லேபிள்கள்

சனி, 17 மார்ச், 2018

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முதஷாபிஹாத்


'ஆல்' என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(ர) அவர்களது தந்தையே 'இம்ரான்' என்பவராவார். ஈஸா(ர) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது.
'நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.' (3:33)
இந்த வகையில் இந்த அத்தியாயம் ஆலு இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) அத்தியாயம் என்று அழைக்கப்படுகின்றது. இது 200 வசனங்களைக் கொண்ட நீண்ட அத்தியாயமாகும். அல்குர்ஆனின் மூன்றாவது அத்தியாயமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது.


01. முஹ்கம் முதஷாபிஹாத்:
'அவன் தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் (கருத்துத் தெளிவுள்ள) 'முஹ்கமாத்' வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) 'முதஷாபிஹாத்'களாகும். எவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப் பத்தை நாடியும், இதன் (தவறான) விளக்கத்தைத் தேடியும் அதில் பல கருத்துக்களுக்கு இடம்பாடான வற்றைப் பின்பற்றுகின்றனர். அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட் டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண் டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே' என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.' (3:7)

இந்த வசனத்தில் குர்ஆனில் மிகத் தெளிவான 'முஹ்கமான' வசனங்களும் இருப்ப தாகவும் அவ்வாறே மூடலான, பல அர்த்தங்களுக்கு இடம்பாடான, முடிவு இதுதான் என அறுதியிட்டுக் கூற முடியாத முதஷாபிஹத்தான வசனங்களும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
குர்ஆனின் சில வசனங்களைப் பார்க்கும் போது முழுக்குர்ஆனும் தெளிவானது என்ற அர்த்தம் தொனிப்பது போல் இருக்கும். உதாரணமாக,
'அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும். இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்டு பின்னர் யாவற்றையும் அறிந்த, ஞானமிக்கவனிடமிருந்து அவை விபரிக்கப் பட்டுள்ளன.' 11:1)

மற்றும் சில வசனங்களைப் பார்க்கும் போது முழுக் குர்ஆனும் முதஷாபிஹத்தானது என்ற அர்த்தம் தொனிப்பது போல் தோன்றும். உதாரணமாக,
'அல்லாஹ் மிக அழகான செய்தியை வேதமாக இறக்கி வைத்துள்ளான். அவை ஒன்றையொன்று ஒத்ததாகவும், திரும்பத் திரும்ப ஓதப்படுபவையாகவும் இருக்கின்றன. தமது இரட்சகனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களது தோல்களும், அவர்களது உள்ளங்களும் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பால் மென்மையடை கின்றன. இது அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம் தான் நாடுவோரை அவன் நேர்வழியில் செலுத்துகின்றான். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விடுகின்றானோ அவனை நேர்வழியில் செலுத்துபவர் எவருமிலர்.' (39:23)
ஆல இம்ரானின் ஏழாம் வசனம் முஹ்கமும் உண்டு, முதஷாபிஹாத்தும் உண்டு என்று கூறுகின்றது. இதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற குழப்பம் ஏற்படலாம்.
முதல் வசனத்தில் தெளிவுபடுத்தப்பட்ட வேதம் என்பது வசனங்களின் ஒழுங்கு உறுதித் தன்மை என்ற வகையில் எடுத்துக் கொண்டால் அல்குர்ஆனின்அனைத்து வசனங்களும் முஹ்கமானதுதான். தெளிவானது, உறுதி யானதுதான்.

இரண்டாம் வசனத்தில் 'கிதாபன் முதஷாபிஹா' என்ற வசனம் ஒட்டுமொத்த குர்ஆனின் கருத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒன்றுக் கொன்று முரண்படாமல் ஒன்றை யொன்று ஒத்துச் செல்வதாக இருக்கும். அந்த வகையில் இந்த குர்ஆன் முதஷாபிஹத்தான வேதம் என்று இங்கே கூறப்படுகின்றது.
குர்ஆனில் முஹ்கமான வசனங்களும் உண்டு. முதஷாபிஹத்தான வசனங்களும் உண்டு எனக் கூறும் இந்த வசனத்தைப் பொறுத்தவரையில் குர்ஆனில் மாற்றுக் கருத்துக் கூற முடியாத முஹ்கமான வசனங்களும் உள்ளன. பல கருத்துக்களுக்கு இடம்பாடான முதஷாபிஹத்தான வசனங்களும் உள்ளன. ஒரு வார்த்தை பல அர்த்தங்களைத் தரக்கூடியதாக அமைந்த வசனங்களை இந்த வகையில் சேர்க்கலாம்.
முஹ்கம், முதஷாபிஹாத் என்பனவற்றுக்கிடையில் சில வேறுபாடுகளை இப்படிக் கூறலாம்.
01.
முஹ்கமான ஆயத்துக்களின் முடிவு மிகத் தெளிவாக இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமல் இருக்கும்.

முதஷாபிஹத்தான வசனத்தின் முடிவு மூடலாக இருக்கும். சில அறிஞர்கள் சூறாக்களின் ஆரம்பத்தில் வரும் 'அலிப் லாம் மீம்'… போன்ற துண்டிக்கப்பட்ட எழுத்துக்களை அல்லாஹ் மட்டும் அறிந்த முதஷாபிஹத்தான வசனங்களாகக் குறிப்பிடுவர்.
02.
முஹ்கமான ஆயத்துக்களின் அர்த்தம் வெளிப்படையாக இருக்கும். பாவிக்கப்பட்ட வார்த்தை மூலம் அல்லது தஃவீல்-விளக்கத்தின் மூலம் அதை அறியலாம். ஆனால், முதஷாபிஹத் தான வசனங்களின் முடிவான அர்த்தத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான். உதாரணமாக துண்டிக்கப்பட்ட எழுத்துக்கள், மறுமை நிகழ்வு, தஜ்ஜாலின் வருகை, மறுமையின் அடையாளமான தாப்பதுல் அர்ழ் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

03.
முஹ்கம் என்றால் ஒரு அர்த்தத்தைத்தான் கொடுக்க முடியுமாக இருக்கும். முதஷாபிஹாத் என்றால் பல அர்த்தத்திற்கு இடம்பாடானதாக அமைந்திருக்கும்.

04.
மற்றும் சில அறிஞர்கள் முஹ்கமான ஆயத்துக்கள் தன்னளவில் தெளிவாக இருக்கும். வேறு விளக்கம் அதற்குத் தேவையாக இருக்காது. அல்லாஹ் ஒருவன் என்று கூறுங்கள் என்றால் இதன் பொருளும் முடிவும் தெளிவானது. இதற்கு வேறு விளக்கம் தேவைப்படாது.

முதஷாபிஹத்தான வசனத்தின் விளக்கம் இதுதான் என்று அடித்துக் கூற முடியாது. ஒரு கோணத்தில் பார்த்தால் இப்படியும், மறு கோணத்தில் பார்த்தால் அப்படியும் விளக்கம் கூறக் கூடிய வகையில் அமைந்திருக்கும். ஆனால், அவை வேதத்தின் அடிப்படையாகவும் பின்பற்றத் தக்கதாகவும் இருக்காது!
இவ்வாறு முஹ்கம், முதஷாபிஹாத் என்பவற்றை அறிஞர்கள் பலரும் பலவாறு விளக்கி யுள்ளார்கள். இந்த ஆயத்தில் முஹ்கம்தான் இந்த வேதத்தின் அடிப்படை என்றும் முதஷாபிஹாத் வசனங்களில் வழிகேடர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை செய்யப்படுகின்றது. இந்த எச்சரிக்கை உணர்வும் முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தவையே என்ற ஈமானும் அவசியம் என்று கூறப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 15 மார்ச், 2018

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்றால் என்ன?

02. தஃவீல் என்றால் என்ன?:
இந்த வசனத்தில் தஃவீல் என்ற பதம் இரண்டு விடுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்குர்ஆனின் இந்தப் பதம்; விளக்கம், தப்ஸீர் என்ற அர்த்தத்திலும் 'முடிவு' என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். உதாரணமாக,


'நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் (தீர்வை வேண்டி) திருப்பிவிடுங்கள். இதுவே மிகச் சிறந்ததும் அழகான முடிவுமாகும்.' (4:59)
இங்கே முடிவு என்ற அர்த்தத்தில் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறே விளக்கம் என்ற அர்த்தத்திலும் சில இடங்களில் இப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சூறா யூசுபில் 'தஃவீலுல் அஹாதீஸ்' கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் கலை பற்றி பேசப்படுகின்றது.
இவ்வாறே தப்ஸீர் கலையில் குர்ஆனுக்கு இவர் 'தஃவீல்' பண்ணுகின்றார் என்ற பதம் பயன் படுத்தப்பட்டால் குர்ஆனின் வெளிப்படையான அர்த்தத்திற்கு முரணாக விளக்கம் சொல்கின்றார் என்பது அர்த்தமாகும்.
குர்ஆனுக்கு உரிய முறையில் விளக்கம் சொன்னால் அது அங்கீகரிக்கப்பட்ட தஃவீலாக இருக்கும். உள்ள அர்த்தத்திற்கு முரணான விளக்கத்தைச் சொல்வது பொதுவாக தஃவீல் செய்தல் என்று விமர்சிக்கப் படுவதைக் காணலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 13 மார்ச், 2018

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்டும் அறிவான்


'அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ 'நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே' என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். ' (30:7)
இந்த வசனத்தை மற்றும் சிலர் இப்படி மொழியாக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர, அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே எனக் கூறுவார்கள் என அர்த்தம் செய்துள்ளனர். அறபு இலக்கண விதிகளை வைத்துப் பார்க்கும் போது இரண்டுவிதமாக அர்த்தம் செய்வதற்கும் இடம்பாடு உள்ளது. என்றாலும் இந்த வசனத்தைக் கவனமாக அவதானித்தால் முதல் அர்த்தமே பொருத்தமானது என்பது தெளிவாகும்.
முதல் அர்த்தத்தின் படி முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தையும், முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான். அறிவில் தேர்ந்தவர்கள் இது எங்கள் இரட்சகனிடமிருந்து வந்தது என நாம் ஈமான் கொண்டோம் என்று கூறுவார்கள் என்பது அர்த்தமாகும்.


இரண்டாம் சாராரின் பொருள்படி முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வும் அறிவில் தேர்ந்தவர்களும் அறிவார்கள் என்பது அர்த்தமாகும். 'வர் ராஸிஹூன்' என்பதில் உள்ள 'வா' வை வைத்து இப்படி இரு விதத்தில் அர்த்தம் செய்ய முடிந்தாலும் இரண்டாம் அர்த்தத்தில் பெரியதொரு குழறுபடி ஏற்படுகின்றது.
அல்லாஹ்வையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிட மிருந்து வந்தவை என்றே கூறுவார்கள்.
மேலே உள்ள வசனத்தில் வரும் 'வா' என்கின்ற எழுத்தை வைத்து அல்லாஹ்வும் அறிஞர்களும் விளங்குவார்கள் என அர்த்தம் செய்தால் அதற்குப் பின்னால் வரும் அவர்கள் கூறுவார்கள் என்று இடம் பெறுவதில் உள்ள அவர்கள் யார்? எனக் கேள்வி எழுகின்றது. அல்லாஹ்வும் அறிஞர்களும் கூறுவார்கள் என இந்த அர்த்தப்படி பதில் கூற வேண்டும். அல்லாஹ்வும் அறிஞர்களும் இது எங்கள் இறைவனிடமிருந்து வந்தது. நாம் இதை நம்புகின்றோம் என்று கூறுவதாக அர்த்தம் அனர்த்தப்பட்டுவிடும்.
எனவே, முதஷாபிஹத்தான வசனங்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டும் அறிவான். அறிவுடையோரோ இதன் உண்மையான விளக்கத்தை நாம் அறியாவிட்டாலும் இது எங்கள் இறைவனிட மிருந்து வந்தது. அதை நாம் ஈமான் கொள்கின் றோம் என்று கூறுவர் என்று பொருள் செய்வதே சரியானதும் முறையானதுமாகும்.
இந்தப் பொருளை நியாயப்படுத்து வதற்கான மற்றும் சில காரணங்களையும் மாற்றுக் கருத்துடையோர் முன்வைக்கும் சில வாதங்களுக்கான பதில்களையும் அடுத்த இதழில் நோக்குவோம். இன்ஷா அல்லாஹ்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 11 மார்ச், 2018

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!


குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!'' என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாகப் பேசுகிறார்...

குளிர்சாதனப்பெட்டி... எதற்காக?
``மருந்தையும், சமைக்காத உணவையும் குளிர்படுத்தி பாதுகாத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மின்சாதனமே, இயந்திர தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியக் கண்டுபிடிப்பான குளிர்சாதனப்பெட்டி. உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அவற்றைப் பாதுகாத்து, குறிப்பிட்ட அந்த உணவுக்கு தட்டுப்பாடு வரும் காலத்தில் பயன்படுத்துவது, உணவுகளை உற்பத்தி இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு பாதிப்படையாமல் எடுத்துச் செல்வது, மருந்துகளைப் பாதுகாக்கப் பயன்படுத்துவது, பால், காய்கறி போன்ற சமைக்காத உணவுகளைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது... இதெல்லாம்தான் குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிப்பின் நோக்கங்கள்.

இன்றோ, சமைத்த உணவுகளையும் ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது, பல வகையான உணவுப் பொருட்களையும் வைக்கும்போது சரியாக மூடாமலும், சரிவர பிரித்து வைக்காமலும் ஸ்டோர் செய்வது, போன வாரம் வாங்கிய காளான் முதல், மிகுந்துபோன குழம்பு வரை அடைத்து வைப்பது என... ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி, கண்ணுக்குப் புலப்படாத விஷப்பெட்டியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது!


குளிர்சாதனப்பெட்டி அவசியமா?
குளிர்சாதனப்பெட்டி அவசியம் இல்லை என்பதுதான் உண்மை. நம் முன்னோர் குளிர்சாதனப் பெட்டியை அறியவில்லை; அவர்களின் ஆரோக்கியத்துக்கும் குறைவில்லை. அவர்களிடம் இருந்த சுறுசுறுப்போ, நேரமோ நமக்கில்லை என்பதால், நம் சோம்பேறித்தனத்துக்கு சாமரம் வீசும் ஃப்ரிட்ஜை சார்ந்து வாழப் பழகிவிட்டோம். முழுக்க முழுக்க, மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்காக கண்டிபிடிக்கப்பட்ட இந்த சாதனம், அவர்களின் சீதோஷ்ணம், வேலை, சூழலுக்குப் பொருந்தும். ஆனால், எல்லாவற்றிலும் 'வெஸ்டர்னைஸடு' ஆகும் நமக்கு, ஃப்ரிட்ஜும் விதிவிலக்கல்லாமல் போய்விட்டது. இதனால், அடிக்கடி காய்கறி வாங்க வேண்டிய வேலையும், மூன்றுவேளை சமைக்கும் வேலையும் குறையும் என்பதே பலரின் நினைப்பு. கொஞ்சம் மெனக்கெட்டால், இந்த சார்பை விலக்கலாம். இல்லையென்றால், அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் நம் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் குறைக்கும்.

செய்ய வேண்டிய விஷயங்கள்!
பெரியவர்கள், குழந்தைகள் உள்ள வீடுகளில் வயிற்றுவலி, பேதியில் இருந்து, ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமன் வரை ஃப்ரிட்ஜ் உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல. 'இவ்வளவு பாதிப்புகளா?! ஆனாலும், ஃப்ரிட்ஜ் இல்லாமல் இருக்க முடியாதே?' என்பவர்களுக்கு... 10 கட்டளைகள்... இதோ!
1. 5 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான டெம்பரேச்சரில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளரக்கூடும் என்பதால், -15 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் டெம்பரேச்சரை செட் செய்ய வேண்டியது மிக முக்கியம். முடிந்தவரை 4 டிகிரி செல்சியஸ் அளவில் எப்போதும் வைத்துப் பயன்படுத்துவது நல்லது.
2.
  மின்சாரம் தடைபட்டால் இரண்டு மணி நேரம் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவு கெடாமல் இருக்கும். அதற்குப் பின்னும் மின்சாரம் இல்லையெனில், உடனடியாக ஃப்ரிட்ஜில் உள்ள உணவுகளை வெளியே எடுத்து, சூடுபடுத்தி சாப்பிட்டுவிட வேண்டும். வெயில் காலத்தில், ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் இருந்தாலே, உணவுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்திவிட வேண்டும்.
3. காய்கறி, பழங்கள், கீரைகள், உணவுகள், அசைவ உணவுகள் இப்படி அனைத்தையும் சரிவரப் பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அதாவது, ஃப்ரீஸரில் அசைவ உணவுகள், டிரேயில் பால் பாக்கெட்டுகள், டோர்களில் கூல்டிரிங்ஸ், கீழ் டப்பாவில் காய்கறிகள், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகள், நடுத்தட்டில் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மேல்தட்டில் சமைத்த உணவு... இப்படி ஒவ்வொன்றையும் அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் முறையாக இறுக்கமாகப் பேக் செய்து/ மூடி வைக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டியது மிக முக்கியம்.
செய்யக் கூடாத விஷயங்கள்!
4. என்னதான் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டாலும், உணவில் மாற்றம் நிகழத்தான் செய்யும். உதாரணமாக, பிரெட் உள்ளிட்ட மைதா சார்ந்த பொருட்களில் உருவாகும் பூஞ்சை, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு எந்தப் பொருளையும் ஸ்டோர் செய்ய வேண்டாம்.
5. ஆட்டுக்கறி, கோழிக்கறி, வடித்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும், அது மற்ற உணவுகளுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால் இவற்றை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வதைத் தவிர்க்கவும்.
6. அதிக சூடான உணவுப் பொருட்களை ஒருபோதும் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கக்கூடாது. அது அதிக மின்சாரம் செலவாக வழிவகுப்பதுடன், அந்த வெப்பம் ஃப்ரிட்ஜின் மொத்த டெம்பரேச்சரையும் தொந்தரவு செய்து, உணவுப் பொருட்களை பாதிக்கும்.
7. பொதுவாக, குறைந்த டெம்பரேச்சரில் இருந்து அதிக டெம்பரேச்சருக்கு உள்ளாகும்போது, அந்தப் பொருட்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கும் காய்கறிகள், உணவுகளை அவற்றிலிருக்கும் குளிர் தன்மை குறைந்ததும் சமைத்தோ, சூடுபடுத்தியோ பயன்படுத்தாவிட்டால் ஆபத்து.
8. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது பரிந்துரைக்கத்தக்கதல்ல. காரணம், அதில் நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் உருவாகி பாழாவதோடு, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும். இதில் சிலர் சமைத்து, உள்ளே வைத்து, வெளியே எடுத்து சூடுபடுத்தி, மீண்டும் உள்ளே வைத்து என்று பயன்படுத்தினால் அது உணவாக இருக்காது, விஷமாகிவிடும்.
9. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், நுண்சத்து குறைபாடு உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
10. குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்றாலும், சுவை, விட்டமின் சத்து குறைவதுடன், போனஸாக பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று கிடைக்கும். எனவே, எச்சரிக்கை தேவை!
ஃபிரிட்ஜ்... உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக எடுத்து சாப்பிடத்தானே அன்றி, அழுகும் நிலைக்கு முன்வரை வைத்திருந்து சாப்பிட அல்ல என்பதை நினைவில் கொள்க!''
- விழிப்பு உணர்வும் எச்சரிக்கையும் தந்து நிறைவு செய்தார், பவானி!
 
  சா. வடிவரசு

என்னதான் மாற்று?!
காய்கறிகளை வாரக் கணக்கில் வாங்கி வைக்காமல் அதிகபட்சம் இரண்டு, மூன்று நாட்களுக்கு என வாங்கிப் பயன்படுத்தலாம். தேவைக்கும் அதிகமாகச் சமைத்து, மீகுந்துவிட்டது என ஃப்ரிட்ஜுக்குள் திணிக்காமல் அளவாகச் சமைத்து அன்றன்றே சாப்பிட்டுவிடலாம். சாதம் மிகுந்துவிட்டால், வடகம் போடலாம். மீன், நண்டு போன்ற அசைவ உணவுகள், கடலில் இருந்து பிடிக்கப்பட்டு பல நாட்கள் கழித்தே நம்மை வந்து அடைகின்றன. அவற்றை மேலும் வீட்டில் ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்தால் கிருமித் தொற்று நிச்சயம். அது மற்ற உணவுகளுக்கும் பரவும் ஆபத்தும் உள்ளது.

ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்? 

ஃப்ரிட்ஜ் பராமரிப்பு!
குளிர்சாதனப்பெட்டியை பராமரிக்கும் முறைகளைச் சொல்கிறார், சென்னை, 'ஜே.கே. எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்' உரிமையாளர் ராமகிருஷ்ணன்...
 குளிர்சாதனப்பெட்டியை எப்போதும் காற்றோட்டமான, சூரியஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும்.
 சிலிண்டரில் இருந்து கசியும் வாயு, குளிர்சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறியுடன் சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அடுப்பில் இருந்து ஃப்ரிட்ஜை தூரமாக வைக்கவும்.
 குளிர்சாதனப் பெட்டியிலேயே குறிப்பிட்டிருக்கும் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற கூலிங் அளவைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி திறந்து மூடினால், அதிக மின்சாரம் செலவாகும்.
 ஃப்ரீஸரில் ஐஸ் சேர்ந்துவிட்டால் 'டிஃப்ராஸ்ட்' ஆப்ஷனை பயன்படுத்த வேண்டுமே தவிர, கூர்மையான பொருட்களைக்கொண்டு குத்தி எடுப்பது கூடாது.
 பழைய மாடல் ஃபிரிட்ஜில் பின்புறம் இருக்கும் டிரைனேஜ் வாட்டரை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும்.
 இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உட்புறம் உள்ள கிளாஸ் டோர்களை வெளியே எடுத்துத் துடைக்கவும்.
 வாரத்தில் ஒருநாள் சோப் பவுடர் கலந்த தண்ணீரில் மிருதுவான துணியை நனைத்துப் பிழிந்து உட்புறம், வெளிப்புறம் துடைத்து, நன்றாகக் காயவிட்டுப் பயன்படுத்தலாம். எலுமிச்சைப் பழத்தை கட் செய்து அல்லது கரித்துண்டுகளை இரண்டு மூலைகளில் வைத்தால், துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

குழந்தைகளுக்கு ஆகாது... குளிர்சாதனப் பொருட்கள்!
இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகள் வீட்டில் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் ஆகியிருக்கும் சாக்லேட், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் வகைகளைத்தான் ஆசையாகச் சாப்பிடுகின்றன. இந்தப் பொருட்களில் உள்ள சர்க்கரையின் அளவு, குளிர்படுத்தப்படும்போது இன்னும் அதிகமாகி, குழந்தைக்கு வயிற்றுவலியில் இருந்து ஒபிஸிட்டி வரை பிரச்னைகளைத் தரும். 'ஃப்ரிட்ஜ்ல இருந்து கூல்டிரிங்க்ஸ், சாக்லேட்ஸ் சாப்பிடக் கூடாது' என்று குழந்தைகளை கண்டிப்பது அல்ல தீர்வு. அதை வாங்கி ஸ்டோர் செய்யாமல் இருப்பதே நிரந்தரத் தீர்வு!

மருந்துகள் பத்திரம்!
குளிர்சாதனப்பெட்டியில் மருந்துகளை ஸ்டோர் செய்யும் முறைகளைச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற குழந்தைகள்நல மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ்...
''இன்சுலின் போன்ற கட்டாயம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தே பயன்படுத்த வேண்டிய மருந்துகளுக்கு, ஓர் இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இதன் அருகில் உணவுப் பொருட்கள், பூக்கள் வைப்பது கூடாது. மருந்து இருக்கும் சமயத்தில் அசைவ ஸ்டோரேஜ் கூடாது. மருந்தால் உணவும், உணவால் மருந்தும் பாழாகக்கூடும்.'


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 9 மார்ச், 2018

கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்…!


கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான்.
அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.
குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?


வரவு, செலவை வரையறுப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள் கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது
உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன்
தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்குஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி  வளர்ப்பது எப்படி?
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக்
கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும்.'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?'
என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும். பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய
முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது? பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.
பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.
1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் பங்கு என்ன?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம்
என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.
1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7. முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9. ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.
எதற்கும் யார் பொறுப்பு?
நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே
பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச்சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும்
மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து
கட்டளைகள்
பத்து கட்டளைகள்
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள். வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம்.
வெற்றியை எட்டிப் பிடிப்போம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 7 மார்ச், 2018

குழந்தையுடன் வெளிநாடு போறீங்களா..? - இதையெல்லாம் கவனிங்க...

குட்டிக் குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம் மற்றும் அலுவல் நடைமுறைகள் சார்ந்து கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், சிங்கப்பூரில் வசிக்கும் நம் வாசகி பிருந்தா. பலமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தன் அனுபவத்தில் இருந்து அவர் தரும் குறிப்புகள் இவை...

தட்பவெப்பம்
முதலில் நீங்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தில் படித்துப்பாருங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைக்கு அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், எவையெல்லாம் தேவையில்லை என்பதை கணிக்க முடியும்.

பாஸ்போர்ட்
குழந்தை பிறந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்திருந்தால், ஐந்து வயது பிறப்பதற்கு முன்னர் அதைப் புதுப்பிக்க வேண்டும். விசா அப்ளை செய்யும் முன் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் வெளிநாடு செல்லும் அனைவரின் பாஸ்போர்ட்டையும், அதன் புதுப்பிக்கும் தேதியையும் சரிபார்த்துவிடுவது நல்லது.



விமானப் பயணச்சீட்டு
இரண்டு வயதுக்கு உட் பட்ட குழந்தைகளுக்கு விமானப் பயணச்சீட்டின் விலையில் 10% செலுத்தி னால் போதும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழுக் கட்டணம் செலுத்த வேண்டும். பயணச்சீட்டு பெறும்போது பயணக் காப்பீடு (இன்ஷூரன்ஸ்) எடுத்துக்கொள்வது நல்லது. டிக்கெட் புக்கிங் கின் போது குழந்தையைப் படுக்கவைக்கும் வசதி கொண்ட இருக்கையாகப் பார்த்து புக் செய்யவும். பொதுவாக ஒரு விமானத்தில் இதுபோன்ற இருக்கைகள் 2 அல்லது 3 மட்டுமே இருக்கும் என்பதால், முந்துபவர் களுக்கே முன்னுரிமை.

உணவில் கவனம்
குழந்தை வழக்கமாகச் சாப்பிடும் உணவு சென்றிருக்கும் நாட்டில் கிடைக்காத சூழலில், பிஸ்கட், பிரெட் என வயிற்றுக்குத் தொல்லை தராத உணவுகளாகக் கொடுங்கள்.

உடைகள்
குழந்தைக்கான ஷூ, சாக்ஸ், நீச்சல் உடைகள், ஸ்விம்மிங் டயப்பர், சோப்பு, ஷாம்பு, குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போது ஜெர்கின், ஓவர்கோட் என்று தேவைப்படும் அனைத் தையும் எடுத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கான ஆடைகள் பளிச் நிறத்தில் இருந்தால், கூட்டத்தில் உங்கள் குழந்தையை அடையாளம் காண வசதியாக இருக்கும். கனமான ஆடை களைத் தவிர்க்கவும்.

மருத்துவ ஆவணங்கள்
குழந்தை பிறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மருத்துவரின் அனுமதிச் சீட்டோடு விமானத் தில் பயணிக்கலாம். சில நாடு களில் இது செல்லாது. பிறந்து 3 மாதங்கள் பூர்த்தியான குழந்தை மட்டுமே விமானப் பயணத்துக்கு அனுமதிக்கப்படும். எந்த நாட்டுக்குச் செல்கிறீர்களோ, அந்நாட்டில் போடப்படுகிற தடுப்பூசியை உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து, 5 வாரங்களுக்கு முன்பே உங்களுக்கும் குழந்தைக்கும் போட்டுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், நீங்கள் சென்று இறங்கியதும் மருத்துவப் பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்களைத் தனிமைப்படுத்தி கேள்விக்கு உட்படுத்தலாம். தடுப்பூசி போட்டதற்கான நகல் நிச்சயமாக உங்களிடம் இருக்க வேண்டும். குழந்தையின் மருத்துவ ரெக்கார்டுகள், தடுப்பூசி அட்டை, உங்கள் குழந்தை மருத்துவர் குழந்தைக்குத் தேவைப்படக்கூடிய மருந்துகளைப் பரிந்துரைத்து எழுதித் தந்த ப்ரிஸ்கிரிப்ஷன் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

தின்பண்டங்கள்
பல அறைகளைக் கொண்ட தோள்பையில், டயப்பர், வெட் டிஷ்யூ பேப்பர், குழந்தைக்குப் பிடித்த பொம்மை, சின்ன போர்வை, குடை, பால் பவுடர், பால் பாட்டில், தண்ணீர், பிஸ்கட் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ளவும். சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வாழைப்பழம், பிஸ்கட், ஆப்பிள், உலர்ந்த பழங்கள் என்று குழந்தையின் பசியை சமாளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளவும்.

தங்கும் விடுதிகள்
நீங்கள் சுற்றிப் பார்க்கும் இடத்துக்கும் தங்கியிருக் கும் விடுதிக்கும் அதிக தூரம் வேண்டாம். குழந்தை அழுது கொண்டே இருந்தால் விடுதிக்குத் திரும்ப அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத அளவுக்கு அதைத் தேர்ந் தெடுங்கள். விடுதி அதிக தூரத்தில் இருந்தால் அதுவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அசதியைத் தரும்.

கைடு புத்தகம் கட்டாயம்
சுற்றுலா செல்லும் பட்சத்தில், ஓய்வில்லாமல் பல இடங்களையும் சுற்றிப்பார்க்கிற ஆர் வத்தில் குழந்தைகளை சோர்வாக்கிவிடாமல், அவர்களுக்கு சௌகரிய மான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்கு முன் அந்நாட்டின் கைடு புத்தகம், மேப், இன்ஃபர்மேஷன் சென்டர் பற்றிய விவரம் போன்ற வற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

விமானத்தில் உதவி
விமானத்தில் குழந்தைக்கு வெந்நீர் தருவது, அழும் குழந்தையை தோளில் கிடத்தி நடந்துகொண்டே தட்டிக்கொடுக்க அனுமதிப்பது, வாந்தி எடுத்தால் சுத்தம் செய் வது என்று தேவைப்படும் அடிப்படை உதவிகள் கிடைக்கும். எனவே, கவலை வேண்டாம். எந்த விமானத்தில் பயணிக்கிறீர்களோ அந்த விமானத்தின் சேவை கையேட்டை ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவுறப் படித்து விடுவது நல்லது. பயணச் செலவினங்களை ஓரளவுக்கு கணித்து, அதற்கேற்ப செல்ல விருக்கும் நாட்டுப் பணத்தை மாற்றி வைத்துக்கொள்வதும் சிறப்பு.

முதல் உதவிப்பெட்டி
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் காய்ச்சல், ஜலதோஷம், சைனஸ் பிரச்னைகளுக்கான மருந்துகள் அடங்கிய முதல் உதவிப் பெட்டி, கையோடு இருக்கட்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 5 மார்ச், 2018

கசக்கும் கணக்கு... கற்கண்டாய் இனிக்க..!


குழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்டால், நிறைய குழந்தைகள் 'மேத்ஸ்' என்பார்கள். ஆனால், கணிதம் இல்லாத துறை என்று இன்றைய தேதியில் எதுவும் இல்லை. மேலும், போட்டித் தேர்வுகள், ஆப்டிட்யூட் டெஸ்ட் என்று எதிர்காலத்தை எதிர்கொள்ள, கணிதம் மிகவும் முக்கியம். அப்படியிருக்க, பள்ளிப் பருவத்தில் கசக்கும் கணக்கை உங்கள் குழந்தைகளுக்கு இனிக்கவைக்க, பெற்றோர்களுக்கு சில சூத்திரங்கள் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் தேவிப்பிரியா.

''சூழ்நிலைதான் பல குழந்தைகளுக்கு கணக்கு என்றால் வெறுப்பு ஏற்படக் காரணம். மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், 'மேத்ஸ்ல மார்க் எடுத்தாதான் அறிவாளி' என்றும், 'கணக்கு வரலைன்னா மக்கு' என்றும் பள்ளியில் ஆசிரியர் தொடங்கி வீட்டில் பெற்றோர்வரை சொல்வதுதான், குழந்தைகளுக்கு கணக்கு என்றால் பயமும் வெறுப்பும் ஏற்பட முதல் காரணம். முதலில் அதைத் தவிர்த்து, கணிதத்தின் மீது படர்ந்திருக்கும் அதிமேதாவித்தனத்தை அகற்றி, 'கணக்கு ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. மற்ற பாடங்களைப்போலதான்' என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
  



கணக்கை மதிப்பெண் பாடமாக குழந்தைகளுக்கு அறிவுறுத்தி, பயமுறுத்தாமல், அதை வாழ்க் கைப் பாடமாக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போதும், புரியவைக்கும்போதும் அதன் மீதான மிரட்சி விலகி, ஆர்வம் ஏற்படும். அதற்கு...

தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களில் பெரும்பாலான குழந்தைகளுக்கு இயல்பாகவே ஆர்வம் இருக்கும். அதில் வரும் கதைகளும் இதற்குக் காரணம். எனவே, பாடப்புத்தகத்தில் இருக்கும் கணக்குகளை குழந்தைகளுக்கு கதைகளாகச் சொல்லித் தீர்க்கச் சொல்லுங்கள். 10+10 என்ன என்பதை, 'உங்கிட்ட 10 சாக்பீஸ், எங்கிட்ட 10 சாக்பீஸ்... மொத்தம் எத்தனை?' என்று கேட்கலாம். அதேபோல, பாடப்புத்தகங்கள் தவிர்த்தும் நீங்களாக அவர்களுக்கு சின்னச் சின்ன கணக்குகள் தரலாம்.

தினசரி வாழ்க்கையில் கணக்கு எங்கெல் லாம் பயன்படுகிறது என்பதை, அவற்றைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலேயே அவர்களுக்குப் பொறுமையுடன் எடுத்துச் சொல்லுங்கள். 'பாலுக்கு எத்தனை டீஸ்பூன் சர்க்கரை போட்டிருக்கேன்?', 'நம்ம வீட்டுல இருக்கிற கதவெல்லாம் என்ன வடிவத்துல இருக்கு?', 'இந்த சுவர் கடிகாரம் வட்ட வடிவமா, கூம்பு வடிவமா?', 'உங்க ஸ்கூலுக்கும் நம்ம வீட்டுக்கும் உள்ள தூரத்தை மீட்டர்னு சொல்வோமா, லிட்டர்னு சொல்வோமா?' என்பது போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம்... அவர்களுக்கு வகுப்பில் நடத்தப்படும் பாடம் தொடர்பான கணித அம்சங்களை, வீட்டிலும் உரையாடல்கள் வழியாக அறிவுறுத்திக்கொண்டே இருங்கள்.
மைண்ட் மேப்பிங், பொருட்கள் மூலமாக கணக்கு செய்யவைப்பது என அவர்களின் கற்பனைக்கு வாய்ப்பளியுங்கள்.

ஒரு விஷயத்தை கேட்பதைவிட, பார்க்கும்போது எளிதாகப் புரியும் (விஷுவல் லேர்னிங்). உதாரணமாக, லிட்டர், கிலோகிராம் போன்ற அளவீடுகளைப் புரியவைக்க, பால் வாங்கும்போது, மார்க்கெட் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். மளிகைக்கடைக்கு அழைத்துச் சென்று, வாங்கும் பொருட்களுக்கு பணம் கொடுப்பதை கவனிக்கவைத்து... கூட்டல், கழித்தல் கணக்குகளைப் புரியவைக்கலாம்.

வடிவங்கள், அளவீடுகள், கூட்டல், பெருக்கல், கழித்தல் என ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து, 'இது சரியா, அது சரியா?' என்று சுவாரஸ்யமான விவாதங்களாக அதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். இதனால் வகுப்பில் ஆசிரியரின் கேள்விக்குப் பதில் அளிக்கும் தன்னம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கும்.

கணித ஃபார்முலாக்களை பாடல்களாகக் கற்றுக்கொடுங்கள்.

வீடியோ கேம்ஸ், கணினி பயன்பாடு பழக்கமுள்ள குழந்தைகளுக்கு, ஆன்லைன் மேத்ஸ் கேம்ஸ் அறிமுகப்படுத்தலாம். இதில் 'டைமிங்' முக்கியம் என்பதால், விரல்களில் கணக்கு செய்யும் குழந்தைகள் விரைவாக மனக்கணக்குக்கு மாறிவிடுவார்கள்.

மூளைக்கு வேலை தரக்கூடிய சுடோக்கு, மேத்ஸ் ட்ரிக்ஸ் போன்ற கணித விளையாட்டுகள் அவர்களுக்கு பயத்தை போக்கும்.

மொத்தத்தில், குதூகலமாகக் கணக்குபோடக் கற்றுத் தந்தால் உங்கள் பிள்ளையும் குட்டி ராமானுஜம்தான்!''


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 3 மார்ச், 2018

Android போனின் Pattern, Password, Pin ஆகியவற்றை மறந்து விட்டீர்களா?



ஆன்ட்ராய்ட் போனில் பேட்டர்ன், பாஸ்வேர்ட், பின் ஆகியவற்றை மறந்துவிட்டீர்களா? அதனால் உங்களது போன் லாக் ஆகிவிட்டதா? Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச்சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள். பணம் வீணாகும். இதற்கு என்ன செய்யலாம்?
உங்கள் pattern, password, pin-ஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன.
முதலில் ஆன்ட்ராய்ட் போனை எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்.
Google Account
Wipe data (format,factory reset)

இதைச் செய்வதற்கு internet connection தேவை என்று நினைக்கின்றனர். ஆனால் தேவை இல்லை.



உங்கள் pattern,password,pin-ஐ மூன்று முறை தவறாக போடுங்கள்

கீழே "Forgot Pattern?" என்று வரும். அதை Select செய்யவும்.
பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து Sign in செய்யவும்.

இப்போது உங்கள் புது pattern,password,pinSet செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் !!

இரண்டாம் வழிமுறை:
உங்கள் போனை switch off செய்யுங்கள்
Off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள்
(இது எல்லா போன்களில் வேலை செய்யாது,Googleலில் "how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்)
Recovery modeல் touch screen வேலை செய்யாது.
Volume Button Move செய்வதற்கு
Home button அல்லது power button select செய்வதற்கு
Recovery modeல் "wipe data" optionselect செய்யுங்கள்,பின் yes select செய்யுங்கள்.
இப்போது "reboot system now" optionselect செய்யுங்கள்.
அவ்வளவுதான். முடிந்தது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 1 மார்ச், 2018

பானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்!

பானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்!

மனிதன் உயிர்வாழ மிக மிக அத்தியா வசியமானது... நீர். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து மட்டுமின்றி... ஆற்றல், வளர்சிதை மாற்றம், சரும ஆரோக்கியம் என்று அதன் பணிகளும், பலன்களும் ஏராளம். அப்படிப்பட்ட குடிநீரை, சேமித்து வைக்கும் பாத்திரங்களை பொறுத்து என்னென்ன நன்மை - தீமைகள் என்று விரிவாக சொல்கிறார் கடலூரைச் சேர்ந்த இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி...

கேன் வாட்டர் நல்லதா..?
முன்பெல்லாம் ஆறு, குளம், ஏரி, கிணறு போன்றவற்றின் மூலம் குடிநீர் கிடைக்கப் பெற்றோம். ஆனால், இன்று சுற்றுச்சூழல் மாசு, நிலத்தடி நீர் குறைவு, விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றால் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்துவிட்ட 'சுத்திகரிக்கப்பட்ட' கேன் தண்ணீரையே அருந்திவருகிறோம். தண்ணீரில் உள்ள தாதுக்களை எல்லாம் பிரித்தெடுத்து வெளியேற்றிவிட்டு, பூச்சிக்கொல்லி மருந்து கள் சேர்க்கப்பட்ட, பல இடங்களில் முறையான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படாத அந்த கேன் தண்ணீர், நலம் தருவதைவிட நலக்குறைவே தருகிறது என்பதுதான் உண்மை. கூடுமானவரை கேன் தண்ணீரை தவிர்க்கவும். இல்லையென்றால் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்து பருகவும்.

மண்பானை மகிமை!


ஆழ்துளை மோட்டார் மூலம் பெறப்படும் நிலத்தடி நீர், ஊற்றுநீர் வகையில் அடங் கும். அதை மண்பானையில் சேமித்துவைக்கும்போது, சில மணி நேரங்களில் அந்நீரில் உள்ள அழுக்கு களை மண்பானை உறிஞ்சிக் கொண்டு, மண்ணுக்குரிய சக்தியால் அதைச் சுத்திகரிப்பு செய்கிறது. அத்து டன் பிராண சக்தியும் கிடைக்கிறது. மேலும், மண்பானை நீரில் வெட்டிவேர், துளசி, எலுமிச்சை, புதினா போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கலந்துவைத்து குடிக்கும் போது உடலுக்கு நன்மைகள் பல கிடைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கப் பெறலாம்.

சித்தர்கள் அருந்திய செம்புக்குட நீர்!
சித்தர்கள், செம்பு (தாமிரம்) குடங்களில்தான் தண்ணீரைச் சேமித்து அருந்தினார்கள். செம்புப் பாத்திரத்தில் 24 மணி நேரம் தண்ணீரைச் சேமித்து வைத் திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று ஆய்வு நிறுவனம் ஒன்று தனது ஆராய்ச்சியின் முடிவில் அறிவித்துள்ளது. கோயில்களில் இன்றும் செம்புப் பாத்திரங்களில் தீர்த்த நீர் தர இதுவே காரணம்.

நம் முன்னோர்கள் காலத்தில் வீட்டுக்கு வீடு செம்புக் குடங் களில்தான் தண்ணீர் சேமித்துவைக்கப்பட்டது. காலப்போக்கில் அது வழக்கம் இழந்து, இப்போது எந்த வீட்டிலும் செம்புக்குடம் இல்லை. குடமாக இல்லை என்றாலும், மண்பானை தண்ணீருக்குள் உள்ளங்கை அளவில் ஒரு செம்புத்தகட்டை போட்டுவைத்தால், அது அந்த நீரை சுத்திகரிப்பதில் பங்களிக்கும். அது மினரல் வாட்டரைவிட நல்ல தரத்தில் இருக்கும்.

சமநிலைக்கு உதவும் தாமிரம்!
தாமிரப் பானையில் தண்ணீர் குடிப்பது, ஆயுர்வேதத்தின் அடிப்படை என்பது குறிப்பிடத்தக்கது. உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றைச் சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவும் என்கிறது ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல்.

மொத்தத்தில், நீரை மண்பானை அல்லது செம்புப் பாத்திரத்தில் சேமித்து அருந்துவது, இயற்கையான சுத்திகரிப்பு முறையில் ஆரோக்கியம் தரவல்லது!

அலுமினியப் பாத்திரம்... ஆபத்து!
இன்று அலுமினியப் பாத்திரங்கள் சமையல் தொடங்கி தண்ணீர் சேமிப்புவரை பயன்படுகிறது. அதில் உள்ள அயனிகள் அல்லது மின்துகள்கள், மூளைக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக அலுமினியப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டுவரும்போது, நாளடைவில் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அலுமினியம் சிறுநீரகங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியது.

ஃப்ரிட்ஜ் வாட்டர்... அவஸ்தை தரும்!
குளிர்சாதனப்பெட்டியில் தண்ணீரைக் குளிர்வித்து அருந்துவது பலரின் வழக்கம். இது ஜலதோஷம், மூக்கடைப்பு என்பதில் தொடங்கி செரிமானத்தை தாமதப்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதுவரை பல பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

டிவி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இன்று எவ்வளவு தான் ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் , பலரின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது என்னவோ தொலைக்காட்சிகள் தான். அப்படி நாம் வாங்க...

Popular Posts