லேபிள்கள்

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பழங்களை உண்ணும் முறை

பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்பதில்லை. பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.

பழங்களை எப்போது எப்படி எப்போது உண்ணவேண்டும் என அறிந்துகொள்வது முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன? இது தொடர்பான மின்னஞ்சல் ஊடாக பரிமாறப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து விளக்கம் அளிக்கலாமென எண்ணுகின்றேன்.

நாங்கள் எப்போதும் மத்தியான உணவை முடித்தவுடன் வாழைப்பழம், தோடம்பழம், பப்பாசி பழம் அல்லது அப்பிள் பழம் என சாப்பிடுகின்றோம். அவ்வாறு உணவு வேளைக்குப்பின்னர் உடனடியாக பழங்களை சாப்பிடுவது கூடாது. பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அவை உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. அத்துடன் உடலுக்கு வலுவூட்டலை வழங்கி உடல் எடையை குறைப்பதிலும் பங்காற்றுவதுடன் உடலின் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவுகிறது.

நீ்ங்கள் இரண்டு பாண் துண்டுகளையும் அதன் பின்னர் ஒரு துண்டு பழமும் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் சாப்பிட்ட பழத்துண்டு நேரடியாக குடலுக்குள் செல்லக்கூடும். ஆனால் அப்பழத்துண்டு அவ்வாறு செல்லமுடியாதவாறு தடுக்கப்படும். ஏனெனில் பழத்துண்டோடு இணைந்திருக்கும் பாண் துண்டு, சமிபாடு அடைவதற்கான இரசாயன மாற்றங்கள் செய்யப்படவேண்டியிருக்கும்.

அதாவது பாண் துண்டு சமிபாடு அடைவதை தூண்டும் அமிலங்கள் உருவாகி பாண் துண்டு சமிபாடு அடைவதற்கான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆனால் அவ்வாறான இரசாயன அமிலங்கள், நீங்கள் சாப்பிட்ட பழத்துண்டை அமிலப்படுத்துவதால் அவை தேவையான சக்தியை உடலுக்கு வழங்காமலே கழிவாக மாற்றப்படுகிறது.

இதனால்தான் வெறும்வயிற்றில் பழங்களை உண்ணவேண்டும் என கூறப்படுகிறது. சிலர் சாப்பாட்டுக்கு பின்னர் பழங்களை சாப்பிட்டவுடன் வயிறு முட்டாக இருக்கிறது என்றும் சிலர் மலங்கழிக்கவேண்டும் என்பது போன்றும் உணர்வார்கள். ஆனால் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் அவ்வாறான உபாதைகளும் கூட ஏற்படாது.

தலைமயிர் பரட்டையாதல், மொட்டையாதல், பதட்டமடையும் தன்மை, கண்களின் கீழ்ப்புறத்தில் தோன்றும் கருவளையங்கள் போன்றன ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்றால் தவறாது பழங்களை உண்ணுங்கள்.

நீங்கள் படிமுறையான வழிகளில் பழங்களை சாப்பிடுவீர்களாக இருந்தால் அழகையும் மகிழ்ச்சியையும் கொண்ட சுகவாழ்வு உங்களுக்கு சொந்தமாகிவிடும்.

பழச்சாறு குடிப்பதைவிட பழங்களை முழுமையாக உண்பது மிகவும் நல்லது. நீங்கள் பழச்சாறு குடிக்கவேண்டும் என எண்ணினால், அவசரப்பட்டு குடிப்பதை தவிர்த்து ஆறுதலாக குடியுங்கள். அதுவும் நீங்கள் குடிக்கும் பழச்சாறுடன் உங்கள் உமிழ்நீரும் நன்றாக கலக்கும்வண்ணம் வாயில் வைத்திருந்துகுடியுங்கள்.
தகவல் மூலம் http://www.globalhealthandfitness.com/h ... 0fruit.htm


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடல் நலனும் மன நலமும்: பதற்றமாக இருக்கிறதா? உங்களுக்கு கை கொடுக்கும் 3 வழிகள்.

தேர்வு , காலக்கெடு , பணிக்கான நேர்காணல் , ஒன்றை தொகுத்து வழங்குவது போன்ற செயல்பாடுகள் பொதுவாகவே உங்களை மிகவும் பதற்றமாக்கும். நீங்க...

Popular Posts