லேபிள்கள்

சனி, 3 ஏப்ரல், 2021

தாமத திருமணம், தரமற்றஉணவே கருத்தடைக்கு முக்கிய காரணம்!

ஒரு 20, 25 வருஷத்துக்கு முன்னாடி குழந்தை ஆபரேஷனில் பிறந்ததுன்னு சொன்னா, எல்லோரும் அதிர்ச்சி ஆவாங்க...! 'ஏன் ஆபரேஷன்.. பொண்ணு சரியா சாப்பிடலையா... வீக்கா இருந்துச்சா..?' இப்படி பல விஷயங்கள் பேசப்படும். இப்போ சுகப்பிரசவம்னு சொன்னாதான் ஆச்சரியமா பார்க்கிறாங்க... ஆபரேஷன் சகஜமாயிருச்சு. அதை விட ஒரு அதிர்ச்சி தரும் விஷயம் என்னான்னா மணமான பெண்களுக்கு ஏற்படும் கருத்தடை. சமீபகாலமாக நாம் அதிகம் கேட்கும் வார்த்தையாக கருத்தடை மாறி விட்டது. ஏன் இப்படி? காரைக்குடி மகளிர் சிறப்பு மற்றும் செயற்கை கருத்தரிப்பு டாக்டர் கவிதா ரமேசை சந்தித்தோம்.
அவர் தந்த விளக்கங்கள் இதோ...!சொந்தத்தில் திருமணமா...
கருவுறும் பெண்களில் 20 சதவீத பேருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. குழந்தை நன்றாக வளர குறைபாடு இல்லாத கர்ப்பப்பை அவசியம். கருச்சிதைவு ஏற்பட தாய் அல்லது குழந்தை காரணமாக இருக்கலாம். குழந்தை தொடர்பான காரணங்களை ஆராய்ந்ததில் 90 சதவீதத்துக்கு மேல் குழந்தையின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களால் நிகழ்கிறது. தைராய்டு, சர்க்கரை நோய், அதிக வயது, சினைப்பை நீர்கட்டி, ஆன்ட்டி பாஸ்போலிப்பிட் ஆன்டிபாடி சின்ட்ரோம், உருவ மாறுபாடான கர்ப்பப்பை, பருமனாக இருத்தல், சொந்தத்தில் திருமணம் செய்வதால் ஏற்படும் மரபணு பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது.
தள்ளிப்போடாதீங்க...பொதுவாக இன்றைய கால பெண்கள் தங்கள், படிப்பு மற்றும் வேலை காரணங்களால், தாமதமாக செய்கின்றனர், சிலர் குழந்தை பிறப்பை தள்ளி வைக்கின்றனர். இதனாலும் கருச்சிதைவு ஏற்படுகிறது. உணவு பழக்க வழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிகப்படியாக கொழுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடும்போது கருமுட்டை நீர் கட்டிகள் பிரச்னை ஏற்பட்டு கருச்சிதைவு அதிகமாக ஏற்படுகிறது.சர்க்கரை நோயாளியா...?தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் முறையாக பெண்கள் மருத்துவ சிறப்பு நிபுணரை சந்தித்து சரியான காரணத்தை கண்டுபிடித்து அதற்கேற்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கருவுற்ற பின் முறையாக சத்துள்ள பொருட்களை சாப்பிட வேண்டும். அதிக அலைச்சல் இல்லாமல் முதல் மூன்று மாதம் நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். தவிர தைராய்டு, சர்க்கரை நோய் உள்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளவர்கள் அதற்கேற்ற தீர்வுகளை ஆரம்பம் முதலே மேற்கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பை பலவீனமாக உள்ளவர்கள் கர்ப்பப்பை வாயில் தையல் போடும் முறையை மேற்கொள்ளலாம். 2 முறை குளிங்க...30 வயதுக்கு மேல் செய்யும் திருமணங்களால் குழந்தை பேறு தள்ளி போகலாம், அதேபோல் 35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும்போது பேறு குறைபாடுகளுடன் கூடிய குழந்தை பிறக்க சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. கணவர், மனைவி இரண்டு பேரும் வேலைக்கு செல்பவர்கள் குழந்தை பேற்றை தள்ளி போட மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, கருத்தடை(அபார்ஷன்) செய்து கொள்வது குழந்தை பேறு தள்ளி போக அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் வேலைக்கு போகும் கருவுற்ற பெண்கள் சிறுநீர் தொற்று வராமல் தவிர்க்க சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும். தைராய்டு பிரச்சனை வராமல் இருக்க அயோடின் கலந்த உப்பு சாப்பிட வேண்டும். வெயில் காலங்களில் உடல் சூட்டை குறைக்க இரண்டு முறை குளிக்க வேண்டும். உணவு பழக்க வழக்கமும் கருச்சிதைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
கருச்சிதைவை தவிர்க்க...
* தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்
* இரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
* எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்
* செயற்கை குளிர்பானங்கள், துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* முதல் மூன்று மாதங்களுக்கு தொலைதூர பயணங்களை தவிர்க்க வேண்டும்
* டூவீலர்களில் செல்லக்கூடாது.
* அதிக பாரம் தூக்கக்கூடாது.
* மலச்சிக்கலை தவிர்க்க கீரை போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை(பெயின் கில்லர்) எடுக்க கூடாது.
* வளர் இளம் பெண்கள் உணவில் 3ல் 2 பங்கு கார்போ ஹைட்ரேட், ஒரு பங்கு புரதம் அவசியம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது எலும்பு வளர்ச்சிக்கும், சுக பிரசவத்துக்கும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts