லேபிள்கள்

சனி, 3 நவம்பர், 2018

தூக்கத்தின் அவசியத்தை தெரிந்துகொள்ளுங்கள்!


நன்றிதிரு அலிமாலிக் பீர் முகம்மது. அவர் மக்கள் நலன் கருதி பகிர்ந்துகொண்ட "தூக்கம் தொலைத்த இரவுகள்" என்னும் பதிவில் சில அத்தியாவசிய மாற்றங்களுடன் இங்கு பகிர்ந்துள்ளேன்.
நாம் தூங்கும்போதுதான் நமது உடலின் தினசரி பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அத்தகைய தூக்கம் தரமானதாக அமயாதபோதுதான் நம் உடலில் கழிவுகள் தேங்கி உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கத்தின் தரமும் அவசியம். பெரும்பாலான மக்கள் இதை உணராமல் இருக்கிறார்கள்.
கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது? என உங்களுக்கு நினைவிருக்கிறதா?
கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?
8:00 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30 க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால், 9 மணிக்குள் உறங்கிப்போவோம்.
அது ஒரு காலம்.
9 மணித் தூக்கம் என்பது, 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது. அதிகாலை 3 மணி, 4 மணி வரைகூட விழித்திருக்கிறார்கள்.
இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது, என்பது எல்லாம் தனி.
எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுதான், இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் உடல் உபாதைகள். இரவுத் தூக்கம் தள்ளிப்போவதற்கும், உடலில் ஏற்படும் தொந்தரவுகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப்போகிறது? நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை?
இதற்கு `நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள்தான் காரணம்' என நினைக்கிறோம். இது முழு உண்மை அல்ல. உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடத்திலும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன. இரவுச் சந்தையில்தான் இப்போது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு `கோடி'கள் புரள்கின்றன. இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை. டிஜிட்டல் பொருட்களை நாம் சரியாக அணுகத் தெரியாமல் தடுமாறுவதையே வியாபாரம் ஆக்கிவருகிறார்கள்.

