லேபிள்கள்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை

புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு மருத்துப் பார்வை

புனித மிக்க ரமலான் மாதம் முடிந்து , நாம் எல்லோரும் ஹஜ்ஜை எதிர் நோக்கி உள்ளோம். இன்ஷா அல்லாஹ் ஹஜ் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தவர்கள், மனதளவில் ஹஜ் செல்வதற்கு தங்களை தயார் படுத்த துவங்கி விட்டார்கள். இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதலை இங்கு தர விரும்புகிறேன். இதில் நான் 1997 ஆம் ஆண்டு , சவுதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் போது களபபணியாற்றிய எனது அனுபவத்தின் சில தாக்கம் களையும் இணைத்து உள்ளேன்.
1 ஹஜ் செல்ல நாடி உள்ளவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லு முன் தங்கள் உடல் நலன்களை நல்ல முறையில் பரிசோதித்து, ஹஜ்ஜுக்கு செல்ல தயார் பண்ணி கொள்ள வேண்டும்.
2 நெடுநாளைய நோய்களான சர்க்கரை என்னும் நீரழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம் , ஆஸ்த்மா , வலிப்பு,இருதய நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் , தங்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து, தங்கள் நோயை முழுக்கட்டு பாட்டில் வைத்து கொள்ள வேண்டும.முறையான உணவு கட்டுபாடுகளை ஒழுங்காக பின்பற்ற வேண்டும்
3 நெடுநாளைய நோய்களான சர்க்கரை என்னும் நீரழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம் , ஆஸ்த்மா , வலிப்பு,இருதய நோய், மாத்திரை களை தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே கொண்டு செல்ல வேண்டும். அனைத்து மாத்திரைகளும், ஒரே பேக்கில் வைக்காமல், பல பேக்குகளில் பிரித்து வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு பேக் தொலைந்து போனால் கூட, இடை வெளி இல்லாமல் தொடர்ந்து போட மாத்திரை கள் இருக்கும். தங்கள் மாத்திரைகளின் பெயர்களையும் (BRAND NAME ) ,அதன் மூலக்கூறு பெயர்களையும்(CHEMICAL OR MOLECULE NAME ) தெரிந்து வையுங்கள். அப்போது தான் மாத்திரை முடிந்தது விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ , சவுதியில் அந்த மாத்திரைகளை
மருத்துவரிடம் கூறி மாற்று மாதிரியோ அல்லது மருந்தகங்களில் கேட்டு பெற வசதியாக இருக்கும் (எல்லா நாடுகளிலும் மூலக்கூறு மருந்தின் பேர் ஒன்று தான், brand name தான் நாட்டுக்கு நாடு மாறுபடும்,ஒரு நாட்டு மருத்துவருக்கு, மற்ற நாட்டில் உள்ள எல்லா brand name களும் தெரிந்துஇருக்க வாய்ப்பு குறைவு,.மூலக்கூறு பெயர்கள் உலகம் முழுவதும் ஒன்று தான் )
4 சவுதி அரசும் அதன் சுங்கததுறையும், அந்நாட்டு மருந்து கட்டுபாட்டு துறையின் அனுமதி இல்லாத மற்ற நாட்டு மருந்துகளை , தங்கள் நாட்டில் அனுமதி அளிப்பது இல்லை.என்றாலும் , நீங்கள் உபயோகபடுத்தும் மருந்துகளை கொண்டு செல்லலாம். ஆனால் அந்த மருந்து களுக்கு தேவையான் டாக்டர் prescription என்னும் சீட்டுகளை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும. அந்த டாக்டர் சீட்டில் , உங்கள் பெயர் உங்கள் பாஸ்போர்ட்டில் எப்படி உள்ளதோ ,அதே பெயர் அப்படியே, ஸ்பெல்லிங் தவறு இல்லாமல் குறிப்பிடுவது அவசியம் டாக்டர் சீட்டில் பாஸ்போர்ட் நம்பர் பதிவு செய்வது இன்னும் நல்லது.
மிக முக்கியமாக, வலிப்பு நோய் மருந்துகள், தூக்க மாத்திரைகள், மற்றும் மன நல நோய்க்கான மாத்திரைகள் கொண்டு செல்ல நேர்ந்தால், சரியான மருத்துவ சீட்களுடன் செல்ல வேண்டும். இது போன்ற மாத்திரைகளுக்கு, சீட்டு இல்லாமல் சென்றால், சவுதி சட்டப்படி, சிறை தண்டனை வரை தர விதி உண்டு. டாக்டர் சீட்டில், மாத்திரை களின் எண்ணிக்கை களையும் பதிவு செய்ய வேண்டும்.இதுபோன்ற மாத்திரைகளின் டாக்டர் சீட்டுகளில்,உங்கள் பெயர் மற்றும் வயதை பாஸ்போர்ட்டில் உள்ளவாறு சரியாக , ஸ்பெல்லிங் தவறு இல்லாமல் இருப்பது அவசியம்.
5 பொதுவாக ஹஜ்ஜின் போது மக்காவிலும், மதீனாவிலும் , இந்திய மற்றும் சவுதி அரசின் கீழ் செயல் படும் மருத்துவ மையங்களும் மற்றும் மருந்து கூடங்களும் , தேவையான அளவில் உள்ளன. எனவே சிறிய சிறிய நோய்களான சளி, ஜுரம் போன்றவைகளுக்கு மருத்துவம் பெறுவதில் , அதற்கான மாத்திரைகளை பெறுவதிலும் சிக்கல் இருக்காது. உங்கள் தேவைகேற்ப குறைந்த அளவு , சிறு நோய்களுக்கான மாததிரிகளை, மருத்துவ சீட்டுகளுடன் எடுத்து செல்லலாம்.
6 .குறிப்பாக பெண்கள் பலர், தங்கள் மாதவிடாயை, இயற்கையாக வருவதை தள்ளி போடும் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். காரணம், தங்கள் மாதவிடாய் சுழற்சி , ஹஜ் கிரியை செய்யும் காலத்தில் வந்து , தாங்கள் அமல் செய்வது கேட்டு பொய் விடுமோ என்ற எண்ணத்தில். மாதாவிடாவின் போது, தொழுகை மற்றும் கஹ்பாவை தவாப் சுற்றுவது,மஸ்ஜிதுல் ஹரம்க்குள் நுழைவது தவிர, மற்ற எல்லா ஹஜ்ஜின் செயல் களும் ஆகுமானது தான்.அதனால் நாற்பது நாளைக்கு மதாவிடாய் வராமல் மருந்துகள் மூலம் தள்ளி போவது நல்லது இல்லை. பொதுவாக இந்த மாத்திரைகளில் ESTROGEN மற்றும் PROGESTERONE எனும் ஹார்மோன் உள்ளதால், இந்த மாத்திரைகளை எடுக்கும்போது , குமட்டல், வாந்தி, உடல் கனத்து போதல் , போன்ற சில கஷ்டங்கள் வரலாம். இந்த மருந்துகள் எடுக்கும் போது, ஒரு வகையான மன ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு, அமல் செய்வதை பாதிக்கலாம்.சில பெண்களுக்கு மார்பகங்கள் அதிகம் கனத்தும் வலியுடன் காணப்படும்.(ஓர் ஆய்வின் படி , தேர்வுக்காக தங்கள் மாதவிடாயை தள்ளி போட , மாத்திரை போட்ட மாணவிகளின் ,தேர்வின் தேர்வு முடிவு, மாத்திரை போடாத மாணவிகளின் முடிவை விட மோசமாக இருந்தது. காரணம், மன நிலை மாற்றம் ). ஒருவேளை, மாதவிடாயை தள்ளி போடும் மாத்திரையை தொடர்ந்து போடாமல் போகும் நிலை ஏற பட்டாலோ அல்லது மாத்திரை தொலைந்து போனாலோ அல்லது மாத்திரை போட சில நாட்கள் மறந்தாலோ , மாத்திரை நிறுத்திய சில நாளில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு, அமல்களை அதிகம் பாதிக்கலாம். இந்த நிலைமை 1997 ஆண்டு ஹஜ்ஜின் போது, தீ விபத்து ஏற பட்டு , பல பெண்கள் தங்கள் மாத்திரைகளை இழந்து விட்ட பின், அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள். எனவே இயற்கையாக மாதவிடாவை தள்ளி போடும் மாத்திரைகளை தவிர்ப்பது தான் எல்லா நிலையிலும் நல்லது. அல்லாஹ எந்த ஆத்மாவையும் அவர்களின் சக்திக்கு மீறி சோதனை தர மாட்டான்.(குறிப்பு : அதிக நாள்கள் இந்த மாத்திரைகள் உட்கொண்டால், மார்பகம் மற்றும் சினைப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.)
7 . நீரழிவு நோய் உள்ளவர்கள், முடிந்தால் தங்கள் சுகர் அளவை அடிக்கடி சோதித்து கொள்ள , பாக்கெட் GLUCOMETER கொண்டு செல்லலாம். ஆனால் அதில் BATTERY உள்ளதால்,அதை , காபின் லக்கேஜுக்குள் விமான நிறுவனம் அனுமதி அளிப்பது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்
8 ஹஜ் செல்லும் போது, பலர்க்கு தங்களை அறியாமலே, சிறிது மன படபடப்பு ஏற்படுவது உண்டு .(காரணம்) தங்கள் சொந்தங்களை சொந்த ஊரில் விட்டு பிரிந்து வந்தது ,கடந்த காலங்களில் ஹஜ்ஜின் போது ஏற்பட்ட தீ விபத்து ,கூட்ட நெரிசல் விபத்தால் உயிரிழப்பு போன்ற சம்பவங்களை நினைத்து,இவ்வளவு செலவழித்து வந்து இருக்கும் தங்களின் புனித பயணம் வெற்றியாக முடிமோ என்ற மனநிலை, தங்கள் ஊரில் விட்டு வந்த தங்களின் வியாபாரம் என்ன ஆகுமோ என்ற மனநிலை,முற்றிலும் வித்தியாசமான சூழ்நிழையில் 40 நாள் இருப்பது,புதிதான விமான பயணம்,அளவுக்கு அதிகமான கூட்டத்தை முதன் முதலில் சந்திப்பது, அதிகம் அதிகம் உம்ரா மற்றும் தவாப் செய்ய வேண்டும் என்ற படபடப்பு , ஹஜரல் அஸ்வத் கல்லை அடிக்கடி முத்தமிடும் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கம் போன்றவற்றால் , மனநிலையில் சிறிது பட படப்பு ஏற்படுவது இயற்கை என்றாலும்,ஊரில் இருக்கும்போதே இதை எல்லாம் சமாளிக்க கூடிய மனநிலையை கொண்டு வந்து விட்டால், மன சார்ந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம். ஏற்கனவே மனநோயால் பாதிக்க பட்டவர்கள் , ஹஜ்ஜின்போது மேற்கூறிய காரணங்களினால் தங்களின் மன நோய் அதிகமாக வாய்ப்பு அதிகம் உள்ளதால், ஊரில் இருக்கும்போதே தங்கள் மன நல மருத்துவரை கலந்து ஆலோசித்து, தான் ஹஜ் செல்ல உள்ளதை விளக்கி , அதற்க்கு ஏற்றார் போல் மாத்திரைகளை மாற்றி எடுப்பது நல்லது.
8 கற்பமாக உள்ள பெண்கள் தங்கள் மகப்பேறு மருத்துவரை கலந்து ஆலோசித்து , ஹஜ் செல்வதை பற்றி முடி எடுப்பது நல்லது. முடிந்த வரை பிரசவம் ஆகும் வரை ஹஜ் தவிர்ப்பது நல்லது. இதில் அரசு விதிகள், மற்றும் விமான நிறுவனகள் விதிகளை பின்பற்ற வேண்டும். தான் கருவுற்று இருப்பதை மறைத்து ஹஜ் செல்வதை தவிர்க்க வேண்டும்.ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்த பின் கருவுற்று இருந்தால் , கருவுற்ற தகுந்த ஆதாரத்துடன் விண்ணபித்து, ஹஜ் செல்வதை தவிர்த்து , ஏற்கனவே கட்டிய பணத்தை வாபஸ் பெற வழி உண்டு.
சவுதி அரசின் சுகாதார அமைச்சகம் , ஹஜ்ஜின் போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடை முறைகளை அறிவித்து உள்ளது. அது பற்றி சில குறிப்புகள் இது சென்ற வருடத்திற்கான வழிமுறை.
மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி (YELLOW FEVER VACCINE ) இது மஞ்சள் காமாலை என்னும் JAUNDICE அல்ல
சர்வதேச சுகாதார விதிகள் ஏற்ப மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க, (நோய் உள்ள நாடுகளின் பட்டியலில்) ஆபத்து நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகள், குறைந்தது 10 நாட்கள் முன்பு , பத்து வருடங்களுக்கு மிகாமல் உள்ள , மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். இந்த லிஸ்டில் இந்தியா இடம் பெற வில்லை. எனவே இது இந்தியர்களுக்கு பொருந்தாது. இந்த லிஸ்டில் உள்ள நாடுகளில் இருந்து வரும் இந்தியர்களுக்கும் இது பொருந்தும்
Meningococcal மூளைக்காய்ச்சல் தடுப்பூசி
மூளைக்காய்ச்சல் எதிராக தடுப்பூசி , சவூதிக்கு வருவதற்கு ,3 ஆண்டுகளுக்கு மேற்படாமல் மற்றும் 10 நாட்கள் குறைவு இல்லாமல் MENINGOCOCCAL quadruvalent தடுப்பூசி போட்ட சான்றிதழ் (ACYW135) அவசியம் .
2
வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்கள் menigococcal quadrivalent (ACYW135) தடுப்பூசி 1 டோஸ் கொடுக்கப்பட வேண்டும்;
சவுதி உள்நாட்டு ஹஜ் பயணிகள் meningococcal Quadrivalent (ACYW135) தடுப்பூசி உடன் தேவை:
1.-
அனைத்து கடந்த 3 ஆண்டுகளில் தடுப்பூசி போடாத Madina and Makka குடிமக்கள்(citizen ) மற்றும் குடியிருப்பாளர்கள்.(resident )-
2.
ஹஜ் மேற்கொள்ளும் அனைத்து சவுதி குடிமக்கள்(citizen ) மற்றும் குடியிருப்பாளர்கள்..(resident )-
3.
கடந்த 3 ஆண்டுகளில் தடுப்பூசி போட படாத அனைத்து ஹஜ் பணியாளர்கள் .
இளம்பிள்ளை வாதம்:(oral polio drops ) polio சொட்டு மருந்து
ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா, பாக்கிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, சாட், அங்கோலா மற்றும் சூடானில் இருந்து வரும் அனைத்து ஹஜ் பயணிகள்,எல்லா வயதினர்களும் (முன்பு டிரோப்ஸ் போட்டு இர்ந்தாலும் சரியே), சவுதி அரேபியாக்கு கிளம்ப 6 வாரங்ககளுக்கு முன்பு 1 டோஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் சவுதி அரேபியா வந்து அடைந்ததும், அதன் எல்லையில் வைத்து இன்னொரு dose சவுதி அரசு வழங்கும் .
seasonal flu பருவகால ஃப்ளு தடுப்பூசி
அதிக ஃப்ளு வருவதற்கு ரிஸ்க் உள்ள ஹஜ் யாத்ரீகர்கள்(எ.கா. முதியோர், நாள்பட்ட நுரையீரல் அல்லது இதய நோய் அல்லது, கல்லீரல் நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு).
,
ஹஜுக்காக சவுதி வருமுன் தங்கள் நாட்டில் ஒரு டோஸ் ஃப்ளு தடுப்பூசி போட,சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் , பரிந்து உரைக்கிறது.
(
இந்த ஃப்ளு தடுப்பூசியில் பன்றி காய்ச்சல்(H1N1 ) தடுப்பு ஊசியும் அடக்கம்)
ஹஜுக்கு செல்லும் முன் நீங்கள் தயார் படுத்துவதில் மிக முக்கியமானது இறை அச்சமே. எல்லா வல்ல அல்லா எல்லோரின் ஹஜ் கிரியைகள் முழுவதுமாக நிறைவேறி, ஏற்க்கபட்ட ஹஜ்ஜாக ஆக்க அருள் புரியட்டும், ஆமீன். ஹஜ் செல்வோர் எனக்காகவும், இந்த ஜாமாதிர்க்காகவும் மற்றும் உலக முஸ்லிம்களுக்காவும், இம்மை மறுமை வெற்றிக்காக துவா செய்யவும்.
நன்றி: டாக்டர் D முஹம்மது கிஸார்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து தெரிந்து கொள்ளலாம்

விஷ ஜந்துக்கள் கடித்து மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் குறித்து கீழே காணலாம். கண்ணாடி விரிய...

Popular Posts