லேபிள்கள்

வியாழன், 21 நவம்பர், 2019

இரவு நேரங்களில் உண்ண வேண்டியவை உண்ண கூடாதவை !!

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், குறைவான அளவில், எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதனால் நன்கு தூக்கம் வரும். தினமும் இரவில் எந்தெந்த உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றைத் தவிர்க்க வேண்டும், எந்தெந்த உணவுகளைக் குறைவாகச் சாப்பிடவேண்டும்? தெரிந்துகொள்வோமா..?
இட்லி, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற, எளிதில் செரிமானமாகக்கூடிய இரவு உணவு. குறிப்பாக, இரவுநேரப் பேருந்து, ரயில் பயணங்களின்போது வயிற்றில் மந்தத்தன்மையை ஏற்படுத்தாது.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் கோதுமை ரவை உப்புமா, சப்பாத்தி, கோதுமைக்கஞ்சி உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிடலாம். கொழுப்பை உண்டாக்கும் வெற்று கலோரிகள் இல்லாதவை. கோதுமை உணவுகளை 7.30 மணிக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது.
பருப்பு வகைகள் அதிகப் புரதம் மற்றும் நார்ச்சத்து உடைய உணவுகள் இவை. பருப்பு, கொண்டைக்கடலை சேர்த்த உணவுகளை எண்ணெய் அதிகம் சேர்க்காத சப்பாத்தியோடு சேர்த்துச் சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்; செரிமானம் எளிதாகும்; மலச்சிக்கல் நீங்கும்.
ராகி தோசை, கம்பு, அடை, கம்மஞ்சோறு, கேழ்வரகுக் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் கெட்ட கொலஸ்ட்ரால், கொழுப்பு இல்லை.
கொழுப்பு அதிகம் இல்லாத பசும்பால் அருந்தலாம். உடலுக்கு கால்சியம் சத்து கிடைக்கும். அதிகக் கொழுப்பு நிறைந்த எருமைப்பாலைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்கும். உணவு சாப்பிட்ட உடனே பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். சாப்பிட்டு ஒரு மணி நேர இடைவெளிக்குப் பின்னர், வாழைப்பழம் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இரவு உணவாக, அளவோடு ஃபுரூட்சாலட் சாப்பிடலாம்.
தேனை, பாலில் கலந்து குடிக்கலாம். இது நன்கு தூக்கம் வர உதவும்.
சாப்பிட கூடாதவை :
சிக்கன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் அதிகப் புரதம் உள்ளது. எனவே, செரிமானமாக பல மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளும். இரவு உணவில் இவற்றை சேர்த்துக்கொள்ளக் கூடாது.
இரவில் கீரை சாப்பிடக் கூடாது. இதில் அதிக தாது உப்புகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கீரையை இரவு உணவில் அசைவத்தோடு சேர்த்து சாப்பிடக் கூடாது.

நெய், வெண்ணை, சீஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிகக் காரம் கொண்ட மசாலா உணவுகளைச் சாப்பிடக் கூடாது. இவற்றை செரிமானம் செய்ய, இரைப்பை அமிலம் அதிகமாகச் சுரக்கும். இதனால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.
பீட்சா, பர்கர், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
பரோட்டா, பட்டர் நான் உள்ளிட்ட மைதாவில் செய்யப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இவை செரிமானமாகத் தாமதமாகும்.
சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாமல், அனைவருமே இரவில் முடிந்தவரை அதிக அளவில் அரிசி சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட தொகுப்பில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள்
கோதுமை – Wheat
புரதம் – Protein
கம்பு – Millets
அமிலம் – Acid

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts