லேபிள்கள்

வியாழன், 13 நவம்பர், 2025

தெரிந்து கொள்வோம்

கல் உப்புக்கும், தூள் உப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன? தூள் உப்பை எப்படி உற்பத்தி செய்கின்றனர்?

கல் உப்பு மற்றும் தூள் உப்புக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் அவற்றின் சுவை, அமைப்பு மற்றும் தயாரிப்பு முறை ஆகியவற்றில் உள்ளன.

கல் உப்பு கடல் நீரை ஆவியாக்குவதன் மூலமோ அல்லது உப்பு நீர் ஏரிகளிலிருந்து வரும் நீரை ஆவியாக்குவதன் மூலமோ உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர் ஆதாரத்தை பொறுத்து, இது சில சுவடு தாதுக்கள் மற்றும் மினரல்களை விட்டுச் செல்கிறது. தாதுக்கள் கல் உப்புக்கு சுவையையும், வண்ணத்தையும் சேர்க்கின்றன. இது பலவிதமான கரடுமுரடான அளவிலும் வருகிறது.

தாதுக்களை அகற்ற தூள் உப்பு பதப்படுத்தப்படுகிறது மற்றும் பொதுவாக கட்டியாக சேர்வதை தடுக்க ஏதாவது ஒரு ரசாயனம் சேர்க்கப்படுகின்றது. பெரும்பாலான தூள் உப்புகளில் அயோடின் (ஐழனiநெ) சேர்க்கப்படுகின்றது.

கல் உப்பு மற்றும் தூள் உப்பு ஆகியவை ஒரே அடிப்படை ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன.

கல் உப்பு மற்றும் தூள் உப்புகள் அதன் எடைக்கு ஏற்றவாறு சோடியத்தை (ளுழனரைஅ) கொண்டுள்ளது.

ரசாயனம் சேர்க்கப்படாத காரணத்தால் கல் உப்பு பெரும்பாலும் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது. நீங்கள் எந்த வகை உப்பை உபயோகித்தாலும் மிதமான முறையில் உபயோகியுங்கள். ஒரு நாளைக்கு சோடியத்தை 2,300 மில்லி கிராமிற்கும் குறைவாக உபயோகியுங்கள்.

கண்ணாடிக் கதவில் துப்பாக்கியால் சுட்டால் துளை உண்டாவதும், கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன்?

இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் ஓரளவு விசை இயக்க ஆற்றல் (மiநெவiஉ நநெசபல) உள்ளது. இந்த துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறு மைல் வேகத்தில் செல்வதால், அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு வேகத்தில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும்.

அவ்வாறு பாய்ந்து செல்லும் குண்டு கண்ணாடி கதவால் தடுக்கப்படும்போது, அதன் சிறு அளவு உந்தம் கண்ணாடிக்கு மாற்றப்பெறுவது உண்மையே... அதே நேரத்தில் துப்பாக்கிக்குண்டு சுழன்ற வண்ணம் வேகமாக செல்வதால் கண்ணாடி கதவில் துளையை உருவாக்கி அதன் வழியே வெளியேறி விடுகிறது.

மாறாக கதவை நோக்கி வீசியெறியப்பட்ட கல் குறைந்த வேகத்தில் செல்கிறது. அது கண்ணாடி பலகையை தொடும்போது அதன் முழு உந்தமும் கண்ணாடிக்கு மாற்றப்பெறுகிறது. இவ்வாறு கல்லில் பொதிந்திருந்த முழு ஆற்றலும் கண்ணாடிக்கு மாற்றம் பெறுவதோடு கண்ணாடி மூலக்கூறுகள் வலிமை குன்றி பிணைக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலும் பரவுகிறது. இதன் விளைவாக கல்லெறிபட்ட கண்ணாடி கதவுப்பகுதிகள் உடைந்து சிதறுகின்றன.



--

கருத்துகள் இல்லை:

தெரிந்து கொள்வோம்

கல் உப்புக்கும் , தூள் உப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன ? தூள் உப்பை எப்படி உற்பத்தி செய்கின்றனர் ? கல் உப்பு மற்றும் தூள் உப்புக்கு ...

Popular Posts