லேபிள்கள்

சனி, 18 ஜூலை, 2015

குங்குமப்பூ!

குங்குமப்பூ!


குங்குமப் பூவின் மகிமையை பெண்களைக் கேட்டால் சொல்வார்கள். நம் நாட்டிலும், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளிலும் குங்குமப் பூ பயிரிடப்பட்டு வருகிறது.காஷ்மீரில் பயிராகும் குங்குமப் பூ, மென்மையிலும், சிவப்பிலும், மணத்திலும் மிகச் சிறந்ததாக உள்ளது. ஈரானில் விளையும் குங்குமப் பூ தேனைப் போல மணக்கும். ஸ்பெயின் நாட்டுக் குங்குமப் பூவும் நல்ல மணம் வாய்ந்தது.
கிரேக்க நாட்டினரும், ரோமாபுரி மக்களும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவரும் குங்குமப் பூ, இந்தியாவுக்குக் கடல் வணிகர்கள் மூலம் பரவியிருக்க வேண்டும் என்று `ராஜதரங்கிணி' என்ற நூல் கூறுகிறது.
காஷ்மீரைத் தவிர உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குமாபுமிலும், உத்தரகாண்டிலும் இது பயிராகிறது. கி.மு. 750-ம் ஆண்டுக்கு முன்பே நம் நாட்டுக்குக் குங்குமப் பூ வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்பது பழம்நூல்கள் மூலம் தெரியவருகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து சிறிது தொலைவில் உள்ள, பண்டைய காலத்தில் `பத்மபூர்' என்றும் தற்போது `பாம்பர்' என்றும் அழைக்கப்படும் கிராமத்தில் விளையும் குங்குமப் பூ மிகவும் பிரசித்தி பெற்றது.
சுமார் ஐயாயிரம், ஆறாயிரம் அடி உயரத்தில் இருக்கும் மலைப் பிரதேசங்களில், குளிரும் வெயிலும் ஒருங்கே கூடிய பள்ளத்தாக்குகளில் குங்குமப் பூ அமோகமாய் தளதளவென்று விளைகிறது. இதைத் தவிர மூவாயிரம், நான்காயிரம் அடி உயர்ந்த பிரதேசங்களில் 40-ல் இருந்து 60 அங்குல மழையும், குளிர்காலத்தில் பனியும் பெய்யும் இடங்களில் எல்லாம் குங்குமப் பூ பயிராகிறது.
குங்குமப் பூ செடி உயரமாக வளர்வதில்லை. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் வரை குங்குமப் பூ இதில் மலர்கிறது. வெங்காய வடிவத்தில் உள்ள குங்குமப் பூ கிழங்கை பூமியில் நட்டு இதைப் பயிராக்குகிறார்கள். இந்தக் கிழங்கை மக்கள் உண்ணவும் செய்கிறார்கள்.
காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதக் கடைசியில் குங்குமப் பூக்களைச் சேகரிக்கும் வேலை தொடங்குகிறது. கைகளாலே பறித்து வெயிலில் மூன்று, நான்கு நாட்கள் உலர வைக்கிறார் கள். நன்றாக உலர்ந்த பிறகு மலரில் இருந்து இதழ் நரம்புகளைப் பிரித்தெடுக்கிறார்கள். நரம்பின் மேல்பாகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது உயர்தரமான குங்குமப் பூவாகக் கருதப்படுகிறது.

கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்குங்குமப்பூ


கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இவர்கள் எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.
பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.
இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர். உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமீன் தெரிவித்தார்.
ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..
இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.
குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.
நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil – Kungumapoo
English – Saffron
Malayalam – Kunguma Poo
Telugu – Kumkuma poova
Sanskrit – kumkuma
Botanical Name – Crocus sativus
இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.
இரத்தம் சுத்தமடைய
குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.
குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.
பிரசவித்த தாய்மார்களுக்கு
பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.
நன்கு பசியைத் தூண்ட
குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.
கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.
தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.
ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை .
குங்குமப்பூ மகத்துவம்
சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.
குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்
1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.
3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.
5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.
6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.
சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.மேலும் கர்ப்பிணிகள் பாலில்குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டால் குழந்தை மிகவும் சிவப்பாக இருக்கும்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts