லேபிள்கள்

ஞாயிறு, 11 ஜூன், 2017

கேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்!

வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார், 'கேஸ் சேஃப் இந்தியா பப்ளிக் லிமிடெட்'-ன் சென்னை டீலர் தினேஷ்.
"கேஸ் சிலிண்டர் வெடிக்க என்ன காரணம்?''
''90% சிலிண்டர் விபத்துகள் கேஸ் லீக் ஆவதால்தான் ஏற்படுகின்றன. எனவே, கேஸ் லீக்கேஜுக்கான வாய்ப்பில்லாமல் கவனமாக இருக்க வேண்டும். கேஸ் லீக்கேஜை உணர்ந்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.''


''கேஸ் சிலிண்டரை கையாளும் முறைகள் பற்றி...''
''சிலிண்டரை எப்போதும் நிமிர்த்தியே வைத்திருக்க வேண்டும்; படுத்த நிலையில் வைக்கக் கூடாது. மேலும், சிலிண்டர் வைக்கும் இடத்தில் பாத்திரம் பண்டம், தேவையற்ற பொருட்களை நிரப்பி வைப்பது என்று நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது. சிலிண்டரைவிட அடுப்பு சற்று உயரமான இடத்தில் இருப்பதுடன், சிலிண்டரையும், அடுப்பையும் இணைக்கும் ரப்பர் டியூப் வெடிப்பு, விரிசல் போன்ற பழுதின்றி இருக்க வேண்டியது அவசியம். எப்போதுமே ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற அடுப்பு, டியூப், லைட்டர் போன்றவற்றையே பயன்படுத்த வேண்டும்.''
''சிலிண்டரையும் அடுப்பையும் இணைக்கும் ரப்பர் குழாயை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?''
''க்ரீன் ஃபிளெக்ஸிபிள் டியூப் என்றால் 6 மாதம் முதல் 1 வருடத்துக்கு ஒருமுறை மாற்றலாம். ஆரஞ்ச் சுரக்‌ஷா டியூப் என்றால் 1 முதல் 1.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றலாம். இடைப்பட்ட காலத்தில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக மாற்றிவிட வேண்டும்.''
''சமையல் அறையில் அதிக மின்சாரம் இழுக்கும் ஃப்ரிட்ஜ் போன்ற உபகரணங்களை வைக்கலாமா?''
''அதை அந்த மின்சார சப்ளையை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும். எனினும், அடுப்புக்கு மிக அருகில் எலெக்ட்ரிக் பொருட்களை வைப்பது எப்போதுமே தவிர்க்கப்பட வேண்டிய விஷயம்.''

''சிலிண்டர் வைத்திருக்கும் இடத்தை கதவு போட்டு மூடி வைக்கலாமா?''
''கூடாது. கேஸ் லீக் ஆனால் அது வெளியே தெரிவதற்கான வாய்ப்பை இது குறைக்கும் என்பதால், எப்போதுமே சிலிண்டரை கண்பார்வையில், காற்றடைக் காத வகையிலேயே வைத் திருக்க வேண்டும்.''
''கேஸ் லீக் ஆவது தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?''
''முதலில் அடுப்பையும், ரெகுலேட்டரையும் ஆஃப் செய்துவிட வேண்டும். மின் பொருட்களின் ஸ்விட்ச் எதையும் ஆன் செய்துவிடக் கூடாது. ஆஃப் செய்யவும் கூடாது. கதவு, ஜன்னல்களை திறந்துவைத்துவிட்டு, வீட்டில் உள்ளவர்கள் வெளியேற வேண்டும். தாமதிக்காமல் அருகில் இருக்கும் கேஸ் டீலரை அழைக்க வேண்டும்.''
''சிலிண்டரின் எடை சரியாக இருக்கிறதா என்று எப்படி கண்டறிவது?''
''அதற்கான பிரத்யேக வெயிங் மெஷினை, டெலிவரிக்கு வருகிறவர்கள் எடுத்து வர வேண்டும் என்பதுதான் முறை. ஆனால், அதை யாரும் பின்பற்றுவது கிடையாது.
''கேஸ் சேஃப்ட்டி டிவைஸ் எப்படி செயல்படுகிறது?''
''இதுவும் ரெகுலேட்டர்தான். இது, மூன்று விதமான பயன்களை அளிக்கிறது... சேஃப்டி, சேவிங்க்ஸ், மீட்டர்.
சேஃப்டி - இதிலிருந்து அவுட்புட் மட்டும் வரும்; இன்புட் எதுவும் எடுத்துக்கொள்ளாது. எனவே, டியூப் தீப்பிடித்தாலும் கேஸ் சிலிண்டர் வெடிக்காது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் மூலமாக கேஸ் லீக் ஆவதை அது தானாக உணர்ந்து, சிலிண்டரிலிருந்து அடுப்புக்கு கேஸ் செல்வதைத் தடுத்துவிடுவதால் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.
சேவிங்க்ஸ் - பொதுவாக சிலிண்டரிலிருந்து 320 பிஎஸ்ஐ பிரஷரில் அடுப்புக்கு கேஸ் வரும். சேஃப்டி டிவைஸ், இதைப் பாதியாகக் குறைத்துதான் அடுப்புக்கு அனுப்பும். இதனால், கேஸின் பயன்பாடு வழக்கமானதைவிட இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்.
மீட்டர் - இதிலுள்ள மீட்டர் மூலமாக கேஸ் எவ்வளவு தீர்ந்திருக்கிறது என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு, எப்போது கேஸ் தீரும் என்பதையும் கண்டறியலாம்.
இந்த 'கேஸ் சேஃப்டி டிவைஸ்' கன் மெட்டலில் செய்யப்பட்டிருப்பதால் 30 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும்.
  மேலும், NRV டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருப்பதால் சிலிண்டர் வெடிக்க வாய்ப்பில்லை. இது சுமார் 2,500 ரூபாய் விலையில் கிடைக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts