லேபிள்கள்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

வெறும்வயிற்றில் தண்ணீர் குடிப்பதால்இத்தனை பயன்களா...?

 

தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும். மேலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்  விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் இதனால் உடலானது  சோர்வாகாமல் அதிக புத்துணர்ச்சியுடன் இருக்கும்

நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர்  குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி  குறையும். மேலும் அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், தேவையற்ற  கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்

உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய்களை எதிர்த்து போராட உதவும். எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது.

தினமும் தண்ணீரைக் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. ஏனெனில் குடலானது சுத்தமாக இல்லாவிட்டால் வயிற்று  உபாதைகளை ஏற்படுத்தும் மேலும் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது தனது அழகை இழந்து விடும். தண்ணீரை குடித்து வந்தால் குடலியக்கமானது சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/so-many-benefits-of-drinking-water-on-an-empty-stomach-121020100018_1.html


--

கருத்துகள் இல்லை:

சமையலறைக் குறிப்புகள்.

சர்க்கரை டப்பாவில் எறும்பு மொய்க்காமல் இருக்க நமது சமையலறையில் ' சர்க்கரை ' முக்க...

Popular Posts