ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள், பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன், தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் காலை உணவின் போது பழங்களை எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுக்க புத்துணர்வுடன் இருக்கலாம் . பழங்களை இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை . எல்லா நேரத்திலும் சாப்பிடலாம் . அதே நேரத்தில் எந்த பழத்தை எப்போது சாப்பிட்டால் சரியாக இருக்கும் என்ற புரிதல் வேண்டும் .
காலையில் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதும் மிகவும் நல்லது . இப்படி செய்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் . உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும் . அது கொழுப்பைக் கரைக்க உதவும் .
வெறும் வயிற்றில் தர்பூசணி , பப்பாளி , கொய்யா , மாம்பழம் , மாதுளை , வாழை ஆகியவற்றைச் சாப்பிடலாம் .
காலையில் உணவுடன் , பப்பாளி , அன்னாசி , கிவி , செர்ரி , ஸ்டிராபெர்ரி , ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடலாம் . காலையில் இந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் . இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும் .
ஆப்பிள் சாப்பிட்டு வருவது தொப்பையைக் கரைக்க உதவும் . வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் மேம்படும் .
சில ஆய்வாளர்கள் மதிய நேரத்தில் பழங்கள் சாப்பிடுவது சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர் . இந்த நேரத்தில் வேலை செய்து உடல் கலைத்துப் போயிருக்கும் , உடலுக்கு அதிக அளவில் கலோரி ( சர்க்கரை ) தேவைப்படும் . இந்த நேரத்தில் கலோரி அதிகமாக உள்ள மாம்பழம் , வாழை போன்ற பழங்களை சாப்பிடலாம் .
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதிக ஆற்றல் தேவை . எனவே அவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு ஆப்பிள் , ஆரஞ்சு , வாழைப் பழத்தைச் சாப்பிடலாம் .
இரவு பழங்களை மட்டும் சாப்பிட்டு தூங்கச் செல்வது உடலுக்கு மிகவும் நல்லது . முடியாதவர்கள் சிறிது டிஃபன் சாப்பிட்டுவிட்டு , பழங்களை எடுத்துக்கொள்ளலாம் . இரவு உணவு எடுத்துக்கொள்வதால் செரிமான பிரச்னை ஏற்படுகிறது என்று கவலை உள்ளவர்கள் பழங்களை சாப்பிடலாம் . தூங்கச் செல்வதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே பழங்களை சாப்பிட்டு முடித்துவிட வேண்டும் . பழங்கள் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடும் . எனவே சில மணி நேரத்துக்கு முன்னதாகவே பழங்களை சாப்பிட்டு முடித்திருந்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும் . இரவில் பப்பாளி , அவகேடோ , கிவி , வாழை போன்ற பழங்களை சாப்பிடலாம் .
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக