லேபிள்கள்

செவ்வாய், 13 அக்டோபர், 2020

குடிகார கணவரை திருத்துவது எப்படி?

மனிதனை மிருகமாக்கும் குடி கலாச்சாரத்தை ஒழிப்பதில் ஒவ்வொருவரும் முடிந்த அளவு அதன் தீமைகளை எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த முயல வெண்டும்.
[ இளைஞர்களைக் குடிகாரர்களாக்குவதில் சினிமா முக்கிய முக்கிய பங்கு வகிக்கிறது.   கதாநாயகனோ கதாநாயகியோ குடிக்கும் காட்சி இல்லாத படங்களே இல்லை. ஒருகாலத்தில் வில்லனை மோசமானவனாக சித்தரிப்பதற்கு அவனை குடிகாரனாக காண்பிக்கும் வழக்கம் எல்லா சினிமாவிலும் இருந்தது.
ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது.   கதாநாயகனோடு கதாநாயகியும்கூட குடியில் மிதப்பவர்களாக காட்டப்படுவது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.  அதாவது ஒருகாலத்தில் மோசமானவர்களை சித்தரிக்க காண்பிக்கப்பட்ட குடிகார கேரக்டர்களாக இன்றைய கதாநாயகனை காண்பிப்பதன்மூலம் குடிப்பது தவறல்ல என்பது போன்ற தவறான எண்ணத்தை இளைஞர்களுடைய உள்ளத்தில் பதிய வைக்கப்படுகிறது.


அதுவுமின்றி   குடிப்பது நாகரிகம் என்பது போன்ற மோசமான தோற்றமும் சினிமா மூலமே வைர்ஸ் கிருமியாக பரவி இளைஞர்களையும் இன்னும் சொல்லப்போனால் இளைஞிகளையும் கூட குட்டிச்சுவராக்கிக்கொண்டு வருகிறது.]
ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.
சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.
இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.
அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் - கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட்பு வைத்திருப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.
உங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் மனுஷன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா, படுக்கையிலிருந்து விலகியிருங்கள். மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி பெற்றால் எப்பேர்ட்ட குடிகாரரும் திருந்தி விடுவதை காண முடிகிறது.
சிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சா போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள். இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.
உலகில் மதுவால் அழிந்துள்ள மனிதர்கள்- குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக் கூடாது.
உடல் ரீதியாக மனரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கக் கூடிய மற்றொருத் தீய பழக்கம் குடிப்பழக்கம்.
சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன. நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த மதுவினால் கீழ்த்தன்மைக்கு உள்ளானவர்களே. யுத்தம் பஞ்சம் கொள்ளைநோய் ஆகிய இம்மூன்றும் கொண்டுவந்த அழிவை விட மதுபானம் அதிகக்கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுவார்கள்.
உடலினுள்ளே தப்பித் தவறி ஊடுருவும் நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது. மதுவை தொடர்ந்தும், அதிகமாகவும் அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமிற்கு அதிகமாக ஆண்கள் குடிக்கும் போதும், பெண்கள் இருபது கிராமிற்கு அதிகமாகக் குடிக்கும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும் என்பதையெல்லாம் உங்கள் கணவருக்கு எடுத்துச்சொல்லுங்கள்.
இளைஞர்களைக் குடிகாரர்களாக்குவதில் சினிமா முக்கிய காரணமாக அமைகிறது. கதாநாயகனோ கதாநாயகியோ குடிக்கும் காட்சி இல்லாத படங்களே இல்லை.
ஒருகாலத்தில் வில்லனை மோசமானவனாக சித்தரிப்பதற்கு அவனை குடிகாரனாக காண்பிக்கும் வழக்கம் எல்லா சினிமாவிலும் இருந்தது. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது. கதாநாயகனோடு கதாநாயகியும்கூட குடியில் மிதப்பவர்களாக காட்டப்படுவது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதாவது அதாவது மோசமானவர்களை சித்தரிக்க காண்பிக்கப்பட்ட குடிகார கேரக்டர்களாக காண்பிப்பதன்மூலம் கதாநாயகனும் மோசமானவனே என்று சொல்ல வருகின்றார்களோ என்னவோ!
அதுவுமின்றி குடிப்பது நாகரிகம் என்பது போன்ற மோசமான தோற்றமும் சினிமா மூலமே வைர்ஸ் கிருமியாக பரவி இளைஞர்களையும் இன்னும் சொல்லப்போனால் இளைஞிகளையும் கூட குட்டிச்சுவராக்கிக்கொண்டு வருகிறது. சென்ஸார்போர்டில் இருப்பவர்களுக்கு சமூக அக்கரை துளியும் இல்லை என்பதையும் காரணமாகக்கூறலாம்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதிலும் போதைக்கு அடிமையாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதற்கு காரணம் திருமணம், பிறந்தநாள், விழா, பண்டிகை கொண்டாட்டம் என்று பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்துவது ஒரு ஃபேஷனாக மாறி இருப்பதுதான்.
மனிதனை மிருகமாக்கும் இந்த குடி கலாச்சாரத்தை ஒழிப்பதில் ஒவ்வொருவரும் முடிந்த அளவு அதன் தீமைகளை எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த முயல வெண்டும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts