனவே 7 இவ்வகை ஈத்தம் பழங்கள் நாம் சாப்பிடும் போது விஷத்திலிருந்து காக்கும் சக்தி நமது உடலுக்குக் கிடைக்கின்றது என்பதை நபியவர்கள் சொன்ன செய்தியிலிருந்து நாம் அறிய முடிகின்றது. இச்சத்துக்கள் மிக சொற்பளவிலேயே அன்றாடம் நமதுடலுக்கு அவசியப்படுகின்றது. அளவுக்கதிகமான இச்சத்துக்கள் நமதுடலில் காணப்படுமாயின் அது ஆபத்தாகிவிடும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இச்சத்துக்கள் பற்றிய செய்தி நமக்குக் தெரியா விட்டாலும் நாம் நபியவர்களின் ஹதீஸை நம்பவேண்டும் என்னும் போது அறிவியல் பூர்வமாக இவ்வளவு விடயங்கள் நிரூபிக்கப்பட்டிருக்கும் போது இந்த ஹதீஸ் நிதர்சன உண்மைக்கு பொருந்தாது என்று நாம் எவ்வாறு சொல்லாம்! இதற்கேதாயினும் ஆதாரமுண்டா!
7-மீதனோல் ஓர் உதாரணம்
இன்னும் சொல்வதாயின் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரதான மருத்துவ ஆய்வகமொன்றின் அறிக்கையில், மீத்தனோல் என்ற எல்கஹோலால் பாதிப்புற்று இறக்கும் நிலையிலுள்ள ஒருவருக்கு ஈத்தம் பழம் அதி சிறந்தது என்ற பரிந்துரைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.மீத்தனோல் அளவுக்கு அதிகமானால் உயிர்கொல்லும் நஞ்சாகிவிடும். மீதனோல்வகை எல்கஹோல் அருந்தி இறக்கும் நிலையில் உள்ளவருக்கு எதனோல் எனும் சாதாரண வகை எல்கஹோலை அதிகமாகக் கொடுத்து முதல் வகையின் நச்சுத் தன்மையை அகற்றும் முறையை வைத்தியசாலைகளில் சர்வ சாதரணமாகக் காண முடிகிறது. ஆனால் அந்த வழிமுறைக்குப் பகரமாக ஈத்தம் பழம் பரிந்துரைக்கப்படுகிறது என்றால் மருத்துவ உலகம் முழுமையாகவே ஈத்தம் பழம் நஞ்சுக்கொதிரான அருமருந்து என பரிந்துரைக்கம் காலம் வெகுதூரம் இல்லை. இப்படியிருக்க அஜ்வா ஈத்தம் பழம் பற்றிச் சொல்லும் ஹதீஸ் எவ்வகையில் நடைமுறைக்கு மாற்றமானது என்று கூறலாம்.
8-நபியவர்களும் நஞ்சூட்டப்பட்ட உணவும்
ஒரு முறை நபியவர்களுக்கு யூதர்கள் நஞ்சூட்டிய ஆட்டை உணவாகக் கொடுத்தார்கள் அதை சாப்பிட்ட பின்புதான் குறிப்பிட்ட உணவு நஞ்சூட்டப்பட்டது என்பது நபியவர்களுக்குத் தெரியவருகின்றது. பின்னர் நபியவர்கள் யூதர்களிடம் இது பற்றி விசாரித்தார்கள் ஆனால் நபியவர்களுக்கு அந்த நஞ்சு பாதிக்கவில்லை. என்பதை நாம் அறிகிறோம். இந்த செய்தி புஹாரியில் 4428ம் இலக்கத்தில் இடம் பெறுகின்றது. இதை ஒரு முஃஜிஸா என்று கூறமுடியாது. இதை நபியவர்களே பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
صحيح البخاري 4428- قَالَتْ عَائِشَةُرضى الله عنهاكَانَ النَّبِىُّصلى الله عليه وسلميَقُولُ فِى مَرَضِهِ الَّذِى مَاتَ فِيهِ « يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِى أَكَلْتُ بِخَيْبَرَ ، فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِى مِنْ ذَلِكَ السَّمِّ »
நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி 4428
நபியவர்களின் உடலில் விஷம் நீண்ட நாளாய் இருந்திருப்பதையும் ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தால் பாதிக்காமல் இருந்திருப்பதையும், இது முஃஜிஸா அல்ல என்பதையும் இந்த செய்தியிலிருந்து அறியலாம்.
எனவே இந்த ஹதீஸ் நஞ்சை குடித்துப் பரீட்சித்துப் பார்க்கவோ பாம்புகளின் விஷங்களை மனித உடலில் பரீட்சித்துப் பார்த்து அஜ்வாவின் மருத்துவக் குணத்தை நிரூபிக்கச் சொல்லவில்லை. நச்சுத் தன்மை உடலைப் பாதிக்கும் சமயத்தில் அது செயல்படாமல் அதற்கெதிராகப் போராடும் சக்தியை உடலுக்குள் வளர்க்கும் தன்மை அஜ்வா ஈத்தம் பழங்களில் உண்டு என்பதையே இந்த ஹதீஸ் சொல்கிறது என்பதை தொடர்ந்து படித்தவர்கள் தெளிவாகப் புரிந்திருப்பார்கள்.
9-குழந்தையின் முதல் உணவாக அஜ்வா
இது மட்டுமல்லாமல் பல் வேறு சந்தர்ப்பாங்களில் நபியவர்கள் இவ்வகை ஈத்தம் பழங்களை நபித்தோழர்களுக்குப் பரிந்துரைத்திருப்பதையும் காண முடிகின்றது.
உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கின்றது. அக்குழந்தை நபியவர்களிடம் கொண்டுவரப்படுகின்றது. மிருகங்களுக்கு அடையாளமிடும் ஒரு கருவியை வைத்திருந்த நபியவர்கள் அதை வைத்து விட்டு குழந்தையைக் கையிலெடுத்து, அஜ்வா ஈத்தம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி தன் வாயிலிட்டு மென்று அதை அக்குழந்தையின் வாயில் வைத்ததும் குழந்தை அந்த இனிப்பைத் தேடி தன் நாவினால் அலாவுகின்றது. அப்போது நபியவர்கள் 'அன்ஸாரிகள் எவ்வாறு ஈத்தம் பழத்தை விரும்புகிறார்கள் என்பதைப் பாருங்கள்' என்று கூறினார்கள். மதீனாவின் சில பகுதிகளில் காணப்படும் அஜ்வா ஈத்தம் பழங்களில் ஒரு விஷேடத்தன்மை இருப்பதாலேயே நபியவர்கள் இந்தப் பழங்களைப் பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை நாம் விளங்க வேண்டும். (ஸஹீஹ் முஸ்லிம் : 6476)
எனவே இந்த ஹதீஸோடு சம்பந்தப்பட்ட சில முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1- நஞ்சு குடித்தல் என்ற வாசகம் இந்த ஹதீஸில் கூறப்படவில்லை. அத்துடன் ந ஞ்கு குடிப்பதை இஸ்லாம் தடைசெய்துள்ளது. தனது உயிரை மாய்க்கும் வகையில் செய்யும் எல்லா முயற்சியும் தற்கொலையில் அடங்கும்.
2- அது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையோடு தொடர்பானதல்ல. கருஞ்சீரகத்து சில மருத்துவக் குணங்கள் இருப்பதாக வரும் ஹதீஸ்களைப் போன்று, தேன் பற்றி வரும் ஹதீஸ்களைப் போன்று இதுவும் ஒரு மருத்துவம் தொடர்பான ஹதீஸ் ஒன்றே.
3- இது நிதர்சன உள்மைக்கு முரணானதல்ல. அறிவியலுலகு மெல்ல இதை நிரூபித்து வருகின்றது. முழுமையாக மருத்துவ உலகம் இதை இதுவரை நிரூபிக்காதபோதும்; இதை மறுக்கவில்லை.
4-எல்லாவற்றுக்கும் மேலாக நம்பகமான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ள இந்த ஹதீஸை மறுப்பதற்கு எந்த நியாயங்களையும் சொல்ல முடியாது.
10-அஜ்வாவும் சூனியமும்
இந்த ஹதீஸை மறுப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. அதாவது இந்த ஹதீஸில் 'அஜ்வா ஈத்தம் பழங்களைச் சாப்பிட்டால் சூனியமும் பாதிக்காது' என்று தெளிவாக உள்ளது. இதன் மூலம் சூனியம் சாத்தியமென்பது உண்மையாகின்றது. அதாவது சூனியம் எதார்த்தமானது என்பதற்கு ஆதாரமாக வைக்கப்படும் ஹதீஸ்களில் இது மிக முக்கியமானது. எனவே இதை ஏற்றுக் கொண்டால் சூனியத்தையும் ஏற்றுக் கொள்ளவேண்டியேற்படும் என்ற காரணத்தால் மேற்படி குறித்த ஹதீஸை சிலர் மறுப்பது வெளிச்சம். இஸ்லாமிய உலகம் மறுக்காமல் தலைமுறையாக்கம் செய்யப்பட்டு வந்த ஒரு செய்தியை கிறிஸ்துவ உலகின் விமரிசனத்திற்காய் மறுத்துவிட்டு அதற்கு பகுத்தறிவுக்கு ஒத்து வரவில்லையென காரணம் சொல்வது எதிர்கொள்வதில் உள்ள மறைமுகமான தோல்வி நிலையையே காட்டுகிறது. இன்ஷா அல்லாஹ் இஸ்லாத்திற்கு அந்த நிலை ஒரு பொழுதும் ஏற்படாது.
சூனியத்தால் பிறருக்குத் தாக்கங்களை ஏற்படுத்த முடியுமா என்பது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
{وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ} [البقرة: 102]
'அவர்கள் இதன் மூலம் அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒருவருக்கும் தீங்கிழைக்கக் கூடியவர்களாகவில்லை.' (அல் பகரா : 102)
அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பதை இதிலிருந்து மேலோட்டமாகவே விளங்கலாம். இதே வசனத்தில் வரும் அடுத்த பகுதியில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
{وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ} [البقرة: 102] 
'அவர்கள் தங்களுக்கு எவ்விதப் பயனுமளிக்காத, தங்களுக்குத் தீங்கிழைப்பதையே கற்றுக் கொண்டனர்.' (அல் பகரா : 102)
அதாவது சூனியத்தால் அவர்களுக்குத் தீங்குகள் ஏற்படும் என்பதைத் தெளிவாகவே இவ்வசனம் சொல்கின்றது. ஆகவேதான் சூனியத்தால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள அஜ்வா ஈத்தம் பழங்களை சாப்பிடுமாறு நபியவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள் என்று உறுதியாகக் கூறலாம்.
எனவே இந்த ஹதீஸ் எந்தவொரு திருமறை வசனத்துக்கும் முரண்படவில்லை. நிதர்சன உண்மைகளுக்கும் முரண்படவில்லை. அஜ்வா ஈத்தம் பழங்களில் இத்தகைய தன்மைகள் இல்லையென்பதை மருத்துவ ரீதியில் நிரூபிக்கவும் முடியாது. மாறாக அறிவியல் இதை நாளுக்கு நாள் உண்மைப்படுத்திக் கொண்டே வருகின்றது. மீத்தனோலால் பாதிப்புற்று மரணிக்கும் தருவாயிலிருப்பவருக்கு ஈத்தம் பழங்களைக் கொடுத்தால் அவர் ஆரோக்கியம் பெறலாம் என்ற செய்தி இதற்கு வலுவான சான்றாகும்.
11-கருஞ்சீரக ஹதீஸின் நிலையென்ன
இந்த ஹதீஸை நாம் மறுப்போமாயின் இன்னும் பல ஹதீஸ்களையும் நாம் மறுக்கவேண்டிய நிலையேற்படும். இதற்கு உதாரணமாகக் கீழ் வரும் ஹதீஸைக் கூறலாம்.
صحيح البخاري 5688 – أَبُو سَلَمَةَ وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதைiயில் 'மரணத்தைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : பு ஹாரி 5688
ஆரோக்கியமாக இருப்பதற்காக கருஞ்சீரகம் சாப்பிட்டு வந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டு மரணித்து விடுகின்றார். 'மேற்கூறப்பட்ட ஹதீஸினடிப்படையில் பார்த்தால், கருஞ்சீரகம் சாப்பிட்டால் நோயேற்படக் கூடாது. ஆனால் இவருக்கு நோயேற்பட்டிருக்கின்றது எனவே இந்த ஹதீஸ் நிதர்சன உண்மைக்கு முரணானது' என்று சொல்லக் கூடாது. கருஞ்சீரகத்தில் மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றன என்பது உண்மையே. அதற்காகக் கருஞ்சீரகம் சாப்பிட்டால் நோயே ஏற்படாது என்று சொல்ல முடியாது என்பதே இதில் நாம் வரவேண்டிய முடிவாகும். இந்த வகையில் மருந்துகளை நாம் பரீட்சிப்போமென்றால் உலகில் எந்த மருத்துவமும் மிஞ்சாது. இது அறிவுபூர்வமான வாதமல்ல அபூர்வமான வாதம். அல்லாஹ் மார்க்கத்தை தவறான விளக்கங்களிலுருந்து பாதுகாக்கப் போதுமானவன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
http://mujahidsrilanki.com/2012/10/date-and-toxicology/

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படு...

Popular Posts