எளிமையான வாழ்க்கையை வாழாததால் தான் நாம் இத்தகைய இன்னல்களை சந்திக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..
அதிகரித்துவரும் `காஸ்ட் ஆஃப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளைச் சமாளிக்க, நமக்குப் பிடிக்காத வேலைகளையும் செய்கிறோம். அதுவும் தொழிலாளர் சட்டத்தை மதித்து 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது 10 மணி நேரம் உழைக்க வேண்டும். அதில் டார்கெட்டை எட்டிப்பிடிக்க வேண்டும். மனஉளைச்சல் தரும் இந்த வேலையைச் செய்து விட்டு, வெளியே வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டும். சோர்வுடன் வீட்டுக்கு வந்து விழுந்ததுமே டி.வி-யை ஆன் செய்து விடுகிறார்கள். அந்த மாய உலகத்தில் விரியும் வண்ண வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர்.
இளம்வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட்போனில்: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என மூழ்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சமூக வலைதளங்கள் எனும் உலகத்துக்குச் சென்றுவிட்டால் அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகிவிடுகிறார்கள். முன்பு எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து பேசிவிட்டே உறங்கச் செல்வார்கள். வீட்டுத் திண்ணை வாட்ஸ்அப் ஆனது. வாட்ஸ்அப் உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர்களுடன்கூட, வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளங்களின் வழியே தொடர்புகொள்பவர்களும் இருக்கிறார்கள். தினமும் நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு `குட்மார்னிங்' சொல்லி விட்டுத்தான் படுக்கைக்குச் செல்கிறார்கள். இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து, `ஃபேஸ்புக்கில் போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ்?
வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா?' என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை `Compulsive Behaviour கம்பல்சிவ் பிஹேவியர்' எனச் சொல்லும் ஒருவகையான மன நலப் பிரச்னை என்றும், `Conditional Insomnia கண்டிஷனல் இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா? தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர்நெட்டை ஆன் செய்து, வாட்ஸ்அப்பில் ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா? எனப் பார்ப்பதுதான்.
நாம் எவ்வளவு தூரம் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருகிறோம் என்பதை உடனடியாக உணரவேண்டிய தருணம் இது. இதனால் நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் தாக்கத்தை ஏற்கனவே விளக்கியுள்ளேன். அதைக் காண இங்கு செல்லவும் https://youtu.be/VrcMGBOv4Zg
இரவுத் தூக்கம் தடைபடுவதால் ஏற்படும் பிரச்னைகள்:
# நமது உடலுக்குள் சுழற்சிக் கடிகாரம் இருக்கிறது. பொதுவாக சூரிய உதயத்தின்போது எழுந்து உற்சாகமாக வேலைசெய்வதும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்வதும்தான் இயற்கையோடு இனைந்த வாழ்வு.
# ஏன் நாம் சூரிய வெளிச்சத்தில் மட்டும் இயங்க வேண்டும் என்பதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு. சூரியன் மறைந்த பிறகு, இருட்டு நேரத்தில்தான்
"மெலட்டோனின்" முதலான பல ஹார்மோன்கள் நமது உடலில் சீராகச் சுரக்கும்.
# நாம் இரவு நேரத்தில் உடலுக்கு ஓய்வு தந்து உறங்கும் போதுதான் "மெட்டபாலிசம்" எனும் வளர் சிதை மாற்றம் உடலில் சீராக நடக்கும்.
# நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான Growth Harmone குரோத் ஹார்மோன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான, ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டீரான் போன்ற பிரத்யேக செக்ஸ் ஹார்மோன்கள் சமச்சீராகச் சுரக்கும்.
# முறையற்ற இரவுத் தூக்கத்தால் ஹார்மோன்கள் சீராக உற்பத்தி செய்யப் படாமல் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
# இதனால் குழந்தைப் பேறின்மை பிரச்னை இளம் தம்பதிகளிடம் அதிகரித்துவருகிறது.
# ஒழுங்கற்ற தூக்கத்தால் பயம், பதற்றம், சோர்வு ஆகியவை வருகின்றன.
# மனநலம் சார்ந்த பல பிரச்னைகள் வருவதற்கும் இதுதான் காரணம்.
# இரவு நெடுநேரம் கழித்து உறங்குவதாலும், போதுமான நேரம் தூங்காததாலும், ஆழ்நிலை தூக்கம் அடையாமல் மேம் போக்காகத் தூங்குவதாலும், உடலில் கழிவுகள் தேக்கமடைந்து அந்த இடங்களில் வலிகள் ஏற்படுகின்றன.
தரமான தூக்கத்திற்கு
# சுத்தமான இயற்கை காற்றோட்டம் அவசியம். எனவே ஜன்னலை திறந்துவைத்து தூங்குங்கள். வலிப்பு, தொடர் கனவுகள் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு தூங்காதீர்கள், கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக எந்த இரசாயணத்தையும் பயன்படுத்தாதீர்கள். தேவைப்பட்டால் காற்று வந்துபோகக் கூடிய கொசுவலைகளை பயன்படுத்துங்கள்.
# தூங்கும்முன் பற்களை நன்றாக சுத்தம் செய்யுங்கள். ஏனென்றால் பற்களில் ஏதேனும் உணவுப்பொருட்கள் சிக்கிக்கொண்டால் நம் தூக்கம் பாதிக்கப்படும்.
# எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளை மட்டும் உண்ணுங்கள். உணவு சரியாக செரிமானமாகவில்லை என்றாலும் தூக்கம் பாதிக்கப்படும்.
# பொதுவாக இரவு 9 மணிக்குள் உறங்கி அதிகாலை எழுவதுதான் சிறந்த பழக்கம். இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரமாக எழுந்துவிடுவது தவறு. அலாரம் வைத்து எழுந்தால் நம் உடலின் பராமரிப்பு வேலை தடைபடும். தூங்கும் நேரத்தைவிட தூக்கத்தின் தரமே முக்கியம்.
# நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி-க்கு என நேரம் ஒதுக்குவதில் தவறு இல்லை. உங்கள் உடலுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.
எல்லோராலும் இயல்பாக உடனடியாகத் தூங்கிவிட முடிவதில்லை. ஒவ்வொருவருக்கும் தூக்கம் தடைபடுவதற்கு வெவ்வேறு காரணிகள் இருக்கின்றன. பொதுவாக, தூக்கத்தைப் பாதிக்கும் காரணி வெளிச்சம், புகைபழக்கம், டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள்,… போன்றவை தான்.
வெளிச்சம்:
இருள்தான் மனிதர்களுக்குத் தூக்கத்தைத் தூண்டும். அதனால்தான் வெளிச்சத்தை அணைத்துவிட்டுத் தூங்குகிறோம். சமீப ஆண்டுகளாக இரவிலும் வெளிச்சம் கண்களைப் பறிக்கிறது. வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் இரவு வெளிச்சம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிட்டது. ஒரு காலத்தில் மின்சார விளக்கு மட்டும்தான் நமக்கு இரவு வெளிச்சம். பிறகு டி.வி வந்தது, கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், டேப்லெட் எல்லாம் வந்துவிட்டன. அனைத்தும் அதிஉயர் வெளிச்சத்தை உமிழ்கின்றன. இதனால் நமது தூக்கம் தள்ளிப்போகிறது. மொபைல் வெளிச்சம் தூக்கத்துக்குக் கடும் எதிரி. பலர் அறை விளக்குகளை அணைத்துவிட்டு மொபைலில் நோண்ட ஆரம்பித்து விடுகிறார்கள். கண்களுக்கு அருகில் வைத்து மொபைலைப் பயன்படுத்தும் போது, அந்த வெளிச்சம் நமது கண்களையும் மூளையையும் பாதிக்கும். தூக்கத்தைத் தாமதப்படுத்தும். ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் என்பது வித்தியாசப்படும். வேலைக்கு ஏற்ப தங்களது வாழ்வியல் முறையை ஆரோக்கியமான வகையில் மாற்றிக்கொண்டால் பிரச்னை வராது.
டீ, காப்பி:
டீ காப்பி என்பது பலரால் விரும்பி குடிக்கப்படும் ஒரு உற்சாக பானமாக திகழ்ந்து வருகிறது. அனைவரும் இதனை வீட்டிலேயே தயாரித்து குடும்பமாக பருகி வருகிறோம். அதில் இருக்கும் சாதகங்களை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதிலிருக்கும் பாதகங்களை நாம் அறிந்திருக்கவில்லை. அது நம் தூக்கத்தையும் கெடுக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கு செல்லவும் https://youtu.be/TkvkJozBpQc
புகைபழக்கம்:
புகைபழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது நம் தூக்கத்தையும் கெடுக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
செயற்கை குளிர்பானங்கள்:
செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.
உடலின் இயக்கத்திற்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காததால் தான் மன அழுத்தம், உடல் பருமன், இதய நோய்கள், நரம்பு தொடர்பான நோய்கள், முடி தொடர்பான பிரச்சனைகள், பக்கவாதம்,… போன்ற பல உபத்திரவங்கள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதை அறிந்த வியாபார உலகம் இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியது. உடலின் இயக்கத்திற்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காததால் ஏற்படும் உபத்திரவங்களுக்கு நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டுஎன்று பெயர் வைத்து மக்களை குழப்பி மருந்து வியாபாரத்தில் இறங்கி வெற்றியும் பெற்றுள்ளது. இத்தகைய உபத்திரவங்களுக்கு மருந்துக்களை கொண்டு தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது என நமது அரசாங்கம் சட்டமே இயற்றியுள்ளது. அதை காண இங்கு செல்லவும் https://youtu.be/RpHOdoEdl0Q

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்' 1940 – ஷெட்யூல் – 'J'
மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்' 1940 ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995 ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் – 'J' என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!' என்றோ, 'மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!' என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது. அதை காண இங்கு செல்லவும் http://reghahealthcare.blogspot.in/2012/09/1940.html
நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி.
இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டுபோன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts