லேபிள்கள்

வெள்ளி, 16 அக்டோபர், 2015

வேர்டில் கவனித்தீர்களா

வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பணி ஆகும். ஆனால், பலர் கீழே நான் தரப்போவதனைக் கவனித்திருக்க மாட்டீர்கள். பொதுவாக நீங்கள் ஒரு வாக்கியத்தை முடித்து முற்றுப் புள்ளி வைத்தவுடன், அடுத்த வாக்கியத்தைத் தொடங்குகையில் முதல் சொல்லின் முதல் எழுத்து தானாகவே பெரிய எழுத்து என்று சொல்லப்படும் கேப்பிடல் லெட்டரில் தொடங்கும். ஆனால், ஒரு வாக்கியம் ஏதேனும் ஒரு எண்ணுடன் முடிந்தாலோ, அல்லது "you" என்ற சொல்லுடன் முடிந்தாலோ, அடுத்த வாக்கியம் அது போல கேப்பிடல் எழுத்துடன் தொடங்காது. (இதைப் படித்தவுடனேயே வேர்டைத் திறந்து செக் செய்திடப் போகவேண்டாம். தொடர்ந்து படிக்கவும்)

இவை இரண்டும் ஒரே மாதிரியான பிரச்னை போலத் தோற்றமளித்தாலும், இரண்டின் தன்மையும், தீர்வுகளும் வெவ்வேறானவை. அவற்றை இங்கு பார்க்கலாம். தூணித என்ற சொல்லை அடுத்து வரும் வாக்கியம் பெரிய எழுத்தில் தொடங்காததற்கு AutoCorrect ன் exclude என்ற பைலில் பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, கீழ்க்கண்டபடி செயலாற்றவும். நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,

  1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். Office பட்டன் அழுத்தி Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
    2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
    3. அடுத்து AutoCorrect Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
    4. இங்கு Exceptions என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து AutoCorrect Exceptions என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
    5. இனி First Letter என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு தனித்து இடம் பெறும் சொற்களின் பட்டியல் கிடைக்கும். இதில் "you" என்ற சொல்லைத் தேடிப் பெறவும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.
    7. அடுத்து Delete என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த சொல்லுக்கான தனித்தன்மை நீக்கப்பட்டது. திறந்திருக்கும் அனைத்து டயலாக் பாக்ஸ்களையும் மூடவும்.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சொற்கள் அல்லது சுருக்கக் குறிகள் இடம் பெறும்போது, அடுத்த வாக்கியத்தின் முதல் எழுத்து பெரிய எழுத்தாக அமையாது. வழக்கமாக Mr., Ms., Dr., என்ற சுருக்கு சொற்களே இடம் பெறும். ஆனால் மேலே சொல்லப்பட்ட சொற்களும் சில இடம் பெற்றுள்ளதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

அடுத்து AutoCorrect Exceptions டயலாக் பாக்ஸை மீண்டும் பார்க்கவும். கீழாக, Automatically Add Words to List என்ற செக் பாக்ஸ் இருப்பதைக் காணலாம். இதனைத் தேர்ந்தெடுத்தால், AutoCorrect செயல்பாடு, நீங்கள் டைப் செய்கையில் என்ன என்ன தேவைகளை விரும்புகிறீர்கள் என்பதனைக் கண்காணித்து, அவற்றிற்கேற்ப தன் பொருளடக்கத்தினை மாற்றிக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, வேர்ட் தானாக சொல் ஒன்றை மாற்றுகையில், நீங்கள் பேக் ஸ்பேஸ் பயன்படுத்தி, உங்கள் விருப்பப்படியே, சொல்லை அமைத்தால், வேர்ட் அதனை உணர்ந்து, வாக்கியத்தின் இறுதி சொல்லை அதன் நிறுத்தக் குறியுடன் இந்த பட்டியலில் அமைத்துக் கொள்ளும். இப்படித்தான், "you" என்ற சொல் இதில் இடம் பெற்றிருக்கும். வேர்ட் இது போல உங்களைக் கண்காணித்துச் செயல்பட வேண்டாம் என நீங்கள் எண்ணினால், Automatically Add Words to என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம்.

எண்ணுடன் ஒரு வாக்கியம் முடியும் போது ஏற்படும் பிரச்னை இன்னொரு வகையானதாகும். பழைய வேர்ட் பதிப்புகளில், எண்கள் டைப் செய்து பின்னர் புள்ளி வைத்தால், அடுத்த வாக்கியத்தில், வேர்ட் தானாக முதல் சொல்லின் முதல் எழுத்தினைப் பெரிய எழுத்தாக அமைத்து வந்தது. சில இலக்கணவாதிகள், இதனை சரி இல்லை எனக் குற்றம் சாட்டினார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு எண் இறுதியில் இடம் பெறக் கூடாது. அப்படி இடம் பெற்றுத்தான் ஆக வேண்டும் என்றால், அது எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். இதனால், மைக்ரோசாப்ட் அதற்கேற்ற மாற்றத்தைக் கொண்டு வந்தது. எண்களும் தொடர்ந்து புள்ளியும் டைப் செய்தால், அடுத்த சொல் சிறிய எழுத்திலேயே தொடங்கியது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (...

Popular Posts